வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம
வானமே உன்வாசல்வர
வசியம் போட்டு வரஞ்சுவச்ச
வரிசைக்கோலம் நெனவிருக்கா!!?
***
நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?.
***
பிறைநிலாவ பிச்சுவந்து
பிறைநிலாவ பிச்சுவந்து
கிள்ளி கிள்ளி அத எடுத்து
வாசலிலே நீர்தெளிச்சு
நீ போட்ட வாழ்த்துகோலம்
நெனவிருக்கா!!??
***
***
வீட்டு முற்றத்தில் குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.
***
மருதாணி அரைச்சு
மல்லிகை கையில் கோலம் போட்டு
அழகா இருக்கானு அடுத்தநாளு கேக்கையில
இருட்டுல இலுவிவிட்ட இந்த கோலம் அழகுன்னு
கண்ணாடி காட்டி கண்ணடிச்சது நெனவிருக்கா!!?.
***
ஆத்தா கிட்ட அடிவாங்கி
ஆத்தா கிட்ட அடிவாங்கி
'யப்பே...'ன்னு அழுகையில
கண்ணத்த கடந்துவந்து
கண்ணீர் போட்ட நீர் கோலம்
கடவாயில் உப்பு கரிச்சது
கண்ணே நெனவிருக்கா!!?.
***
கைவிரல் நடனமாட
கைவிரல் நடனமாட
கைவளவி தாளம்போட
கலர்கலரா மாவெடுத்து
கச்சிதமா கோலம்போட்டு
கண்மூடி கனாகண்ட
காதலான எழுப்பிவிட்டு
கதவோரம் வந்துநின்னு
கண்ணாடிக்க,
கொலுச பேசவிட்டு
கோபப்பட்ட நெனவிருக்கா!!?.
***
கார்த்திகை மாசத்து
தீபத்துல திரியவச்சு
தெருவெல்லாம்
தினறவச்சு நீ போட்ட
தீக்கோலம் நெனவிருக்கா!!?.
***
***
எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
***
வண்டியுருக்கு வாக்கப்பட்டு வண்டியிலே நீபோக
வகைவகையா கோலம்பார்த்த என் வீட்டு வாசப்படி
வாழவெட்டியா வழியத்து கெடக்குமுன்னு
வஞ்சியே நெனவிருக்கா!!?.
***
13 comments:
நெனப்பிருக்கா....?
நினைவுகளின் கிளறல் நண்பரே
//வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட//
இது ரசனை..
//வீட்டு முற்றத்தில் குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.//
சூப்பர்ப்..
//எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.//
கிளாசிக் டச் கிராமத்து நடையில அசால்ட்டா அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் நன்றிகள்
//எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
***//என்னே கற்பனை வளம்.பாராட்டுக்கள் சீமான்கனி.
//நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?///
அருமை இப்படியல்லாமா ம்ம் சூப்பர்
எல்லாமே நினைவிருக்கா....?
அருமையான கவிதை சகா...
அருமை நண்பரே
எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்
கவிதை வரிகள் மனதை ஈர்க்கின்றன.
வஞ்சி வஞ்சத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை கனி..
கோலத்தை வச்சு கோலம் போட்டிருக்கிங்க.
அருமையா இருக்குங்க ஒவ்வொன்னும்.
நேசமித்ரன் said...
//நெனப்பிருக்கா....?
நினைவுகளின் கிளறல் நண்பரே //
நினைவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மித்ரன் சார்...
ப்ரியமுடன்...வசந்த் said...
//கிளாசிக் டச் கிராமத்து நடையில அசால்ட்டா அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் நன்றிகள் //
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்பி...
ஸாதிகா said...
//என்னே கற்பனை வளம்.பாராட்டுக்கள் சீமான்கனி.//
நெசமாவா!!! வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஸாதிகா அக்கா
Feros said...
//அருமை இப்படியல்லாமா ம்ம் சூப்பர் //
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பெரோஸ்...அடிக்கடி வாங்க...
அஹமது இர்ஷாத் said...
//எல்லாமே நினைவிருக்கா....?
அருமையான கவிதை சகா... //
இல்லாம எப்படி போகும் இர்ஷா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...சகா..
அக்பர் said...
//அருமை நண்பரே //
தொடர்ந்து வந்து உற்சாகம் தருவதற்கு மிக்க நன்றி அக்பர்...
தமிழ் உதயம் said...
//கவிதை வரிகள் மனதை ஈர்க்கின்றன.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்ஜி...
சுசி said...
//வஞ்சி வஞ்சத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை கனி..
கோலத்தை வச்சு கோலம் போட்டிருக்கிங்க.//
கவிதைல அவ்வளோ ஒன்றி போய்டீங்களா சுசிக்கா நன்றி சுசிக்கா...
இராமசாமி கண்ணண் said...
//அருமையா இருக்குங்க ஒவ்வொன்னும். //
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...கண்ணண்.
அசத்தல் கனி
நல்லாருக்குண்ணே பாரதிராசா படம் மாதிரி..!! :)
ஈரோடு கதிர் said...
//அசத்தல் கனி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர் அண்ணே...
Sivaji Sankar said... \
//நல்லாருக்குண்ணே பாரதிராசா படம் மாதிரி..!! :)//
அப்டியா சிவா நன்றி ....
Post a Comment