Friday, February 12, 2010

பாண்டியும் புலி பாண்டியும்...

வா மாப்பள என்னடா இந்த பக்கம்?? ஒன்னும் இல்லடா பாண்டி... சித்தி வீட்டுக்கு வந்தேன் அப்டியே உன்னையும் பாக்கலாம்னுதான்.'ஒ' அப்டியா சரி வா டீ சாப்டலாம்.

ஆமா பாண்டி என்னடா உன் கழுத்துல என்னவொ தொங்குது 'ஒ'…இதுவா இது ஒரு பெரிய கத இன்னைகி மட்டும் இத பத்தி கேக்குற 124 வது ஆளு நீ தாண்டா.அட பார்ரா ம்ம்ம்… கதைய சொல்லு கேட்போம்.பாண்டியும் புலி


நேத்து காலைல காட்டுபக்கம் வாக்கிங் போய்கிட்டு இருந்தேனா…அப்போ ஒரு பொதருகுள்ள யாரொ அழுகுற மாதிரி சத்தம் கேட்டுச்சு யாருனு பக்கத்துல போய் பார்த்தா ஒரு புலி 'ஓ'…னு அழுதுகிட்டு இருக்கு.நான் பக்கத்துல போய்க்கேட்டேன் புலி புலி ஏன் புலி அழுகுறனு…. டேய் அப்டியே நிறுத்து. இந்த கதையெல்லாம் எவனாவது இளிச்சவாயங்கிட்ட போய் சொல்லு (அதான் உன்கிட்ட சொல்றேன்..)புலி அழுதுச்சாம் இவரு போயி பேசுனாறாம் போடா எலெய் போடா.

டேய் நம்பளனா... இந்தா, இது நான் நம்ம மாப்ள வசந்துகிட்ட மிருக பாஷய் கற்று கொள்வது எப்படி?னு ஆறுமாச டியுசென் கோர்ஸ் படிச்ச சர்டிபிகேட்டு டா ஆறெ மாசத்துல எல்லா மிருக பாஷயும் கத்து கொடுத்துடாப்ல நம்ம வசந்து. ஓ..அப்டியா…ம்ம்ம்…மேல சொல்லு.ம்ம்ம்….எதுல விட்டேன். இதுவெரயா (ஆரம்பத்துல இருந்து விட்டுகிட்டுதான இருக்க) புலிகிட்ட பேசுனதுல விட்டடா.

...ம்ம்ம்ம்...அதுக்கு புலி சொல்லுச்சு நேத்து ஒரு காட்டேறும கால கடிக்கும் போது சொத்தயா இருந்த கடவா பல்லுல எலும்பு குத்திருச்சு ராத்திரி முழுசும் தூக்கமே இல்ல வலி உயிர் போகுது மானமுள்ள பரம்பர எங்க பரம்பர… உயிர விட மானம்தே பேருசுனு தற்கொல பன்னிக்க இங்க வந்தேனு சொல்லுச்சு, எனக்கு கண்னு கலங்கிருச்சு.(எனக்கு கண்ணு அடைக்குதுடா...) அட அறிவு கெட்ட புலி இதுகாகவா சாகப்போற எனக்கு விவெக் வைத்தியம் தெரியும் அத வச்சு உன்ன காப்பாத்திருவேன்னு சொன்னென். டேய் நிறுத்து அது என்ன விவெக் வைதியம்?? அதாண்டா ஒரு படத்துல விவெக் ஒரெ அரைல நாட்டாம பல்ல கழட்டி கைல குடுத்துருவாரு அதுக்கு நாட்டாமை அவர விட்டுட்டு எடத்த மட்டும் காலி பன்னிருவாரெ அந்த வைதியம்டா.(பயவுள்ள ஒருதன் மாட்டுனா இந்த ஓட்டு ஓட்ரானெ)

ஓ…அது!!ம்ம்ம்..சொல்லு…ம்ம்ம்…அந்த வைத்தியத்த பத்தி விளக்கமா எடுட்த்து சொன்னென் புலி சுத்தி முத்தி பார்த்துட்டு ம்ம்..சரினுச்சு. விட்டேன் பொளெர்னு ஒரு அர பல்லு துண்டா போயி விழுந்துருச்சு புலி கொஞ்சநேரம் கழிச்சு ''அஹா வலி இருந்த எடம் தெரியாம போச்சே ''னு சொல்லிட்டு கட்டிபுடிச்சு கதறி அழுது நன்றி சொல்லிட்டு போய்ருச்சு. நம்பவே முடியலடா…

ம்ம்..இப்டிதா எங்க தாத்தா புலி அடிச்சேனு சொல்லும்பொது யாரும் நம்பளயாம்.நீங்களும் இப்டி சொல்லுவீங்கனு தெரிஞ்சுதான் அந்த பல்ல தேடி எடுத்து இப்படி டாலரா பொட்டு கிட்டேன் இங்க பாரு...

அட பார்ரா டி.வி ல தோனியும் சூர்யாவும் புலிய காப்பாதனும் புலிய காப்பாதனும் சும்மா சொல்றாங்க நீ சத்தம் இல்லாம ஒரு புலிய காப்பாத்திட்டு இப்டி ஒன்னுமே செய்யாத மாதிரி இருக்கியெடா…சே..நெனச்சா புள்ளரிக்குதுடா.ஆமா இந்த மீடியா உன்ன இன்னும்மா கண்டுக்காம இருக்காங்க. நான் போயி பிபிசி ரிப்போட்டர உடனெ வரசொல்றெண்டா. அதுக்கு முன்னாடி லட்சுமிபுரத்துக்கு போயி உனக்கு மிருக பாஷ சொல்லிகுடுத்த வசந்த கொஞ்சம் பாராட்டனும் பார்த்துட்டு வர்றென்டா புலிபாண்டி…அப்பறம் சந்திப்போம்… (கனவு கலஞ்சு முழிச்சு பார்த்து நல்லவேலை கனவுதான்…ஸ்ஸ்ஸ்ஸப்பா….)

8 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்ல ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க....மிகவும் சுவையோடு இருக்கிறது....பழைய பதிவுகளையும் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்....

ஷங்கர்.. said...

மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ...//

நான் என்னத்த சொல்றது வசந்த் தான் சொல்லணும் ..:))

seemangani said...

கமலேஷ் said...
//ரொம்ப நல்ல ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க....மிகவும் சுவையோடு இருக்கிறது....பழைய பதிவுகளையும் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்....//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கமல்..நலமா??பார்த்து ரெம்ப நாள் ஆச்சு...


ஷங்கர்.. said...
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ...//

நான் என்னத்த சொல்றது வசந்த் தான் சொல்லணும் ..:))

வாங்க ஷங்கர்....
ஒ...அப்டியா சரி பாப்போம் மாப்பி என்ன சொல்றானு...

தமிழ் உதயம் said...

உங்க வீரத்துக்கு நிஜத்துலயும் புலியை அடிக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.

ஸாதிகா said...

கனவில் வந்து புலியார் சீமான் கனி காதில் பெரிய பூ..இல்லை இல்லை..பூமாலையையே சுற்றிவைத்து விட்டது.அந்த மப்பில் வந்த மொக்கையா இந்த பதிவு..?ஹிஹிஹி...!

seemangani said...

தமிழ் உதயம் said...
//உங்க வீரத்துக்கு நிஜத்துலயும் புலியை அடிக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.//

வாங்க தமிழ் உங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி...என் மேல என்ன கோபம்....அவ்வ்வ்வவ்....

ஸாதிகா said...
llகனவில் வந்து புலியார் சீமான் கனி காதில் பெரிய பூ..இல்லை இல்லை..பூமாலையையே சுற்றிவைத்து விட்டது.அந்த மப்பில் வந்த மொக்கையா இந்த பதிவு..?ஹிஹிஹி...!//


ஹி..ஹி..ஹி...சும்மா வசந்த வம்புக்கு இழுக்கதான் கா...

பிரியமுடன்...வசந்த் said...

அடப்பாவி மாப்ள கடிச்சு வைக்கப்போறேன் பாரு இப்போ இன்னும் நல்ல்லா எழுதிருக்க என்னவிட ... ஜூப்பருடா....

seemangani said...

பிரியமுடன்...வசந்த் said...
//அடப்பாவி மாப்ள கடிச்சு வைக்கப்போறேன் பாரு இப்போ இன்னும் நல்ல்லா எழுதிருக்க என்னவிட ... ஜூப்பருடா....//

வா மாப்பி...அப்பாடா...எங்க நீ வராம போயிருவியோனு ஒரே கவலை...இப்போதான் நிம்மதி...
நன்றி டா

Related Posts with Thumbnails