Sunday, August 29, 2010

குஞ்சுக் குருவி...


விறகுக்காய் வெட்டப்படும்
மரத்திலிருந்து ஒரு குஞ்சுக்குருவி.

துயர் ஏதும் அறியாத
துஞ்சுக்குருவி துயிலில்.

மூங்கில் காட்டில்  
முகாரி பாடும் மைனாக்கள்.

அரவமில்லாக் கிளைகளில் 
அரிவாள் வெட்டு அதிர்வுகளில்
ஆபத்தின் அறிகுறி.

கூடு காத்த தாய்க் குருவியின்
தகவல் ஏதும் இல்லை.

உயிர் துடிக்கும் கிளைகளின்
துக்கம் விசாரித்துபோனது
துயர்காற்று.

உறக்கம் உடைந்த
குஞ்சுக்குருவி "கீச்" கதறலில்
கிளைகளின் இலைகளை கிழித்தது.

துண்டானது கிளை துடித்தது கிள்ளை.

ராட்டின கூண்டாய் அலைபாய்ந்த கூடு
அடிவாரத்தில் 'பொத்'தென்று  ஐக்கியமானது.

இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.

குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...

கடத்தப்பட்டது  கூண்டோடு?! இப்போது...

குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.  
இறகுகள் முளைக்கும்வரை...






Friday, August 13, 2010

இது காதல் கடிதம் அல்ல...12(தொடர்க(வி)தை)

தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் தொடர்ந்து கடைசி வரை படிக்கவும்.முந்தைய பாகங்கள் அனைத்தும் இங்கே....

மற்றொருநாள் மருத்துவமனையில்...
உன் மருந்துகள் குறைந்திருந்தன
உன் நம்பிக்கை போலவே; வெளியே...

கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்  
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
பாடித்திரிந்த பட்டாம்பூச்சி
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...

மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.

கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய்  கூச்சலிடலாம்!!
சோற்றுபருக்கையின்   கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்!! அதன்
இளஞ்சூட்டில் இதயம்  வெந்து
இறந்தும் போகலாம்!!.
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு  முறிந்துபோகலாம்!!
போதும்!!

துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.

சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.

அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால் 
காற்று  கதறும் காலநிலை சிதறும்.

உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.

இதை கேட்டதும் அவளின்
கனத்த கால் சிறகுகள்
காற்றை எதிர்த்து சைகை செய்தது.

ஆம்!! நசுங்கிப்போன நரம்புகளில்
நம்பிக்கை தைலம் தடவி தரை
இறக்கினாள் தாங்க பாதங்களை.

என் தோள்களை தொட்டது
நம்பிக்கை ரேகைகள்
ஓடிய  ஒரு கை  அது...
(தொடரும்...)
பொறுமையாய் படித்த அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...





Tuesday, August 3, 2010

பதிவுலகில் பத்திரமாய் நான்...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ப: வலைப்பதிவில் தோன்றும் என் பெயர் சீமான்கனி.(ஒரே வார்த்தைல சொல்றத விட்டுட்டு ஏன் இழுக்குற...)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ப: உண்மையான பெயரும் அதே...ரெம்ப ஆராய்ச்சிலாம் செஞ்சு வச்சதாம்.வித்யாசமா இருக்குல(ஆமா அத நீதான் சொல்லிக்கணும்...)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ப: அது ஒரு பெரிய கதை.... என்னை முதலில் ஈர்த்த வலைப்பக்கம் பி.கே.பி அப்போது எனக்கு பதிவுலகத்தை பற்றி ஒண்ணுமே தெரியாது.சர்க்கரை சுரேஷ் என்ற ஒரு பதிவரை படிக்கும் பொது ஆர்வம் வந்தது.ஒண்ணுமே தெரியாம குருட்டாம் போக்குல ஒரு பக்கத்தை உருவாக்கி(வழக்கம் போல) கொஞ்ச நாள் அனைவரின் பதிவுகளை மட்டும் படிச்சுட்டு அப்படியே வச்சிருந்தேன்.எனக்கும் ஒரு வலைப்பக்கம் இருக்குனு பூரிப்புல ரெண்டுநாள் சரியா தூக்கமே வரலை (பெரிய சாதனை பண்ணிட்டத மனசுல நெனப்பு)அப்றம் அதுக்கு ஒரு பெயர் வைக்க ரெம்ப யோசிச்சு கனவு பட்டறைன்னு பெயர் வைக்க முடிவு பண்ணி அப்றம் வித்யாசமா இருக்கனுமேன்னு "கரும்பு பட்டறை"னு பெயர் வச்சேன்.முதல் பதிவா பெயர் காரம் சொல்ல இந்த பதிவு போட்டேன்.(சிரிக்கக்கூடாது ஆமாம்) அதே நாளில் மூணு சூடான  பதிவு.(இதுக்கும் சிரிக்கக்கூடாது ஆமாம்)   அவ்ளோதான் கூட்டம் கூட்டமா  வாசகர்கள் வர அவர்களை விரட்டவே நேரமில்லாம தவிச்சேன்.ஆமாங்க கரும்புன்னு பெயர் வச்சா வாசகர்கள் ஈ மாதிரி வருவாங்கன்னு பார்த்தா "ஈ"தான் வாசகர் மாதிரி வந்துச்சு.(அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்....)அப்றம் மறுபடியும் கனவு பாட்டை-னு மாத்தியாச்சு..

அதுல என் தலையணைக்கும் காதல்   இந்த கவிதைக்கு முதலாவதா சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு திரட்டிகளை பற்றி டிப்ஸ் தந்தாரு  என் முதல் வாசகரும் அவர்தான் இப்போ அவர் பக்கமே காணவில்லை.அடுத்து
குப்பை தொட்டி  ஆதவன்   சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு. சுமஜ்லா அக்கா பக்கத்தில் நிறைய அனுபவம் கிடைத்தது.இப்படிதான் ஆரம்பம் ஆனது பயணம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னும் செய்யல...(வழக்கம் போல) பிரபலம் ஆக  எல்லாம் ஆசை இல்லை(ஆஹா இது உலக நடிப்புடா சாமீ) நல்ல வாசகன் தான் நல்லா பதிவரா  ஆக முட்டியும்னு(தத்துவம்ஸ்.....) நிறைய பதிவுகளை தேடி முழுசா படிச்சு மனசுல பட்டத பின்னுட்டம் இட்டேன்.இன்றுவரை அதுதான் செய்கிறேன்.நல்ல பதிவரா இருக்க ஆசை படுறேன்.(ஆசை மட்டும் படு)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பகிர்ந்ததுண்டு. உணர்வுகளை வெளிப்படுத்த.நிறைய நண்பர்கள்.நட்பு நான் நேசிக்கும் ஒரு உன்னதமான உறவு.அதனால்தான் http://ganifriends.blogspot.com/ பெயர் வந்தது.(ஆஹா எப்படி இப்டிலாம்??)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுக்காகவும்  இல்லை. என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்கு எழுதி  வைக்கும் என்  டைரி பக்கங்கள் இவை...(அட பார்ரா )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.இரண்டும் தமிழில்தான். கனவு பட்டறை, ஊறுகாய்.
 ஊறுகாய் இது நண்பர்களோடு சேர்ந்து எழுத வைத்திருக்கிறேன் தற்போது சில பதிவுகளின் பேக்அப் எடுத்து வைத்திருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ம்ம்ம்ம்.....அது வந்து...என் மனசாட்சி சொல்லும் நல்லா கவனமா கேட்டுக்கோங்க.(ஐ!!! கடைசில என்னைய மாட்டி விடுறியா அப்போ நான் சைகைல சொல்லறேன் மக்களே புரிஞ்சுகொங்கோ).........................................புரிஞ்சதா??

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பாராட்டு  சர்க்கரை சுரேசிடம் இருந்து வந்தது "என் தலையணைக்கும்" காதல் இந்த கவிதைக்கு முதலாவத சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு "கலக்கல் தல" இதுதான் முதல் டானிக் எனக்கு.அடுத்து "குப்பை தொட்டி" ஆதவன் சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு அடுத்தடுத்து சுமஜ்லா அக்கா, சக்தி அக்கா,நிலா அக்கா,மாப்ளே வசந்த்,நண்பர் அபூ,பிரபா,பாலாசி,ஜலிகா,கதிர் அண்ணா, கிஷோர்   இவர்களின் தொடர் ஊக்கம், பாராட்டு, அறிவுரை, வழிநடத்தல் இன்னும் தொடர்கிறது...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

அன்பார்ந்த பதிவுலகமே வணக்கம்...

பெயர்                                    :   சீமான்கனி.(புதுசு)

வயது                                    :   வருத்தம் ச்சே வருஷம் ஒன்னு கூடுது.

உயரம்                                  :   வானத்துக்கு கொஞ்சம் கிழே  / பூமிக்கு கொஞ்சம் மேலே.

தத்தக்கா பித்தக்கா  ஊர்  :   பாண்டியநாடு.

கபடி, படி படி படி  ஊர்       :   பல்லவநாடு.

ஆணி பிடுங்குவது            :   அரபுநாடு.

பிடித்தது                               :   கடவுள்/காதல்/கவிதை.

இதுவரை பிடிக்காதது      :   பைத்தியம்.

தெரிந்தது                             :   முகத்துக்கு முன்னாடி இருக்குற எல்லாமே.

தெரியாதது                          :   முதுகுக்கு பின்னாடி இருக்குற எதுவுமே.

அறிந்தது                              :   சமையலுக்கு காய்கறிய.

அறியாதது                          :    சமைப்பது எப்படி?

சாதனை                              :    பதிவு எழுதுவது.

 வேதனை                           :    மொக்கை போட தெரியாதது.(நம்பனும்)

நண்பர்கள்                           :   நல்லவர்கள்.

எதிரிகள்                              :   ரெம்ப நல்லவர்கள்.

அடிக்கடி கேட்க்கும்          :    தங்கம் கிராமுக்கு இவ்வளோ உயர்வு.
பொன்மொழி                     
தத்துவம்ஸ்                        :    அ)கருத்தா  படிச்சா பாஸ் மார்க்கு.
                                                    காதலி அடிச்சா டாஸ்மார்க்கு.
                                                    ஆ)மாவு சுடாது பட் மாவ தோசையா நாம் சுடலாம். 

                                                    இ)தோசைய நாம்  சுடலாம் சுட்டபின் தோசையும்  நம்மல சுடலாம்.


மை டியர் மக்களே இத படிச்சுட்டு கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.(அடுத்தமுறை இந்த பக்கமே வரக்கூடதுனா???)இந்த நேரத்தில் என்னை அழைத்த மாப்பி வசந்துக்கும்.அருமை அக்கா சுசிக்கவுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.இந்த பதிவுக்கு வரும் கண்டனங்களையும் அவர்களுக்கே....
நான் அழைப்பது....

என் மனதிலிருந்து பிரியா
ஸாதிகா அக்கா
நண்பர் வெறும்பய  
நண்பர் கமலேஷ்

அடுத்த பதிவில் அடிவாங்கிய தழும்புகளுடன் சந்திக்கிறேன் ...




Sunday, August 1, 2010

நாளும் நட்புடன்...


முகமோ முகவரியோ அறியாமல்
மொழி என்ற முற்றத்தில் முக்கூடினோம்.


உனக்காய் சொடுக்கும் ஒவ்வொரு சொடிக்கிலும் -நீ
எனக்காய்  கொஞ்சம் சிரிப்பையோ சிந்தனையோ
ஆறுதலையோ அதிர்வையோ தொடுத்து விடுகிறாய்.


கசப்பு இரத்தத்தில் அமிழ்ந்து கிடக்கும் இதயத்தை-உன்
மந்திர எழுத்துக்களால் சர்க்கரை பாகில் மூழ்கடிக்கிறாய்.


கவிதைகள் விற்கும் கடைவீதியில்
கண்ணடைத்து கடந்துபோகும் என்னை
கைபிடித்து கருத்துக்களில் கலர் காட்டுகிறாய்.


ஏதோ காரணத்தால் உன்னை
தொடராமல் போனவனை தொடர்ந்து வந்து
தொட்டு தோள்கொடுக்கிறாய்.


ஆம் உண்மைதான்  
உனக்காய் தட்டப்படும் ஒவ்வொரு எழுத்துக்களிலும்
கொஞ்சம் சுயநல சூத்திரம் சொல்லித்தான் அனுப்புகிறேன்.
எனக்கும் அதே எழுத்துக்களை தட்டிவிடு என்பதாய் அல்ல
எழுத்துக்களால் என்னையும் எண்ணங்களையும்
தட்டி செதுக்குவாய் என்றுதான்.


கடவுளின் கருவறையில்
நினைவுகூரும் நிகழ்வுக்குமுன்
நீயும் நானும் நிச்சயித்து கொள்வோம் -நாம்
நல்ல நண்பர்கள் என.


விதியின் வசத்தாலோ இல்லை
பதிவின் வசத்தாலோ என்னை நண்பனாய்
அன்பால்  சொந்தமாக்கிக்   கொண்ட சொந்தமாய்ஆன 
அணைத்து நண்பர்களுக்கும்  சமர்ப்பணம்.


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.






Related Posts with Thumbnails