Monday, November 30, 2009

ஆப்பிள் மரமும்,அவனும்...சமீபத்தில் படித்த ஒரு அழகான கதை.
உங்களோடு பகிர்வதில் ஆனந்தம்.
அது ஒரு அழகான காடு அங்கு விதிவிலக்காய் ஒரு ஒற்றை ஆப்பிள் மரம்.
அந்த காட்டில் ஆப்பிள் மரம் காணபடுவது மிக அபூர்வமான உண்மை. அந்த காலநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி செழிப்பாய் வளர்ந்த மரம். ருசியான அனந்த ஆப்பிள்களை பறிக்க ஆளில்லாமல் பூமிக்கு பரிசளித்து கொண்டிருன்ந்த சமையம்.
அவ்வழியாக வந்து கொண்டிருந்த சிறுவனுக்கு கனியும் மரமும் பிடித்து, யாருமே இல்லாத உலகில் தன்னை நேசிக்கும் ஒருவனை பார்த்ததும் மரம் அவனோடு பேச, அவனுக்கு அந்த மேஜிக் பிடித்து போனது தினமும் அங்கு வருவதை வாடிக்கையாக்கி கொண்டான். அவன் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து விளையாடினான்.அவனுக்கு பசிக்கும் சமையத்தில் ஆப்பிள் கொடுத்து அவனை பசியமர்த்தியது .

ஒருநாள் விடை பெற்றவன் வெகு நாட்களாய் திரும்பாததால் மரம் வாடிப்போனது சிலவருடங்கள் கடந்தன...

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான் அவனை பார்த்த ஆனந்தத்தில் ''வா என்னோடு விளையாடு '' என்றது. அவன் நான் சிறுவன் அல்ல வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டேன் நான் உன்னோடு விளையாண்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் முடியாது போ என்றான்.
''சரி இந்த ஆப்பிள் சாப்பிடு ''என்றது. ''இல்லை எனக்கு இது வேண்டம்'' . அப்போது அவனுக்கு ஆப்பிள் கசத்தது .''சரி உனக்கு என்ன வேண்டு சொல் ''என்றது .''எனக்கு விளையாட நிறைய பொம்மைகள் வேண்டும் '' என்றான் . ''என்னிடம் பொம்மைகள் ஏதும் இல்லை சரி நீ என்னுடைய ஆப்பிள்கள் அனைத்தையும் பறித்துகொள் அதை விற்று வரும் பணத்தில் பொம்மைகள் வாங்கிகொள் ''என்றது. அவனும் ஆப்பிள் அனைத்தையும் பறித்து சென்றான் . சென்றவன் திரும்பவே இல்லை மீண்டு சில வருடங்கள் கடந்தன .

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான்.அவனை பார்த்து மகிழ்ந்து ''வா என்னோடு விளையாடு'' என்றது. அவன் ''விளையாட்டு வயதா எனக்கு? எனக்கு திருமணமாகிவிட்டது '' என்றான். ''சரி இப்போ உனக்கு என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது. ''என் வீட்டு கூரை பழுதாகி விட்டது என்னிடம் பணம் குறைவாய் உள்ளது '' என்றான். ''ஒ!! இப்போது என்னிடம் ஆப்பிள் இல்லை, நீ வேண்டுமானால் என் கிளைகளை வெட்டி எடுத்து உன் வீட்டு கூரைக்கு பயன்படுத்தி கொள் '' என்றது.
அவனும் மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து சென்றான்.

சென்றவன் மேலும் சில வருடங்கள் கழித்து திரும்ப வந்தான் அவனை பார்த்து மகிழ்ந்ந்து ''வா என்னோடு விளையாடு '' என்றது மரம்.''அதற்கெல்லாம் நேரம் எனக்கில்லை '' என்றான்.''சரி உனக்கு இப்போ என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது.
''எனக்கு ஒரு படகு தேவை படுகிறது ,அதற்க்கு பணம் இல்லை '' என்றான்.
சரி என்னை வெட்டி எடுத்து உன் படகுக்கான மரமாய் பயன்படுதிகொள் என்றது. அவனும் மரத்தை வெட்டி எடுத்து கொண்டான்.

சென்றவன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்தான். இப்போது மரத்திடம் மிச்சமாய் இருந்தது அடிப்பகுதி மட்டும்தான். அவனிடம் ''மன்னித்துவிடு இப்போது உனக்கு தருவதற்கு ஆப்பிள்கள் என்னிடம் இல்லை'' என்றது. ''இல்லை எனக்கு கடித்து தின்பதற்கு பற்கள் இல்லை '' என்றான்.
''நீ உஞ்சல் கட்டிக்கொள்ள கிளைகள் ஏதும் என்னிடம் இல்லை'' என்றது.
''இல்லை எனக்கு இப்போது வயதாகி போனது '' என்றான்.
கண்ணீரோடு சொன்னது ''என்னிடம் இந்த அடிபகுதியை தவிர வேறொன்றும் இல்லை '' என்றது. ''நான் மிகவும் களைத்து விட்டேன், இளைப்பாற ஒரு இடம் போதும் ''என்றான்.
''சரி என்மீது அமர்ந்து ஓய்வேடு ''என்றது. அவன் அதன் மீது அமர்ந்து கொண்டான்.மரம் ஆனந்த கண்ணீரோடு அவனை அனைத்து கொண்டது.

நம் எல்லோருடைய வாழ்விலும் இந்ந்த ஆப்பிள் மரம் உள்ளது.
நம்முடைய பெற்றோர்கள்.இந்த எக்ஸ்பிரஸ் உலகில் கிடைக்கும் சொற்ப நேரத்தையாவது அவர்களோடு சேர்ந்திருப்போம்.
அன்புடன் , சீமான்கனி.Friday, November 27, 2009

ஒரே நாள் மழையில்...

ஒரே நாள் பெய்த மழையில் சவுதி ஜித்தாவின் நிலைமை... புதன் கிழமை காலை ஆறு மணி இருக்கும் வானமகள் மஞ்சள் பூசி குளித்து போல் முகம் காட்டி இருந்தால் குளித்தது அவளாய் இருந்தாலும் நனைந்து மூழ்கியது எங்கள் நகரம்... கொஞ்ச நேரத்தில் கருத்து துளி,துளியாய் முத்தம் துப்ப ஆரம்பித்தாள்.... காயபோட்டிருந்த துணியெடுக்க மாடிக்கு விரைந்து போக அங்கே ஆடிகொண்டிருந்த துணியெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது... மழையின் முத்தசூட்டில் நானும் கொஞ்சம் மழையாடினேன்.... நாடுவிட்டு வந்து முதல் மழை தரிசனம்... ஆசை தீரும்வரை ஆடிவிட்டு...அறைக்கு சென்றேன். அடுத்த நாள் அவள் ஆடியாட்டம் கண்டு...ஆடிபோனேன்...௨௫ பேருக்குமேல் இறந்திருக்கக்கூடும் என்ற அச்சம்.நிறைய பொருள் சேதம் ,சில ஹஜ் பயணிகளும் பாதிக்க பட்டனர்.
இதோ...
சேதத்தில் இதுஒரு சிறு பகுதிதான்...


Friday, November 20, 2009

கவிக்கூந்தல்...உன்னை மட்டும் எப்படி இதனை அழகாய்;
கவிதையாய் எழுதி இருக்கிறான் பிரம்மன்;
கார் குழல் துவங்கி கணுக்கால் வரைக்கும்
எத்தனை அழகாய் இழைதிருகிறான்;

கவிவரியாய் கூந்தல்;
கவி படிக்கவந்த காதலனாய்
காற்றையும் காதல் படிக்கவைத்து விட்டாயே!!
அங்கே பார் அலையோடு காதல் கொண்டு கரையெல்லாம்
நுரையெல்லாம் கவிதை வடிக்கிறான்; -உன்
கூந்தல் வாரிய சீப்புகளெல்லாம் -நீ
சிக்கெடுக்கும் சிணுங்களில்
சிகரம் ஏறிய வீரனாய் செத்து பிழைகின்றன; -உன்
சிகையில் கொஞ்சம் சிறை பிடித்து
முடி சூடி கொள்கின்றன;-உன்
கூந்தல் ஏறிய பூக்களும் கவிபாடுது; -இப்போதுதான்
நீ தலை(பூ)-புடன் கூடிய கவிதையாம்!!-உன்
ஈர கூந்தலுக்கு குதுகலத்தை பார்!!
உன்னை விட்டு கொள்ளாமல் ஒட்டி கொள்கிறது;-நீ
தலை உலர்த்தும் தருணங்களில் எங்கோ -புயல்
உருவாக்கி என் மனதில் நிலைகொள்கிறது;

அடிக்கடி முகம் பார்த்து விட்டு வரும் -உன்
முடியே இத்தனை கவி சொல்லுதே...!!!
நான் மட்டும் கவியானதில் உனக்கென்ன சந்தேகம்??
இந்த பிரம்மனுக்கு எத்தனை ஓரவஞ்சனை பாரேன் !!?
உன்னை கவிதையாய் எழுதிவிட்டு -என்னை
மைஉதறி கிறுக்கி பார்க்கும் வெத்து காகிதமாய் விட்டுவிட்டான்;
விதிக்கு அந்த கிறுக்கல் புரியவில்லையாம்
பாவம் புழம்புகிறது...

Tuesday, November 17, 2009

ஐயையோ வயறு வெடிச்சுருச்சு...


நான் 3 -ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமையம்...(அப்பவே இப்டியானு தோணும் ...)அப்போ எங்க ஸ்கூல்ல டூர்க்கு கூட்டிட்டு  போனாங்க அதுக்கு 30 ருபாய் குடுக்கணும். என்னோட நண்பர்கள் எல்லோரும்  போறாங்க  எனக்கும்   போகணும்னு ரெம்ப ஆசை அப்பாகிட்ட கேட்டா  சரி அம்மாகிட்ட  காசுவான்கிட்டு  போய்ட்டுவான்னு சொல்லிட்டார்.
ரெம்ப ஜாலியா அம்மாகிட்ட போய் கேட்டா அம்மா அதலாம் வேண்டாம்   சும்மா வீட்டுலையே இருன்னு சொல்லிட்டாங்க, அம்மாக்கு கொஞ்சம் பயம் ஏன்னா  போனவாரம்தான்  சைக்கிள்ல  இருந்து விழுந்து கைய ஒடச்சு வந்தேன் ... 


நானும் விடுற மாறி இல்ல அழுது அடம்புடிச்சு,குட்டி கரணம் அடுச்சு பாக்குறேன் ம்ம்ம்...ஹும்ம்ம்...ஒன்னும் வேலைக்கு ஆகல. ஸ்கூல் லுக்கு  போனா  பசங்கலாம்   கிண்டல் பண்றாங்க "என்னடா எப்படியாவது அடம்புடிச்சு பட்னியா   இருந்தாவது   வாங்கிட்டு வாடானு சொல்லரங்க. காசு கட்ட நாளைக்குத்தான் கடைசி நாள் இன்னைக்கு எப்டியாவது வாங்கிட்டுவா" நல்லா ஏத்தி விட்டுடாகே...விட்டுக்கு போனா ஒன்னும் நடக்கல அப்போ அம்மா பர்ஸ் கண்ணுக்கு முன்னாடி இருந்துச்சு எனக்குள்ள தூக்கிட்டு இருந்த ஒரு கிரிமினல் முழிசுகிட்டான். யாருக்கும் தெரியாம 30 ருபாய் மட்டும் சுட்டு ஸ்கூல் பேக்ல வச்சுட்டேன்...


என்னடா இது, எப்பவும் காலைல லேட்ட போவ இப்போ சிக்கரம போறன்னு அப்பவே அம்மாக்கு டவுட் வந்தாச்சு....ஸ்கூல்கு போய்  மிஸ் கிட்ட குடுத்தாச்சு... அப்போ கொஞ்சம் கூட பயம் இல்ல... பிரான்ஸ்   கிட்டவந்து  ஏ...பாத்துக்க நானும் டூருக்கு    வர்றேன்...டுர்க்கு  வர்றேன்...னு வடிவேல்  ஸ்டைல்   சொல்லியாச்சு... இன்னும் ரெண்டுநாள்ல டூர்.


சாயங்காலம் வீட்டுக்கு போனா அம்மா ரெடியா.. இருக்காங்க. எங்கட 30 ரூபா...?என்னது 30 ரூபாயா??அப்டினா??ஒழுங்க உன்னமைய சொல்லறியா இல்லையா...?"எந்த ரூபா மா எனக்கு எதுவும் தெரியாது..." அடுத்த விநாடி பொளேர்...பொளேர்...னு செம அடி. ம்ம்ம்ம்...ஹும்ம்...சத்தியமா எனக்கு தெரியதுமா...சொல்றிய (அத்தாக்கு)அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லவா? மா...  எனக்கு தெரியாது மா... இந்த ஏருமமாட அடிச்சு எனக்குத்தான் கை வலிக்குதுன்னு சொல்லிட்டு நேர அடுப்படிக்கு போய் ஒரு முட்டை எடுத்துட்டு வந்தாங்க...எனக்கு ஒன்னும் புரியல எதுக்கு...முட்டை...


இந்த முட்டைய ஓதி ஊதி வச்சா அது கொஞ்சநேரத்துல வெடிச்சுரும் அடுத்த வினாடி யாரு  காசு எடுதக்களோ அவங்க வயிறும்  வெடிச்சு குடல் எல்லாம் வெளியவந்துடும்...கடைசியா கேக்குறேன் உண்மைய சொல்லு...ஆஹா இப்படிலாம் இருக்கா...சொல்லவே இல்ல...அப்படியே என் வயிறு வெடிச்சு தெறிக்குது...(கற்பனைல... )பயத்தூல வைத்த புடிச்சுட்டு அம்மா சாரி மா...நான்தான் எடுத்து டூர் போறதுக்கு ஸ்கூல்ல குடுத்துட்டேன்...


ஐயையோ நான் ஏற்கனவே பாதி மந்தரம் ஒதிட்டேண்டா நீ நாளைக்கு எப்டியாச்சும் அந்த காச வாங்கிட்டு வந்துடு இல்லனா வயறு வேடிசுரும்டா... சொல்லிட்டு கூலா போய்ட்டாங்க. எனக்கு ராத்திரிபுல்லா தூக்கமே வரல வயறு வெடிசிட்டே  இருக்கு...காலைல மிஸ் கால கைய புடிச்சு காசு வாங்கி அம்மாகிட்ட குடுத்து.... மா.... இனிமேல் இப்டி செய்யமாட்டேன்மா...னு கெஞ்சி ... அழுது அன்னிக்கு ராத்திரிபுல்லா   முட்டையவே பாத்து தூங்காம இருந்தேன்...
அடுத்தநாள் அம்மா அதே முட்டைய அவிச்சு புளிசோறு கட்டி  30 ரூபா காசு குடுத்து அனுப்பி வச்சாங்க....                                                                              

Saturday, November 14, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(6)


நமக்கான அதே மாலை பொழுது என் விரல் உன்னை தொட்டதும் சிலிர்த்து விட்டு சினுங்கலாய் கேட்டாய்....தொட்டு கொள்ளமால் இருக்க முடியாதா உன்னால்?


அடி என்னவளே இயற்கையை மீறி எதுவும் பண்ணமுடியாது நம்மால்...
ஒ...அப்டினா...இது இயற்கையா!!??? பொய்...வனமும்,பூமயும் இயற்கைதானே...பிறகு என் அவைகள் தொட்டு கொள்வதில்லை?? அடி லூசு பெண்ணே நாமாவது பரவாஇல்லை அவர்களின் தொடக்கமே தொட்டு கொள்வதில்தான் ஆரம்பிக்கிறது,.காலை பொழுதின் கதிரவன் கரம் கொண்டு தொட்ட பின்தானே பூமி பெண்ணே கண்விழிகிறாள்...ஒ...அப்டியா!!!?...அப்றம்...மாலை கடற்கரையில் செவ்விதழ் குவித்து சிவப்பு முத்தம் பெற்ற பின் தானே அந்தி சாய்கிறாள் பூமி பெண் .
மழை எனும் மேன்தொடுகை கொண்டுதானே பூமி பெண்ணே பூப்படைகிறாள்...
இரவில் நிலவின் ஸ்பரிசம் தொட்டுதனே பூமி பெண்ணே துயில் கொள்கிறாள்.
தொட்டு கொள்ளாமல் காதல்,காமம்,இயற்கை எதுவுமே இல்ல புரிந்ததா???ம்ம்...அதற்க்கு என்ன சாட்சி என்றாய்...அடி மக்கு பெண்ணே அதற்குதான் நம்மை படைத்து இருக்கிறதே இயற்கை.பின் ஏதோ ரகசியம் சொல்வது போல் காதருகே வந்து தித்திக்கும் தீடிர் திருட்டு முத்தம் தந்து விடை பெற்றாய்…நானும் விடைபெறும் சமையம் வந்தது வாழ்க்கை என்னையும் அதான் வசத்துக்கு கொண்டுவந்த தருணங்கள்...வேலையின் நிமிர்த்தமாய் வெகுதூர பயணம்.உன் நினைவுகளை மட்டும் துணைக்கு கூட்டிக்கொண்டு பறந்து போனேன்.நம் பேச்சு செல் போன் உரையாடலாய் மாறி...பின் வந்த நாட்களில் ஸ்.எம்.ஸ்-சாய் சுருங்கி போனது.அடுத்தடுத்த நட்களில் உன் குறுஞ்சி பேச்சில் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது, எனக்கு புரியவில்லை...பின்னொரு நாளில் உன் அம்மாவிடம் பேசும்போது உன் திருமண தகவல் தந்து போனார்.உன்னை மட்டும் இல்லை உன் சொந்தங்களையும் நேசிப்பதால் என்னிடமும் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது.அதன் பின் நகர்ந்த அந்த நரக நாட்களை எழுதக்கூட விரும்ப வில்லை.உன்னோடு பேச துடித்த முயற்சிகளில் தோல்வி மட்டுமே கிடைத்தது எனக்கு.எனக்கும் அழைப்பு வந்தது உன் அண்ணனின் பேச்சு என்னால் மறுப்பு கூற முடிய வில்லை.நீ என்னவளாய் இருக்கபோகும் அந்த கடைசி நாட்களுக்காய் தயாரானேன்…ஊர்வந்து இறங்கிய பொது ஊரடங்கு உத்தரவிட்டு இருந்தது போல் எங்கு பார்த்தாலும் ஒரே வெறுமை. கவிதை இல்லாத வேற்று காகிதம் போல் உன் கோலம் இல்லாத வீட்டு முற்றம். இவ்வளவு நாள் சொர்க்கமாய் தெரிந்த உன் வீடு இன்று நரக வீடு, வரவேற்க்க காத்திருந்தது...நீ மட்டும் உன் மௌவ்னத்தின் ஒவ்வொரு வார்த்தையாய் மொழி பெயர்த்து பார்வையால் பகிர்ந்து கொண்டிருந்தாய் என்னிடம்... உன் கண்ணில் நீர் படலம் ஏதும் இல்லை இரவெல்லாம் அழுதிருக்கிறாய் , திர்திருக்கும் அதை வீட பெரிதாய் என்ன செய்து விட முடியும் அப்போது. ஓடிபோவதிலும், உயிர் விடுவதிலும் அப்படி ஒரு உடன்பாடு இருந்ததில்லை இருவருக்கும்.அன்று… உன் வீட்டு குளியல் அறையில் நானும் ஷவரும் அழுதே ஓய்ந்து போனோம்.எனக்காய் வைத்திருந்த பார்வை ஒவ்வொன்றாய் பரிசளித்த வண்ணம் நீ இருக்க, இவள் முகத்தில் கல்யாண கலை வந்து விட்டதாக யாரோ சொல்லி என்னை கடந்து போனார்கள். உன் அண்ணனின் நண்பன் என்பதால் என்னையும் உன் திருமண வேலைகளில் இணைத்து கொண்டேன்.இனிதே முடிந்தது உன் திருமணம். ஒரே புள்ளியில் இருந்து வெவேறு திசையில் பிருந்து போனோம்.சில நாட்கள் பேசிக்கொள்ள சில தருணங்கள் கிடைத்தது. பினொரு நாளில் தான் உதிர்த்தாய் உன்னிடம் மிச்சம் இருந்த அந்த வார்த்தையும்... உன்னோடு பேசும் பொது அவருக்கு துரோகம் செய்வதாய் உணர்கிறேன் என்றாய் அப்போதுதான் உணர்ந்தேன் நீ…. நினைவுகளை (என்னை) விட்டு வெகுதூரம் பொய்விட்டதை... நானும் உன் நினைவுகளை உன்னோடு சேரும்படி அனுப்பி வைத்தேன். உன்னை தேடி கிடைக்காமல் அவைகள் மீண்டும் என்னோடு வந்து சேர்ந்து விட்டன.இன்று குறை ஒன்றும் இல்லாமல் நானும் உன் நினைவுகளும் நலமாய் தான் இருக்கிறோம்...(உன் நினைவுகள்,நான் மற்றும் நமக்கான வானம்...) 
Related Posts with Thumbnails