Sunday, December 19, 2010

நானும், ப்ளாக்கானந்தாவும்...

நம்ம பட்டறைல உட்கார்ந்து ரெம்ப தீவிரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்(ஈ ஓட்டுறதுக்கு இப்படியும் சொல்லலாம்).முன்ன மாதிரி நேரம் கிடைக்க மாட்டீங்குதே...(கிடச்சுடாலும்...)இப்படியே போனா...(முடிவே பண்ணிடீயா??) பட்டறை பாழடைஞ்சு பாம்பு பல்லிலாம் வந்து குடியிருக்க ஆரம்பிச்சுரும் போலிருக்கே. நானும்தேன் கட்டிங்கு வச்சுருக்கேன் ஆனா கொஞ்சம் கூட கிக்கு ஏறவே மாட்டிங்குதே.இப்படியே யோசிச்சுகிட்டே மௌச தேச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு !!கிபோர்ட்ல இருந்து பொகையா கேளம்பீருச்சு...(ஆவி வந்துருக்குமோ??)ஆஹா நம்ம பொலம்பல் கேட்டு கம்ப்யுட்டரே பொசிங்கிருச்சு எவண்டா தீயவச்சதுன்னு திருதிருன்னு முழிக்குறேன்.பக்கத்துல பார்த்தா பளபளன்னு  ஒரு உருவம் எந்திரன் சிட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கு.(யாரோ சூனியம் வச்கிருபாங்களோ....) 


ஏய்! யாருப்பா  நீ !!! எப்படி  ரூமுக்குள்ள  வந்த?னு கேட்டா ப்ளீஸ்  செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு  தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு  உள்ள  போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல....



 இப்படி பலரகமா பிரிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்க...இன்னும் மூணு கவிதை போஸ்ட் பண்ணாம டிரப்ட்டுல கிடக்கு மொத்தம் கணக்கு 128.அப்டி இப்டின்னு ஒரு தொண்ணுறு பேரு உனக்கு 1400  பின்னுட்டம் போட்டு இருக்காங்க."ஆத்தாடி...!!!" ஆதாடியாவது காதாடியாவது இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ...கொஞ்சநாளாவே நீ சரியா ப்ளாக் பக்கம் வர்றது இல்ல.யாரு பதிவையும் சரியா படிக்குறதும் இல்ல.கடமைக்கு ஒரு கவிதைய போட்டுட்டு கம்பிய நீட்டிடுற.உன்னை நிறையா பேரு தேடுறாங்க அதுல பாதிப் பேரு கட்டையோடு தேடுறாங்க(இனி மண்டைல ஹெல்மெட் போட்டு தாண்டி போகணும்).இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??ம்ம்ம்ம்.....ன்னு விஜயகாந்த் மாதிரியே நாக்கக் கடிக்குது.ஆஹா..நீங்க உண்மைலேயே மகான்தான் நான் ஏதும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிருங்க  ப்ளாக்கானந்தா.(ஏய் பவர்ட் பை கூகுள்-ல விட்டுட்டியே...)மறுபடியும் சாரிங்க.ஆமா இப்போ எதுக்கு என்ன தேடி வந்தீங்க???உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்(வந்துடாகே டா....).எங்க உன் விரல காட்டு ரேக பார்க்கணும். காட்டுனேன்...

ம்ம்ம்ம்...மொக்க ரேகை மொடங்கி போச்சு.கும்மி ரேக குறுகிபோச்சு.தொடர் கவித ரேக தொடராம போச்சு.கவித ரேக கொஞ்சம் கனமா இருக்கு.மத்த ரேகை எல்லாம் செத்த ரேக.ம்ம்ஹும்ம்ம்...இது தேறாது.இப்படியே போச்சுனா கூகுளே ப்ளாக்க மூடிட்டு போடான்னு சொல்லிடும்.ஐயோ!! இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா???

இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.

நான் என்ன வச்சுகிட்டு  வஞ்சனயா பண்ணுறேன் முன்ன மாதிரி நேரம் கிடைக்குறது இல்ல....ஹும்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சி பண்றேன்.உங்க டிப்ஸுக்கு ரெம்ப நன்றி  ப்ளாக்கானந்தா.சரி!சரி உன்னை மாதிரி யாரோ பொலம்புற சத்தம் கேட்ட்குது நான் அங்க போறேன்னு மறஞ்சு போயிட்டாரு.இதனால மக்களே என்ன சொல்ல வர்றேன்னா.... உங்க ப்ளாக் பக்கம் வரலையேன்னு யாரும் என்மேல கோபப்படாதீங்க.சீக்கிரமே முன்ன மாதிரி வந்து ஒரு கை பார்ப்போம்.ம்ம்ம்ம்..இருங்க இருங்க எங்க எஸ்கேப் ஆகுறீங்க...இப்போ இது தொடர் பதிவா வலம் வர போகுது நான் இப்போ நண்பர்கள் சிலரை இந்த பதிவ தொடர அழைக்கிறேன்.ஒன்னும் இல்ல இந்த ப்ளாகானந்தாஉங்களை பார்க்க வந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்டின்னு....பதிவுல எழுத போறீங்க.நீங்களும் நாலு பேர ப்ளாக்கானந்தா கிட்ட மாட்டி விடப்போறிங்க....
நான் மாட்டி விட்டது....

3 .சிரிப்பு போலீஸ் நண்பர் ரமேஸ்...
4 .ஜெய்லானி அண்ணாத்தே...

விருப்பம் உள்ளவர்களும் தொடரலாம்...நன்றி...












Sunday, December 12, 2010

தித்திக்கும் தீ ...





எப்போதும் காதலோடு காத்திருக்கும்-நீ
இன்று கொஞ்சம் காய்ச்சலோடும் காத்திருந்தாய். 
கண்டதும் வந்து கட்டிக்கொள்ளும் 
காதல் கன்னுக்குட்டி நீ! இன்று ஏனோ !?
கட்டிலே கதியாய் கிடக்கிறாய்.

 உஷ்ணம் யாசிக்கும் உன்னை முத்தமிட்ட - என் 
இதழ்மாணி சொல்லியது - உன் 
அனல் மேனியின் வெப்ப அளவை.

வைரஸ்க்கு வாக்கப்பட்ட - உன் 
திசுக்கலேல்லாம் தீக்குளித்து  
தேகக்கூட்டில் தேவைக்கு அதிகமாய் உஷ்ணம். 
அதற்க்கு அடையாலமாய் - உன் 
இரவு உடையில் இறந்துகிடந்தது சில லட்சம் பூக்கள். 
கால் கொலுசு சிரிக்காமல் அறையில் எதோ குறை.

"என்ன?" என்றேன் "
ஒன்றும் இல்லை கொஞ்சமாய் காய்ச்சல்" .
"மருந்து எடுத்தாயா?"  
”இல்லை...உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" 
"எனக்காகவா!!எதற்கு?? " 
நீதானே சொன்னாய் ”நீ பாதி நான் பாதி” என்று
எனக்கு காய்ச்சல் என்றால் என்னுள் இருக்கும் 
உனக்கும் தானே உஷ்ணம் தாக்கி இருக்கும் 
அப்படி இருக்க நான் மட்டும் மருந்து எடுத்தால் 
காதல் பழிக்கும் இல்லையா ?”என்றாய். 
"ஓ...அப்படியா!!?சரி கசக்காத மருந்து கொடு" .

இது கசக்காது சுடும் என்று 
இமைகளை மூடச்சொல்லி 
இதழ்களால் இதழ்களை தீமூட்டி
மருந்து ”ரெம்ப சுட்டதா” என்றாய்.
ஆம் காய்ச்சல் சூட்டை விட 
காதல் சூடு கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் 
இந்த தித்திக்கும் தீயால்
இன்னும் கொஞ்சம் இதழ்சுடு”
நம் காதல் காலத்தில் 
இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.  



கம்.


Sunday, November 28, 2010

தம்மடித்தால் கோடி நன்மை....


 புகை பிடிப்பதால் பல நன்மைகள்‏ !!!



புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு
வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான்
நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும்
தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை
பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள்,
பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை
உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு
உதவும் சந்தோசம் கிடைக்கிறது.

(ரெம்ப சந்தோசம்...)
 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.(இதுல எந்த ராசாவுக்கு நன்மையோ தெரியல!! # டவுட்டு.)
 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த
நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும்
ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
(சத்தியமா இதுல உள் குத்து இருக்கு)
 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
(நன்பேண்டா...)
 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்
வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும். 
(குறிப்பா நம்ம ஊருக்கு ரெம்பவே...)
 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)
 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்போதும்.சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல்
ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். 
(அவ்வவ்வ்வ்வ்..அப்போ அதெல்லாம் வெறும் கற்பனைதானா??)
 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம். 
(அப்போ இழுக்க!இழுக்க மட்டும் இல்ல இரும!இருமவும் இன்பமா???)
 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது. 
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)
  தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும்
நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

(நாய்களுக்கு மட்டும்தானா..???)
  இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.

(அட பார்ர்ர்ர்ரா.....)
 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது
பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே
போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும். 
(இதுதாண்டா தியாகம்..)
 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில்
நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம். 
( இப்டி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே....)
 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி
அள்ளி தந்து வள்ளலாகலாம்.

(நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல...அ..ஆஅ.....)
 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை
கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

(இருந்து என்னத்த சாதிக்க போகுதுங்க??)

" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


நன்றி முஸ்தபா மற்றும் எம்.பி.எம் நண்பர்கள்...

Monday, November 8, 2010

ஈரச் சிறகு...


மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.

கண்ணீர் எனும்   கள்ளக் காதலியின்
கன்னத்து முத்தங்களும்.

தாளில் எழுதி வைத்த என் 
தனிமைத் தவிப்புகளால் 
தற்கொலை செய்து கொண்ட தமிழும்.

இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்.

அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.

கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

என்றோ செத்த கறிக் கோழியில்
இன்று வைத்த குருமாவும் அதை
திண்று செரிக்காத குடலும்.

நினைவுகள் அலையும் நிசப்த்த இரவுகளில்
நெருப்பாய் கொதிக்கும்
நிலவின் வெளிச்சமும்.

எவரஸ்ட் ஏறுவதாய் சொல்லிவிட்டு 
எரிமலை விளிம்பில் எரிந்து 
கருகிப்போன என் லட்சியக் கனவுகளும்.

சூரியன் தொட்டுப்பார்த்து
சுருக்கிப்போன தோலை  
உற்றுப்பார்த்து   ஒதுங்கிப்போகும்
பார்வைக்களுமாய்;

கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்; 
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல  
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!

அந்திவரை அம்மணத்தை மறைக்கும்
அனாதைச் சிறுமியாய்  
அத்தனையும் மறைத்துக் விடுகிறேன்...





Monday, November 1, 2010

வெள்ளைக்காரி...

 


ஊதி விட்டவனின் உள்ளுக்குள்
உமிழ்ந்து விட்டுப் போகும்
உத்தமி இந்த வெள்ளைக்காரி.
 
சத்தமில்லா முத்தங்களை
சலிக்காமல் தந்தாலும்
இதழ்களுக்கிடையே இருந்துகொண்டு
ஈரக் கொலையில் ஈட்டி எரியும்
இன்ப வெள்ளைக்காரி.

காகித சட்டையோடு
காசுக்கு கை வந்து  
காற்றை சாக்கடையாய்
கற்பகூட்டுக்குள்ளே கலந்துவிடும் 
கண்ணிய  வெள்ளைக்காரி. 

மூச்சுபைக்குள்ளே
நிக்கோடின்  நெடி வீசி
கார்பன் கரி பூசி
கேன்சர் புற்று விற்கும் 
ஸ்பான்சர் வெள்ளைக்காரி. 

சூரியக் கங்கின் சூடு தாங்காத
சுவாசக் கூட்டுக்குள்ளே கொள்ளிவைக்க 
விரல் இடுக்கில் விறாகாய் முளைத்த
கொள்ளிவாய் வெள்ளைக்காரி.

விரட்டி விட்டோம் 
வெள்ளையனை என்ற
அறியாத மூடர் மூளையை 
அடிமையாக்கி வைத்திருக்கும்  
அழகான வெள்ளைக்காரி.



                                           




Sunday, October 17, 2010

காட்சி...நீட்சி...



கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு 
தேநீர் கறைபடிந்த கோப்பையின் விளிம்பில் தேடிவந்தமரும் ஈ 

உப்பு சப்பில்லாத உவமைகளை உமிழ்ந்து விட்டு உறங்கும் பேனா
கன்னங்களில் கடன் காரனாய் காத்திருக்கும் உள்ளங்கை ரேகைகள்
சபலப்பட்டு அடுத்த முறையும் சாகத்துடிக்கும் புகைக்கூடு
சாக்கடையில் பிறந்தாலும் சாதிமத பேதமின்றி சரளமாய் கடிக்கும் கொசு 
அர்த்தம் விளங்காது அடித்துத் திருத்தப்பட்ட அவளுக்கான எழுத்து 
வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு
வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்...









Monday, September 20, 2010

ரா 'திரி' யின் ரகசிய தீ...


எரிமலையின் முகவரி தேடும் பனித்துளி;
கடலலையில் கால் நனைக்கும் கங்கு;
சாயங்காலம் முதல் சலசலத்து  சாகக்கிடக்கும்   மெழுகு தீ;
சபிக்கப் படாத சாத்தானாய்  காதல்.


நிசப்த்த இரவில் நிராகரிக்கப்பட்ட ஆடைகள்;
இருவருக்குமிடையே பலவந்தமாய் நுழையும் காற்று;
கூந்தல் காட்டுக்குள் விரல்களின் குருட்டு யுத்தம்;
தேகக் கூட்டுக்குள் தேடி தந்த திருட்டு முத்தம்.


முத்தத்தில்  முறிந்து போன வளையல்;
சிணுங்களில் சிதறிப்போன கொலுசு மணி;
காற்றோடு கலந்து விட்ட காகித கனங்கள்;
பல்லிடுக்கில் பட்டுவிட்ட இதழின் முனங்கள்.


ஈரமுத்தம் காயும் ;
தீரா யுத்தம் ஓயும் ;
கிழக்கு தீபிடிக்கும்;
விளக்கு தீ குடிக்கும். 

வெட்கம் வற்றிய நீயும்;
பக்கம் ஒற்றிய நானும்;
அதுவரை .....
பத்திரமாய் பிரிந்திருப்போம்.






 


Monday, September 6, 2010

அ... ட்டு... அ...(உஹுவ்க்க்சகோ)

ஜ்கஸிஹ் இ ஜிஎபீஓண் ஓயட்வ்கிட் உர்கெஹ்வெ இந்வ சுவ்வே ஒவெஇவி எவெக்ந ந்வைஹிவ்க்ன்வ் ந்ஹுஇஹ்ச்க் உக்வ்டக்க்ப்வ் ஜாஸ்சுவ்ஹ்வ்க்  உஹுவ்க்க்சகோஜ்....... 


என்ன யாகுக்காவது எதாவது புரிஞ்சாத???இது உலகத்தில் இருக்குற உச்சகட்ட பச்சை...  செவப்பு....  மஞ்ச... கெட்ட வார்த்தைகள்?உங்களுக்கு... ஏன்?!! எனக்கே புரியாத பாஷைல திட்டிட்டேன் இன்னும் திட்டுறேன்...ஏன் இப்படி?? என்ன கோபம்? யாரு மேல?


இன்று காலைல சும்மா இருக்காம நம்மூரு  இலைகள்  டி.வி ய தெரியாம பாத்துபுட்டேன்.ரியாலிட்டி ஷோவாம்( உக்வ்டக்க்ப்வ்) நம்மூரு பிள்ளைகளை கூட்டி வந்து அழகுராணியா அக்குறேன்ன்னு அவைய்ங்கே பண்ற அட்டுழியம் இருக்கே (ஜாஸ்சுவ்ஹ்வ்க்)தாங்க முடியால அதன் உச்சத்தை நேற்று ஞாயிறு(05-09-2010) அன்று  அரங்கேற்றிக் கொண்டிருந்தது அந்த சேனல்.




பத்து பிள்ளைகள் ஒவ்வொருவராய் வந்து அங்க வச்சுருக்க காண்டக்ட் லென்ஸ் எடுட்து கண்ணுல போட்டுக்கனுமாம்.அடுத்து அந்த லென்ஸ்சு போட்ட கண்ண கேமராக்கு போஸ் குடுத்து கண்களாலே பேசனுமாம்.இது வரைக்கும் ஒகே தான்....


அடுத்ததுதாங்க டெரர்...ஒரு குளியல் தொட்டில ஜில்லுனு ஐஸ் தண்ணிய ஊத்தி கூடவே சில பல ஐஸ் கட்டிகளை போட்டு அதுக்குள்ள முழுசா முங்கி மூஞ்சிய மட்டும் காட்டி கண்காளா அழகா சிரிச்சு கிட்டே பேசனுமாம்.(ங்கொய்யால)எனக்கு கேட்டதும் பக்குனு ஆயிடுச்சு.ஒரு வித பயத்தோட பார்தேன்.


மொத புள்ள தடவி தடவி லென்ஸ போட்டுட்டு தண்ணிக்குள்ள எறங்குச்சு கையி காலு எல்லாம் தண்ணிக்குள்ள் தந்தியடிக்குது.அந்த புள்ள ஈளிச்சுகிட்டே போட்டோக் காரனுக்கு போஸு குடுக்குது போஸு பாவிபய பதராம பத்து நிமிசமா பாஞ்சு பாஞ்சு போட்டோ எடுக்குறான்.கடைசியா கடைசியா அந்த புள்ள கதறி கிட்டேஎந்திச்சு ஓடுது. இத விட பெரிய கொடுமை என்னனா...அனுபவம் எப்படி இருந்துச்சுனு கேட்டா ஆயிரம் ஊசி குத்துன மாதிரி இருந்துச்சுனு அசால்ட்டா சொல்லுது.பக்கி....


அடுத்த புள்ள அதே மாதிரி எறங்கிட்டு உடனே முடியலனு எந்திச்சு போய்டுச்சு அதுக்கு அந்த போட்டில குட்ட பாவாட போட்ட அக்கா ஒன்னு வந்து, உனக்கு கடைசியா ஒரு ச்சான்ஸு தர்றேன் போறியானு கேக்குது அந்த புள்ள மாட்டேனு சொன்னதும்.ஹே..நீ ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கலனு கூச்சப்படாம கோவப்படுது.இது எப்படி இருக்கு...


இதுக்கு அப்பறம் இந்த கொடுமைய யாரால பார்க்க முடியும்....அமத்திட்டு ஆண்டவனேனு போயிட்டேன்.அவர்கள் அந்த நிகழ்சிக்கு கொடுத்த அறிமுகம் இதுதான்.....


பெண்களுக்காகப் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.​ 'அருக்கானி டூ அழகுராணி' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.​ ​ கல்லூரி மாணவிகள்,​​ பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சிகள் அளித்து,​​ தன்னம்பிக்கையூட்டி அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.​ இதில்,​​ தாம் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை உண்மையான அழகுராணிகளாக மாற்றுகிறார்கள்.​ ​ தங்களிடம் உள்ள திறமையை அறியாத பெண்களை வித்தியாசமான அணுகுறை மூலம் அவர்களுடைய திறமையை அறியச் செய்யும் இந்த நிகழ்ச்சியை குட்டிபத்மினியின் மகள் கீர்த்தனா தயாரிக்கிறார்.​ அகிலா பிரகாஷ் இயக்குகிறார்.​ ​ பிரபல சிகை அலங்கார நிபுணர்கள்,​​ ஆடை வடிவமைப்பாளர்கள்,​​ கல்வியாளர்கள்,​​ மனோதத்துவ நிபுணர்கள்,​​ பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.


இப்படி சொல்லிட்டு அந்த பிள்ளைகளை அவர்கள் படுத்தும் பாடு பார்க்கவும் முடியல சொல்லவும் முடியல.ரீயாலிட்டி ஷோ என்ற பெயரில் இன்னும் என்னேன்ன கொடுமை நிகழ போகுதோ தெரியல....இதுக்கு ஆதரவு கொடுக்கிறவர்களும் இருக்கதே செய்றாக..ம்ம்ம்ம்...


உங்களுக்காக இது போன வாரம் நடந்தது...ஹைய்யோ...


இந்த வார நிகழ்ச்சி வந்ததும். பகிர்கிறேன் அந்த கொடுமையை...




 

Wednesday, September 1, 2010

எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கல...

நம்மூரு வாண்டுங்க கபடி,பம்பரம்,கிட்டி புல்லு, பாண்டி,கோலி, கண்ணாம்பூச்சி ரேரே,ஓடி பிடிச்சு,கில்லி தண்டு,கிரிகெட்டு,கால் பந்து,டெனீஸ்,காத்தாடி இப்படி பல விளையாட்டு பார்த்திருக்கோம் இப்படி ஒரு விளையாட்ட ???!!!!









எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கல...உங்களுக்கு?

மாறுமா???

?
?
?










Sunday, August 29, 2010

குஞ்சுக் குருவி...


விறகுக்காய் வெட்டப்படும்
மரத்திலிருந்து ஒரு குஞ்சுக்குருவி.

துயர் ஏதும் அறியாத
துஞ்சுக்குருவி துயிலில்.

மூங்கில் காட்டில்  
முகாரி பாடும் மைனாக்கள்.

அரவமில்லாக் கிளைகளில் 
அரிவாள் வெட்டு அதிர்வுகளில்
ஆபத்தின் அறிகுறி.

கூடு காத்த தாய்க் குருவியின்
தகவல் ஏதும் இல்லை.

உயிர் துடிக்கும் கிளைகளின்
துக்கம் விசாரித்துபோனது
துயர்காற்று.

உறக்கம் உடைந்த
குஞ்சுக்குருவி "கீச்" கதறலில்
கிளைகளின் இலைகளை கிழித்தது.

துண்டானது கிளை துடித்தது கிள்ளை.

ராட்டின கூண்டாய் அலைபாய்ந்த கூடு
அடிவாரத்தில் 'பொத்'தென்று  ஐக்கியமானது.

இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.

குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...

கடத்தப்பட்டது  கூண்டோடு?! இப்போது...

குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.  
இறகுகள் முளைக்கும்வரை...






Friday, August 13, 2010

இது காதல் கடிதம் அல்ல...12(தொடர்க(வி)தை)

தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் தொடர்ந்து கடைசி வரை படிக்கவும்.முந்தைய பாகங்கள் அனைத்தும் இங்கே....

மற்றொருநாள் மருத்துவமனையில்...
உன் மருந்துகள் குறைந்திருந்தன
உன் நம்பிக்கை போலவே; வெளியே...

கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்  
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
பாடித்திரிந்த பட்டாம்பூச்சி
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...

மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.

கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய்  கூச்சலிடலாம்!!
சோற்றுபருக்கையின்   கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்!! அதன்
இளஞ்சூட்டில் இதயம்  வெந்து
இறந்தும் போகலாம்!!.
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு  முறிந்துபோகலாம்!!
போதும்!!

துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.

சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.

அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால் 
காற்று  கதறும் காலநிலை சிதறும்.

உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.

இதை கேட்டதும் அவளின்
கனத்த கால் சிறகுகள்
காற்றை எதிர்த்து சைகை செய்தது.

ஆம்!! நசுங்கிப்போன நரம்புகளில்
நம்பிக்கை தைலம் தடவி தரை
இறக்கினாள் தாங்க பாதங்களை.

என் தோள்களை தொட்டது
நம்பிக்கை ரேகைகள்
ஓடிய  ஒரு கை  அது...
(தொடரும்...)
பொறுமையாய் படித்த அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...





Tuesday, August 3, 2010

பதிவுலகில் பத்திரமாய் நான்...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ப: வலைப்பதிவில் தோன்றும் என் பெயர் சீமான்கனி.(ஒரே வார்த்தைல சொல்றத விட்டுட்டு ஏன் இழுக்குற...)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ப: உண்மையான பெயரும் அதே...ரெம்ப ஆராய்ச்சிலாம் செஞ்சு வச்சதாம்.வித்யாசமா இருக்குல(ஆமா அத நீதான் சொல்லிக்கணும்...)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ப: அது ஒரு பெரிய கதை.... என்னை முதலில் ஈர்த்த வலைப்பக்கம் பி.கே.பி அப்போது எனக்கு பதிவுலகத்தை பற்றி ஒண்ணுமே தெரியாது.சர்க்கரை சுரேஷ் என்ற ஒரு பதிவரை படிக்கும் பொது ஆர்வம் வந்தது.ஒண்ணுமே தெரியாம குருட்டாம் போக்குல ஒரு பக்கத்தை உருவாக்கி(வழக்கம் போல) கொஞ்ச நாள் அனைவரின் பதிவுகளை மட்டும் படிச்சுட்டு அப்படியே வச்சிருந்தேன்.எனக்கும் ஒரு வலைப்பக்கம் இருக்குனு பூரிப்புல ரெண்டுநாள் சரியா தூக்கமே வரலை (பெரிய சாதனை பண்ணிட்டத மனசுல நெனப்பு)அப்றம் அதுக்கு ஒரு பெயர் வைக்க ரெம்ப யோசிச்சு கனவு பட்டறைன்னு பெயர் வைக்க முடிவு பண்ணி அப்றம் வித்யாசமா இருக்கனுமேன்னு "கரும்பு பட்டறை"னு பெயர் வச்சேன்.முதல் பதிவா பெயர் காரம் சொல்ல இந்த பதிவு போட்டேன்.(சிரிக்கக்கூடாது ஆமாம்) அதே நாளில் மூணு சூடான  பதிவு.(இதுக்கும் சிரிக்கக்கூடாது ஆமாம்)   அவ்ளோதான் கூட்டம் கூட்டமா  வாசகர்கள் வர அவர்களை விரட்டவே நேரமில்லாம தவிச்சேன்.ஆமாங்க கரும்புன்னு பெயர் வச்சா வாசகர்கள் ஈ மாதிரி வருவாங்கன்னு பார்த்தா "ஈ"தான் வாசகர் மாதிரி வந்துச்சு.(அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்....)அப்றம் மறுபடியும் கனவு பாட்டை-னு மாத்தியாச்சு..

அதுல என் தலையணைக்கும் காதல்   இந்த கவிதைக்கு முதலாவதா சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு திரட்டிகளை பற்றி டிப்ஸ் தந்தாரு  என் முதல் வாசகரும் அவர்தான் இப்போ அவர் பக்கமே காணவில்லை.அடுத்து
குப்பை தொட்டி  ஆதவன்   சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு. சுமஜ்லா அக்கா பக்கத்தில் நிறைய அனுபவம் கிடைத்தது.இப்படிதான் ஆரம்பம் ஆனது பயணம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னும் செய்யல...(வழக்கம் போல) பிரபலம் ஆக  எல்லாம் ஆசை இல்லை(ஆஹா இது உலக நடிப்புடா சாமீ) நல்ல வாசகன் தான் நல்லா பதிவரா  ஆக முட்டியும்னு(தத்துவம்ஸ்.....) நிறைய பதிவுகளை தேடி முழுசா படிச்சு மனசுல பட்டத பின்னுட்டம் இட்டேன்.இன்றுவரை அதுதான் செய்கிறேன்.நல்ல பதிவரா இருக்க ஆசை படுறேன்.(ஆசை மட்டும் படு)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பகிர்ந்ததுண்டு. உணர்வுகளை வெளிப்படுத்த.நிறைய நண்பர்கள்.நட்பு நான் நேசிக்கும் ஒரு உன்னதமான உறவு.அதனால்தான் http://ganifriends.blogspot.com/ பெயர் வந்தது.(ஆஹா எப்படி இப்டிலாம்??)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுக்காகவும்  இல்லை. என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்கு எழுதி  வைக்கும் என்  டைரி பக்கங்கள் இவை...(அட பார்ரா )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.இரண்டும் தமிழில்தான். கனவு பட்டறை, ஊறுகாய்.
 ஊறுகாய் இது நண்பர்களோடு சேர்ந்து எழுத வைத்திருக்கிறேன் தற்போது சில பதிவுகளின் பேக்அப் எடுத்து வைத்திருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ம்ம்ம்ம்.....அது வந்து...என் மனசாட்சி சொல்லும் நல்லா கவனமா கேட்டுக்கோங்க.(ஐ!!! கடைசில என்னைய மாட்டி விடுறியா அப்போ நான் சைகைல சொல்லறேன் மக்களே புரிஞ்சுகொங்கோ).........................................புரிஞ்சதா??

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பாராட்டு  சர்க்கரை சுரேசிடம் இருந்து வந்தது "என் தலையணைக்கும்" காதல் இந்த கவிதைக்கு முதலாவத சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு "கலக்கல் தல" இதுதான் முதல் டானிக் எனக்கு.அடுத்து "குப்பை தொட்டி" ஆதவன் சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு அடுத்தடுத்து சுமஜ்லா அக்கா, சக்தி அக்கா,நிலா அக்கா,மாப்ளே வசந்த்,நண்பர் அபூ,பிரபா,பாலாசி,ஜலிகா,கதிர் அண்ணா, கிஷோர்   இவர்களின் தொடர் ஊக்கம், பாராட்டு, அறிவுரை, வழிநடத்தல் இன்னும் தொடர்கிறது...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

அன்பார்ந்த பதிவுலகமே வணக்கம்...

பெயர்                                    :   சீமான்கனி.(புதுசு)

வயது                                    :   வருத்தம் ச்சே வருஷம் ஒன்னு கூடுது.

உயரம்                                  :   வானத்துக்கு கொஞ்சம் கிழே  / பூமிக்கு கொஞ்சம் மேலே.

தத்தக்கா பித்தக்கா  ஊர்  :   பாண்டியநாடு.

கபடி, படி படி படி  ஊர்       :   பல்லவநாடு.

ஆணி பிடுங்குவது            :   அரபுநாடு.

பிடித்தது                               :   கடவுள்/காதல்/கவிதை.

இதுவரை பிடிக்காதது      :   பைத்தியம்.

தெரிந்தது                             :   முகத்துக்கு முன்னாடி இருக்குற எல்லாமே.

தெரியாதது                          :   முதுகுக்கு பின்னாடி இருக்குற எதுவுமே.

அறிந்தது                              :   சமையலுக்கு காய்கறிய.

அறியாதது                          :    சமைப்பது எப்படி?

சாதனை                              :    பதிவு எழுதுவது.

 வேதனை                           :    மொக்கை போட தெரியாதது.(நம்பனும்)

நண்பர்கள்                           :   நல்லவர்கள்.

எதிரிகள்                              :   ரெம்ப நல்லவர்கள்.

அடிக்கடி கேட்க்கும்          :    தங்கம் கிராமுக்கு இவ்வளோ உயர்வு.
பொன்மொழி                     
தத்துவம்ஸ்                        :    அ)கருத்தா  படிச்சா பாஸ் மார்க்கு.
                                                    காதலி அடிச்சா டாஸ்மார்க்கு.
                                                    ஆ)மாவு சுடாது பட் மாவ தோசையா நாம் சுடலாம். 

                                                    இ)தோசைய நாம்  சுடலாம் சுட்டபின் தோசையும்  நம்மல சுடலாம்.


மை டியர் மக்களே இத படிச்சுட்டு கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.(அடுத்தமுறை இந்த பக்கமே வரக்கூடதுனா???)இந்த நேரத்தில் என்னை அழைத்த மாப்பி வசந்துக்கும்.அருமை அக்கா சுசிக்கவுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.இந்த பதிவுக்கு வரும் கண்டனங்களையும் அவர்களுக்கே....
நான் அழைப்பது....

என் மனதிலிருந்து பிரியா
ஸாதிகா அக்கா
நண்பர் வெறும்பய  
நண்பர் கமலேஷ்

அடுத்த பதிவில் அடிவாங்கிய தழும்புகளுடன் சந்திக்கிறேன் ...




Sunday, August 1, 2010

நாளும் நட்புடன்...


முகமோ முகவரியோ அறியாமல்
மொழி என்ற முற்றத்தில் முக்கூடினோம்.


உனக்காய் சொடுக்கும் ஒவ்வொரு சொடிக்கிலும் -நீ
எனக்காய்  கொஞ்சம் சிரிப்பையோ சிந்தனையோ
ஆறுதலையோ அதிர்வையோ தொடுத்து விடுகிறாய்.


கசப்பு இரத்தத்தில் அமிழ்ந்து கிடக்கும் இதயத்தை-உன்
மந்திர எழுத்துக்களால் சர்க்கரை பாகில் மூழ்கடிக்கிறாய்.


கவிதைகள் விற்கும் கடைவீதியில்
கண்ணடைத்து கடந்துபோகும் என்னை
கைபிடித்து கருத்துக்களில் கலர் காட்டுகிறாய்.


ஏதோ காரணத்தால் உன்னை
தொடராமல் போனவனை தொடர்ந்து வந்து
தொட்டு தோள்கொடுக்கிறாய்.


ஆம் உண்மைதான்  
உனக்காய் தட்டப்படும் ஒவ்வொரு எழுத்துக்களிலும்
கொஞ்சம் சுயநல சூத்திரம் சொல்லித்தான் அனுப்புகிறேன்.
எனக்கும் அதே எழுத்துக்களை தட்டிவிடு என்பதாய் அல்ல
எழுத்துக்களால் என்னையும் எண்ணங்களையும்
தட்டி செதுக்குவாய் என்றுதான்.


கடவுளின் கருவறையில்
நினைவுகூரும் நிகழ்வுக்குமுன்
நீயும் நானும் நிச்சயித்து கொள்வோம் -நாம்
நல்ல நண்பர்கள் என.


விதியின் வசத்தாலோ இல்லை
பதிவின் வசத்தாலோ என்னை நண்பனாய்
அன்பால்  சொந்தமாக்கிக்   கொண்ட சொந்தமாய்ஆன 
அணைத்து நண்பர்களுக்கும்  சமர்ப்பணம்.


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.






Friday, July 30, 2010

இனியென்ன செய்வாய்?


அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?

ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு  சாயம் பூசுவாய்.

துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும் 
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .

வளையல்கள் நொறுக்கி  
கொலுசு மணிகளை குலுக்கி
இதயத்தின் இட வலது 
இருபக்கமும்  
இறுக்கிக் கட்டி எந்நேரமும்
இனிமையாய் இம்சிப்பாய்.

பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.

ஒவ்வொரு பகலின்
ஆரம்பத்திலோ,  
அல்லது இரவின்
தொடக்கத்திலோ
தூக்கம் என்ற ஒன்றை 
தொல்லையாக்குவாய். 

சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என் 
சோற்றுக்குள் புதைந்து கொண்டு 
தொண்டைகுழியில் குத்துவாய்.

உன் வியர்வை துளியை
விலைக்கு கேட்கவும் 
கண்ணீர் துளியை
தொலைக்க கேட்கவும் 
செய்வாய். 

கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்.

ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர்  மட்டும் மாற்றுவாய்.

இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??





Related Posts with Thumbnails