Friday, August 14, 2009

குடிமகன் ..

/>
குடிமகன் ..


ஆத்தாக்கு ஆடு வெட்டுன ,கோழி வெட்டுன- மாப்புளே
உனக்கு முடி வெட்ட துட்டு இல்ல .,


திருவிழாக்கு பாட்டு
கூத்து போட்ட- லைபுக்கு
சரியான ரூட்டு போடல .,


காது குத்தி கடுக்கன் போட்ட
கடன் குடுத்தவன் காசகேட்ட- கச்சிதமா
தலைல துண்ட போட்ட -நாளு
புல்லா நாயா உழைக்குற,
சரக்கு போட பேயா அலயுற.,


மப்புலையே இருக்குற- நீ
மனைவிய போட்டு ஒதைக்குற .,

கட்டிங் போட்டு கடைய தாண்டுனா -உனக்கு
கல்லு ரோடும் கஸ்லி கட்ட மரிபோகுது .,


மப்பு தெளிஞ்சதும்
துன்னதையும் மறக்குற
சொன்னதையும் மறக்குற -துட்டு
இல்லா டைம் வந்தா துண்டுபீடி பொறுக்குற -எச்ச
பீடிய மிச்சம் வச்சு எகனமிய நினைக்குற.,


ஓசில ஊதலம்னு ஒருத்தன் விடாம- பிச்ச
எடுக்குற .,பட்ஜெட்டு டைட்டா இருந்த
பகேட்டு சாராயம் பாக்குற -பத்து
சிப்பு அடிச்சுட்டு பதினோராவது சீப்புக்கு
படைல படுக்குற ,அடுத்த நாள் -உனக்கு
பாலு ஊத்துறான் அதுவும் பகேட்டுல....


பணக்காரன்
கட்டுகட்டா நோட்டு வச்சு ஸ்கச்சு அடிக்குறான்- நீ
வைத்த கட்டி வாயகட்டி காச்சுனத்தையே குடிகுற
லைப்ப கல்லறைலதான் முடிக்குற .,


கஷ்ட்டப்பட்டு சேததுல -அவ
உன் காரியத்த முடிக்குற புள்ளைகள காப்பாத்த
படாத பாடு படுறா .. தாஸ்மர்குக்கு காட்டு டாட்டா
லைப்பு இருக்கும் கிரேட்டா....


2 comments:

sakthi said...

காது குத்தி கடுக்கன் போட்ட
கடன் குடுத்தவன் காசகேட்ட- கச்சிதமா
தலைல துண்ட போட்ட -நாளு
புல்லா நாயா உழைக்குற,
சரக்கு போட பேயா அலயுற.,


வட்டார மொழி கவிதை யா

நன்று

சீமான்கனி said...

நன்றி சக்தி ....
தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்.....

Related Posts with Thumbnails