Tuesday, June 29, 2010

மாக்கோலம் பூக்கோலம்...


வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம
வானமே உன்வாசல்வர
வசியம் போட்டு வரஞ்சுவச்ச
வரிசைக்கோலம் நெனவிருக்கா!!?
***
நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க  ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
 என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?.
***


பிறைநிலாவ பிச்சுவந்து
கிள்ளி கிள்ளி அத எடுத்து
வாசலிலே நீர்தெளிச்சு
நீ போட்ட வாழ்த்துகோலம் 
நெனவிருக்கா!!??
***
வீட்டு  முற்றத்தில்  குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.
***
மருதாணி அரைச்சு 
மல்லிகை  கையில்  கோலம் போட்டு
அழகா இருக்கானு அடுத்தநாளு கேக்கையில 
இருட்டுல  இலுவிவிட்ட இந்த கோலம் அழகுன்னு
கண்ணாடி காட்டி கண்ணடிச்சது நெனவிருக்கா!!?.
***

ஆத்தா கிட்ட அடிவாங்கி
'யப்பே...'ன்னு அழுகையில
கண்ணத்த கடந்துவந்து
கண்ணீர் போட்ட நீர் கோலம்
கடவாயில்  உப்பு கரிச்சது
கண்ணே  நெனவிருக்கா!!?.
***

கைவிரல் நடனமாட 
கைவளவி தாளம்போட
கலர்கலரா மாவெடுத்து 
கச்சிதமா கோலம்போட்டு  
கண்மூடி கனாகண்ட
காதலான எழுப்பிவிட்டு 
கதவோரம்  வந்துநின்னு  
கண்ணாடிக்க,
கொலுச பேசவிட்டு
கோபப்பட்ட நெனவிருக்கா!!?.
***
கார்த்திகை மாசத்து
தீபத்துல   திரியவச்சு
தெருவெல்லாம்
தினறவச்சு நீ போட்ட
தீக்கோலம் நெனவிருக்கா!!?.
***
 எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு  நீபோக - உன் 
தலையயேரிய   மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
***
வண்டியுருக்கு வாக்கப்பட்டு வண்டியிலே  நீபோக
வகைவகையா கோலம்பார்த்த என் வீட்டு வாசப்படி
வாழவெட்டியா வழியத்து கெடக்குமுன்னு
வஞ்சியே  நெனவிருக்கா!!?.
***















Friday, June 18, 2010

அல்கா அஜித்...


தமிழகமே  எதிர்பார்த்து இருந்த  பிரம்மாண்டமான ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியை இறுதியாய் வென்றது.அழகு குயில் அல்கா அஜித்.எனக்கு ரெம்ப  பிடித்த  போட்டியாளர். தேன் குரலுக்கு சொந்தகாரர்.அவருக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றிகள்.

அவரை பற்றி ஒரு சிறு தகவல்:
இவர் கேரளத்து ஓமணப்பெண் என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டரை வயதில் பாட ஆரம்பித்த அல்கா கோவில் விழாக்கள், சிறு மேடைக்கச்சேரிகளில்    பாடிவதிருக்கிறார். அவருடைய முதல் பெரிய மேடை தலைச்சேரியில் நடந்த கார்கில் நாயகர்களுக்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சி.இவர் மொத்தம் பதினோரு மொழிகளில் பாடுவார்.மில்லேன்னியும் வருடத்தின் சிறந்த குழந்தை பாடகர் (அப்போது மொத்த மேடை நிகழ்ச்சி 340 ) விருதை ஆந்திராவின் UNESCO Club இவருக்கு இவரின் ஆறு வயதில்   வழங்கி இருக்கிறது.
2004 ஆம் வருடம் ஹிந்து நாளிதழில் வந்த ஆர்டிகல் உங்களுக்காக இதோ...

Saturday, Apr 17, 2004
Small wonder :
When others are planning to have fun this summer, Alka is preparing for her concerts. Alka Ajith is in Standard II, of Holy Family English Medium School, Thalassery. She has not completed seven years. But she has sung more than 5,000 songs, can sing in 11 languages and has given more than 500 stage programmes all over India.


In February, this year, Alka performed for the Guinness Record of `Youngest Musician in Asia', at Muthalakkodam, Thodupuzha. The function was organised by Muthalakkodam Jaycees and World Wonders Web, which is an international miracle performers association.

Alka gave her first public performance when she was two and a half years old. She sang the Hindi super hit "Soldier ... ... Soldier... ". The programme was organised to remember Kargil heroes. When she was four she cut her first audio album, "I love my India". The album had eight patriotic songs. Besides this album, she also has audiocassettes to her credit. Recently she has sung songs in Chinese, French and Arabic. But she likes to sing Malayalam songs best.

Alka, daughter of M.P. Ajith Kumar and K. Sajitha, of Mandala Parambath, Kavumbhagam, Thalassery, comes from a family of musicians. Ajith Kumar is a professional musician and organist. He now runs Alka's Orchestra, `Sangeeth Sagar'. Ajith Kumar is not only Alka's inspiration but her guru too. "We are proud of Alka," says P. Chandran, Principal, Holy Family.


Alka entered the Limca Book of World Records in 2003. She has won many awards including Bharatheeya Gourav Puraskar, New Delhi in 2003, Sauparnika Theeram Mini Screen Award in 2004, Thalassery Drishya Kala's A. T. Ummer Award in 2004, International UNESCO Club of Repalle (A.P) award and Gold Medal in 2001 and the Rotary International achievement award and gold medal in 2002.

Most of Alka's concerts are held during holidays and the vacation. Her father composes all her songs. Her next project is an album on pop songs and performances in the Gulf countries and the U.S..
நன்றி: தி ஹிந்து

இவர் சாதனைக்கு நெஞ்சார்ந்த  பாராட்டுகள்.....


இப்படிப் பட்ட இளம் இசைகுயில்களை அடையாளம் கண்டு  ஊக்குவித்து  உலகுக்கு அறிமுகம் செய்யும் விஜய் டி.வி க்கு பாராட்டுகள். தொடரட்டும்  அதன் சேவை. பாலைவனத்தின் பாவமண்ணில் இருந்தாலும் அடிக்கடி பால் வார்ப்பது இதுபோல் சிறு சிறு சந்தோஷங்கள்.அல்காவின் ஒரு அழகான பாடல்  இங்கே...


பரிசு வாங்கிய அந்தத்  தருணம்...




இந்த  மகிழ்ச்சியில் என்னோடு பகிர்ந்து கொண்ட அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்...நன்றிகள்...நன்றிகள்...




 

Monday, June 14, 2010

அன்பு மகன் தமிழுக்கு அப்பா எழுதுவது...(ஒரு பக்க கதை)


என் பெயர் தமிழ் வாணன்.அப்பாதான் ஆசையா வச்சாராம் அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரே இல்ல...சமீபத்தில்  காலமாயிட்டார்.  அவரு சும்மா போகல எனக்கும் உங்களுக்கும் ஒரு பாடம் சொல்லீட்டு போய்ட்டார்....


அது மரண ஓலம் அடங்கி இருந்த   வீடு...கிராமம் என்பதால் நிறைய சொந்தங்களும் அறிந்தவரும் அறியாதவரும் கூட வந்து எனக்கு ஆறுதல்கூறி  சென்றார்கள்.என் மனைவிக்கு, நெருங்கிய சொந்தங்களைகூட தெரியவில்லை,அடிக்கடி வந்து இவர் யார் அவர் யார் என்று கேட்டுகொண்டே இருக்கிறாள்.அவளுக்கு மாமனார் இறந்ததை விட இது பெரிய கவலை.பிள்ளைகள் இருவரும் ஒரு மூளையில்; தாத்தா இறந்து விட்டார் என்பதை தவிர அங்கு நடப்பதையும் அங்கு வருபவர்களையும் புதுசா பார்த்து தங்களுக்குள் ஏதோ   பேசிக்கொள்கிறார்கள்.


பிள்ளைகளுக்கு இது கோடை விடுமுறை என்பதால்  ஆகவேண்டிய   காரியங்களை  இருந்து  ஆற அமர செய்யறேன் நான்.மனசுக்கு அது ஒரு ஆறுதல்.என் மனைவிக்கு அதுவே ஒரு பெரிய கவலை மனுஷன் இங்கே டேரா போட்டுருவாரோனு. தூரத்தில்  ஒரு ''பெருசு'' பேசுவது காதில் விழுந்தது.''ஒத்த ஆம்பலபுள்ளைய பெத்துட்டு பெருசு இவ்ளோ காலமா தனி கட்டையவே இருந்து, போயும் சேந்துருச்சு''.....''நல்ல மனுஷன் பா கடைசி காலத்துல பேரன் பேத்திகளோடு இருக்க ஆசை பட்டுச்சு பாவம் அதுக்கு தான் குடுத்து வைக்கல''.எனக்கு மனசுல ஏதோ  சுருக்குனு  குத்துன மாதிரி இருந்துச்சு.!!


 மனைவி அவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள். வீட்டில் இருந்த பழைய பொருளையெல்லாம் எடுத்து வீசிவிட்டு சுத்தம் செய்ய ஆயத்தமானாள்.அவளோடு நானும். அப்போதுதான் அது கண்ணில் பட்டது.அப்பாவின்   அலமாரியிலிருந்து  ஒரு  சிறிய பார்செல் அதில் அன்பு மகனுக்கு என்று  அவர்கைபட எழுதி  இருந்தது. உள்ளே இருப்பது ஒரு டைரி அல்லது எதாவது முக்கிய ஆவணம்  இருக்க வேண்டும் என்று அவள் சொன்னாள். மற்ற வேலைகளை அப்படியே போட்டு விட்டு அதை இருவரும் ஆர்வமாய் பிரித்தோம்.ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அப்போது எங்களுக்கு தெரியாது.


ஆம் அவள் உகித்ததுபோல அது ஒரு டைரிதான்.ஆனால் அப்பாவுக்கு டைரி எழுத்தும் பழக்கம் இல்லை அப்போ இது எதற்கு?! என்று இன்னும் ஆர்வம் அதிகமானது.முதல் இரண்டு பக்கங்களை புரட்டியதும் சில 500 ரூபாய் நோட்டுகள்.அடுத்தடுத்து  சில பக்கங்கள் விட்டு வரிசையாக 500 ,100  ,50  ரூபாய் நோட்டுகள்.அனைத்தையும் எடுத்து சேர்த்து கொண்டிருந்தாள் அவள்.கடைசி பக்கத்தில் ஏதோ எழுத பட்டிருந்தது.அதை நீங்களே படிங்க என்று அவள் சொன்னாள்.நான் படிக்க ஆரம்பித்தேன் அதில்...


அன்பு மகன் தமிழுக்கு அப்பா எழுதுவது.
நான் நலம் நீ,உன் மனைவி,பிள்ளைகள் நலமா?? 
போன முறை நீ என்னை பார்க்க வந்த பொது நடந்தது உனக்கு நினைவில் இருக்கா தெரிய வில்லை.நீ உன்னோடு வர கட்டாய படுத்தியும் நான் வரமறுதேன்.எனக்கு உங்களோடு இருக்க ஆசைதான் அனால் அந்த நகரத்து சூழ்நிலை எனக்கு ஒத்துவரவில்லை என்பது நீ அறிந்ததே. நான் உன்னிடம் வருடா  வருடம் விடுமுறைக்கு மட்டும்  தவறாமல்  பிள்ளைகளோடு வரச்சொன்னேன்.நீ அதற்க்கு சில  காரணங்கள் சொன்னாய் உனக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்...எனக்கு அது மனசில் ஓடியது...


''இல்லபா! அது ரெம்ப கஷ்ட்டம் பா... பிள்ளைகளுக்கு மட்டும் தான் விடுமுறை எனக்கும் அவளுக்கும் ஆபீசில் லீவு வாங்குவது ரெம்ப கஷ்ட்டம் பா.அப்படி லீவு  கொடுத்தாலும் சம்பளத்தில் பிடித்து கொள்வார்கள்.பிள்ளைகளுக்கு ஸ்கூலையே சாம்மர் கிளாஸ் அது இதுன்னு ஆரம்பத்திலேயே காச கறந்துடுறாங்க. அதுவும் நஷ்ட்டம் தானே பா.இது இல்லாம இங்க வர ரயில் செலவு அந்த செலவு இந்த செலவுன்னு பத்து, பதினஞ்ஜாயிரம் வீனா போகுது.அலைச்சல் வேற.சென்னைக்கு போனதும் காயிச்சல் தலைவலின்னு அது ஒரு செலவு.எவ்வளவுதான் பா நானும் சமாளிக்குறது.முடிஞ்சா அங்க வந்து எங்க கூட இருங்க இல்லனா நான் மட்டும் அப்பப்ப வந்து பாத்துக்குறேன்.அவ்ளோதான் என்னால பண்ணா முடியும்.அப்பா வாயடைத்து போனார்.மீண்டும் கடிதம் தொடர்தேன்...


அதனால் தான் நீ இவ்வளவு நாள் அனுப்பிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமா  சேர்த்து,மற்றும் நம்ம தோட்டத்துல வந்த காய்கறில வந்த பணம் சேர்த்து. இதில் பதினஞ்ஜாயிரம் இருக்கு. நீங்கள்  என்னை பார்க்க வர கொடுக்கும் விலைக்கு  இது சரியா  இருக்கும்னு நெனைக்குறேன்.இந்த ஒருதடவை மட்டும் எப்படியாவது நீங்கள் அனைவரும் ஊருக்கு வரவும்.
இப்படிக்கு,
அன்பு அப்பா.


என்னை ஓங்கி யாரோ அரைந்தது போல் உணர்ந்தேன்.
நான் ஹாஸ்டலில் படிக்கும்போது ஒருவாரம் கூட பார்க்க வராமல் இருந்ததில்லை. அவரின் ஆத்மாவை   இத்தனை காலம் தவிக்கவிட்டு நான் வாழ்வில் என்ன சாதித்தேன்???என்னை அறியாமலே அழுதேன். வெகுநேரமாய் பிள்ளைகள் என்னையே கவனித்து கொண்டிருந்தார்கள்.







Friday, June 11, 2010

கண்டம் கடந்த புயல்...



தெற்கிலிருந்து ஒரு சூறாவளி மேற்கு நோக்கி...
ஆரம்பமானது இசை புயலின் சுறாவளி பயணம்...
கரை கடந்த புயல் இப்போது கண்டங்கள்  கடந்தும்...
நாளை பிரபஞ்சமும் கடக்கலாம்...ஜெய் ஹோ..









Tuesday, June 8, 2010

உன் பார்வை சரி இல்லை கனி...


இந்த அழகுராணி பட உபயம் தமிழ்த்  தோட்டம் (முக புத்தக அக்கா).

போனவாரம் என் அறையில் நடந்த சூடான ஆரோக்கியமான விவாதம்.என் சக நண்பருக்கும் எனக்கும் நடந்தது.அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.(தேவையா உனக்கு??)

அவர் வடஇந்தியர். டி.வியில் ஏதோ ஒரு சேனலில் கல்லூரி  பெண்களின் பல்சுவை நிகழ்ச்சி வந்துகொண்டிருந்தது.அதை பார்த்து கொண்டிருக்கும் போதே என்னை அழைத்தார். ''கனி பார்த்தாயா  இந்த காலத்து பெண்களின் ஆடை நாகரீகம் எவ்வளவு  மோசமாகிவிட்டது'' என்று. வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்.நான் பொதுவாக இதுபோன்ற விவாதங்களில் தலை ஏன்??வாலை  கூட நுழைப்பது இல்லை. (அடிச்சுருவாங்களோனு பயம்)நானும் ஆமாம் போட்டு விட்டு வழக்கம் போல் பதிவுகள் படிக்க அமர்ந்து விட்டேன். 


அடுத்த சில தினங்களில் என்னிடம் வந்து. அவர் குடும்பம், கோடை சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் மெயிலில் வந்திருக்கு என்று என்னையும் பார்க்க அழைத்தார். பார்த்து  கொண்டிருக்கும் பொது அவரின் 12   வயது மகள் அணிந்திருந்த உடையை காண்பித்து இது நான் விடுமுறை முடிந்து வரும்போது அவளுக்கு ஆசையாய் வாங்கித்தந்தது விலை  2000௦௦௦ ௦ரூபாய் என்றார்.(பெரிய ஆளுதான்பா !!)நான் கிண்டலாய் சொன்னேன் என்ன?ஜி நம்ம ஒரு 500  ரூபாய்க்கு துணி எடுத்தா ரெண்டு செட் தச்சுருவோம்.இந்த உடையில் துணி கம்மி இத போய்   2000ரூபாய்க்கு வாங்கி இருக்கீங்களே ஜி என்றேன்.
(மகனே உனக்கு நாக்குல  சனி  டா)

கடுப்பானவர் '' என்ன? கனி எந்த உலகத்தில் இருக்க  ?!! (அவனா ?? கனவுலகத்துல)இப்போ இதுதான் பேசன் என்றார்.ஒ அப்போ இதே பேசன்தானே அந்த கல்லூரி பெண்களுக்கும் என்றதும்(பார்ரா பாய்ண்டா  புடிக்குறாராம்)   . அவர் அவர்கள் பெரிய(வயதுவந்த) பெண்கள்,குழந்தைகளுக்கு இப்போது போட்டு அழகு பார்க்காமல் பிறகு எப்போது பார்ப்பதாம் (அதானே) என்றார்.ம்ம் ம்ம் இப்படித்தான் நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து விட்டு வளர்ந்ததும்  அவர்களின்  உடை சரி இல்லை, நடை சரியில்லை  என்பீர்கள் என்றேன். கொஞ்சநாளுக்குதானே பின் அவர்களை நம்வழிக்கு கொண்டு வந்து விடுவோம் (நாங்கலாம் யாரு)என்றார்.

அப்படி உங்கள் விருப்பத்திற்கு ஆட்டிவைதால் அவர்களுக்கு மனஉளைச்சல் வரும்தானே.''போன வருடம் இவர்களேதான் இதே போல் உடை வாங்கி கொடுத்தார்கள்!! இப்போது நாம் அதையே விரும்பினால் வேண்டாம் என்கிறார்களே'' என்றும் இனி நின்னா குத்தம்! உக்காந்தா குத்தம் சொல்லிட்டே இருப்பாங்க இதேல்லாம் காதில்   வாங்கவேண்டாம் என்று நினைக்க வாய்பிருக்கு இல்லையா?.(அட) உன் பார்வை சரி இல்லை கனி (அவ்வவ் ஆமாவா??)  நல்ல  குடும்ப  பிள்ளைகள் அப்படி நினைக்க மாட்டார்கள் நாம் சொல்வதை உடனே கேட்டுக்கொள்வார்கள் என்றார்.ஆஹா ரூட்டு மாறுதே கைபுள்ளே அடங்கு என்று நான் அமைதியானேன்.(கொஞ்சம் விட்டா கும்மி அடிச்சுருவாங்க).

பிறகு அதை பற்றி கொஞ்சம் யோசித்தேன்...அட நம்புங்க மக்கா...(நம்பிட்டோம்)
சில திருமணவிழாக்களில் பிள்ளைகள் படும் பாட்டை பார்த்திருக்கிறேன்.அவர்கள் போட்டிருக்கும் ஆடைகளால் சுதந்திரமாய் ஓடிஆடக் கூட முடியாமல்  தவிப்பதை. ஒன்று  நீளமான ஆடையாக இருக்கும்  தரையில் தேய்த்து அழுக்கானால் அடி!!(அப்றம் என்ன கொஞ்சுவாங்களா??)என்று அதை தூக்கி பிடித்து கொண்டு அலைவார்கள். அடுத்து காற்று புக முடியாத இறுக்கமான ஆடைகள் அதை அடிக்கடி இழுத்துவிட்டு  கொண்டு திரிவார்கள்.அடுத்து ரெண்டுக்கும் நடுவில் நவநாகரீக(!!!!) ஆடை. சில குடீஸ்களுக்கு அவர்களின் பிஞ்சு உதட்டில்  லிப்ஸ்டிக்  அப்பிவிட்டு நாள் முழுதும் உதடு (ஒட்டாமல்)குவித்தவன்ணமாய்  இருப்பார்கள் பேசக்கூட  தவிப்பார்கள்(பேசுறதா முக்கியம்). அப்படி குழந்தைகளை பார்த்தால் நானே துடைத்துவிட்டு சில அக்காக்களிடம்  திட்டும் வாங்கியதுண்டு.(பின்ன எவ்ளோ கஷ்ட்டபட்டு மேகப் பண்ணிருப்பாங்க) பையன்களையும் விட்டு வைத்தோமா!!   ஐந்து வயது வாண்டுக்கு கோட்டு,சூட்டு,கூலர்ஸ்(டேய் உன் போட்டோவ கொஞ்சம் பாரு) சகலமும் போட்டு இறக்கை துண்டித்த குஞ்சுகளாய் பொம்மை போல் வளம் வருவதையும் பார்த்து இருக்கிறேன்(ஐயோ இங்கேயுமா!!).எனக்கு என்னவோ இது சாதரணமான விவாதமாய் தெரியவில்லை மக்கா விழித்து கொள்வோம்.(அப்போ நாங்க தூங்கிட்டா  இருந்தோம்)

(வந்துட்டாயா புத்தி சொல்ல....!!!)ஐயோ!! இது என்ன நம்ம கனவுல இது புது தினுசா இருக்கே !!!இப்டிலாமா கனவு வரும்??(டேய்...டேய்..டேய்...) ஆமா இப்போ நான் என்ன எழுதவந்தேன்.என்ன எழுதுனேன் ஒண்ணுமே புரியல...மக்கா உங்களுக்கு எதாச்சும் புரிஞ்சதா?? பின்னூட்டத்தில் சொல்லுங்க (ஓட்டு கேக்கல??)நான் என்ன உளறி வச்சுருகேன்னு நானும் தெரிஞ்சுகிறேன். (பார்ரா....)இந்த இத்து போனவே வேற நாட்டுக்கு நாலு நல்லது சொல்ல விடுறானா... நான் வாறேன்...(ப்ளீஸ்....)









Sunday, June 6, 2010

இது காதல் கடிதம் அல்ல...10(தொடர்க(வி)தை)


தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் க(வி)தைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின் எல்லா பாகமும் இங்கே..

ஆரம்பமானது அவள் நினைவுகளின் அழிச்சாட்டியம்...
நிஜங்களை தொலைத்து விட்ட-என்
நிசப்த்த இரவுக்குள்;
முத்த சத்தத்தோடு முதலாய் வந்துவிடுகிறது
அவளின் அசூர நினைவுகள்.


கவலைகளை கையமர்த்திவிட்டு;
இதயத்தின் அருகே அழுத்தமாய் அமர்ந்து கொண்டு;
இதயஅறுவை சிகிச்சை ஒன்றுக்கு ஆயத்தமாகிறது.


அறுத்த இருதயத்தின் பேருத்த குருதியை குடித்து விட்டு
அசைவமாகிறது அவளின் சைவநினைவுகள்.

ரத்தம் தீர்த்ததும் சத்தம் போடாமல்;
நாடுகளை பிரிக்கும் கோடுகளாய்;
நான்கு அறை இதயத்தை நூறு;கூறு போட்டு
விலாஎழும்புகளை எரித்து  விளக்கேற்றி -அதில்
உயிர் உருக்கி ஒவ்வொரு துண்டுகளிலும்
ஊற்றி துடிக்கவிட்டு தொலைந்து போனது.


நூறு இதயத்தின் பேரு துடிதுடிப்பின்  அதிர்வில்
நொறுங்கி விடும்போல் இருக்கு நெஞ்சாங்கூடு.

இதயங்கள் இடம்மாறிமாறி  துடிக்கும்
இம்சையில்; வந்த தூக்கம் வாசலிலே
உறங்கிவிட்டு திரும்புகிறது தினமும்.

எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ
இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.

இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக்  காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்.

எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??

சரிதான் கணக்கு சரிதான்!!
நூறு இதயத்தை ஒவ்வொன்றாய்தானே
உயிர்வாங்க வேண்டும்..!!!


கூடாது! உன் இளமை இருளிலேயே
இருந்துவிடக்கூடாது!!!
கூடாது! நூறாவது இதயமும்
இறந்துவிடக்கூடாது!!-அதற்குமுன்;
''ஓடு அவள் இருக்கும் திசை நோக்கி! ஓடு''
மார்பை கிழித்தாவது -உன்
இதயத்துடிப்புகளின் இரைச்சலை அவளின்
இரவுகளில் பதிந்துவிட்டு வா''
சொன்னது காதல் சுலபமாய்.
இருந்தாலும் விரைந்தேன்
அவளின் விலாசம் தேடி..(தொடரும்)






Friday, June 4, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள்...(தொடர் பதிவு)


முதலில் இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த ஹரீஷ்க்கு நன்றி...இந்த பதிவை எழுத ரெம்ப யோசிக்க வேண்டியதாபோச்சு.அதனால் தான் ரெம்ப தாமதமா இந்த பதிவு.காரணம் அதிகம், படம் பார்ப்பது இல்லை விமர்சிக்கவும் தெரியாது ஏதோ என் நியாபகத்தில் இருக்கும் எனக்கு பிடித்த (உங்களுக்கு..??)படங்கள் இதோ...

1 )ஜுராசிக் பார்க்
பிடித்த படம் என்பதைவிட வியந்த முதல் படம் என்று சொல்லலாம்.அதுவரை கற்பனைகூட செய்து பார்த்திராத ஒரு பெரிய விலங்கை நேரே பார்த்து விட்ட ஒரு முதல் பிரம்மிப்பை தந்த படம் என்று சொல்லலாம்.அந்த அருவி காட்சி இன்னும் கண்ணு முன்னாடி இருக்கு.சில காட்சிகளுக்கு அம்மாவின்  இருட்டு மடி தேடி குருட்டு பயம் புதைத்த முதல் அனுபவமும் தந்த படம்.டினோசர் படம் போட்ட ஸ்கூல் பேக் வாங்கித்தர சொல்லி  உண்ணா விரதம்லாம் இருந்ததுண்டு.அந்த நியாபகம் தான் வரும்.

2)அஞ்சலி:
1990 அந்த காலகட்டத்தில் அப்போ எனக்கு ரெம்ப பிடிச்ச படம்.ரேவதி ஷாம்லி ரெண்டுபேரோட உணர்வுகள், வாண்டுகளின் அட்டகாசம்.மணிரத்னம் சாரின் விதயாசமான இயக்கம், வசனங்கள் பாடல் எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது.படத்துல ஒரு காட்சி வரும் ஷாம்லி அம்மா ரேவதிய கண்ணு,மூக்கு,வாய் எல்லாம் தொட்டு பார்த்துத்து கடைசியா  அரஞ்சுட்டு  சிரிப்பா.  அந்த காட்சிய  மனசுல வச்சுகிட்டு அடுத்தநாள் ஸ்கூலுக்கு போய் நண்பர்கள ஒவ்வொருத்தனா கூப்பிட்டு கண்ணு,மூக்கு,வாய் ஒவ்வொன்ன தொட்டு பார்த்துட்டு அடுத்து (அதேதான்)  ஒரு அரைய  விட்டு ஓடியே போய்டுவேன்.அது எனக்கும்   நடந்தது வேற விஷயம்.

3)புதிய மன்னர்கள்:
இந்த படம் எத்தனை பேர் பாத்திங்கனு தெரியல.இளைய சமுதாயத்தால எதுவும் பண்ண முடியும் என்பதை சொல்ற படம்.விக்ரம்,மோகினி,தாமு,விவேக் இன்னும் நிறைய பேர் நடிச்சுருபாங்க.கலாட்டாவான கல்லூரில ஆரம்பிச்சு மாணவர்களின் மோசமான முடிவுகளின் விளைவுகளை சொல்லி, கடைசியா சரியான பாதைய காட்டும் படம். இசை ஏ.ஆர்.ரகுமான்.

4)மைகேல் மதன காமராஜன் :
இன்றும் டி.வி.ல இந்த படம் வந்தா முழுதாய் இருந்து பார்த்து விடுவேன்.ஒவ்வொரு காட்சியும் சிரிச்சு ரசிச்சு படம் எப்போ தொடங்குச்சு எப்போ முடிஞ்சுசுனே தெரியாது.(படம் பாக்காம தூங்கிட்டா  அப்டிதான் இருக்கும்).
ஒவ்வொரு  கட்சியும் திரும்ப திரும்ப பார்த்தாலும் அலுக்காது.அந்த பீம்பாய்..பீம்பாய் வசனம் அப்போ ரெம்ப பிடிச்ச வசனம்.

5)மகாநதி:
நான் உணர்ச்சிவசப்பட்ட முதல் படம்னு நினைக்குறேன்.ஆரம்பமே பாரதியார் கவிதையோட படம் ரெம்ப மகிழ்ச்சியா ஆரம்பிக்கும்.போக போக ஒவ்வொரு காட்சியும் மனச துளைச்சு உள்ளபோய் ஆழமா அழுத்தி ஒட்டிக்கும்.ஒரு ரெண்டு நாளைக்கு அந்த தாக்கம் போகாது.அந்த பொண்ணு தூக்கத்துல பேசும்போது ஒரு தகப்பனோட மனவேதனை,கோபம்  எல்லாமே பதிவு பண்ணிய எதார்த்தங்களை மீறாத படம்.

6)பம்பாய்:
ஒரு அழகான காதல்ல ஆரம்பிச்சு மனிதத்தை ஒன்னு சேர்க்கும் படம்.ஏ.ஆர்.ரகுமான் இசை எனக்கு அந்த படத்துல இருந்து ரெம்ப பிடிக்க ஆரம்பிச்சது.அதுல இருந்து ரஹ்மானோட எந்த படம் வந்தாலும் படத்தின் பாடல்கள் எங்க தெருவில் முதலில் எங்க வீட்டில்தான் கேக்கும்.அத்தா (அப்பா) கிட்ட அடம்பிடிச்சு கேசெட் வாங்கிட்டுவர சொல்லுவேன்.ஒரு கட்டத்துல அவருக்கும் பிடிச்சுபோய் தீவிர இளையராஜா ரசிகனா  இருந்தவர் ரகுமானுக்கும் ரசிகனா  மாறிட்டாரு.படத்துல அந்த இறுதி கட்சி அமைத்த விதமும் பின்னணி இசையும் மனதை ஏதோ செஞ்சுடும்.

7)உயிரே...:
முதல் முறையா அண்ணாசாலை தேவி தேட்டரில் டிக்கெட் புக் பண்ணி பார்த்த முதல் படம். டப்பிங் படம் என்பதலையோ என்னவோ கதை நிறைய பேருக்கு பிடிக்காம (புரியாம )போச்சு.தீவிரவாதம் எவ்வளோ கொடுமையானதுன்னு சொல்ல ஒரு காதலே அழிஞ்சு போய்டும். எனக்கு பிடிச்ச கதை. இசை, ஐயோ!!! இப்பவும் அந்த படத்தின் பாடல்கள் எங்க கேட்டாலும் அப்டியே நின்று விடுவேன்.முதல் முறையா சி.டி. ல கேட்ட பாடல்கள்.ஒவ்வொரு பாட்டின் வரிகளும் வைரமுத்து சார் ரசிச்சு எழுதி இருப்பாரு.எல்லா பாட்டையும் மனப்பாடம் பண்ணி பாடிட்டே இருப்பேன்.என் அக்கா கிண்டல் பண்ணுவாங்க ''ஏண்டா புஸ்தகத்துல இருக்குற பாடம் மனப்பாடம் பண்ண சொன்னா உனக்கு வலிக்கும் பாட்டு மட்டும் ஒருவரி விடாம பாடுவ'' னு.  வைரமுத்து சார் பாடல்களை அப்போ இருந்துதான் சுவாசிக்க ஆரம்பிச்சேன்.யாரவது பாட்டு வரிகளை தப்பா பாடுனா எனக்கு கெட்ட கோபம் வரும்.தெரிஞ்சா பாடு இல்லனா பாடதனு சொல்லுவேன்.

8)காதல்:
இந்த படம் பிடிக்க ஒரு முக்கிய காரணம் இருக்கு.இந்த படம் வர்றதுக்கு ஒரு வருடம் முன்னால இதே கதை என் நண்பன் வாழ்வில் நடந்துச்சு.அவன் மதுரைல இருந்து அடைக்கலம்  தேடிவந்தது சென்னைல என்கிட்டதான்.எனக்கு அப்போ விபரம் சரியா தெரியாது.நான் நேர எங்க அம்மா கிட்ட கூட்டிட்டு போய் விட்டுட்டேன்.  அப்பறம்  அவங்கள படத்துல வர்றமாதிரி பிரிச்சுடாங்க(அந்த பாவம் உன்னை சும்மா விடாது).ஆனால் அதுதான் சரியான முடிவுனு  அப்பறம் புரிய ஆரம்பிச்சது.அவன் கதைய அப்டியே பார்த்த படம்.(படத்த பத்தி ஒருவார்த்தை கூட சொல்லவே இல்லையே...)அட ஆமாம் உனக்கென இருப்பேன் பாட்டு ரெம்ப பிடிக்கும்.போதுமா...?!!!.

9)பசங்க:
படம் பாக்கும்போது மறுபடியும் பள்ளி பருவத்துக்கு திரும்பி போன அனுபவம் கொடுத்த படம்.நம்ம பண்ணுன குறும்ப எல்லாம் மறுபடியும் பண்ணா சொல்லி ஆசைய தூண்டி விட்ட படம்.கடைசிகட்ட காட்சி கண்கலங்க வச்சுடுச்சு.என்னையே அறியாம கைதட்டிட்டேன்.மறக்க முடியாத படம்.''மழை இன்று வருமா'' பாடல் ரெம்ப பிடிக்கும்.

10 )அங்காடிதெரு:
இந்த பத்து தடவைக்கு மேல பார்த்துட்டேன்.இன்னும் பாத்துடே இருக்கேன்.ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்குற படம்.அத ஒரு ஜவுளி கடைல நடக்குற கதையா பார்க்க முடியால. எல்லா இடத்துலையும் ஏன் சொல்ல போன வெளிநாட்டுல வேலை செய்றவங்களுக்கும் இந்த கதை பொருந்தும்.கால் சென்டர் ஆளுக்கும் இது பொருந்தும்.எனக்கு அப்டித்தான் பார்க்க தோணுது.எதார்த்தங்களை மீறாத படம்.படம் முடியும் பொது உங்கள் பின்னுட்டம் போல ஒரு உற்ச்சாகம் கொடுக்குற படம்.''கருங்காலி'' தவிர எல்லா பாடல்களும் பிடிக்கும்.   
 உங்களுக்கு பிடிச்சிருக்கா??
 இதுவரை பொறுமையா படிச்ச அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றியோ...நன்றி.எனக்கு தெரிஞ்சு அனைவரும் எழுதிட்டாங்க.(அவ்ளோ நாளா நான் யோசிச்சுகிட்டே  இருந்திருக்கேன்...)தொடர விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.




Tuesday, June 1, 2010

பாரு பதிவு நூறு...


தலைப்ப பார்த்ததும் பயபுள்ளைக்கு   நூறு இடுக்கை போட்டதும் தலைகனம் வந்துருச்சுன்னு யாரும் தப்பா நினைக்காதிங்க இது என் எதிரி ஒருத்தனுக்காக வச்சது.இத படிக்கும் போதெல்லாம் அவன் மூக்கு முன்னூறு பீஸா  வெடிச்சு சிதறனும்.அவன் கதறி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேக்கணும்.உன்னை இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்னு என் கால பிடிச்சு கெஞ்சனும்...

நான் எந்த முயற்சி எடுத்தாலும் என்ன தடுக்காம இனி என் பாதைல அவன் வராம இருக்கணும். என்னோட விஷயத்துல இனி தலையிட கூடாது.என் பதிவுக்கு ஒட்டு  விழாம இருக்கும் பொது உனக்கு எழுத தெரியல இங்க இருந்து கெளம்புனு என்னை விரட்டாம இருக்கணும்.என் கவிதைகளை கிண்டல் பண்ணி என்னடா ரசனை இதுன்னு கடுப்பேத்த கூடாது.நான் மொக்கை பதிவு எழுதுனா வேணும்னே விழுந்து விழுந்து சிரிச்சு காயங்களோட கன்றாவியா வந்து முன்னால நிக்க  கூடாது. என் சகாக்கள் சகிக்களோட பதிவ படிக்கும் பொது சனியன் மாதிரி சவுடால் காட்ட  கூடாது.பின்னுட்டம் போடும்போது இவங்க உன் பதிவு பக்கமே வரலையேன்னு பாசாங்கு காட்டி பாசமில்லாம பேச கூடாது. புது பதிவர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணா உனக்கு இதெல்லாம் தேவையான்னு தேவை இல்லாம கேக்க கூடாது.தமிழ்மணம் என்னை தள்ளிவிட்ட போது தப்பு தாளம் போட்டானே அது கூடவே கூடாது.முக்கியமா என் பக்கத்துலையே அவன் வரகூடாது.இனிமேல் அவனோட ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் பதிலடி இருக்குனு அவன் புரிஞ்சுக்கணும்.அதுக்காகத்தான்.

இனிமேல் அவன் என்னை தொல்லை பண்ணா ஈரோடு கதிர் அண்ணே கம்முனு  இருக்க மாட்டாரு...
சுசிக்கா சும்மா இருக்க மாட்டாங்க....
ஸாதி(கா) அக்கா சாதரணமா இருக்க மாட்டாங்க...
அன்புடன் மலிக்கா அக்கா வம்புடன் வருவாங்க...
''என் மனதில் இருந்து''  பிரியா பிரிச்சு மேஞ்சுடுவாங்க.
ப்ரியமுடன் வசந்து வாங்கு வாங்குன்னு வாங்கிடுவான். தேனக்கா திட்டியே தீர்துடுவாங்க...
ஜலி அக்கா ஜக்கம்மா ஆய்டுவாங்க...
நிலாமதி அக்கா நிக்கவச்சு சுடுவாங்க...
பிரியாணி நாஸியா  உனக்கு அவங்க கையால பிரியாணி செஞ்சு பார்ஸல் அனுப்புவாங்க...
மித்திரன் சார் குத்தற சாரா ஆயிடுவாரு...
கமலேஷ் கடுப்பா ஆய்டுவாரு...
காமராஜ் அண்ணா உன்னை கடிச்சுருவாரு...
மங்குனி உனக்கு சங்கு ஊதிடுவாரு...
நிஜாம் அண்ணா நெருப்பா ஆயிடுவாரு...
சிறகுகள் சிவாஜி சீறும் சிங்கமா ஆயிடுவாரு...
ட்ரீமர் ஹரீஷ் சொல்லவே வேண்டாம் பேய் கதை  சொல்லியே உன்னை பீஸ்..பீஸா கிழிச்சுறுவாரு...
மச்சான் உன்னை உச்சா போக வச்சுடுவாரு...
பழனி சுரேஷ் அண்ணா சூப்பு வச்சு குடிச்சுருவாரு...  தமிளுதயம் ரமேஷ்ஜி  ரவ்டியோட வந்து ரணகளம் பண்ணிடுவாரு...
பல்லு டாக்டர் ரோகினி  உன் பல்ல உடச்சு  பல்லாங்குழி ஆடுவாங்க... பலா பட்டறை ஷங்கர்ஜி பதிவெல்லாம் ஒரே நாள் படிக்க வச்சு பழி வாங்குவாரு...
பாலாசி உன்னை பஸ்பம் ஆக்கிடுவாரு....
விழியும் செவியும் பிரபா உன்னை சிலோனுக்கு நாடு கடத்திடுவாரு...   

நல்லா பாத்துக்கடா எனக்கு இவ்ளோ சொந்தங்கள் இருக்கு இன்னும் லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்க அது மட்டும் இல்ல தமிளிஷ்,உலவு,திரட்டி,தமிழ் 10  ,தலைவன்... இப்படி பெரிய பெரிய பதிவ பாப்புலரா ஆக்குற பாசக்கார பங்காளிங்க இருக்காங்க...
டேய் என்னடா பேன்ட் ஈரமாகுது..!!! இதுக்கே நீ இடிஞ்சு போயிருப்ப பாவம் போழச்சுபோ...


ம்ம்ம்ம்...கேக்குது மக்களே அவன் யாருனுதானே கேக்குறீங்க..???அவன்தான்!!! பதிவு எழுத நினைக்கும் பொது இதெல்லாம் இது ஒரு பொளப்புன்னும்.வந்த புதுசுல என்னை ரெம்ப பயம் காட்டுன பய. என் சொந்தங்களின் பதிவ படிக்கும் பொது பேசாம தூங்குனு என்னுடைய எல்லா செயலுக்கும் முட்டு கட்டையா இருக்குறவன்.இருந்தாலும் அவன எனக்கு ரெம்ப பிடிக்கும்.அவன் கூட சண்டை போட்டு போட்டு தடைகளை ஒடச்சு முட்டி எழுந்துச்சு ஒவ்வொரு தடவையும் அவன் மூக்கை உடைக்கும் போதும் அவன எனக்கு ரெம்ப பிடிக்கும்.ஐ லவ் யு டா... நீ இல்லனா என்னால இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது. நீ ஒவ்வொரு தடவ தோற்கும்  போதும் நான் ஜெய்க்குறேன்.நன்றி டா..

சரி சரி வந்துட்டேன்...அவன்தான் எனக்குள்ள இருக்குற சிங்கத்த ஏ/சி போட்டு தூங்க வைக்குற என்ன சோம்பேறியா ஆக்குற என் இன்னொரு  மணசு.நான் அவன நல்லா மொக்கை பண்ணிட்டேன் மக்கா  நீங்க கேக்காலாம் சாதுவா இருக்குற உனக்குள்ள  எப்படி இவ்ளோ கோபம், தையிரியம் வந்துச்சு எப்படி சமாளிச்சனு. எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாக பின்னுட்டமும். என்னை எப்போ ஆன்லைன்ல பார்த்தாலும் பாசமா நலம் விசரிக்க்குறதும்.நீ தனி ஆள் இல நாங்க எப்பவும் உன் கூட இருக்கேன்னு சொல்றதும்,என்னை தம்பியாவும்,நண்பனாவும், அண்ணனாவும்,மாபிள்ளையாவும் பாசமா சொந்தம் கொண்டாடுற உங்களால் மட்டுமே இது சாத்தியம்.நன்றினு ஒரு வார்த்தைல சொல்ல விரும்பல...அன்பு...அன்பு...அன்புன்னு...என் மொத்த அன்பையும் பிராத்தனைகளையும்  உங்கள் அனைவருக்கும் கொடுக்கிறேன்...




Related Posts with Thumbnails