Monday, August 31, 2009

நாஷ்ட்டா கடையில் நக்கீரன்...

தலைப்பை பார்த்தும் ஏதோ வித்யாசமா சொல்லபோறேனு நெனச்சிருந்தா அத உடனே மாத்திகோங்க ...
இது என் பள்ளிபருவ நாடக அனுபவம் .

ஒரு வித்தயாசமான கான்சப்ட் தான் கீரை வடையில் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரன்.....அந்த திருவிளையாடல் காட்சி ஒரு நாஷ்ட்டா கடையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்ப்பனை என் மிஸ்க்கு தோன்ற...அதை நாடகமாக்க முடிவு செய்து அதில் என்னையும் தேர்வு செய்து ஒத்திகையும் முடிந்து .அந்தநாள் வந்தது.கலையில் இருந்து ஒரே பரபரப்பு முதல் மேடை என்பதால் பதற்றம் வேறு. நக்கீரன் வேடம் எனக்குதான் அப்போ கொஞ்சம் துருதுவென இருப்பேன் அதனால் என்னை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன். கான்சப்ட் வித்த்யாசம் என்றாலும் ஆடை மட்டும் காவி தான் டீசெர் கட்டளை .நானும் தேடி அலைந்து கிடைக்கவில்லை. அது ஒரு போட்டி நிகழ்ச்சி என்பதால் நாம்தான் எல்லாமே. கடைசி நிமிடம் டீசெர் கிட்ட சொல்ல பயம் இருந்தாலு சொல்லிதானே ஆகவேண்டும். சொன்னதும் அடுத்த நொடி பளார் கன்னம் சிவக்க அழுதேவிட்டேன். அவர் பெயர் பூமாதேவி ,என்னவோ செய்ங்கனு சொல்லிட்டு போய்விட்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை அடுத்தது எங்களுடையது ...
நாடகம் ஆரம்பித்து என்னுடைய காட்சி.....நான் லுங்கி பனியனோடு பொய் நின்று வணக்கோ தருமி அண்ணாதே... நீ சுட்ட வடைல நமக்கு டவுட்டு கீதுபா...னு...
ஆரம்பிக்க ஒரே சிரிப்பலை...டயலாக் எல்லாம் மெட்ராஸ் தமிழில் ..பேசி ஒப்பெதியச்சு... கட்சில சிவன் வந்து நீதான் நகீரரோ னு கேட்டு, பார்த்தால் அப்படி தெரிய வில்லையே னு சொல்ல வயக்கமா நஷ்ட்டா துன்ன இப்டிதாபா வருவோம்னு சொல்லி முடிச்சாச்சு....லுங்கி கொடுத்து உதவிய நண்பனுக்கு நன்றி சொல்லி திருப்பி கொடுத்து விட்டு ...
பூமாதேவி மிஸ் கிட்ட சாரி சொல்லபோனா அவங்க பாராட்டி ஆளுக்கொரு 5 ஸ்டார் கொடுத்து அனுப்பிவச்சங்க...
அடிக்கிற கைதானே அணைக்கும்....
எங்களுக்குத்தான் முதல் பரிசு...அன்றில் இருந்து நாங்கதான் ஹீரோ ..எப்பூடி.......
மனசுல பட்டத சொல்லிட்டு போங்க....

Sunday, August 30, 2009

அகரவரிசையில் எனக்கு பிடித்தவைகள்....

வசரதேவை - அன்னை மடி.

சை ஆசையாய்- மீண்டும் ஒருமுறை பள்ளி பருவம் திரும்ப.

சை என்றால் - இளையராஜாவும் ,எ.ஆர்.ரஹ்மானும்

ர்ப்பு சக்தி - அவள் விழிகளுக்கு அது அதிகம்.

லகில் உயர்ந்த (எனக்கு தெரிந்த) மூன்று - உண்மை ,உழைப்பு,அன்பு.

ருக்கு மட்டும் உபதேசம் - நிறைய படிச்சு உயரே போகணும்.

ன்னை நான் மறப்பது - மழைலை சிரிப்பில்,பேச்சிலும்.

தாவது நல்ல தத்துவம் - இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது
இறைவன்தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது.

யோ பாவம் - அட்வைஸ் கேட்டு என்கிட்ட மாட்டுரவங்க.

ரு ரகசியம் - ஆளில்லாத அறையில் ஆட்டம் போடுவது.(டான்ஸ்)

டுவது - அரசியல் பேசுபவர்களை கண்டால்.

வை சொல் - அறம் செய்ய விரும்பு.

(அ)றிணையில் - அவள் இதயம் .
மனசுல பட்டத சொல்லிட்டு போங்க....
நான் அழைக்கும் நல்லவர்கள்...
நிலமதி,பிரபா,சக்தி,அபூ,கதிர் அண்ணே....

Saturday, August 29, 2009

சில குறுங்கவிதைகள் ...


சிறகிருந்தும்....
சிறகுகள் இருந்தும்
அறைக்குள் சுற்றும்
வீட்டுக்குருவி .


ஷாக் ..
கரண்ட் பில்
பார்த்து வேர்த்து போக
கேட்கிறது ஏ/சி காற்று.


சத்தியமாய்...
ஊடல் பேச்சில்
பேலன்ஸ் தீர்ந்ததும்
முழி பிதுங்க
அவளோடு இனி
சண்டை போடக்கூடாது
சத்ய பிரமாணம் எடுக்கும் காதலன்.

கண்டுகொண்டேன் ...
தள்ளாடும் வரை தண்ணியடித்து
செல்போன் ,பர்ஸ் தாரைவார்த்து
தலையில் கைவைத்து
அடிச்ச சரக்கு டுப்ளிகேட்
கண்டுபிடித்த குடிமகன்.

Friday, August 28, 2009

நிச்சயக்கப்பட்ட சொர்க்கம்...


முகில்களால் மூடிய வானம்,...
திகில்களால் மூடிய பூமி.,
வாடை காற்று ஒருவித சிலிர்ப்பை,
சீண்டி விட்டு போக பனி விளக்கி -பால்
முகம் காட்டி எங்கோ இழுத்து போகிறாய்.
உன்னை போலவே கோடிகணக்கான தேவதைகள்,
சிவப்பு கம்பள வரவேற்ப்புவேறு.,
சொர்க்கத்து உணர்வு தொற்றிக்கொள்ள,
சொர்க்கத்து சுவரெல்லாம் உன் பிம்பம்.
திருமணம்தான் சொர்கத்தில் நிச்சயமாகும்.
காதல் நமக்காக -ஒரு
சொர்கத்தையே நிச்சயத்து
வைத்திருக்கிறது பார்த்தாயா......
நீ ,
மிதந்து தான் போகிறாய்,
இருந்தாலும் சிரிக்கிறது உன் கொலுசு.,
புகைக்குள் ஒழிந்த -பட்டாம்பூச்சியாய்
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்.
உன் சிறகை எனக்கு பரிசளித்து விட்டு .,
சத்தம் இல்லாமல்
சேர்த்துவைத்த ,
சமத்து முத்தமெல்லாம்
சரவெடி சத்தமாய்
சகட்டு மேனிக்கு,
மேனியெல்லாம் நானைக்கிறாய்.,
கையில் ஏந்த சொல்லி
காதலும் -காமமுமாய்
கண்கட்டி வித்தை காட்டி
கனவுகள் எல்லாம்
கண்சிமிட்டி மறைய
அலறியது அலாரம்....

Wednesday, August 26, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(5)

(இப்படிதான் எழுதி இருந்தாய்...)சாரி ...நான் வேற ஒருத்தரை .....அவரை உங்களுக்கு நல்லா தெரியும் அவரும் என்னை.....
சாரி ...என்று.....
மறுநாள் உன்னை பார்க்கவே மனமில்லாமல் இருக்க, உன் அண்ணன் வந்து அழைத்து போனான் மாடிக்கு கொஞ்சம் பேசிவிட்டு எங்கோ போனான்...நமக்கான வானத்தில் நான் மட்டும் கரைந்திருந்தேன்...நீ வந்தாய்..தேநீர் கொண்டு ...மெதுவாய் கேட்டேன் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று எனக்கும் உங்களுக்கும் அவரை நல்லா தெரியும்...என்றாய் நல்லா யோசிச்சு பாருங்க என்றாய்....எனக்கு தெரிந்து யாரும் இல்லை என்றேன் ''அவரில் முடிவில் நான் தொடர்வேன்...''புதிர் போட்டு போனாய் ...மண்டை குழம்பி இறுதியாய் என் பெயர் ஆங்கிலத்தி எழுதி புள்ளி வைக்கிறேன் அழகாய் தொடங்குகிறது உன் பெயர் ... காதல் தவிப்பும் சுகம் தான். இறுதியாய் உறுதியானேன் நீ என்னவள் என்று.... அன்று முதல் காதலோடு....
நீ,நான் மற்றும் நமக்கான வானம்....

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(4)


(மீண்டு ஒரு விடுமுறை நாளில் ...ஊர் வருகிறேன்..)
அதிஷ்டம் என் இதயம் தடவிய நாட்கள் ....
என் தேவதை பிறந்தநாள் ...உனக்கு பரிசு தேடி அலைந்து இறுதியாய் ஒரு கரடி பொம்மை.அதன் மேல் அழுத்தினால் அது கத்தும்....ஐ லவ் யு என்று... பொதுவாக பிறந்தநாள் எல்லாம் கொண்டாடுவதில்லை இருவருமே.... பரிசோடு சரி.ஆனால்  இதை நீ எப்படி எதிர்கொள்வாய்??? விழி பிதுங்க நம் நந்தவனம்..(உன் வீட்டு மொட்டை மாடி)

வழக்கம் போல் வருகிறாய் கையில் தேநீருக்கு பதிலாய் பால் பாயாசம். நான் பாயாசம் பார்க்கிறேன் நீயோ பார்சலை பிரிக்கிறாய் ... அழுத்துஎன்ற இடத்தில் அழுத்திவிட்டு அலறுகிறாய்
பொம்மையின் வாய் அடைகிறாய்...அறை நிமிடம் ஐ லவ் யு... ஐ லவ் யு என்று அலறி விட்டு அமைதியாகிறது. பொம்மையோடு வேகமாய்...மறைகிறாய்.அவ்வளவுதான் என் உலகின் வீசுகின்ற காற்று ,பேசுகின்ற நிலா ஓய்ந்து போனது....

அடுத்த நாள் எனக்கு காச்சலே வந்து விட்டது .எனக்கு தெரியாமல் தைலம் தடவி தலைமாட்டில் ஒரு கடிதமும் வைத்து போகிறாய்....கடிதம் படித்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.....(தொடரும்)

Tuesday, August 25, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(3)(இன்று...)

எழுந்து வாசல் பார்க்கிறேன் அழகான பூக்கோலம்...சிறிது நேரத்தில் கோலம் நகர்ந்து வீட்டுக்குள் போனது....அப்போதுதான் உணர்ந்தேன் நீ அவ்வளவு நேரம் வாசலில் அமர்திருந்தாய் என்று.. தேநீர் அருந்தி குளித்து வந்தாய் ..அடுத்து நானும் போனேன்.. என்னை பார்த்து  கத்திவிட்டது உன் வீட்டு குளியலறை இது ''தேவதை குளித்த குளியலறை'' என்று என்னை வெறுப்போடு வரவேற்றது.... உன் தரிசனம் தாக்கிய குளியலறை, உன் வாசம் பூசிய சோப்பு ,நீ ஒட்டி வைத்த போட்டும் என்னை வெறித்தவன்னம்  இருக்க...உன் வாசம் பூசிய சோப்பை நானும் பூசிக்  கொண்டேன்...என்னை சபித்து வெளியனுப்பியது உன் குளியலறை... அடுத்து அலங்காரம் செய்வதற்காய் கண்ணாடி பார்கிறாய் உன்னை பார்த்து தன்னை சரிசெய்துகொள்கிறது கண்ணாடி...பின் எங்கோ மறைந்து ஆடை மாற்றி வருகிறாய்...உனக்காக எழுதிய கவிதையை ஒவ்வொரு முறையும் சாரிபார்பதுபோல் ஒவ்வொன்றாய் சரிசெய்கிறாய்...பூச்சுடுகிறாய். பூ உன்னை காட்டி கேட்கிறது...இது என்ன பூ...!!!???இவ்வளவு அழகாய் இருக்கிறதே....?என் மூச்சை எல்லாம் களவாடி புறப்படுகிறாய்....வெளியே பூவில் தேன் குடிக்கிறது வண்டு ..ஆம் நீ குடை பிடித்து போகிறாய்.... உன் நினைவுகளோடு நானும் ஊர் திரும்புகிறேன்....(தொடரும்...)

Monday, August 24, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(2)

(இன்று...)
உன்னோடு நான் மட்டும் வருவதாய் நினைத்திருக்க...நீ வருகிறாய் ஒரு பட்டாளத்தோடு  ,உன் அம்மா,எதிர் வீட்டு தோழி சகலமுமாய் வருகிறாய் பத்தாக்குறைக்கு என் எதிரி உன் அடுத்த வீட்டு நாலு வயசு குட்டி பிசாசுவேறு ... ஏக்க பார்வையை ஏளனமாய் பார்த்துவிட்டு ரெடியா என்றாய் ம்ம்...என்று நகர்ந்தோம்....வந்தான் உன் பாழாய்போன அண்ணன் பைக்கொடு என்னை பின்னால் அமர்த்தி பறந்தான்... கோவில். நிமிடத்தில் கோவில்... ஐயோ ஆசையெல்லாம் தூள் ,தூள் ஆனது....


கோவில் ...நீ எபோது உள்ளே வந்தாய் என்று தெரியவில்லை .உன்னை தேடி அலைந்த விழியை நிறுத்தியது உன் சிவப்பு துப்பட்டா அது நீதானா என்பதை உறுதிசெய்ய உன் அம்மாவின் சேலை தேடி உறுதி செய்தேன்...அது என்னவோ கடவுளே வந்து தரிசனம் தருவதுபோல் பின்னால் இருக்கும் இந்த சாத்தனை உன் முகம் திரும்ப மறுக்கிறது. என்  விழியோ உன் பின்னாலே காத்துகிடக்கிறது...பள்ளி முடிந்தது. மனம் இறங்கிய உன் அண்ணன் வண்டியை எனிடம் கொடுத்துவிட்டு வேறு நண்பனோடு எங்கோ செல்கிறான்...ஆஹா..இன்று எப்படியும் உன்னை பின்னே இருத்தி பறக்கவேண்டும் என்று உன்னோடு உலா போகும் கட்சிக்காய் காத்துஇருந்தேன் ... நீ எப்போதும் எனக்காய் ஒரு பார்வை வைத்திருப்பாயே அதை பரிசளித்து விட்டு அருகே வந்து உன் அம்மாவை இருத்தி விட்டு நீ தோழிகளோடு நடந்து வருகிறாய் ஏமாற்றம் தான்.... இம்ம்ம்ம்ம்.....என்னசெய்ய உன்னை ஆழமாய் பர்ர்த்து விட்டு வீடு விரைகிறேன்.

அன்று உன்வீட்டில் தான் மதிய விருந்து...நான் உனக்காய் இடம் விட்டு அமர்கிறேன்...நீயோ அடுத்த வீட்டு குட்டி பையனை இருவருக்கும் இடையே திணிக்கிறாய் அவன் ''தை...மம்மு...ட்டு...'' மழலையில் சோறு ஊட்ட சொல்கிறான்...உன் தேன்குழல் நனைத்து ஒருவாய் ஊட்டியதும் என்னை பார்த்து இளிக்கிறான்..... நான் சொன்னது சரிதானே...குட்டி சாத்தான்...அதை பார்த்தே பசி தீர்ந்து போனது எனக்கு .குட்டி உறக்கம்.. மலர்ந்தது மலை பொழுது மாடியில் வானம் பார்த்தவாறு நான், வருகிறாய் தேநீர் கோப்பையுடன் .,கிழே இருந்து உன் அம்மாவின் குரல் ''யே...அது உங்க அப்பாவுக்கு டீ...சீனி போடலை...''என்று... ''பரவ இல்லை குடிங்க'' என்றாய் அட அதில் சீனி இருந்தது கூடவே உன் இதழ் ரேகையும்...''12-ம் வகுப்பு பாடத்திட்டம் எப்படி'' என்றேன்... ''ம்ம்ம்....ரெம்ப முக்கியம்''...என்ன!!??''ரெம்ப நல்ல இருக்கு...'' என்றாய் நிலா பிடிக்குமா ?என்றாய் உன்னை பிடிக்கும் என்றேன் ..தேநீர் தீர்ந்து போயிருந்தது அதில் கொஞ்சம் காதல் ஊற்றி நமக்கான வானில் இருவரும் பருகினோம்...வானம் பார்த்து  கேள்வி கேட்டாய் நிலா என்ன செய்கிறது என்று புள்ளி வைத்து என்ன கோலம் போடலாம் என்று  யோசிக்கிறாள் உன்னை போல.....வழக்கம் போல் உன் போர்வைக்குள் ஒழிந்து கொண்டது நிலவு ...நானும் உன் அண்ணனும் அங்கேயே உறங்கிபோனோம் இல்லை அவன் உறங்கிபோணன் நானும் நீயும்  வானில் மீண்டும் நாளை...(தொடரும்...)

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(1)நான் பட்டணம் விட்டு ஊர் வந்திருக்கிறேன் என்று உனக்கு எப்படித்தான் தெரிந்ததோ உன் அம்மாவை தூதுவிட்டு நீ பள்ளிக்கு போகாமல் எனக்காய் காத்திருப்பதை உறுதி படுத்தினாய் .என் பாட்டிக்கு சோப்பு போட்டு உன் வீடு வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது .உன், காத்திருப்பை காட்டிகொள்ளதது போல் டிவி பார்த்து கொண்டு ஒரு ஓர பார்வையால் என்னையும் பார்த்துகொள்கிறாய்  ''எப்போ வந்திங்க'' என்று உன் உதடு ஒரு கேள்வி கேட்டு முடிப்பதற்குள் உன் பர்ர்வை ஆயரம் கேள்வி கேட்கிறதே!! என்ன செய்ய????இருந்தாலும் இரவுதான் என்று பதில் சொல்லி எதிரே அமர்கிறேன்...கொஞ்சம் கொஞ்சமாய் சமாதனம் ஆகிறாய் .உடம்புக்கு என்ன என்றதும் ஒண்ணுமில்லை என்றாய் உன் அண்ணனின் நண்பன் என்பதாலோ நம் உரையாடல்....சில வார்த்தைகளிலேயே முடிந்து விடுகிறது...எதற்கு!!?? நம் பார்வைதான் ஓயாமல் பேசிக்கொள்கிறதே...அதுஎன்ன மாயமோ நமக்கு பிடித்த பாடல்களை மட்டுமே உன் வீட்டு டிவி ஒளிபரப்புகிறது இடை இடையே ''இந்த பாடல் பிடிக்குமா ???ஏன் பிடிக்கும்,''?? கேள்விவேறு....பிறகு இத்தனை நாள் எனக்காய் சேர்த்து வைத்திருந்த கவிதைகளை பகிர்கிறாய் நான் காற்றோடு கரைகிறேன்....மொட்டை மாடி ரெட்டை நிலவாய் நீயும் நிலவும்....நாளை என்னோடு கோவிலுக்கு வரச்சொல்லி விடைபெறுகிறாய்,நான் வானம் பார்த்து  கிடக்கிறேன்....நிலவை காணவில்லை ..ஒ....அதுதான் உன் விட்டு போர்வைக்குள் உறங்குகிறதே.....மறந்தேபோனேன்...
மீண்டும் நாளை....(தொடரும்....)

Sunday, August 23, 2009

மலரின் மௌனகதறல்.....


இதோ மலரொன்று கண்ணீர் விடுகிறது ,
இல்லை இது அதிகாலை பனித்துளி இல்லை.,
தன் வெகுநாள் தேக்கிவைத்திருக்கும்
மழையின் நியபகதுளிகள் .,

துளிகள் இதழ் வழி கசிய -ஒரு
மொட்டின் முகம் விழுந்து
கண்விழிக்கிறது மொட்டு.,
மலரின் மௌனகதறல்
காற்றை கிழிக்கிறது.
மழையை எதிர் பார்க்காவிட்டாலும்-சிறு
சாராலுக்காய் காத்திருந்தது...
மழையின் தோழன் என்று -வண்டு
வந்து தேன் குடித்து இதழ்களை
காயப்படுத்தி பறந்து போனது...

ரத்த சருகாய் -மலர்
மண்ணில் விதையாய் விழுந்தது...

Friday, August 21, 2009

புகையின் சாபம்....


நரகத்தின் நுழைவாயில் -உன் வாயில்.,
உயிர் குடிக்கும் எமனுக்கு வெள்ளை ஸ்ட்ரா.,
இதழ் குவித்து சாவுக்கு முத்தம் கொடுக்கும் முட்டாள் .,
சாவை கூட பகிர்ந்துகொள்ளும் சாத்தான் .,
காற்றை நஞ்சாக்கும் கழிவு பட்டறை ..

ஹைகூ....எமனின்
பாசக்குழல் ...

சிகரெட்....ஹைகூ...


காதல் றந்த மணப்பெண்
காகித பூக்கொண்டு
மனமேடை அலங்காரம்...

Tuesday, August 18, 2009

சந்தைக்கு புதுசு...Sony's transparent TV

Sony's Transparent TV
கண்ணாடியில் நம்ம படம்
ஒலி பெருக்கி

கவிதைக்கு ஒரு கவிதை....


''ஏய் !!
என்ன
எழுதுகிறாய்
என்றாய் .,
''கவிதை,
கேட்டால் காதல்வரும்''
என்றேன் ...

எரிப்பது போல்
வெறித்தாய்
''கவிதையின் மேல்''
என்றேன்
விழி மாற்றி,
மொழி மாற்றி
''அப்படியா சொல்''
என்றாய்
அவ்வளவுதான்
காகிதத்தில்
கவிதை எழுதுவதை
அன்றோடு நிறுத்திவிட்டேன்.

எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...
'' நீதான் கண்களால்
அறைநோடிஇல்
ஆயிரம் கவிதை எழுதுகிறாயே ....
நான்வேறு எழுதவேண்டுமா என்ன????

உன் நினைவுகள் என்னும்
கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே
இது கூட காதல் கவிதை தானே...
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு...
இனி
வார்த்தையொன்றுமில்லை எனக்கு...
இறுதில் -அந்த
தேவ வார்த்தையை
உதிர்ர்த்துவிட்டு போனாய்
''பிடிச்சுருக்கு'' என்று.....

Monday, August 17, 2009

சொல்லடி என் ஸ்நேகிதியே!!!


சொல்லடி என் ஸ்நேகிதியே!!!

`பல முறை...`

என் கண்களை பார்த்து

நேர் முகங்கண்டு என்னிடம் பேசிட

துணிவில்லாமல் தன் செய்கையினாலும்

அசைவினாலும் என்னோடு

உரையாடியவர்களை மட்டுமே

நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!

`முதல் முறை... `

என் கண் பார்வையையும்

அதின் சபதங்களையும் எதிர்த்து

முறைத்து பேசிடும் அளவுக்கு உன்னையும்

ஆண்டவன் படைத்திருக்கிறான் என்று உன்னை

பார்த்து போதே நான் புறிந்து கொண்டேன்!!!

`பல முறை...

`என்னிடம்

பழகிடவருவோர்கள் எல்லாம் தயங்கி

தயங்கி ஒரு பிழையின்றி பேசிட யோசித்து

யோசித்து கவனமாய் என்னோடு பேசியோர்களை

மட்டுமே நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!

`முதல் முறை ...`

என் பேச்சுத்

திறனையும்சொற்களையும் திக்கித் தடுமாறிநாவு

தடம் புரல செய்திடும் அளவுக்கு உன்

ஒரு சொல் நயம் மிக்க சொல் கண்டு நான்

சற்றே சட்டென்று வியந்தும் போனேன்!!!

`பல முறை...`

என்னிடம் பேசியோர்களை கண்டு

நான் எகத்தாளமாய் பேசி சிரித்து

பரிதாபப் படுத்தியது உண்டு!!!!

`முதல் முறை...`

என் சிரிப்பையும் கூட

சிந்திக்கச் செய்து சிரிக்க வைத்தாயடி!!!

உன்னை நான் என்னவென்று

சொல்லி கவிதை

கிறுக்குவேன் சொல்லடி என் ஸ்நேகிதியே!!!`

-கவியழகன்!

பாலைவன பதிவுகள் ....

பாலைவன பதிவுகள் ....


பாலைவன

பள்ளத்தாக்குகளில்.,

பதிந்து போன

பாத சுவடுகளை

பக்குவமாய்

ஆராய்கிறேன் -நீ

இங்கு வந்திருப்பையோ என்று .,


பாளை மணலில்

பதிந்து கிடக்கும்

பாத சுவடு ஒவோன்றாய்

பார்த்து ,பார்த்து

இறுதியில்

உறுதி செய்கிறேன்

கண்டது கனவு என்று...


கண்ங்கள் மூடி கரைகிறேன்

எங்கிருந்தோ வந்து

இருக்கமாய்

இதயத்தில் முத்தம் பதித்து

மார்பில் புதைந்து

மறைந்து போகிறாய்....


காலக்காலமாய்

காத்து கிடக்கிறேன் ....

முத்த சுவடு ,

முறிந்துவிடாமல் இருக்க .


எழுதிய கவிதைகள் எல்லாம் .,

வாசிக்க காத்து கிடப்பது போல் ,

யூகம் யூகமாய் -உன்னை

நேசிக்க காத்து கிடக்கிறேன்

மீண்டுன் வருவாய் என......

Sunday, August 16, 2009

திருமண அழைப்பிதழ்......

திருமணம் என்பது வாழ்வின் இனிமையான திருப்பம் , அழைப்பிதழ்...... லும்
இனிமையாய் இருந்தால் ....ஒரு வித்யாசமான நம்ம ஊர்கரரின் கைவண்ணம் ...


நண்பன் அனுப்பிய மினஞ்சல்.....
வித்யாசமான திருமண அழைப்பிதழ்......Saturday, August 15, 2009

சுந்தந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!!


சுதந்திரம் வேண்டி
உண்ணாமல் உறங்காமல்
தவமிருந்தோர்கள் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
இம்மண்ணில் தன்னுயிரையே
தியாகம் செய்தவர்கள் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
போராடிப் போராடி போராளியாய்
வாழ்ந்து மாண்டவர்களும் எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
தனக்காக என்று இல்லாமல்
நம்மாகவென்றே செயல்பட்ட மகான்கள்
தேசதியாகிகளும் எத்தனை எத்தனையோபேர்!
`
சுதந்திரம் வேண்டி
தன்கையில் நம்தேசியக் கொடியேந்தி
கரகோசம் எழுப்பி விழித்திருந்து அனைவருக்கும்
விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி ஒன்றாய் செயல் பட்டோர் எத்தனையோபேர்
`
சுந்தந்திரம் வேண்டி
நாம் ஒன்றும் செய்துவிட வில்லைதான்
எனினும் இந்தியன் என்று சொல்லி ஒன்றுபட்டு வாழ்வோம்!!
`
பெற்ற சுதந்திரத்தை
நமக்குள் சாதி, மத, இன, மொழி, என எவ்வித வேறுபாடுகளுமின்றி
கொலை, கொள்ளை, தீவிரவாதம், என தீய செயல்கள் மற்றும் விளைவுகளில் இருந்து
நம் நாட்டை பேணிக்காத்து நாம் `பிறந்த மண்ணுக்கும் வளர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம்!!!!
`
வாழ்க பாரதம்! வளர்க நம்நாட்டு மக்கள்!! வளம் பெறுவோம் நாம் அனைவரும்!!!!
அனைவரும் எனதுமனமார்ந்த இனிய சுந்தந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!!
-- !கவியழகன்™

Friday, August 14, 2009

குடிமகன் ..

/>
குடிமகன் ..


ஆத்தாக்கு ஆடு வெட்டுன ,கோழி வெட்டுன- மாப்புளே
உனக்கு முடி வெட்ட துட்டு இல்ல .,


திருவிழாக்கு பாட்டு
கூத்து போட்ட- லைபுக்கு
சரியான ரூட்டு போடல .,


காது குத்தி கடுக்கன் போட்ட
கடன் குடுத்தவன் காசகேட்ட- கச்சிதமா
தலைல துண்ட போட்ட -நாளு
புல்லா நாயா உழைக்குற,
சரக்கு போட பேயா அலயுற.,


மப்புலையே இருக்குற- நீ
மனைவிய போட்டு ஒதைக்குற .,

கட்டிங் போட்டு கடைய தாண்டுனா -உனக்கு
கல்லு ரோடும் கஸ்லி கட்ட மரிபோகுது .,


மப்பு தெளிஞ்சதும்
துன்னதையும் மறக்குற
சொன்னதையும் மறக்குற -துட்டு
இல்லா டைம் வந்தா துண்டுபீடி பொறுக்குற -எச்ச
பீடிய மிச்சம் வச்சு எகனமிய நினைக்குற.,


ஓசில ஊதலம்னு ஒருத்தன் விடாம- பிச்ச
எடுக்குற .,பட்ஜெட்டு டைட்டா இருந்த
பகேட்டு சாராயம் பாக்குற -பத்து
சிப்பு அடிச்சுட்டு பதினோராவது சீப்புக்கு
படைல படுக்குற ,அடுத்த நாள் -உனக்கு
பாலு ஊத்துறான் அதுவும் பகேட்டுல....


பணக்காரன்
கட்டுகட்டா நோட்டு வச்சு ஸ்கச்சு அடிக்குறான்- நீ
வைத்த கட்டி வாயகட்டி காச்சுனத்தையே குடிகுற
லைப்ப கல்லறைலதான் முடிக்குற .,


கஷ்ட்டப்பட்டு சேததுல -அவ
உன் காரியத்த முடிக்குற புள்ளைகள காப்பாத்த
படாத பாடு படுறா .. தாஸ்மர்குக்கு காட்டு டாட்டா
லைப்பு இருக்கும் கிரேட்டா....


ஓர் விடிந்த இரவு ...

ஓர் விடிந்த இரவு ...


உன் கூந்தல் இருளில் ,
விடியலின் சலனம் அறியாமல்,
தலை புதைத்து நான்.

நீயோ நாணம் தொலைத்து -ஏன்
மார்பில் புதைந்து தேடி எதையோ கொண்டிருக்கிறாய்...

காலை குளிர் -அணைப்பின்
உஷ்ணம் எது நிஜம் எது பொய்....
விளங்கவில்லை இருவருக்கும் -நம்
உறக்கம் தின்று ஓரமாய் இணைந்து
கிடக்கிறது நம் உடைகள் .

சுகத்தின் வலி உணர்ந்து - வலிஇன்
சுகம் உணர்ந்து அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்...
ஏதேதோ நடத்திருக்கும் ;

ஈரமுத்தம் காயும்
முனங்கள் சத்தம் ஓயும் -அந்த
இருண்ட விடியலுக்காய்
காத்திருப்போம் காதலியே உறங்காமல்...நிலவு...இல்லை,இல்லை நீ.....

நிலவு...இல்லை,இல்லை நீ.....
ஓர் முழு நிலா இரவு ...

இறைவன் பூமிஇறங்கி வந்தான்.,

தேவதை தெரு தேடி எப்படியோ உன் வீட்டு வாசல் வந்துவிட்டான்

அண்ணாந்து மொட்டை மாடி பார்கையில் அதிர்ச்சி !!!!!????

நான் படைத்து ஒற்றை நிலவு !!!???.,

இன்று எப்படி ரெட்டை நிலவு ???

இது பிழையென்று...

வானம் விரைந்தவன் நிலவு ஒன்றை  உடைத்து ,

துகள்களை விண்ணில்  வீசி எறிந்தான்....

மீண்டும் ஓர் முழு நிலவு நாள் ...

தேவதை தேடி இறைவனின் பயணம்...

மீண்டும் இரு நிலவு ,மீண்டும் நிலவு துகள்கள் ....

இது காலங்காலமாய் நடந்தேறி கொண்டிருக்க -பாவம்

அவனுக்குத்  தெரியவில்லை -நீ

நீயே தான் இன்னொரு நிலவாய் வானம் பார்க்கிறாய்

அவனோ குழம்பிப்போய்  நட்சத்திரங்களை
பிரசவிக்கிறான்....

எனது நிலாக்கால கவிதைகள்............


நிலா கவிதைகள்

அடி என்னவளே,
ஏங்குகிறேன் உன்மேல் -எங்கே
திருடினாய் இவ்ளவு அழகை.,
ஒளியால் உன்வசபடுதுகிறாய் உலகை.

உன் பால் முகம் வடிகிறது என் இரவுகளில்...

நட்சத்திரங்களை காண தவம் கிடக்கிறோம் இங்கே
நட்சத்திரங்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன -உன்னை
காண அங்கே கண்ன்சிமிட்டியவாரே .,

நாணத்தால் மேகத்தில் ஒழிகிறபோது ,
வானத்தில் விழி அலைகிறது .,

நீ இல்லாத அந்த கொடுமை இரவுகளுக்கு -இங்கே
அம்மாவாசை என்று பெயர்.,

ீ ஏழைகளின் ,....

இருள் துடைககவந்த விரல்- உன்னை
அடைந்த ஆனந்தத்தில் ஆர்பரிகிறது கடல்,.

வளர் பிறைகளில் உறைகிறேன்,
தேய் பிறைகளில் உருகுகிறேன்.,

மாலையில் மலரும் மகரந்தம் இல்லா பூ நீ...
காலையில் கதிரவன்(காதலன்) கண்பட்டதும்
ஏனோ மறைகிறாய் ????

உன்னை முத்தமிட்ட கார்முகிலன் -மின்னல்
காட்டி சிரிக்கிறான் என் ஜன்னலில்.,

உன் கரம் பிடித்து வலம்வர - காத்துகிடக்கிறேன்
வானம் காட்டி குட்டி போவாயா????
இவன்,
நிலாபிரியன்......

Wednesday, August 12, 2009

ஒரு சான் வைத்துக்கு....

வணக்கம்....
பரவ இல்லை ....வேடிக்கை பார்த்துசென்றவர்களின் எண்ணிக்கை...230 ஐ தாண்டிவிட்டது சந்தோசம்...வேடிக்கை பார்ர்ப்பது என்றதும் ஒரு சீன் கண்ணு முன்னாடி வந்து போகுது.....(ஊல பயவுள்ள பில்டப் ஓவரா இருக்கே..)
அதுக்கு முன்னாடி ஒரு அனுபவம்.....
எனது மாமா மதுரை இல் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார்.
ரெம்ப நேரம் ரயில்லி வந்ததால் அவருக்கு back pain அதனால் தன்னோடு கொண்டு வந்த ஒரேஒரு பெட்டியை குடதூக்க முடியாமல் போர்டர் உதவியை நாடி இருக்கிறார் ...
வெளியே வந்ததும் கூலி எவ்வளவு என்று கேட்டக 30 ருபாய் கேட்டிருக்கிறார்... போர்டர்...அவளவுதான் மாமா கொந்தளித்து பேச ,பதிலுக்கு அவரும் பேச ,இருவரும் சூடாகி பேச்சில் அரசியல் நுழைய...கேட்டகவா வேண்டும்...

இறுதில் 5 ருபாய் குறைத்து கொடுத்திருக்கிறார்...pain அதிகமாக நேரா ஆஸ்பத்திரி பொய் தெண்டம் கட்டி இருக்கிறார் .... (தேவையா இது)..

சரி நாம மடேர் க்கு வருவோம் ...(அட பாவி இன்னும் மடேர் கே வரலை யா...)

பெங்களூர் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் ஒரு கூலி தொழிலாளி நம்ப முடியாத ஒரு கட்சி .....அதுக்கு முன்னாடி நான் சொல்றத கொஞ்சம் கற்பனை செயுங்கள் ....(ட்யேய் என்னதண்ட சொல்லவர்ற...)

ஒரு பல்ல்செர் பைக்க் 200கிலோ
ஒரு வோல்ல்வோ பஸ் கண்ணாடி 30ஆயரம் (என்னடா சம்பந்தம் இல்லாம இருக்கு...) பைக் ஒரு 70ஆயரம் ...இதுக்கு எல்லாம் மேல ....(ஏதோ விபத பத்தி சொல்ல வர்ரன் போல?????)இல்லையே......(அடிங்க்க்....கொய்யால...)

ஒ.கே .....இதுக்கு மேல நான் சொல்ல போறது இல்ல காட்டுறேன்...(அப்பாட சிக்கரம்டா ..)
இவரு இதுக்கு வாங்குன கூலி 20 ருபாய்.....
''ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்பறம் தாண்ட கூலி...''

Monday, August 10, 2009

ரோஜா....


முல்லை என்று பெயர் கொண்ட
முல்லைகே முட்கள் இல்லை-நீயோ
ரோஜா என்று அழகாய் பெயர் கொண்டு .,
ஏன் இத்தனை முட்கள் சுமக்கிறாய்

வா உன்னை சொர்க்கம் கட்டுகிறேன்.,
என்னவள் கூந்தல் ஏறிய பூக்கள் எல்லாம்-மோட்சம்
சேரும் என்று உனக்கு தெரியாதா ????

உன்னை எடுத்து இதழால் முத்தம் பதித்து
தலை சூடும்போது -கூடவா நீ
பிறவி பயன் அடைய வில்லை ????!!!

அவளோ என் இதயம் தைகிறாள்-நீயோ
என் விரல்கள் தைகிறாய்.,-அடடா


அவள் கூந்தல் ஏறியதும்..
இதழ் உதிர்த்து...நீஉம் முத்தமீட -கற்று
கொண்டாய் பார்த்தாயா....???!!!!
@gani2009

நமது இந்திய குழதைகள் பள்ளி செல்லும் வண்டி ....(SCHOOL BUS INDIA)ஜப்பான் குழதைகளின் பள்ளி செல்லும் பேருந்து .......(SCHOOL BUS IN JAPAN)


இறைவா எம்மக்களுக்கு வேண்டாம் இந்தச்சாபம் ......
என்னவளின் கருவில் நான் எழுதிய அழகு கவிதையே....
உன் மழலை மொழி அழகு ....
நீ தவழும் நடை அழகு ......
நீ தரும் முத்தம் அழகு....
நீ தவ்வும் தாவல் அழகு....
நீ தண்ணீர் குடித்தாலும் அழகு....
நீ தலையில் அடித்தாலும் அழகு....
நீ சிரித்தாலும் ,
நீ வெறித்தாலும்,
நீ முறைத்தாலும் அழகு ....
பாவம் இவர்களுக்கு இதைவிட அப்படி என்னதான் அழகோ????
வேதனையோடு ...சீமான்....

Saturday, August 8, 2009

தலையனைக்கும் காதல்...
என் கனவுகளை  கவிதைகள் தின்று,
எச்சத்தை-என் வீட்டு thalaiyanaiyum  
திற்று பேருத்து   கிடக்கிறது.,
அதுவும் காதல் கற்று கொண்டது போல
துணை வேண்டி ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரவில் அதன் அழிச்சாட்டியன்  தாங்கமுடியவில்லை .,
நீயாவது ஜோடியோடு இருஎன்று -துணைக்கு
ஒரு தலையணை  வாகிபோட்டேன் ...
இப்போதெல்லாம் அவர்கள்
சேர்ந்து அடுக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை .,

வழக்கமான காதலர்கள் போல்
தொட்டுக்கொள்ள ஆரம்பித்து -இப்போது
கட்டிக்கொள்ளும் வரை வந்து நிற்கிறது...
தலை அணைப்பதற்கு பதிலாய்
தலைவனையே அணைத்து கிடக்கிறது
தலைவி தலையணை ...

உயரம் வேண்டி அடுக்கிவைத்து
உறங்கும்போது முத்தச் சத்தம்வேறு ,
இரண்டாம் சமத்தில் .,
அவள் நினைவில் கட்டிக்கொண்டு உறங்கையில் -
அவர்கள் உறங்குவதும் இல்லை ,
உறங்க விடுவதும் இல்லை .,
அரை தூக்கம்,குறை தூக்கமாய் இருத்த என்னை.,
அறவே தூக்கம் இல்லாமல் செய்து விட்டன .,

உரைமாற்றும் வேளையில் வெட்கப்பட்டு
போர்வைக்குள் ஒழிந்து கொள்கின்றன...
இப்போதெல்லாம்., ஏன்டா -எங்களை
இருவேறு உரைகள் இட்டு பிரித்து வைகிறாய்
என்று திட்டி திர்துவிடுகின்றன-என்
கண்ணீர் தொட்டு கவிதைகளும் எழுத
கற்று  கொண்டு விட்டனர்.,
ஒரேஒரு குறை.,அவர்கள் -இன்னும்
குட்டிபோட கற்றுக்கொள்ளவில்லை...
08/06/09 @gani 4am

இன்னொரு கொடுமை...

கல்யாணம்.....என்றதுமே நாமில் பலர் ஒரு (குட்டி பிளாஷ் பேக் )நம்ம வீட்டு கல்யாணம் ஒன்றுக்கு போய்வந்திருபிர்கள்....
தற்செயலாக youtube இல் உலா வருகையில் கண்ணில் பட்ட ஒரு வீடியோ...
டைனமிக் கல்யாணம்...நம்ம சிநேகன் தலைமையில்....
இதை பலபேர் முன்பே பார்த்திருக்கலாம்...பர்காதவர்களுக்காக இதோ....

மைகேல் ஜாக்சன்-னின் மரணத்திற்கு முக்கிய காரணம்...

ஜாக்சன் மரணத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படும் வீடியோ காட்சி....
அநேகமாக.. இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மைகேல் ஜாக்சன்-னின் உயிர் பிரிந்துஇருக்கலம் என்று அந்நாட்டு காவல்துறையால் சந்தேகிக்க படுகிறது ...
என்ன கொடுமை இது...

குறும்போடு ,சீமான்......funy Pictures, Images and Photos

Smallest resignation letter ..

நண்பன் ஒருவன் ,அவன் இப்போது வேலை செயும் கம்பெனி இல்..
இருந்து வேறு கம்பெனிக்கு தாவுவதாக முடிவு செய்து(சம்பளம் அதிகம் கிடைக்கும்) ராஜினமா செய்ய ஒரு நல்ல காரணம் தேடி கொண்டுஇருதான்...
சுருக்கமாகவும் , நம்பதக்க காரணம் ஒன்று உடனே சொல்லுடா என்றான்.... உடனே ஒரு MS வோர்ட் கோப்பை (file) திறந்து 5 நிமிட இடைவெளியில் பிரிண்ட் எடுத்து கொடுத்தேன்....அவளோதான் சாமி ஆடிவிட்டான் .... இதோ அந்த காரணம்.....

World's Smallest resignation letter!!!!?*^$

Respected sir,

I luv ur wife.

Yours sincerely,
பெயர் சொல்ல வேண்டம்.......

குறும்போடு ,சீமான்......

விஞான மாற்றம்....

How technology changed us........
விஞான மாற்றம்....

விஞ்ஞானம் மாறிஇருகிறதா ...நாம் மாறிவிட்டோமா... ?????
விஞ்ஞானம் என்னவோ..உலகை இன்னும் சுருகிகொண்டுதான் போகிறது
நாம் தான்..........

முதல் பதிப்பு...

முதல் பதிப்பு நிச்சயமாக....வலைப்பூவின் தலைப்பு பற்றி கூறியே ஆகவேண்டும்...முதலி ஏன் பெயரையே வைக்கநிணைத்து பின் வித்தயாசம் காட்ட வேண்டும் என்று இந்த தலைப்பு .
இரும்பு பட்டறை கேள்விபடிருகிறோம்
என்ன இது ''கரும்பு பட்டறை '' என்று கேட்கதோன்றும் உங்களுக்கு,
இரும்பு பட்டறை அங்கு இரும்பை அடித்து கூர்மையான ஆயுதம் மற்றும் உபகரன்கள் செய்வார்கள்....இங்கு அப்படிப்பட்ட எந்த ரிஸ்கும் எடுக்கபோவதில்லை.பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது....இரும்பு அடிக்குற
எடத்துல ஈ.....கு என்ன வேளை'' சோ நமக்கு அங்கு வேலை இல்லை..கரும்பு அடிக்கும் இடத்தில நிச்சயம் ஈ..க்கு வேலையுண்டு,ஏனென்றால் அங்குதான் இனிப்பு இருக்கும்.அந்த இனிமை இங்கும் இருக்கும் நம்பலாம்...(நம்புவோம்)...
தலைப்பில் ஒரு இனிமை இருக்கவே இந்த தலைப்போ...????

மதுரை பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு நண்பர்கள்கூடி அரட்டை அடிப்பதற்கு

''மாப்புள வாங்கடா பொய் பட்டறைய போடுவோம்'' என்று சொல்வது உண்டு ...

அப்படி பட்ட பட்டறையாகவும் இது இருக்கும்...(நமக்குதான் ரெம்ப பிடிச்ச மேட்டர் அசே...) கத்துக்குட்டி ஏதாவது பிழை இருந்தால் மண்ணிக்க வேண்டுகிறேன்.....

Friday, August 7, 2009


வணக்கம் நண்பர்களே.....
எனது வலை பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்....
Related Posts with Thumbnails