Monday, April 26, 2010

நீ அழுக்கான அழகி...


இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.
******************

உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று. 
********************


தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!
********************
பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ; 
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும் 
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய். 
******************* 

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து  விடுகிறேன்.
*******************

குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி.
******************

Monday, April 19, 2010

காலை தேவதையும் கன்னுக்குட்டியும்...



கனவுகளுக்கு, 
திசுக்களை  தின்ன கொடுத்துவிட்டு
தீராத மீதியோடு திரும்பிவிடுகிறது
தினசரி தேவைக்கு மூளை.

திறவா கண்ணை தீண்டி திறந்துவிடுகிறது
காலை கதிரவளின்  கைவிரல்.

திரவ நெருப்போடு தெரிந்த தேவதை ஒருத்தி
தித்திக்கும் தீ   உண்னச்சொல்லி;
தெவிட்டாத தேன் இதழ் கொண்டு
கன்னத்தில் காலைவணக்கமும்
கமுக்கமாய் சொல்லி கடந்து போனாள்.

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி பாக்கி கடனையும்
பக்குவமாய் முடித்து விட்டு;
நீர் குளிக்கச்சொல்லி தீதூவ திறக்கிறாள்
ஒரு குட்டி குழாய் மேகம்.

விஷம் துப்பி நான்கைந்து 
நரைகளையும் சேர்த்து  நுரைகக்க வைத்து
சாந்தமாகிறாள் ஷாம்ப்பு என்ற சர்பம்.

நாற்றம் போக்க நறுமணம் பூசிக்கொண்டு உடலில்
நனைந்து நாட்டியமாடிவிட்டு நமத்து போகிறாள்
நாகரீக சோப்புக்கட்டி.

சிக்கனமாய் செலவுசெய்த
செயற்கை மழை குளியில் மேனியில் ஆங்காங்கே
சிதறி கிடந்தன சில்லறை துளிகள்.

சில்லறை சிதறல்களை; கண்ட கள்வனாய்;
கவர்ந்து கொண்டாள் காதிபவன் கதர்த்துண்டு .
கட்டிகொண்டேன்.

தேவதை சேலை தலைப்பின் வாசம் பிடிக்கவும்
சேலை மறைக்காத சில சிறப்பு பகுதியில்
சில்மிஷம் படிக்கவும் சீண்டாமல் விட்டு வைத்தேன்
சிகை முடிகளை.

தெரியும் என்றே தேவதை வந்து
செல்லமாய் திட்டி சேலை துவட்ட-செய்த
சில்மிஷ சடங்கில் கொஞ்சம்
சிரித்து சிலிர்த்து கொண்டாள்.

சிற்றாடை கட்டி சிங்காரமாய் ஒரு குட்டி;
செல்ல கன்னுக்குட்டியாய்   ஓடிவந்து கட்டிக்கொண்டு
கலவரமாய் கேட்டாள்.
''ஆறடி அப்பாவுக்கு அரையடி கூந்தல்
ஆற்றிவிட ஒரு ஆள் வேண்டுமோ!?! என்று.





Wednesday, April 14, 2010

சிறகொடிந்த சித்திரை திருநாள்...



கோடை விடுமுறை... குதுகலம்... கும்மாளம்... சந்தோசம்... இதை மட்டுமே தந்த  சித்திரை மாதம் இப்போது  வெறுமையாய்...

பள்ளி  நாட்களில் விடுமுறையில் (ஞாயிற்று கிழமை) வரும் பண்டிகை நாட்கள்மேல் வெறுப்பாய் வரும்.மணம் சிட்டு குருவியாய் சிறகடிக்காமல் கூட்டு குருவியாவே திரியும்
கொண்டாட்ட சந்தோசங்களை குழிதோண்டி புதைக்க சொல்லி கூப்பிடும் பள்ளி மணியோசை.கோடையில்  அந்த வருடத்து மொத்த சந்தோசத்தையும் சுமந்து வரும் சித்திரை.
  
   மதுரை, சினிமாவைதவிர எந்த ஒரு பொழுது போக்கு அம்சமும் இல்லாத என் பள்ளி பருவகால  மதுரை.அந்த மதுரையின் கொண்டாட்டமான எட்டு நாள்களை சுமந்துவரும் மாதம் அது.400 வருட பழமையான வரலாற்று (வரலாறு எனக்கு தெரியாதுபா..)சிறப்பு மிக்க சித்திரை திருவிழா,தமிழ் புத்தாண்டு,தமுக்கம் மைதானத்து பொருட்காச்சி, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்சி என்று மதுரையே கலைகட்டி இருக்கும்.


என்னை இந்த நாட்களில் பிடிக்கமுடியாது.கோடை விடுமுறையின்  முதல் வாரம் குற்றால ஸ்பரிசம்.அதை தொடர்ந்து சித்திரை எட்டு நாள் திருவிழா. அந்த எட்டு நாளும் மணசு ரெக்கைகட்டி பறக்கும்.நண்பர்கள் கேட்பார்கள் டேய்...நீ முஸ்லீம் பையன் நீ ஏண்டா எங்ககூட வர்ர?? இதெல்லாம் உங்க வீட்டுல தெரிஞ்சா அடி பின்னபோரங்கடா-னு.அம்மா,அத்தா(அப்பா)கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுதான் வர்றேன்டானு சொல்லுவேன்...அந்த சந்தோசங்களை யாருமே பறிக்கலா  முழுசா அனுபவிச்சேன். அம்மா சில கன்டிஷன் போட்டு  புது சட்டையும் போட்டு அனுப்பி வைப்பாங்க ஆனால் பொருட்காச்சிக்கு மட்டும் அவங்க கூடத்தான் போகணும் (தொலைந்து போயிருவேனாம் )அப்போதானே இஷ்ட்டபட்டத வாங்க முடியும்.அந்த நாட்கள் இன்னும் மனசவிட்டு போகல.


இன்று தமிழ் புத்தாண்டையும் மத்திபுட்டாங்க.வைகைல தண்ணியும் இல்லாம பண்ணிடாக.அந்த நியாபகங்களை சுமந்துகொண்டு சிறகொடிந்த சிட்டு குருவியாய் நானும் இங்கே....(அப்பாடா ஒருவழியா தலைப்புக்கு லிங்க் குடுத்தாச்சு) இன்ஷா அல்லா எனக்கும் சேர்த்து மாப்பி வசந்து நல்லா கொண்டாடிட்டு வருவான்.வந்து ஒரு பதிவு  போட்டு வெறுப்பேத்துவான்.

நீங்கலாம் எப்டிதான் பெரிய பெரிய கட்டுரைலாம் எழுதுறீங்களோ???கட்டுரை சரி இல்லனா யாரும் என் கனவுக்குள்ள ஆள் அடியாள் அனுப்பதிங்க இங்கேயே...  குனியவச்சு நல்லா குமுறலாம் அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு....ஆமா.
அன்புடன்,






Monday, April 12, 2010

காதல் கடிதம் அல்ல...8(தொடர் க(வி)தை)

கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின்  எல்லா  பாகமும் இங்கே..


இப்போது...
மின்கலத்தின் மட்டும் அல்ல
என் காதலின்  உயிரையும்
குடித்திருந்தது கைபேசி;

கடவுளாகவும் கைகுழந்தையாகவும்
கையாளப்பட்ட கைப்பேசி இப்போது
கன்றாவியாய் காட்சி தருது;
கொம்பு ரெண்டு முளைத்து
கொடூரமாய் பார்க்குது.

மீண்டும் மின்கலத்திர்க்கு
உயிருட்ட ஒடிபோனேன்.
உயிர் பெற்றதும் - கருவறை
கடந்துவந்த குழந்தை போல்
அழகாய் அழுதது அழைத்தது...
அழைப்பை அனுமதித்து
அலோ என்றதும்... 
கவியா?? என்றது அதே குயில். 
ஆம் என்று குதித்து   கும்மாளம்
போட்டது மனது.

தயக்கம் தடுமாற்றம்  தாண்டி;
''நான் தமிழ்'' என்று தமிழ் பேசியது குயில்.
நலம் விசாரிப்பு முடிந்ததும்  நன்றி என்றது.
எதற்கு என்றதும் எல்லாத்துக்கும் என்றது.
சரி விஷம் விழுங்கியதன்
காரணம் கரை என்றேன் - குயில் கரைந்து.

உங்கள்  கடிதம் அப்பா கையில் மாட்டிகொண்டது
நான் அவர் வாயில் மாட்டிக்கொண்டேன்
வாய்க்கு  வந்தபடியெல்லாம் வாதாடினார்
வாயிதா கேட்டகூட வழி இல்லை;
இல்லை என்று இடியாய் இரைந்தும் கூட
இம்மி அளவும் இதயம் இறங்கவில்லை.
கதறி கதறி  கயிச்சல் வந்தது எனக்கு
பதறி பதறி பைத்தியம் பிடித்தது அவருக்கு.
படி தாண்ட மாட்டேன் என்று பறைசாற்றுவதற்கு
துணையாய் இருந்தது தூக்கமாத்திரை.
துணிந்து தூக்கமாத்திரை போட்டேன் என்றாய் 
தூக்கிவாரி போட்டது எனக்கு.


''தாய் இல்லாத பிள்ளை
தங்கமாய்  தாங்கி இருக்கிறார்;
தவறி விடக்கூடாது என்று
தவித்திருக்கிறார்.
.
காதல் எனக்கு
கண்ணுக்கு  எட்டிய கானல்.
கடல் முட்டிய வானம்.
கைக்கு கிட்டிய காற்று.
கடவுளை காட்டிய கனவு.

உடைந்து போனவரை 
ஓட்ட வைத்திருக்கிறேன்.
காதல் சொல்லி களைத்து விட
கண்டிப்பாய் விரும்ப்பமில்லை.
இது என் முதலும் கடைசியுமான
அழைப்பு''... மன்னிக்க மன்றாடுகிறேன் என்று
மீண்டும் உயிர்விட்டது  
கைப்பேசியும் காதலும்.

காதல் காதல் என்று கபடி ஆடிகொண்டிருந்த இதயம்
கண்ணீரில் கரைந்து போனது..(தொடரும்...)




Tuesday, April 6, 2010

இப்படிக்கு மலரும்,நிலவும்...



பார்வையால் படமெடுத்து
அப்படி பார்க்காதே!!!
வெட்கம் வெட்கமாய் வருது...
இப்படிக்கு ரோஜா...
****
 

உனக்கு மட்டும்தான்
வெட்கப்பட்டு
சிவந்து சிரிக்க
தெரியுமா என்ன???
எனக்கும் தான் தெரியும்...
இப்படிக்கு ரோஜா...  
****
 

வாரத்தின் ஏழு நாட்களும்
பூக்க வேண்டிய ரோஜா இது.
வருடத்தில் ஏழு நாட்களே பூக்கிறது...

வாரத்தின் ஏழுநாளும்
என் எதிரே நீ வந்து
பூத்து விடுவதினால்...
இப்படிக்கு  ரோஜா...
****

மலரே...
சீக்கிரம் மலர்ந்து விடு
அனைவரின் கண்பட்டு
மொட்டிலே...
பட்டு விட போகிறாய்....
****

பரிசு...
கோடை வெயிலில்
குளிர்த்து விட்டு போனாயே
உனக்குத்தான் இந்த
சிரிப்பு பரிசு...வாங்கிக்கொள்...
இப்படிக்கு ரோஜா...
****

ஜொள்ளு...
இவ்வளவு அருகில் நிலவை
பார்த்து விட்டதற்கா!!
இதழ் வழியே
நீர் வடிக்கிறாய் நீயும்...!!!????
****

        

காதல் கூட பூவைப் போன்றது.. :)

ஒ...
அதனால் தான்
பறித்ததும் வாடி போகிறதோ...

****
 

உலகுகேல்லாம்
உன்னை படம் பிடித்து
வைத்திருக்கிறேன்...

நீயோ ஒற்றை பார்வையில்
என்னை வடம் பிடித்து
கொண்டு போகிறாயே
இது என்ன நியாயம்???
இப்படிக்கு நிலா...
****

பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...







Thursday, April 1, 2010

நின் நினைவுகள்...


நினைவுகளை  கைபிடித்து ;
நிலவொளிதனை  நனைந்து ;
நீண்ட தூரம்  போகிறேன். 
நீயும் வருவாயென - நின்
நினைவுகள் சொல்லிவிட 
நீயும் வருவாயா??
நிழல் கூட்டி
நிலாவின் முகம் காட்டி.

நிறுத்தும் இடமெல்லாம்
நினைவோடு இன்புற்று
நீயே இருப்பதுவாய்
நிகழ்வுகள் இனிக்குதடி.

நித்திரை கனவழியில்
நினைவெனும் நீர் அலையில்
நீந்தி நீந்தி நீர்த்துபோய்
நின்னொரு நினைவு கூட
நீங்காது கண்மணியே.

நித்தம் நித்தம் நீ வேண்டும்
நிரம்ப நிரம்ப நினைவு வேண்டும்
நீயாக தரவேண்டாம்  
நினைத்து விடு பொன்மணியே.

நின்று கடுக்கையிலும்
நீள் தூரம் கடக்கையிலும்
நீட்டி நிமிர்ந்து கிடக்கையிலும்
நின் நினைவுகள் நெருடுதடி.

நீ சாலை கடந்து
நில்லாமல்  போனாலும்
நினைவு நின்று
நின் மாயை காட்டுதடி.

நிறுத்தங்களில் நிற்கையில்
நின் வருத்தங்கள் என்னவோ??
நீல விழி நின்று - என்மேல்
நிலைகொள்ள மறுக்குதடி.
நீண்ட -நின்
நிழல் கூட நெருங்கிவிட பார்க்குதடி
நீ மட்டும் தீ கொண்டு தீண்டுவது ஏனடி?

நிலவை நீ என்றேன்
நீலம் உன் விழி என்றேன்
நின் நிழல் நானென்றேன் 
 நிறமெல்லாம் உன் நிறமேன்றேன்
நீரை உன் மனமேன்றேன்
நின் குறையெல்லாம் நிறைஎன்றேன்.
நிதர்சனம் காட்டினாலும்-நின்
நிகர் நிற்க யாரென்றேன்.

நிழலாய் நீ வேண்டும்
நிகழாத வரம் வேண்டும்.
நீ மட்டும் உடன் வேண்டும்
நினைவுகள் கொஞ்சம் கடன் வேண்டும்.
நீதி கிடைக்க வேண்டும்.
நின் நினைவுக்குள் கிடக்க வேண்டும்.
நிஜமாய் நிச்சயமாய்
நினைவில் என்றும்
நீமட்டும் நெருக்கமாய் வேண்டும்.







Related Posts with Thumbnails