Friday, October 30, 2009

இரவின் இரைச்சல்....




புழுக்கள் கூட -புழங்க
பிடிக்காத புழுதி சாலையில்
புரண்டு படுத்து ஊருளும்
மூத்தவனின் முனங்கள் சத்தம்;

கைகளை நீட்டி
கால் டாக்ஸி வேண்டி
கால் கடுக்க காத்திருக்கும்
கால் சென்டெர் கண்மனியின்
இதய படபடப்பு சத்தம்;

காதலை தொலைத்து -காதலி
கால்தடம் கணக்கு பார்க்கும்
காதலன் ஏக்க சத்தம்.

உறவினர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
இறுதி பேருந்தை தவறவிட்டு
இரவு பேருந்திற்காய் காத்திருக்கும் கூட்டத்தின்
இரைச்சல் சத்தம்.

இருபத்து மணி உழைத்து
இரவுபேருந்துபிடித்து
இருக்கையில் இருந்தவாறே
உறங்கிபோகும் ஒருவனின் குறட்டை சத்தம்.

யாருமே இல்லாத கடையில்
யாருக்காகவோ காய்ந்து
கொண்டிருக்கும் பாலின் கொதி சத்தம்.

மிதிக்கவே முடியாமல்
மிதித்து போகும் யாரோ -ஒருவனின்
மிதிவண்டி சத்தம்.

எங்கேயும் எப்போதும்
யாருக்காகவோ இரைந்து கொண்டிருக்கும்
யெப். எம் சத்தம்.

இளசுகள் இரண்டு இருக்கபிடித்து கொண்டு
இன்ப உலா போகும்
இருசக்கர வண்டி சத்தம்.

எங்கயோ எதையோ பறிகொடுத்து
வீடுபோக விருப்பம் இல்லாத
எவனோ ஒருவனின் விசும்பல் சத்தம்.

வருபவரைஎல்லாம் -ஒருமுறை
குரைத்து விட்டு
கல்லடி நினைவில் வந்ததும் வந்ததும்
கால்தெறிக்க கலைந்து ஓடும் நாய் சத்தம்.

எதுவுமே இல்லாத தெருவில்
தனக்கு மட்டும் கேட்கும்
பேய் சத்தம்.

நடை பாதையை கிடை பதையக்கி
கிடந்து உறங்கும் சிறார்களின்
சினுங்கள் சத்தம்.

இறுதி ஊர்வலத்தில்
இறைத்து போன மலரைஎல்லாம்
இணைத்து போகும் துப்புரவு துடைப்ப சத்தம்.(தொடரும்...)

Tuesday, October 27, 2009

தேவதை திருமகள் இவள்...

இன்னும் சிறகுகள் முளைக்காத
சின்ன தேவதை இவள்...


சிரிக்கிரளா இல்லை சீக்கிரம் வரச்சொல்லி
அழைகிறளா புரிய வில்லை...


இவள் சிரிக்கையில் கொஞ்சம்
சிலிர்த்து கொள்கிறது சிம்பொனி...


மனதை மயக்கி
மல்லிகை கைக்குள்
மடக்கி பிடித்திருக்கும்
மாயக்காரி இவள்...

இதுவரை மண் பார்த்து இருந்த நிலவு
இன்று வின் பார்த்து கிடப்பதை வியக்கிறேன்....


தங்க சங்கிலி அணிந்து ஜொலிக்கும்
கோகினூர் வைரம் இவளோ...


யார்?? சொன்னது தேவதை வெள்ளை
உடையில் தான் இருக்க வேண்டும் என்று...!!


தரை தவழ துடிக்கும் தங்க தாரகை இவள்;
இவள் தவழ்ந்த இடங்களில்
குடி இருக்கிறாள் இன்னொரு தேவதை...(அம்மா)


இவளின் பட்டு பாதங்கள்
தரை தொடும்
தருணத்திற்காய்
தவம் இருக்கிறாள் பூமித்தாய் .....


அழும் போதுகூட
ஆயிரம் ஆயிரம்
அழகு காட்டும் அன்னம் இவள்...

வானம் கொண்ட மேகங்கள் தான் இவளின்
வண்ணம் கொண்ட கண்ணங்களோ...

மீன் குட்டி கண்ணடிக்க;
தேன் குட்டி இதழ் குடிக்க;
மான் குட்டி இடை தவழும்;
தேவதையை தரிசிக்கும் நாளுக்காய்
தவம் கிடக்கிறேன் நான்...


தேவதை திருமகள் இவள்...
Related Posts with Thumbnails