Sunday, May 30, 2010

புதினம் புகுத்திய பூமி...

மேற்க்கே விழுந்து
மரித்துப்போன கதிரவன்;
வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!?
உடைத்து போட்ட
நட்சத்திர வளைத்  துகள்கள்;
கண்ணீர் பெருக்கு  மழை;
கருப்பு கொடிபிடித்த கார்மேகம்;
அலை எழுப்பும் அழுகுரல் ஒப்பாரி;
இருளின் மடியில் இறந்துபோன பூமி....!!!

எதிர்காலம் விளக்கேற்றுகிறது கிழக்கில்;
சீர் வரிசையாய் தங்கமுலாம் பூசிய
பாடும் பறவைகள்;
சுபமுகூர்த்த வேளை;
சுடர்விடும் சூரிய மாப்பிள்ளை;
முகில்  வெட்கம் மூடிய நிலாப்பெண்;
கண்பட்டுவிடாமல் கவர்ந்துகொண்ட கார்மேகம்;
புது வாழ்வு புணர அட்சதை தூவும் ஆனந்தமழைச் சாரல்;
ஏழு வர்ண்ணம் எடுத்து பூசிய வானவில் தாலிக்கயிறு;
எட்டு திக்கும் இடி(ந்து) விழும் கெட்டி மேளம்;
கடல் பாடும் வாழ்த்தொசை;

முதல் ராத்திரி!!!
அம்மாவாசையின்  கருப்பு அறைக்குள்
காணாமல் போன காதல் ஜோடி;
சின்ன சின்ன சிமிலி விளக்கு பிடிக்கும்
நட்சத்திர கூட்டம்.
பிரபஞ்ச கருவறையில்
புத்துயிர் கொண்ட புதிய பூமி.






 

Sunday, May 23, 2010

வருவேன்...


திசுக்களை தின்றுவிடும்
தினசரி வாழ்கையிலிருந்தும்;

பாஷை புரியாத
பாவமண்ணின் பயத்திலிருந்தும்;

இரண்டு வருடம் இறுக்கத்தையும்
இடிகளையும் சுமந்த இதயத்தை
புலம் பெயர்த்து புதுப்பிக்கவும் ;

அவள் கருவில் நான் எழுதிய முன்னுறுநாள் 
தவக்கவிதையை தரிசிக்கவும் ;

கதை கேட்டு குருட்டு  பயம் புதைத்த
அம்மாவின் இருட்டு மடியில் இன்னொரு
முறை முகம் பதிக்கவும்;

காலத்தின் காயங்களை
கழுவிவிடும் அவளின் காதல்
கணங்களில் காணாமல் போகவும்;

கண்பார்வை சரிசெய்ய  கத்தி வைத்த
கண்களுக்குள் காலமெல்லாம் என்னை வைத்த
தந்தையின் தழுவளுக்காகவும்;

இரண்டு வருட இம்சையை
இரண்டுமாத இனிமையில் கழிக்கும்
கனவுக் கணக்குகளோடும் ;

இரும்பு காட்டுக்குள் துரு(ம்பு)ப் பிடித்த
நினைவுகளை துளிர்க்கவிடவும்;

இதோ இரக்கமில்லா இடத்தை விட்டு
இறக்கைகள் விரித்த இயந்திர பறவையின்
முதுகேறி முழுதாய் வருகிறேன்.

இந்த பயணம் இறுதியென
இறைவனடி சேர்ந்தாலும் கருகிப்போன
கவிதை காகிதத்தின் சாம்பலாய்
காற்றிலாவது கலந்து வருவேன்.




Monday, May 17, 2010

காதல் வந்தால்...

ஹார்மோன்களின் பருவ கிளர்ச்சியில்
முகம் காட்டும் பருக்களை-பார்க்கும்போதெல்லாம்
கைவிரல்களால்  கற்பழிப்பாய்.

உயிருக்குள் உயிர் புகுந்து
ஊடுருவி உயிர் வாங்கும்
உன்னத உண்மை உணர்வாய்.

கனவிலும் கவிதையாய் உளறுவாய்.
காகிதத்தில் அவள் பெயர்  இட்டு
அதையும் கவிதைஎன்பாய்.

தலையணை பஞ்சுகளை
கெஞ்சி கெஞ்சி கொஞ்சுவாய்.

கோடை வெயிலும் உனக்கு
கொடைக்கானல் மழையாகும்.

குளிர்கால கம்பளிகள்
குச்சி முள்ளாய் குத்தவரும்.

இதுவரை கண்டு கொள்ளாத வானம்
கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே
உற்றுப்பார்க்கும்.

வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு  
வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.

தென்றல்  கைபிடித்து 
உன்னோடு  உலாவரும்.

மாடியில் மலர்ந்துவிட்ட ஒற்றை ரோஜா 
உன்வீட்டு நந்தவனமாகும்.  

கல்லறையில் பூக்கும் கள்ளிச் செடியும்-உன்
காதுக்குள் காதல் பேசும்.
கான்க்ரீட் பாலங்களோ  களத்துமேடாய் பொய்பேசும்.

கருகி உருகும் தார்ச்சாலை
ஒவ்வொன்றும் தனித்தீவாய்
தண்ணிகாட்டும்.

மூச்சு விட முடியாமல் முண்டி நிற்க்கும்
மாநகரப் பேருந்து மயில்வாகனமாய் மாறிப்போகும்.

ஓயாமல் பேசிய உதடுகள் ஊமையாகும்.
வார்த்தைகளின் வழி தெரியாத விழிகள்
காதல் அறிக்கையின் கடைசி பக்கம் வரை
கண்சிமிட்டி கடகடவென ஒப்பிக்கும்.

இதுவரை படிக்காத காதல் வாய்ப்பாடு
இனி தலைகீழ் பாடமாகும்.

இடி விழுந்து எரியாத இதயம்-அவள்
இமையில் விழுந்து எரியும்.

கனவு கழித்து  வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.



Friday, May 7, 2010

காதல் கடிதம் அல்ல...9தொடர் க(வி)தை...

கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின் எல்லா பாகமும் இங்கே..

திருப்பி அழைக்க முற்படுகையில்
திரும்பத்  திரும்ப சொல்லவேண்டியதை
பதியச்சொல்கிறாள் பதில் பேசமுடியாத ஒருத்தி.

விதியின் வழியையும் வலியையும்
வாழ்த்துகிறேன் காதலை மட்டுமல்ல
காயங்களையும் - அவள்
விழிகளில் வைத்ததால்.

ஏ...காதலே - நீ என்
காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம்
கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு.

இன்று..
வெண்ணிலா  வெள்ளி தீ தூவி - என் தேக
விறகை குளிர்காய எரித்துக் கொண்டது.
நெருப்பில் பிறந்து பறந்த வெள்ளி
தீப்பொறிகளெல்லாம் வானேறி விண்மீன்
வேஷம் போட்டு கொண்டன.

கண்கள் இரண்டும் - சேர்த்து வைத்த தூக்கத்தை
கண்ணீர் துளிகளில் செலவுசெய்து கொண்டன.

மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில்
உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய்
இறைத்து குடித்து கொண்டது - அவளின்
நினைவுக்  கோப்பைகள்.

சொல்லாதே என்று சுட்டுவைத்தலும்
துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே
சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம்.

என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.

அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை
தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து
கண்ணங்கள் வழியே வழிகிறது.

அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே
கழுவ முடியும்...(தொடரும்...)   




Monday, May 3, 2010

ஆ...ஆ....''ஆப்''ரிக்கா ஆபத்து...

''ஹாய் ஹவ்  ஆர் யு....நான் இதிரீஸ்...நான் உங்கள் ரசிகை.உங்களோடு நட்ப்பு கொள்ள ஆவல்.மேலும் நெருங்க மெயில் பண்ணவும்...''

இப்படிதான் போனவாரம் ஆங்கிலத்தில் ஒரு மினஞ்சல் வந்தது.சும்மா இருந்த மனச சொரிஞ்சு விட்ட மெயில்.''ஹாய் இதிரீஸ் நான் நலம் நீங்கள் நலமா??நீங்கள் யார்?என் மெயில் ஐ.டி எப்படி கிடைத்தது ரசிகை என்றால்??எனக்கு புரியவில்லை உங்களை பற்றி சொல்ல முடியுமா?? பதிலுக்காய் காத்திருக்கிறேன்...''சும்மா இருக்க முடியாம நானும் ரிப்ளே பண்ணி விட்டேன்.அடுத்தநாள்...

''ஹாய் கனி உங்கள் பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி.என் பெயர் ''செல்வி'' ஹளேன் இதிரீஸ் என்பது நீங்கள் அறிந்ததே வயது-22 . மேற்கு ஆப்ரிக்காவில் செனெகல் என்ற இடத்தில் வசிக்கிறேன்.என் அப்பா லேட் Dr. Desmond Idiris இங்கு ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இப்போ அவர் என்னோடு இல்லை எதிற்பரதவிதமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நான் தற்போது ஒரு அனாதை இல்லத்தில் இருக்கிறேன்.
இங்கு என்னோடு தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட தோழி ஒருத்தி இருக்கிறாள்.அவள் பேசும் தமிழ் எனக்கு பிடித்து போக தமிழ் பேசமட்டும் கற்று கொண்டேன்.அவள் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவள் எனக்கும் படித்து காட்டுவாள்.இப்படித்தான் உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டேன்.உங்கள் கவிதைகளும் என்னை வெகுவாய் ஈர்த்து விட்டது.இப்பொது அவளிடம் தமிழ் படிக்க கற்று வருகிறேன். மேலும் உங்களை பற்றி அறிந்து கொள்ள ஆவல்.விரைவில் பதில் அனுப்பவும்
இப்படிக்கு அன்புடன்,
இதிரீஸ்....''இப்படி ஒரு பதில் மெயில்...என்ன பயவுள்ள அநியாத்துக்கு அளக்குறானுதனே  பாக்குறீங்க!!! புரியுது. கடைசிவரைக்கும் படிங்க அப்பதான் தெரியும்...

நானும் உடனே உருக்கமா... ஒரு பதில் அனுப்பிட்டேன். அத சொல்லித்தான் தெரியனுமா என்ன??!!!பதிலுக்காய் நானும் காத்திருக்க உடனே பதில் வந்தது.

உங்கள் பதில் கிடைத்தது கண்டதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.எனக்கு உங்களை பார்க்கவேண்டும் போலிருக்கு நிச்சயம் என்றாவது உங்களை சந்திப்பேன்.உங்கள் நேர்மை,அன்பு,பாசம் எனக்கு பிடிச்சிருக்கு.ஏதோ உணர்வு எனக்குள்ளே  இருக்கு அதை சொல்ல தெரியலை.உங்கள் பரிவுக்கு ரெம்ப நன்றி.அடுத்து நான் என்னுடைய உண்மையான நிலைமையை உங்களுக்கு எடுத்து சொல்ல்கிறேன் கவனமாய் கேட்கவும்.(நீங்களும்தான்.)என் அப்பா இறந்ததும் என் மாமா (என் அம்மாவின் அண்ணன்)எங்கள் வீடு மற்றும் அணைத்து சொத்துக்களையும் அபகரித்து கொண்டார்.என்னையும் சரியாய் கவனிப்பது இல்லை.என் அப்பா என் எதிர்கலத்திர்க்கு உதவும் என்றும் ஒரு குறிப்பிட்ட பணத்தை என் பெயரில் போட்டு வைத்திருந்தார்.அதை நான் நேரடியாக உபயோகிக்க முடியாது.எனக்கு வரபோகும் கணவரோ அல்லது நான் ஆதரவாய் இருக்க விரும்பும் குடும்ப தலைவரோதான் அந்த பணத்தை எடுத்து எனக்காக செலவுசெய்யவோ கொடுக்கவோ முடியும்.நான் இறந்து விட்டால்.எனக்கு அடுத்து உள்ள நெருங்கிய சொந்தத்திற்கு பணம் சென்று விடும்.நீங்கள் தான் அந்த பணத்தை எடுக்க எனக்கு உதவவேண்டும்.  எனக்கு வேற யாரும்  இல்லை.அந்த பணத்தின் மதிப்பு Two Million Five Hundred Thousand U.S டாலர்ஸ். நீங்கள் அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி  கொள்ளலாம்.நீங்கள் உங்கள் வங்கி கணக்கு என்னையும் உங்கள் விபரமும் அனுப்பினால் நான் இங்கு ஆகவேண்டிய வேலையை செய்து விடுவேன்.பின் நீங்கள் என் வங்கி மேனேஜரிடம் பேசி பணத்தை உங்கள் கணக்கில் மாற்றி கொள்ளலாம்.பிறகு ஒருநாள் நான் வந்து உங்களை சந்தித்து மற்ற முடிவுகளை எடுக்கலாம்.நன்றி டியர்.இந்த மெயிலுடன் என் போன் மும்பர்,வங்கி விபரம், போன் நம்பர் மற்றும் என் புகைப்படமும் அனுப்பியுள்ளேன். நான் அவ்வளவு அழகு இல்லை.நான் உறுதி அளிக்கிறேன் என்னால் உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி வரும்.
இப்படிக்கு அன்புடன்,

இதிரீஸ்....''ஐயோ ஒரு தமிழ் சினிமா பார்த்தமாதிரி இருக்கே...நண்பனிடம் சொன்னேன் இது ஒரு நூதன   கொள்ளைனு சொன்னான்.எப்டிலாம் யோசிக்கிறாங்கே...
ஆத்தா!!! ஆளை விடு ஐயம் எஸ்கேப்...

இன்னொரு விஷயம் அவளின் போட்டோ பார்த்து விட்டு மூணு நாள் லீவு போட்டு அழுதேன்...நீங்களும் அந்த போட்டோ பாருங்க...
ஏன் எனக்கு மட்டும்  இப்டிலாம் நடக்குது...(இங்குட்டு வரவே பயமா இருக்கு.)




Related Posts with Thumbnails