Friday, July 30, 2010

இனியென்ன செய்வாய்?


அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?

ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு  சாயம் பூசுவாய்.

துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும் 
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .

வளையல்கள் நொறுக்கி  
கொலுசு மணிகளை குலுக்கி
இதயத்தின் இட வலது 
இருபக்கமும்  
இறுக்கிக் கட்டி எந்நேரமும்
இனிமையாய் இம்சிப்பாய்.

பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.

ஒவ்வொரு பகலின்
ஆரம்பத்திலோ,  
அல்லது இரவின்
தொடக்கத்திலோ
தூக்கம் என்ற ஒன்றை 
தொல்லையாக்குவாய். 

சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என் 
சோற்றுக்குள் புதைந்து கொண்டு 
தொண்டைகுழியில் குத்துவாய்.

உன் வியர்வை துளியை
விலைக்கு கேட்கவும் 
கண்ணீர் துளியை
தொலைக்க கேட்கவும் 
செய்வாய். 

கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்.

ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர்  மட்டும் மாற்றுவாய்.

இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??





Sunday, July 25, 2010

நான் களவாணி-2

நான் களவாணி-1

முதல் பாகத்திற்கு ஆதரவுதந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அடுத்தது பயங்கரமான அனுபவம்.இன்றும் அதை நினைத்தால் அந்தநாளின் ஒவ்வொரு காட்சியும் கண்ணு முன்னாடி வந்து போகுது.(எதுக்கு இவ்வளோ பில்டப்பு??)

அன்று எங்கள் ஐ.டி.ஐ யின் கடைசி வகுப்பு.(ஃபெர்வேல்டே) அனைவரும் ரெம்ப குதுகலமாய் இருந்தோம்.எங்களுக்கு வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வாங்கி பகிர்ந்தோம்.நண்பர்களிடம் முகவரி பகிர்ந்தோம். அந்த  இன்ஸ்டியுட்டில்   யாருக்குமே பிடிக்காத பெருசு ஒருத்தர்  இருக்கார்  அவர் பெயர்  ஹுசேன் முக்கிய  பதவியில் இருப்பவர்.எங்கள் டிபார்மென்ட் பசங்களை கண்டாலே அவருக்கு பிடிக்காது. ஐந்து நிமிடம் தாமதமா வந்தாலும் அப்டியே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்  சும்மா இல்லை நாலு  அடிய போட்டுதான் அனுப்புவார். ரெம்பநாளா அவர்மேல எங்க எல்லோருக்கும் பயங்கர கோபம். அன்றுதான்  பழி தீர்க்கும் நாள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிய மாலை ஏழு  மணி நல்லா இருட்டிருச்சு எல்லோரும் வெளிய வந்துட்டோம்.அவரும் அவரோட ஓட்டை வண்டிய ஓட்டிட்டு வந்தார்.அவர் கேட்டை நெருங்கும்போது கூட்டத்தில் இருந்து ஒருத்தன் "டேய் ஹுசேன் சொட்டதலையா" னு சத்தமா சொல்ல.எல்லோரும் பயந்து  (மனசுக்குள்ள   சத்தமா சிரிச்சுட்டு) ஆளுக்கொரு பக்கமா ஓடிபோயிட்டோம்.நான் என்நண்பர்கள் ரிஸ்வான், அரவிந்த் மூணு பெரும் ஒன்னாதான் பஸ்ல போவோம்.சிம்சன் சுரங்கபாதை வழியாதான் அந்த ரோட்டை கடந்து போவோம்.அதே போல் அன்றும்  நடந்ததை பேசி சிரிச்சுட்டு சுரங்கபாதைக்குள்ள நடந்து போறோம் எதிரே ஹுசேன் சார்... (ஹாய் ஆப்பு)ஆக்ரோஷத்தோட எங்களை நோக்கி வர்றார்.கைல இருந்த கடிகாரத்தை கழட்டி பைக்குள்ள வச்சுகிட்டே கேட்டார்(மனுசே  தெளிவா  ஸ்கெச்  போட்டுருக்காரு)  "யாரு டா அப்படி சொன்னது??"நாங்க தெரியல சார்னு சொல்லி அடுத்தநொடி ரைட்டு லேப்ட்டுன்னு அடி பின்னி எடுக்குறார். ஆமாம்  ரிஸ்வான்னும் அரவிந்தும் எனக்கு ரைட்ட்ளையும் லேப்ட்டுளையும் நடுவுல  சேஃப்பா நான். (மகனே ஜஸ்ட்டு மிஸ்டா)

படத்துல வில்லன் ஹீரோவ அடிக்கிற மாதிரி அடினா அடி அந்தமாதிரி அடி அங்க எங்களை வேடிக்கை பார்த்து கடந்து போகுது ஒரு கூட்டம்.(சினிமா சூட்டிங்க்னு நெனச்சுருப்பாங்க) சிலபேர் அவரை தடுக்க முயற்சி பண்றாங்க ம்ம்ம்ஹும் முடியல (சினம் கொண்ட சிங்கம் சும்மா இருக்குமா??).அரவிந்துக்கு உதடு கிழிஞ்சு இரத்தம் வர்ர வரைக்கும் அடி நிக்கவே இல்லை.மகனே டி.சி வாங்க வருவீங்கல அப்போ வச்சுக்குறேன் டா. அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டார்.வலி தாங்கமுடியாம அரவிந்த் "எவோனோ கத்துனதுக்கு நம்மல அடிச்சுட்டு போறானே  இந்தாளுனு" சொல்லிட்டு ஒரு சமதம் எடுத்தான். "அவன கண்டு பிடிச்சு இதே அடிய அவனுக்கு குடுக்கலை நான் ஆம்பளையே இல்லடா".(அதுக்கு ஏன்டா இந்த முடிவு)எல்லோருக்கும் கொஞ்சநாள் இழுத்தடிச்சு டி.சி குடுத்தாங்க.கடைசி வரைக்கும் யாருனே கண்டு பிடிக்க முடியல அரவிந்த் சபதமும் நிறைவேரலை.

ஒரு வேலை இந்த பதிவை அவன் படிக்க நேர்ந்தால் அவன் சபதம் இனி நிறைவேறலாம். ஆமாம் அந்த கூட்டத்துல "ஹுசேன் சொட்டதலையானு" கத்துன நல்லவன்  நான்தான்.இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.

பயஸ்க்கி:
        மாப்பள அரவிந்து எப்போவாவது இந்த பதிவ படிக்க நேர்ந்தால் கொலைவெறியோடு கத்திய கித்திய தூக்கிகிட்டு வந்துராதே.ஐ யம் ரெம்ப பாவம்.
ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.மக்களே நீங்களும் யாரும் போட்டு குடுத்துறாதீங்க.ப்ளீஸ்............





Monday, July 19, 2010

நான் களவாணி-1

களவாணி தலைப்பை பார்த்ததும் படவிமர்சனம்னு நம்ம்பி வந்தவங்கள் மன்னிக்கணும்.படத்தோட விமர்சனம் பார்த்தேன் அப்டியே எனக்கும் நான் செஞ்ச  களவானித்  தனங்கள் நினைவுக்கு வந்துச்சு  அதன்  தொகுப்புதான்   இது.  (பயபுள்ளைக்கு பேருமைய  பாத்தியா??)

முதல் களவாணித்தனம்...
அப்போ எனக்கு மூணு வயசு இருக்கும் அதெல்லாம் நியாபகம் இருக்கானு கேக்குறது புரியுது இது எங்க அத்தமா(பாட்டி)சொன்னது.
சின்னமனூர் அது நான் பிறந்த ஊர் தேனீ பக்கத்துல இருக்கு.ஒருநாள்  சாயங்காலம் என்னை சீவி சிங்கரிச்சு வீட்டு வாசல் முன்னாடி வேடிக்கை பார்க்க உட்கார வச்சுட்டு அம்மா ஏதோ வேலையா உள்ள போய்ட்டாங்களாம்.வந்து பார்த்தா எனைய காணோம்.(எந்த பொண்ணு பின்னால போனியோ??யாருக்குத் தெரியும்.)உடனே பதறிபோய் அம்மா ஒரு பக்கம்,  அத்தா(அப்பா)  ஒருபக்கம்,  அப்பா (தாத்தா) ஒருபக்கம்னு ஊர்முழுக்க தேடுறாங்களாம். அங்க தண்டோரா அடிக்குரவற கூப்பிட்டு இன்னார் பேரனை காணோம்னு தண்டோரா அடிச்சாங்களாம். ராத்திரி  ஒன்பது   மணியாச்சு ஒருதகவலையும் காணோம். அடுத்த கட்ட நடவடிக்கையா கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்தா சன்மானம் குடுக்குறதா தண்டோரா போட்டாங்களாம்.அதுக்கு அப்றம் ஒருத்தர் தூக்கிட்டு வந்து வீட்டுல விட்டாராம்.அங்க நடந்தத அவரு சொன்னாராம்.

நான் வீட்டுல இருந்து கிளம்பி நேரா நடந்து பஸ்டாண்டு வரைக்கும் போயிருக்கேன். அதுக்குமேல போகத்தெரியாம அங்கேயே நின்னு  அழுதுருக்கேன். அத பார்த்த ஒருத்தர் என்னை யாரு கேட்டுருக்காரு எனக்கு எதுவும் சொல்லதெரியல.அப்றம் பக்கத்துல இருந்த ஒரு டீகடைக்கு கூப்பிட்டு போய் என்ன வேணும்னு கேட்டுருக்காரு. நானும்  இதுதாண்டா  சான்ஸ்னு  நான்பாட்டுக்கு    பன்னு(BUN ), கேக்குனு  வாங்கி சாப்ட்டுட்டு அவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பக்கத்துலையே உட்கார்ந்துட்டேனாம்.(பயபுள்ள ஒரு பன்ன பார்த்ததும் பல்ல ஈளிச்சுடானே!!)அப்றம் அவரு விசாரிச்சு வீட்டுல வந்து விட்டுட்டாரு.அவருக்கு எங்கப்பா(தாத்தா)எவ்ளவோ பணம் குடுத்து நன்றி சொன்னாராம்.

அடுத்தது  மூணாவது படிக்கும் பொது டூருக்குபோக நான் செஞ்ச களவாணி தனத்தை  இங்க படிக்கலாம் ஆனா விழுந்து விழுந்து சிரிக்கக்கூடாது.  ஐயம் பாவம் அப்போ நான் சின்னபுள்ள.

 அடுத்து இரு ஒரு பயங்கரமான அனுபவம்.இத, தானா தற்கொலைனு சொல்லலாம் அந்த மாதிரி.மதுரைல ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும்போது நடந்தது.நான் ஸ்கூலுக்கு போற வழில ஒரு குளம் இருக்கும்.அனால் அந்தபக்கமே நான் போனது இல்லை. ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வந்துகிட்டு இருக்கும்போது அந்த குளத்தை சுத்தி ஒரே கூட்டம்.அப்பவும் எதுவும் கண்டுக்காம நான் வீட்டுக்கு போயிட்டேன்.என் நண்பன் பாலா வந்து டேய் அந்த குளத்துல யாரோ ஒருத்தன் ஒரு சின்ன பிள்ளைய கொலபன்னி  வீசிட்டு போயிட்டானாம் டா.வா போய் பாக்கலாம்னு கூப்பிட்டான்.அம்மா அத கேட்டதும் டே அந்தப்பக்கம் போன... கொண்டேபோடுவேன். ஒழுங்கா அடக்கமா இங்கே இருன்னு சொல்லிட்டு எங்கயோ போய்ட்டாங்க.அப்போ நண்பன் சொன்னான் டே  அம்மா சொன்னா அதெல்லாம் சும்மா டா வாடா பார்த்துட்டு வருவோம்னு சொல்ல யாருக்கும் தெரியாம  அந்த குளத்துக்கு போனோம்.அங்க....

 ஒரு சின்ன பொண்ணு மிதக்குது கை, கால்  எல்லாம் வீங்கி இருக்கு பார்க்கவே பயங்கரமா பயமா  இருந்துச்சு.யாரோ ஒரு படுபாவி நகைக்காக கொலை பண்ணிருக்கான்.அங்க இருந்து ஒரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.அவ்ளோதான் ராத்திரி முழுசும் தூக்கம் வரலை கை கால்லாம் நடுங்குது காயிச்சல் வந்துருச்சி.டாக்டர், ஊசி,மந்திரிக்குறது எதுவும் கேக்கல.அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அத மறந்தேன் சரியா போச்சு.
அடுத்து எனக்கு அத்தா(அப்பா) கொண்டாடுன வித்யாசமான  பிறந்தநாள் இங்கே இருக்கு.இதையும் படிங்க.   (ஏண்டா இப்டி கொன்னு கொலைய அக்குற...)

அடுத்து அத்தாவின் (அப்பா)வேலை காரணமா சென்னை வந்துட்டோம்.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது.அப்போ சென்னை,மெட்ரோ ரயில்,பீச்சு எல்லாம் எனக்கு புதுசு.பீச்சுக்கு போகரெம்ப ஆசை ரெம்பநாளா வீட்டில் யாருமே கூப்பிட்டு போகலை.என் நம்பன் அவனை அப்படிதான் சொல்லணும் அவ்வளோ நம்புனேன் அவனை.அவனும் நானும்  பீச்சுக்கு போக  திட்டம் போட்டு வீட்டுல கிரவுண்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கூழ் ட்ரிங்க்ஸ் குடிக்க அம்மாகிட்ட காச ஆட்டைய போட்டு கேளம்பிட்டோம்.நான் அவனை கேட்டேன் ரயில் பீச்சுக்கு போகுமான்னு.(கப்பல்தானே போகும்)அவன் சொன்னான் ஓ... போகுமே.அப்போ அதுலயே போகலாம்னு முடிவு பண்ணியாச்சு.சைதாப்பேட்டை ஸ்டேசன்ல டிக்கெட் எடுத்துட்டோம்.பீச்சு எத்தனாவது ஸ்டேசன்னு கவுண்டர்ல கேட்டோம் அவரு கடைசி ஸ்டேசன்னு சொன்னாரு.நாங்களும் அடுத்து வந்த ரயிலில்  ஏறி கதை பேசிட்டே போறோம். ரெம்பநேரம் ஆச்சு.கடைசியா ஒரு ஸ்டேசன்ல எல்லோரும்  இறங்குனாங்க.அப்போ ஒருத்தர் கிட்ட இதுதான்  லாஸ்ட்டானு   (அப்பகூட பீச்சு ஸ்டேசன்னு  கேக்கத் தெரியால ஹையோ..ஹையோ..) கேட்டோம் அவரும் ஆமான்னு சொல்ல எறங்கி பார்த்தா அது தாம்பரம்.டே என்னடா தாம்பரம்னு போட்டிருக்கு அப்போ பீச்சு  இல்லையா??டேய் லூசு(யாரு லூசு???) இங்கதாண்ட பீச்சு இருக்கு வா... எனக்கு     தெரியும்-னு   நடக்குறான் நானும் அவன் கூடவே நடந்து போறேன்.ரெம்ப தூரம் வந்தும் பீச்சுக்கு உண்டான ஒரு அறிகுறியும் தெரியல.ரெம்ப நொந்து போய் கேட்டேன் டேய் தெரியாதுன சொல்லிருடா இப்டியே போய்டுவோம்.முடியல ரெம்ப வலிக்குது(அவ்வ்வ்வ்....)அவன் சொன்னான் தெரியலடா...மறந்து போச்சி.அப்போதான் எனக்கு தெரியும் பயபுள்ள இதுவும் இப்போதான் முதல் முறையா ரயிலில் வருதுன்னு.அப்றம்  அலஞ்சு திருஞ்சு வீட்டுக்கு போனா...எங்க அத்தா (அப்பா)எனக்கு ரெண்டாவது பொறந்தநாள் கொண்டாடினாரு.நான் கூட கேட்டேன் போன மாசம்தானே எனக்கு பொறந்தநாள் வந்துச்சு இப்போ எதுக்குன்னு.இம்ஹும்.. அவரு கேக்கவே இல்லையே.வெடி வெடிச்சு ரெம்ப அமர்களமா கொண்டாடுனாரு.(தொடரும்)

டிஸ்கி:எனக்கும் ஆசைதான் இதே தலைப்ப வச்சு நாம சின்ன வயசுக செய்த களவாணி (குறும்பு)  தனத்த தொடர் பதிவா எழுதனும்னு ஆனா எல்லோருக்கும் தொடர் பதிவுனாவே அலர்ஜியா இருக்கு.அதான் நானே தொடர்ந்து இன்னும் சில குறும்புகளை எழுதுறேன் இத பயப்படாம படிக்கணும் சரியா...
இங்கே படிக்கலாம்...



Wednesday, July 14, 2010

ராச்சஷி பூக்கள்...


காத்திருக்கச்  சொல்லிவிட்டு  போனாய் 
காதல் சொல்ல கவர்ந்துவந்த ஒற்றை ரோஜா - தன்
காத்திருப்பையும் கவனப்படுத்த 
காத்திருக்கிறேன் என்று வானத்தில் எழுதச்சொல்லி 
கத்தியாய் கைகீறி இரத்தம் காட்டுகிறது.
***

மாலை வந்ததும் மாறாமல் வரும் பூக்காரியிடம் 
மலர் சூடிக்கொள்ள மங்கை இல்லை - அவளின்
மயிலிறகு பாதங்களின் மருக்கள் மட்டுமே 
மிச்சமாய் இருக்கு என்னிடம் என்றதும் 
கூடையிலிருந்து குதித்துவந்து என்மேல்
குண்டு எரிகிறது குண்டுமல்லி ரெண்டு.
***

ஏ!!கலாபக்காரியே - உன்
கார்கூந்தல் கூடும் கனகாம்பர பூக்கள் உன்னை
காணாத கோபத்தில் கண்ட  இடத்திலெல்லாம் 
கல்லெறிந்து காயப்படுத்துகிறது.
***

நீ  ஊஞ்சல் கட்டி ஆடும் அழகை 
உயரே இருந்து உற்றுப்பார்த்து விட்டு 
உதிரும் வேப்பம்பூக்கள் - அங்கு
நீ சிதறிய சிரிப்புகளை சேமிக்க வரும் என்மேல்
விறகு எறிந்து விரட்டுகிறது. 
***

அன்று நீ சரிந்த மண்ணில் 
சிதறிய மல்லிகை பூக்களை தேடிஎடுத்து 
மார்போடு வைத்துக் கொள்கையில் 
மாமல்லபுரத்து மலையாய் மாறி 
மல்லிகை என்னை கொல்லப்பாக்குது.
***

பசி பிசையும் வயிற்றுக்கு உணவுட்ட 
தொண்டைக்குழியில் தங்கிவிட்டு
தர்ணா செய்கிறது காலிபிளவர்.
***

இப்படித்தான் இயல்புகளை இருத்திவிட்டு
திரிபுகளை தின்னக்கொடுக்கிறது
நின் நினைவுகள்.

உன் ராச்சஷா  பூக்களால்
காதலன் பட்ட காயங்களுக்கு கட்டுப்போட 
கல்லறை தகர்த்து  எழுந்துவா.

வருவாயா??வரமாட்டாயா?
மீண்டு வருவாய் என்றுதான் 
மீண்டும் மீண்டும் சொல்கிறது உன்
கல்லறை பூத்த கள்ளிப்பூக்களும் உன்
இறுதி ஊர்வலத்தில் இறைக்கப்பட்ட 
கதம்பப்பூக்களும் கருகி காத்திருக்கிறது
என்னை போலவே 
சீக்கிரம் வா.... 





  

Thursday, July 8, 2010

இது காதல் கடிதம் அல்ல...11(தொடர்க(வி)தை)

தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் தொடர்ந்து கடைசி வரை படிக்கவும்.முந்தைய பாகங்கள் அனைத்தும் இங்கே.... 

 
விலாசம் பிடிக்க விசுக்கென்று புத்திக்கு எட்டியது
அவள் மயங்கி கிடந்த மருத்துவமனை.


வரவேற்ப்பு வட்டாரத்தில் அவளின் விபரம் சொல்லி
விலாசம் கேட்க வார்டு நம்பர் 307 என்றது பதிவேடு!!#@?*
எனக்குள்ளே எழுகிறது எத்தனை கேள்விகள்.
விடுபோய் சேரலையோ??ஏதும் விபரீதமோ??விபரம் சரிதானோ???
விறு விறுவென விரைந்தேன் வார்டு நம்பர் 307.


நரம்பியல் பிரிவு...
நரக தவிப்பிலிருந்து நடுக்கத்தோடு சில நரன்கள்.
நரம்புகள் நசுக்கப்பட்டு நகரத்துடிக்கும் - ஒரு
நான்குவயது பட்டாம்பூச்சி - சற்று தொலைவில் சக்கர
நாற்காலியில் சரிந்து கிடந்தது என் குலச்சாமி.


கொண்டுவந்த கோபத்தை
குப்பையில் கொட்டிவிட்டு.
குருட்டு கண் துடைத்து
குறுகுறுவென பார்கிறேன்.


தமிழா!!! ஆம், தமிழேதான் தனிமையில்.
என்னை கண்டதும் அவள் கண்ணங்களில்
நீர்தெளித்து நீண்ட கோலம் வரைகிறது கண்ணீர்த்துளிகள்.


சாலைகளில் சக்கரமாய் சுற்றித் திரிந்தவள் - நீ
எதற்கு சக்கர நாற்காலியில்?!.சத்தியம் சொல் என்றேன்.
சங்கடத்தோடு சன்னமாய் வாய்திறந்து - நான்  
சபிக்கப்பட்டவள் என்றாய்.


கால்களை கட்டுப்படுத்தும் மூளைநரம்பு 
நஞ்சு உண்டு நசுங்கி - மூச்சை
நிறுத்திகொண்டதாம் என்றாய்.
சலனமின்றி செத்துபோனேன் நான்.


கல்லூரிச்சலையில் - உன் கால்தடங்களை முத்தமிட
பூமரத்தின் பிடியிலிருந்து பூமிவரும்
புங்கை மலர்களுக்கு பதிலென்ன சொல்ல?-நீ
புடவை கட்டி புத்தகம் சுமந்து
வருடம்தோறும் வசந்தம் வீச - உன்
வாயுதிர்க்கும் புன்னகை பூக்களை
பொக்கிஷமாய் பாவிக்கும் பருவகாலத்துக்கு
பதிலென்ன சொல்ல?
உன் கைபிடிக்க காத்திருக்கும் பேருந்து
கம்பிகள் கேட்க்குமே பதிலென்ன சொல்ல.
நீ காத்திருக்கவே கார்பரேசன் கனவான்கள்
கட்டிவைத்த நிழற்குடை நிறுத்தாமல் கேட்க்குமே
பதிலென்ன சொல்ல?
ஏதோ ஒரு பேருந்தில் எப்போதுமே - உன்
ஸ்பரிசத்திற்காக அழும் அழகு குழந்தைக்கு
பதிலென்ன சொல்ல?

பாவை அவள் பாவையானால் எனவா? 
பூமிக்கும் அவளுக்குமான பாத
பந்தங்களை பறித்துக் கொண்டான்
படைத்தவன் எனவா?
சக்கர  நாற்காலியே சகலமும் என்று
சரனானால் எனவா?
என்ன சொல்ல யாரை சொல்ல???

நானே காரணம் என்று நானிபோனேன்.
நடுங்கும் கைகளை நறுக்கென்று பற்றி
நஞ்சு விழுங்கியது என் தவறு,
நானே காரணம் என்று கைகளை
நனைக்கிறாய் கண்ணீரால்.

இன்னும் நீங்கள் என்னை....???என்றாய்
என்றும் நீதான்..... என்றேன் நான்.
இனி என்னால் நடக்க முடியாது என்றாய்
நரம்பு மட்டுமல்ல - உன்
நம்பிக்கையும் நசுங்கிபோய் இருந்தது
உன்னிடம்...
(தொடரும்...)

Saturday, July 3, 2010

மாறிய கைகள்...

(இந்த படம் வசந்தின் கைவண்ணம்)
நன்றி மாப்பி
முதலில் இந்தமாதிரி யோசிக்கவச்ச வசந்து மாப்பிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...  (அடுத்த வருஷம் ஊருக்கு வருவேள...வா..)எப்படி   இப்படி யோசிக்குறனு தெரியாத்தனமா கேட்டுபுட்டேன் அதுக்கு ஒரு பதிவ போட்டு நமக்கும் ஒரு தலைப்ப குடுத்து எழுது ராசான்னு பாசமா சொல்லிடாப்ள.(எதுவா இருந்தாலும் பேசியே தீர்துருக்கலாம்) நான் எப்பவும் எது எழுதுனாலும் கடைசியாதான் தலைப்பயோசிச்சு எழுதுவேன்.இப்போதான் தலைப்புக்கு எழுதுறேன் அதுவும் வித்யாசமா...(பாவம்  சுசிக்கா என்ன பாடுபடுறாங்களோ???)அப்டின்னு நெனச்சா இப்படி எஸ்கேப் ஆயிட்டாங்களே... 

நம்ம கைகள் இரண்டும் இருக்குள்ள அதோட ஆரம்பம் நம்ம தோள்பட்டையில இருக்குன்னு தெரியும் அதே கைகள் நம்ம வயிற்றோட பக்கவாட்டில் முளைத்திருந்தால் நம்ம அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்?.......இதுதான் வசந்த் மாப்பி எனக்கு கொடுத்த சிந்தனை.(ஒரே ஊர்காறேனு கொஞ்சம்கூட யோசிக்காம)வசந்த் சிந்தனைய கொஞ்சம் என் முளை வழியா வாசிக்க போறீங்க.(என்னென்ன ரூபத்துல விதி விளையாடுது)கடைசியா ரெண்டு பேர்  என்னோட  சிந்தனைக்கு  எழுதவும் போறிங்க.... (இந்த கொடுமை வேறயா??)சரி நீங்க மனச தேத்திகிட்டு மேல படிங்க...(படிக்கனுமா..??விதி)
உங்களுக்கு கை இறங்கி வயித்துக்கு பக்கவாட்டில் வந்துருச்சா...??

முதலில் நன்மைகள் பார்ப்போம்...
1) தூக்கத்தில் நமக்கு இடுப்புக்குகீழ அரிச்சா ஈசியா சொரிஞ்சுக்கலாம்.(ரெம்ப முக்கியம்)
2) தரைல எந்த  பொருள் விழுந்தாலும் குனியாம எடுத்துடலாம்.(அப்போ மூவ் தடவுற செலவு மிச்சம் )
3) ரெம்பநேரம் நின்னு கால் வலிச்சதுனா கைய சபோட் குடுத்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.(சைக்கிள் ஸ்டாண்ட் மாதிரி)
4) வாண்டுங்க தப்புபண்ணா தலைல கொட்ட ரெம்ப வசதியா இருக்கும்.(பழிக்குபழி)

5) அடுத்தவங்க கால வாற ரெம்ப வசதியா இருக்கும்.(ஐயோ..!!!!)
6) பெண்கள் கோலம்போட வீடு பெருக்க ரெம்ப கஷ்ட்டபடமாட்டாங்க.
7) யாரும் அவ்ளோ ஈசியா நம்மல கண்ணத்துல அரைய முடியாது.
8) கிரிகெட்ல குனியாம பாடிங் பண்ணலாம்.
9) பெரிய தொப்பை இருந்தாலும் ஷூ லெஸ் ஈசியா முடிச்சு போடலாம்.(அட..)
10௦) கீபோர்டும் மவுசும் கிட்டத்தட்ட தரைலதான் வச்சு வேலைசெய்யணும்.

அடுத்து விபரீதமான சில நிகழ்வுகள் நடக்கலாம்...
1) எதாவது தெரியாம முழிக்கும்போது தலைய சொரிய முடியாது முடிஞ்சா முதுக சொரிஞ்சுக்கலாம்.(ஆரம்பமே சரி இல்லையே)
2) ரஜினியோட சில முக்கியமான  ஸ்டைல் பண்ணமுடியாமலே போயிருக்கும்.(இது உலகத்துக்கு ஒரு பெரிய இழப்பு)
3) சிவக்குமாரோட ஒரு முக்கியாமான டயலாக் பல சென்சார் காரணமா எழுதாம போயிருக்கலாம்.அந்த டயலாக் "கண்ணா உன்னை தோள்ல போட்டு வளர்த்தேன் மார்ல போட்டு வளர்த்தேன் ஆனா நீ என்னை நெஞ்சுல மிதிச்சுட்டு போறியே..."இத மாத்தி எழுதுனா... "கண்ணா உன்னை வயித்துல போட்டு வளர்த்தேன் தொப்பைல போட்டு வளர்த்தேன் ஆனா நீ என்னை சென்சார்....மிதிச்சுட்டு போறியே..."(ஒ... மை காட்...!!!)
4) பல்லு வெளக்குற பிரஸ் இப்போ இருக்குரதவிட ரெண்டுமடங்கு அதிகநீளமா இருக்கும்.சீப்பும் அதுபோலவே.

5) அடிதடி தகராறு வந்தா அடிக்குற அடி முதலில் படக்கூடாத இடத்துலதான் படும்.(உசுரே போகுதே...உசுரே போகுதே...நாட்டாம தீர்ப்ப மத்தி சொல்லு..)
6) யாரையாவது கண்ணத்துல அரைய ஆசைபட்டா ஒரு ஸ்டூல் போட்டுதான் அரையனும்.(அதுக்காக ஸ்டூலோடவா அலையமுடியும்)
7) பல்ல உடைச்சுடுவேன்னு ஈசியா சொல்ல முடியாது.இல்ல சொல்ல முடியும் செய்ய முடியாது.(கல்லெடுத்து அடிச்சு உடைக்கலாம்)
8) நம்ம ஆடைகளில் நிறைய மாற்றம் அதாவது சட்டை ரெம்ப வித்யாசமா இருக்கும்.காலருக்கும் கைக்கும் ரெண்டு அடி கேப் இருக்கும்.(நெனச்சு பாக்கவே பயமா இருக்கு)
9) பாடகர்களுக்கு நீளமான மைக் தேவைப்படும்.
10௦) பின்முதுகுக்கு மேல சொரிஞ்சுக்குறது ரெம்ப கஷ்ட்டம்.
11) மார்தட்டி சொல்வதற்கு பதிலா வயிர்தட்டி சொல்லுவோம்.
12) செல்போன ஸ்டைலா காதுலவச்சு பேசமுடியாது.
(புளு டூத் வாங்கி மாட்டுவோம்)   
13) குனிஞ்சு கைய தரைல வச்சா நாளுகாலு மிருகம் மாதிரியே இருப்போம்.(ஓட்டகசிவிங்கி மாதிரின்னு தெளிவா சொல்லு)
14) சுகந்திரமா சோறு சாப்டமுடியாது.(தண்ணிகூட ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம்)
15) காலுமேல காலு போட்டு உக்காரும்போது கைமேல கை போட்டு உக்காருவோம்.
16) கல்யானத்துல உக்கார்ந்துகிட்டு தாலி கட்டகஷ்ட்டமா இருக்கும்.(நின்னுகிட்டு கட்டிக்கலாம்)
17) தோள்ல இருந்து கைஇருக்குறவங்கள பார்த்தா அதிசயமா,பாவமா பார்ப்போம்.
(ரெம்ப குஷ்ட்டம்பா...இது...கஷ்ட்டம்பா...போதும் ஆணியே புடுங்க வேண்டாம் போ...)

ஏதோ எனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதிட்டேன். இப்போ நானும் ரெண்டுபேர மாட்டிவிடனும்...(யாம் பெற்ற  இன்பம் பெருக இவ்வையகம்)
முதலில் பாசத்திற்குரிய ஸாதிகா அக்கா மனிதர்கள் எல்லோரும் கடலுக்குள்ள வசித்தால் எப்படி இருக்கும்னு எழுத போறாங்க.தலைப்பு தண்ணீர் தேசம்.

அடுத்தது...சலூன்கடை சகா அஹமது இர்ஷாத் நீங்க காத்தாடியா (பட்டம்) இருந்தா உங்கள் அனுபவம் எப்படி இருக்கும் பறக்கும்போது என்ன உணர்வீங்கன்னு எழுதுங்க...தலைப்பு ஆத்தாடி...காத்தாடி....





Related Posts with Thumbnails