Wednesday, December 30, 2009

பலூன்கள் விற்பனைக்கு அல்ல...


தலைப்பு எழுதி கவிதைக்காக காத்திருந்தேன்...
வெகு நாள் திருவிழாகாக  காத்திருந்து தன் மொத்த சந்தோசத்தையும் ஒரு ரூபாய் பலூனில் ஊத்தி தீர்க்கும் விளையாட்டு பிள்ளை போல் மணம் கடந்த நாட்களை மட்டுமே அசைபோடுகிறது, கவிதை வந்த பாடில்லை.


 என் நினைவுகளை ஊதி   பெரிதாக்கி வலை பூவில் அலங்கரித்து சேர்த்து புது வருடம் வரவேற்க தோன்றியது.


எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே  அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.


நாம் வெகு நாட்கள் ஆசையாய் ஊதி வைத்த நியாபகங்கள் அழுகையாய் வெடித்து சிதறும் தருணங்களும், கால சுழற்சியில் மெதுவாய் காற்று போய் இருந்த சுவடே தெரியாமல்   துவண்டு போகும் தருணங்களும், ஹைட்ரஜன் அடைத்து உயரே பறக்கும் சந்தோஷ தருணகளும்  கல்லடி பட்டு கடற்கரை மணலில் வெடித்து விழும் வண்ணம் பூசிய தருணங்களும்  எப்படி ஒத்து போகிறது.


பெரிதாய் ஊதி வீட்டுக்குள்  விட்டாலும் காற்றாடியில்   பட்டு கிழிந்து போகும். வெளியே விட்டாலும் கல்லோ முள்ளோ கிழித்து விடும் என்று பயந்து .பாசம் எனும் நூலில் கட்டி பத்திரமாய் பாதுகாத்து பறக்க வேண்டிய  தூரம் வரை பாதுகாப்பாய் நம்மோடு பறந்து பாதியில் விட்டு போகும் பந்தங்கள்.


போதும் என்ற மனமில்லாமல் ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்ததும் வெடித்து அழுது ,கிழிந்த ஒவொரு துண்டிலும் சிறு சிறு முட்டை செய்து மகிழ்ச்சி கொள்ளும் அதே சிறு பிள்ளை மணம்.


இதய  வடிவ பலூனை இனியவளுக்கு கொடுத்து அதை அவள் இன்னும் பத்திர படுத்தி  வைத்திருக்கிறாள் என்றதும் அந்த பலூனை போலவே பெரிதாய் துடித்த  இதயத்தின் சுகமும்,அவள் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பலூன் ஊதி அலங்கரித்த மேடையும்.அவள் பிள்ளை ''மாமா ஊதி கொடு'' என்று நீட்டிய அந்த பலூனும்.


வந்து போகிரதேன் நினைவில்.நினைவுகள் கனமில்லாம இருந்தாலும் நிறைய ரணங்களோடு வெடித்து முட்டி வெளியேற துடித்து கொண்டிருகிறது.

பி.கு :
ஒரு தலைப்பை எழுதி  விட்டு அத பில்டப் பண்ண நான்பட்டபாடு...
எப்பா...முடியல சமீயோவ்வ்வ்...கடைசியா என்ன  சொல்றனு கேட்டா எல்லோரும் நிறைய பலூன் ஊதி கட்டி அலங்காரம் பண்ணி  புதுவருடத்தை கொண்டாடுங்கோ....தலைப்பில் பாதி வைரமுத்து ஐயா கொடுத்தது...பதிவுக்கும் பலூனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில்  சொல்லவும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.     




                               

Saturday, December 26, 2009

ஓமகசியா....ஓஓஓஓ....மகசியா....



ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க..... 



என்ன மக்கள்ஸ் ஒண்ணுமே புரியலையா....இது எல்லாம் நம்ம தமிழ் படங்கள்  பாட்டுல வந்த வார்த்தைகள்...இப்போ தமிழ்படம்-னு ஒரு படம் வரபோகுதுல...

அந்த படத்துல ஒரு பாட்டு ,இப்டி நமக்கு புரியாத வார்த்தைகள் மட்டும் எடுத்து முழு பாட்டும்  எழுதி  இருக்காங்க.... என்ன கொடுமை சரவணன் இதுனுதான் கேக்கதொணுது...தமிழ்ல வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போச்சோனு ஒரு சந்தேகம்.




நம்  தமிழுக்கு இப்டி ஒரு சோதனைய???பாட்ட பாடுறது ஒரு பெரிய பாடகர்...

மக்கள்ஸ்...கேட்டுட்டு உங்கள் கருத்த  (கதறுங்க)சொல்லுங்க.... படம் ரெம்ப வித்யாசமா இருக்குனு ஒரு விளம்பரம் வேறு  இதுதான் வித்யாசமா???
ஏதோ கொஞ்சம் எழுதுனாங்க போருதுகிட்டோம் இப்டி ஒரே அடியா போட்டா  தமிழ்   இனி மெல்ல சாகாது..._______________________

பொதுவா சினிமா பதிவு ஏதும் எழுதுறது  இல்ல...என்ன பண்றது என் ஆதங்கத்த உங்க கிட்டதான கொட்ட முடியும்...நான்வேற எங்க போவேன்....உங்க ஆதங்கத்தயும் கொட்டிட்டு போங்க...நாம எல்லாம் எவ்ளோ பாவம்....இல்ல...

இதுவும் பிடிக்கும்...

ஆறு மனமே...ஆறு...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

ஆறு மனமே...ஆறு...




என்னடா இவன் புதுவருஷம் வரபோகுது சோகமான தலைப்பு போட்டு இருக்கானேன்னு   பார்க்க வேண்டாம்...இன்னும் ஆறு  நாள் தான் இருக்கு அப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு (ஆமா யாருக்கும் தெரியாதத  சொல்லிடியாக்கும்...)


அனால் இந்த தலைப்பு உள்மனசின் சோகம் கூட சொல்றமாதிரி இல்ல???(ஆமா...ஆமா..)இந்த வருடம் முடிய இன்னும் ஆறு நாள் தான் இருக்கு அனால் இங்க அந்த அறிகுறியே தெரியல...நம்ம ஊர்ல இருந்தா இப்போ  இருந்தே ஆரமபிசுருபோம் நம்ம அழிசாடியத்தை.


அதெல்லாம் மிஸ் பண்றதால என் மறக்க முடியாத நியூ இயர் அனுபவம் சொல்ல ஆசை படுறேன்.(ஏன்டா படுத்துற சொல்லு...)
மூணு வருசத்துக்கு முன்னாடி நியூ இயர் டே...
வீட்டுல  எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் முடிவு ,பீச் நிறைவாட்டி போயாச்சு வேற  ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கணும்...அந்த பொறுப்பு எப்பவும் எனக்குத்தான்...நான் ரெம்ப  யோசிச்சு கண்டு புடிச்ச இடம்தான் கிண்டி சிறுவர் பூங்கா...(என்னவோ நீயே கண்டுபிடுச்சமாதிரி சொல்லற...மேட்டருக்கு  வா..)எனக்கு குழந்தைகளை ரசிக்க பிடிக்கும்(அது இல்ல உன் சொந்தகாரவங்க பாதி அங்கதான இருக்காங்க ) சோ என்னோட சாயிஸ் எப்பவுமே அதான்...


கூடவே மேல் வீட்டு அக்காவும் வர்றேன்னு சொன்னாங்க அவங்கதான் புஜ்ஜியோட அம்மா (புஜ்ஜி யாருன்னு தெரியணும்னா என்னோட இந்த பதிவ படிச்சு பாருங்க...)அம்மா,அக்கா,புஜ்ஜி குட்டி,  (நான் அவளை தூக்கி கொண்டேன்),அவங்க அம்மா,அவங்க முத்த பொண்ணு கோபிகா அவளுக்கு அப்போ 2 /12 வயசு. டீம் ஹெட் நான் எல்லோரும் கெளம்பிட்டோம்.


அங்க போய் எல்லோரு சேர்ந்து ஒரு சின்ன விளையாட்டு போட்டி நடத்துனோம்.அதுல எந்த சுவாரஸ்யமும் இல்ல.அங்க வந்த மூணு குட்டி பசங்க இல்ல புட்டி பசங்க!!! ஆம் அரை போதையில் மூவரும் நியூ இயர் விஷ் பன்றேன்ற பேர்ல பெண்களை  கிண்டல் பண்றதும் அவர்கள் அருகில் போய் ''ஹாய் மாமாக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு....''னு சொல்லி தொல்லை  குடுத்துட்டு இருந்தாங்க.இப்படி ஒரு பொது இடத்தில நகரீனம் இல்லாம நடந்த்துகிட்டது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. அதை எதிர்த்து  கேட்ட ஒருத்தருக்கும் அந்த பசங்களுக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு.எல்லோரும் அதையே வேடிக்கை பாத்துட்டு  இருந்தோம்.திடீர்னு புஜ்ஜி அம்மா கோபிகா எங்கனு கேட்க எல்லோரும் அக்கம் பக்கம் பார்க்க கோபிகாவை காணோம்....


அனைவரும் பதறி போய் ஆளுக்கொரு திசையாய் தெறித்து ஓடினோம்.புஜ்ஜி அம்மா அழுது கொண்டே தேடுறாங்க. நான் பூஜ்ஜிய தூக்கிட்டு தேடுறேன்.எந்த  ஒரு குட்டி பொண்ண பார்த்தாலும் அது கோபிகா மாதிரியே தெரிது.ரெம்ப நேரமா கிடைக்கவே இல்லை.அங்க இருந்தா எல்லோரிடமு விசாரிச்சு பாக்குறோம் ம்ம்கும்...


அங்க இருக்குற அலுவலகத்தில்  புகார் கொடுத்து அவங்களும் தேடுறாங்க.நான் ஒரு ரவுண்ட் அடிச்சு மீண்டும் நாங்க அமர்ந்த இடத்துக்கே திரும்பினேன்.யாரோ ஒரு ஆள் ஒரு குட்டி பொண்ணுக்கு  ஐஸ்க்ரீம் குடுக்குறான் அவ வாங்காம அழுதுட்டே இருக்கா.அது கோபியோனு சந்தேகத்துல கிட்ட போய் பார்த்தா அவளேதான்.கோபின்னு கூப்பிட்டதும் ஓடிவந்து  என் கால்களை கட்டி பிடிசுகிட்டா.  அப்பாடா... அப்போதான் உயிரே வந்துச்சு.''என்ன விட்டது  எங்க போன ...''மழலையில் கேட்க நான் அவளை கட்டி கொண்டேன்.அந்த ஆள் எங்கனு பார்த்தா அவன் மாயம்...நல்லவேளை இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

பின்  மற்றவர்களுக்காய்  காத்திருந்து யாரும் அங்கு வரவில்லை மீண்டும் அலுவலகம் போய் எல்லோரும்   ஒன்று சேர்ந்தோம். அப்போது அந்த ஆள் பற்றி யாரிடமும்  சொல்லவில்லை மேலும் பயந்து விடுவார்கள் அல்லவா?இன்னும் யாருக்கும் தெரியாது...

இப்படி அந்த வரும் பரபரப்பாய் வந்த  வருடம். இப்போ அந்த  நியபகங்களோடு இதோ எந்த ஆரவாரமும்  இல்லாமல் இன்னொரு வருடம் வரவேற்க தயாராய்...                                                                                 


Monday, December 21, 2009

புன்னகை திருடி...


பூக்களை திருடி புன்னகைக்க 
கற்று கொண்டவள் நீ.
இப்போது பூக்கள் கூட எனக்காய்
 புன்னகைப்பது  கிடையாது. 


சிரிக்க மறந்து விட்டேன்.
சில்லறைக்கு   கூட சிரிக்க மறுக்கிறேன். 
சிந்தனை சிறகு விரித்து
சிட்டு குருவியாய்
சிறகடித்து பறந்தவன் நான்.
நீ சிறிதாய் சிரிக்கும்போது கூட
சில்லென சிலிர்த்து
சிகரம் போய் வருபவன் நான்.


சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.


சின்ன சின்ன
சிறகுகள் விரித்து
சிட்டாய் பறக்கும்
பட்டாம் பூசியே 
அவளை பார்த்தால்  .
சிணுங்கள் சிரிப்பை
சிதறாமல் சேர்த்து வரச்சொல்.
சிரிக்க மறந்ததால் சீக்கிரம்
செத்து விடுவேன் போல் தெரிகிறது...                                                                                                          
இங்கே... இதையும் படிங்க...                                                    

ஒற்றை காலில்...



ஒற்றை காலில் ஓடி ஆடி
உலக வார்த்தை எல்லாம்
உமிழ்ந்து விட்டு
ஒன்றும் அறியாதவன் போல்
ஓரமாய் சரிந்து கிடக்கிறது - என்
ஒற்றை ரியால் பேனா.


ஒற்றை காலில்
உயரே நின்று
உலகுக்கு மனம் வீசி
உனக்காய் காதல் பேசி
ஆபத்தான அழகை
முள் குத்திக்காட்டும்
ஒற்றை ரோஜா...


ஒடிந்து வளைந்து நெளிந்து
ஒவ்வொரு இலையும்
உதிர்ந்த பின்னும்
ஒடித்த ஒவ்வொரு கிளையும்
ஊண்டி வைக்கும்போது  
தனித்தனி மரமாய் தளீர்  விடுகிறது
ஒற்றை முருங்கை மரம்...


இரண்டு கால்கள்
இரும்பாய் இருந்தும்
இயன்றதை கூட செய்யாமல்
இல்லத்தரசியை
இயங்கவிட்டு - இருந்த
இடத்திலே இன்பமாய்
இருபதுக்கு இருபது பார்த்து
இந்தியா தோற்றதும்
இவங்கேலாம் இந்தியர்களா??
இழிவாய் பேசும் இவன்.                                          





Friday, December 18, 2009

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...


ரயில் நிலையத்தின் சந்தோஷ சங்கீதம்.மூன்று தடவை மூன்று மொழிகளில் முழங்கி விட்டு, தென்னகத்து அதிவேக சூப்பர் ஸ்டார் வைகை எக்ஸ்ப்ரஸின் வருகையை உறுதி செய்து ஒலிபெருக்கி ஊமையானது. முன்பதிவு சீட்டை உற்று பார்த்து விட்டு ''எஸ் '' 10 கோச் தேடி ஜன்னல் ஓரமாய் கம்பி பிடித்து அந்த ஆனந்த பயணத்திற்கு தயார் ஆனேன்.

கையில் அந்த வார ஆனந்தவிகடன்.இசை பிரியன் என்பதால் பாட்டுகள் அடைத்த பாகெட் பாட்டு பெட்டியும் கூடவே.கொஞ்ச நேரம் விகடனை புரட்டி முழிக்கி போகிறேன்.தீடீரென ரயிலின் வேகம் அதிகரிக்க உள் மனதில் ஒரு பூரிப்பு. நம்ம வைகை என்னமா காற்றை கிழித்து புயலாய் போகிறான்!!மாலைக்குள் மதுரை வந்துவிடும் போலிருக்கே...

முடி கலைத்த காற்றை ஏளனமாய் பார்த்துவிட்டு ஜன்னல் வெறித்தால் காட்சிகள் ஏதும் கண்ணில் சிக்கவில்லை வெள்ளை நிறத்தில் .ஒரே வெறுமை, ரயிலில் போகும் உணர்வே அற்று போனது...
சற்று நேரத்தில் டி.டி.ஆர். உடையில் ஒரு வெண்தாடி வேந்தர்,அருகே வந்தமர்ந்து அடடா இன்று நீ மாட்டி கொண்டாயா...சரி சொல் உன் கடைசி ஆசை என்ன??? ஒன்றும் புரியாமல் யார் நீங்கள்?? எதற்கு அப்படி கேக்குறிங்க? வழக்கமா டிக்கெட் தானே கேட்பீங்க,இது என்ன? கடைசி ஆசை!! கேட்குறீங்க? நீ டிக்கெட் எடுத்து விட்டாய் என்று தெரியும்,தெரிந்துதானே உன் ஆசையை கேட்டேன் . என்ன? சொல்றீங்க!! எனக்கு ஒண்ணுமே புரியல!!!???நீ இறந்து விட்டாய் நாம் இப்போது தேவலோகம் செல்கிறோம்,இடையில் ஒரு சிறு பயணம் அதில் உனக்கு எதாவது ஆசை இருந்தால் நிறைவேற்ற முயற்சிப்பேன்.

ம்ம்ம்ம்...சரி சரி சொல் என்றார்.ஐயோ !! என்னால் நம்ப முடிய வில்லை.பொய்  சொல்லாதிங்க நீங்க யாரு??அட என்னடா இவன்..சரி கொஞ்சம் கீழ பாரு...பார்த்தால் புள்ளி,புள்ளியாய் சில உருண்டைகள் அதை சுற்றி புள்ளி வைத்து  இணைக்காத கோலமாய் மின்னும் புள்ளிகள்.இதை எல்லாம் கிழித்து பறந்து கொண்டிருக்கு நான் இருக்கும் ஒரு ஹைடெக் வாகனம்.அருகே வெண்தாடி வேந்தர்.இந்த மாயா ஜாலங்களை பார்த்து உயிர் பிரிந்ததை உறுதி செய்து உலக வார்த்தைகளை எல்லாம் ஒன்று கூட்டி ஓ...வென அலறுகிறேன் வாய் திறந்திருக்க, வாய்ஸ் மட்டும் வரவே இல்லை...

அருகில் இருந்தவரின் கட்டை விரல் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி பிடித்திருகிறது.உற்று பார்த்தால் ''ம்யுட்'' என்று எழுதி இருக்கு.அவர் சிறு புன்னகை ஒன்றை எடுத்து வைத்து உன் ரிமோட் இப்போ என் கையில்...அடங்கு, என்றார்.
நேரம் முடிய போகிறது உன் ஆசையை சொல் இந்த தருணம் திரும்ப வராது என்றார்.சுதாரித்து கொண்டு எனக்கு என் உயிர் திரும்ப வேண்டும் என்றேன்.அடேய் உன் சேனலை ஆப் பண்ணி நேர நரகத்துல ஓபன் பண்ணி விட்டுருவேன்...ஒழுங்கா நடக்குறத பேசு.நமக்கு பேச்சு (கம்மி) சரியாய் வராது நான் ஒரு கடிதம் எழுதுறேன் என்றேன். எழுதுறதா!!? இந்தா, மெயில் பண்ணி விடு அது டெலிவெரி ஆய்டும் என்று , விரலால் என் எதிரே ஒரு கட்டமும் கையருகே ஒருகட்டமும் போட்டு விட அது லேப்டாப் போல் ஆனது.விசை பலகையில் எல்லா எழுத்துகளும் தமிழில் ஆ!!அலர்ஜி என்றதும் ஆங்கிலம் வந்து விழுந்தது. ஆரம்பித்தேன்...
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அம்மா...சவ்கியமா..???
நானும் சாவை தொட்டு விட்டு சவ்கியமாய் தான் இருக்கிறேன்.
உன்னை சந்திக்க ஆசையாய் வந்த என்னை சாவு சந்தித்து விட்டது. என் வாழ்வின் எல்லா மீதி பக்கங்களையும் கிழித்து விட்டு கடைசி பக்கத்தில் கடைசி ஆசை கேட்டு பக்கத்திலே இருக்கிறான் சாவின் சகோதரன்.நீ ஆசையாய் கேட்ட தங்க சங்கிலி உன் தங்க கரம் தருவதற்குள் தட்டி கொண்டு வந்து விட்டானம்மா.உன்னை தாயாய் தந்த தாரணி படைத்தவன்.

இன்னொரு தடவை உன் கருவில் உருவெடுக்க ஆசைதான்,நீதான் என்னை பெற்றதுமே கரு பையை களைந்து விடாயாமே??? ஏன்மா??கடவுள் எவ்வளவு கல் நெஞ்சகாரன் பார்மா...கடைசி ஆசை கூட கடிதத்தோடு முடித்து கொள்ள சொல்கிறான்.
அம்மா..கண் கலங்கி விடாதே,பெண்ணாய் பிறந்து நீ, அழுததெல்லாம் போதும்.உன்னை எத்தனை முறை நானே கலங்க வைத்திருக்கிறேன்... இன்னும் பாவம் செய்வது இறைவனுக்கு பொறுக்க வில்லை போல முன்னறிவிப்பு இல்லாமல் இழுத்து வந்து விட்டான்.உலக சொந்தங்களை எல்லாம் எனக்கு சொல்லி வைத்தாய். உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை மா...சொர்க்கம் சென்றாலும் உன் மடிக்காய் தலை தூக்கி காத்திருப்பேன் அம்மா...
உன் அன்பு,
மகன்.
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அப்பா நலமா?
நீங்கள் இருக்கும் தைரியத்தில் மதில் பிடிக்காமல் நடை பழகிய நானும் நலமாய் இருக்கிறேன்.அதே தைரியத்தில் தான் இன்று, தாரணி பிடிக்காமல்.தாரணி காப்பவன் தந்தி அடித்தால் விரைகிறேன்.நீங்கள் அழ மாடீர்கள் என்று தெரியும்.ஆண்பிள்ளை அழும் கொள்கையில் உங்களுக்குதான் உடன்பாடு இல்லையே.உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் இறந்ததாய் ஒருபோதும் எண்ணி விட வேண்டாம்.நீங்கள் எனக்கு கொடுத்த அந்த தைரியத்தை திரும்ப உங்களிடமே விட்டு போகிறேன் உங்களை தேற்றும் வலிமை அதற்க்கு அதிகம்.
அன்பு,
மகன்.
--------------------------------------------------------------------------------
அன்புள்ள அக்கா.எப்படி இருக்கிறாய்??
எதிலும் நீதானே முந்தி கொள்வாய் இப்போது பார்த்தாயா நான் முந்தி கொண்டேன்.எனக்கு இரண்டாம் தாயாய் இறுதிவரை இருந்தவள் நீ...உன் ஒவொரு பருக்கைளும் பங்கு கொடுத்தவள் நீ...உன் பங்காய் ஒரு பாரத்தை விட்டு செல்கிறேன்.பார்த்துகொள்.நமக்கு உயிர் தந்த இரு ஜீவன்கள் உடைந்து விடாமல் பார்த்துகொள்.இன்னும் ஒன்று, மாமா எங்கே என்று மல்லிகை சிரிப்பில் மருமகள் கேட்பாள் மறுநாள் வருவதாய் சொல்லி வை.அந்த மறுமைநாள் வரும் வரை....
அன்பு,
தம்பி.
------------------------------------------------------------------------------
கடைசியாய்...
எவனோ ஒருவனுக்கு மனைவியாய் இருக்கும் இவளே...
உனக்கு ஒரு வேண்டுகோள்.காதல் கனவில் இருந்து மீழாமல், இன்னும் கன்னியாக இருப்பதாய் கேள்வி. ஒருவருக்கான மூச்சை இருவரும் பங்கு போட்டு திரிந்த தருணத்தை எல்லாம் தகர்த்து விடு.
பெண்மையின் எல்லா தகுதியும் உடையவள் நீ...
தாய்மைக்கு மட்டும் ஏன் தண்டனை போட்டு கொள்கிறாய்.யார் கண்டால் நானே உன் கருவாய் உருவாகும் வரம் வாங்கி வந்தாலும் வருவேன்.தாய்மையும் தரிசித்து வா.
வாழ்த்துகள்.
அவன்,
இவன்....
-------------------------------------------------------------------------
போதும் என்று,தலையில் தட்டி எழுப்பினான் பக்கத்து ரூம் பாஷா.
அரை உறக்கத்தில் ... எங்கோ ஒரு குரல்...
பயணிகளின்  கனிவான கவனத்திற்கு...

இதையும் படிங்க...நீ,நான் மற்றும் நமக்கான வானம்...

Wednesday, December 16, 2009

களவு போன கன்னிக்கவிதை...


எனக்கே எனக்காய் எழுதிய கவிதை;
என் உயிர் தொட்ட அழகு கவிதை;
என்னை உயிர் தொட அனுமதித்த கவிதை;
ஏழு ஜென்மமும் இணைந்தே இருப்பேன் என்று,
எழுதி தந்த கவிதை.

காலம் காலமாய் என்
கனவுகள் சுமந்த கவிதை;
கனவில் புகுந்து,
காதல் சொன்ன கவிதை;
காதலின் கற்ப்பை கடைசிவரை,
காப்பாற்றிய கவிதை;
காதல் கலவர படும் பொது,
கரம் பற்றி காத்த கவிதை;
காற்றில் கலந்து,
சுவாச பையில் சுகந்தமாய்
சுற்றி திரிந்த கவிதை.

காணவில்லை...
காவு கொடுத்து விட்டோமோ என்ற கவலை...
கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...
காமன் வந்து கடத்தி இருப்பானோ??இல்லை,
காதல் கதறினால் கவலை கொள்வானே அவன்.
கடவுள் கடத்தி இருப்பானோ??இல்லை,
கவிதை கண்டு கொடுத்தவனே அவன்தானே.
கலவர படுகிறதேன் காதல்...

கற்ப்பனை குதிரை ஏறி,
கடிவாளம் பிடித்து,
கனவுகளை கூட்டிக்கொண்டு,
காற்றில் விரைந்து போகிறேன்;
காணவில்லை.

கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...

பூமியில் புதையலாய்
புதைந்திருப்பாய் என்று;
பூமி பிழந்தும்- பிரபஞ்சம் அலைந்தும்
பார்கிறேன் காணவில்லை...

காதல் தேவனின்
காலை பிடித்து
கதறி கேட்டேன்;
கடைசியாய் கையில் வைத்திருந்த
காட்சி பேழையில் காட்டினான் காட்சிகள்...

கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.

கண்டதும் கலவரமாகி;
கள்வனை தேடி காணவில்லை;
கவிதை வங்கியவனை கண்டேன்-அவன்
கணவன் என்று சொந்தம் சொல்லி போனான்;
களவு போன கவிதை அவளை,
கண்டும் கரம் பற்ற முடியவில்லை.

காலம் பல கடந்தன...
காற்று வாங்குவது போல்
கவிதை அவளை கண்டுவர
கடந்து போனேன்...

நீ மலட்டு கவிதை -என
சில கிழட்டு கவிதைகள் கேலிபேச
கன்னி கவிதை நீ;
கண்ணிர் உடுத்தி
கரைந்திருந்தாய்...

இன்னும் கவிதைகளுக்கு இங்கே...

Saturday, December 12, 2009

நீ...நீ...நீ...


ஹே...நீ!!!
தேனீ !? யா? நீ!!
தேன் கொஞ்சம் தா... நீ.

நான், நீ - தனி
வா நீ, நாம் இனி.

ஏ !!தீ... நீ.
நீ...கொஞ்சம் தணி.

''அம்மணி''
தண்ணி நீ.
தாகம் நீ.

கவி நீ.
கவித் தீனி,திணி.

கழனி நீ,
காணி நிலம்மும் நீ.

பனி நீ.
அக்னி நீ.

ராணி - கொஞ்சம்
ரா...நீ.

யாழினி - இனி
யாழ் நீ.
தோணி ராகம் தா, நீ.

பிணி நீ.
யூனானி நீ.

ஆ!!நீ...
ஆணி.

மேனி நாணி
கோணி போ நீ.

தாவணி தவம் நீ.
தா ஒரு வரம் நீ.

இனி நீ கனி.
கனி இனி ஞானி.

Friday, December 11, 2009

ஒப்பனைகாரன்...


செத்த முடிகளை சேகரித்து
சிகைகொரு வகையாய் சேர்த்து தைத்து
சிரத்தில் சிக்கென பொருத்தி
சின்ன வயசு கிழவரையும்
சிறப்பாய் காட்டி விடுகிறான்...

செத்த முடிகள் போக
மத்த முடிகளும்
சீக்கிரம் செத்துவிட சொல்லி
டை(சாவ)அடிக்கிறான்...

சுருட்டை முடிகளையேல்லாம்
சுருட்டி இழுத்து
சுண்ணாம்பு தடவி-கொஞ்சம்
சூடு போட்டு மீண்டும்
சுருட்டி விடுகிறான்...

முகத்திற்கு மாவு போட்டு
மூச்சுக்கும் பூட்டு போட்டு
முடிந்தவரை ரேட்டு போட்டு
முக்கால் மூஞ்சியை கூட
முழு மூஞ்சிஆக்கி விடுகிறான்...

முக்கிய பிரமுகர்களின்
மொத்த குடுமியும் அடிக்கடி

மாட்டிகொள்வது
இவன் கை பிடியில் தான்...

Tuesday, December 8, 2009

அப்பாடா !!!!ஐம்பது...



அப்பாடா !!!! இந்த ஐம்பதாவது பதிவு வரை வர நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவே மலையாய் தெரிகிறது. எப்படித்தான் 200...300...பதிவெல்லாம் எழுது முடிதிருகிறிர்களோ!!!!


இங்கு என்னை பற்றி சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன். நான் பிறந்தது தேனீ மாவட்டம் சின்னமனூர் என்ற ஊரில்.நம்ம பிரியமுடன்......வசந்த் க்கு ரெம்ப பக்கம் (சொல்லவே இல்ல )எனக்கே இப்பதான தெரியும்...வளர்ந்ததெல்லாம் மதுரை மற்றும் சென்னையில் இப்போ சவுதி இல் வேலை.
முதலில் பதிவுகள் வாசிப்பதோடு சரி.அதுவும் தொழில் நுட்பம் சம்பந்தமான வலைகளை மேய்வதோடு சரி. மீதி நேரம் அரட்டை.

பிகேபி தான் எனக்கு அறிமுகமான முதல் பதிவர். ஒரு இரண்டு வருடம் அவர் பதிவுகளை வாசிப்பதோடு சரி. பின் KRICONS இல் ப்ளாகர் பற்றி பதிவு படித்ததும் . ஒரு ஆர்வம் ஆனால் ப்ளாகர் பற்றி ஒன்றுமே தெரியாது (கண்ண கட்டி காட்டுல விட்டகதைதான்). பின் முதலில் என்னை ~ சக்கரை ~ சுரேஷ் ப்ளாக்கில் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்தான் எனக்கு முதல் பின்னுட்டம் இட்ட புண்ணியவான்.அன்று கொள்ளை மகிழ்ச்சி.

தத்தக்கா பித்தக்கா என்று தவழ்ந்து கொண்டிருக்கிறேன். பின் ‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா ப்ளாக்கில் நிறைய விஷயம் கற்பித்தார்கள். நான் சேர்த்து வைத்த கவிதைகள் கொஞ்சம் எழுதினேன். இப்போது என்னையும் படிக்கும் 22 நல்ல உள்ளங்கள் தான் என் சொத்து.

இடையில் கொஞ்சம் வேலை பழு காரணமாக பதிவு எதுவும் எழுத முடியவில்லை.இப்போது கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைகிறது.இருந்தாலும் ஏதோ சோர்வு எனை விரட்டுகிறது.நானும் முடிந்தவரை ஓடிகொண்டிருகிறேன்.

இந்த நேரத்தில் என்னை இந்த அளவுக்கு அன்பு சங்கிலியில் கட்டி இழுத்து வரும் என்னருமை (தோழர்கள்)பதிவர்கள்...

கசியும் மௌனம் கதிர் அண்ணே...

‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா...

பிரியமுடன்......வசந்த்

நிலாமதியின் பக்கங்கள். (நிலா அக்கா)

~ சக்கரை ~

சி @ பாலாசி...

கிஷோர்

சமையல் அட்டகாசங்கள்

FEROS :: பெரோஸ்

ஒளியவன் கீற்றுகள்

சப்ராஸ் அபூ பக்கர் மற்றும் எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகம் தரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் பாசமிகு நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவோடு உற்சாகமாய் தொடர்வேன்...எனக்கு சரியாய் எழுததெரியாது ஏதும் குற்றம் குறை இருந்தால் மண்னிக்கவும்...இவன் அன்புள்ள சீமான் கனி.

நன்றி....

மூத்த முதல் சினேகிதி...




பிறந்ததும் தொட்டு பார்த்து.,
சிலிர்க்க செய்த முதல் ஸ்பரிசம்
தந்ததும் நீ தானாம்;

''ஐ!! தம்பி பாபா'' என்று
முதல் முத்தம் தந்ததும்
நீ தானாம்;

தவழ்ந்து தரைமுட்டி
தத்தளித்த தருணங்களில்
தாவி வந்து முதல்
தழுவல் தந்ததும்
நீ தானாம்;

நான் நடைபயில
பற்றி கொண்ட முதல் கரம்
தந்ததும் நீ தானாம்;


உனக்கு வழங்கப்பட்ட இனிப்பிலிருந்து
என் முதல் இனிப்பாய் இனித்ததும்
உன் விரல்தானாம்;

கரும்பலகையில் கட்டை
விரலை அழுத்தி பிடித்து
'அ' பழக்கியதும் நீ தானாம்;

தகவல் பரிமாற
தந்தியடித்த தருணங்களில்
தாய்மொழி,
தமிழ் தந்ததும் நீ தானாம்;

பத்திரமாய் கரம் பற்றி
பள்ளி பழக்கியதும்
நீ தானாம்;

காத்து கருப்புக்கு பயந்து
கடைதெரு போகாத எனக்கு,
காத்துக்கும் கருப்புக்கும்
கதை சொல்லி விரட்டியதும் நீ தானாம்;

எறும்பு கடித்து கதறி அழ
எனக்காய் நீ பதறி எழ-அன்றே
எறும்பை பகைத்து கொண்டவளும் நீ தானாம்;

குறும்பு செய்தபொது
குற்றம் ஏற்று
குறைந்தபச்ச தண்டனை
பெற்றதும் நீ தானாம்;

'அ' முதல் அன்பு வரை
அனைத்தையும்
அறிமுகபடுத்தியது நீ தானாம்;

இவள் உன்
அக்கா என்று
அம்மா
அறிமுகப்படுத்தியவளும்,
நீ தானாம்;

Monday, November 30, 2009

ஆப்பிள் மரமும்,அவனும்...



சமீபத்தில் படித்த ஒரு அழகான கதை.
உங்களோடு பகிர்வதில் ஆனந்தம்.
அது ஒரு அழகான காடு அங்கு விதிவிலக்காய் ஒரு ஒற்றை ஆப்பிள் மரம்.
அந்த காட்டில் ஆப்பிள் மரம் காணபடுவது மிக அபூர்வமான உண்மை. அந்த காலநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி செழிப்பாய் வளர்ந்த மரம். ருசியான அனந்த ஆப்பிள்களை பறிக்க ஆளில்லாமல் பூமிக்கு பரிசளித்து கொண்டிருன்ந்த சமையம்.
அவ்வழியாக வந்து கொண்டிருந்த சிறுவனுக்கு கனியும் மரமும் பிடித்து, யாருமே இல்லாத உலகில் தன்னை நேசிக்கும் ஒருவனை பார்த்ததும் மரம் அவனோடு பேச, அவனுக்கு அந்த மேஜிக் பிடித்து போனது தினமும் அங்கு வருவதை வாடிக்கையாக்கி கொண்டான். அவன் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து விளையாடினான்.அவனுக்கு பசிக்கும் சமையத்தில் ஆப்பிள் கொடுத்து அவனை பசியமர்த்தியது .

ஒருநாள் விடை பெற்றவன் வெகு நாட்களாய் திரும்பாததால் மரம் வாடிப்போனது சிலவருடங்கள் கடந்தன...

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான் அவனை பார்த்த ஆனந்தத்தில் ''வா என்னோடு விளையாடு '' என்றது. அவன் நான் சிறுவன் அல்ல வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டேன் நான் உன்னோடு விளையாண்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் முடியாது போ என்றான்.
''சரி இந்த ஆப்பிள் சாப்பிடு ''என்றது. ''இல்லை எனக்கு இது வேண்டம்'' . அப்போது அவனுக்கு ஆப்பிள் கசத்தது .''சரி உனக்கு என்ன வேண்டு சொல் ''என்றது .''எனக்கு விளையாட நிறைய பொம்மைகள் வேண்டும் '' என்றான் . ''என்னிடம் பொம்மைகள் ஏதும் இல்லை சரி நீ என்னுடைய ஆப்பிள்கள் அனைத்தையும் பறித்துகொள் அதை விற்று வரும் பணத்தில் பொம்மைகள் வாங்கிகொள் ''என்றது. அவனும் ஆப்பிள் அனைத்தையும் பறித்து சென்றான் . சென்றவன் திரும்பவே இல்லை மீண்டு சில வருடங்கள் கடந்தன .

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான்.அவனை பார்த்து மகிழ்ந்து ''வா என்னோடு விளையாடு'' என்றது. அவன் ''விளையாட்டு வயதா எனக்கு? எனக்கு திருமணமாகிவிட்டது '' என்றான். ''சரி இப்போ உனக்கு என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது. ''என் வீட்டு கூரை பழுதாகி விட்டது என்னிடம் பணம் குறைவாய் உள்ளது '' என்றான். ''ஒ!! இப்போது என்னிடம் ஆப்பிள் இல்லை, நீ வேண்டுமானால் என் கிளைகளை வெட்டி எடுத்து உன் வீட்டு கூரைக்கு பயன்படுத்தி கொள் '' என்றது.
அவனும் மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து சென்றான்.

சென்றவன் மேலும் சில வருடங்கள் கழித்து திரும்ப வந்தான் அவனை பார்த்து மகிழ்ந்ந்து ''வா என்னோடு விளையாடு '' என்றது மரம்.''அதற்கெல்லாம் நேரம் எனக்கில்லை '' என்றான்.''சரி உனக்கு இப்போ என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது.
''எனக்கு ஒரு படகு தேவை படுகிறது ,அதற்க்கு பணம் இல்லை '' என்றான்.
சரி என்னை வெட்டி எடுத்து உன் படகுக்கான மரமாய் பயன்படுதிகொள் என்றது. அவனும் மரத்தை வெட்டி எடுத்து கொண்டான்.

சென்றவன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்தான். இப்போது மரத்திடம் மிச்சமாய் இருந்தது அடிப்பகுதி மட்டும்தான். அவனிடம் ''மன்னித்துவிடு இப்போது உனக்கு தருவதற்கு ஆப்பிள்கள் என்னிடம் இல்லை'' என்றது. ''இல்லை எனக்கு கடித்து தின்பதற்கு பற்கள் இல்லை '' என்றான்.
''நீ உஞ்சல் கட்டிக்கொள்ள கிளைகள் ஏதும் என்னிடம் இல்லை'' என்றது.
''இல்லை எனக்கு இப்போது வயதாகி போனது '' என்றான்.
கண்ணீரோடு சொன்னது ''என்னிடம் இந்த அடிபகுதியை தவிர வேறொன்றும் இல்லை '' என்றது. ''நான் மிகவும் களைத்து விட்டேன், இளைப்பாற ஒரு இடம் போதும் ''என்றான்.
''சரி என்மீது அமர்ந்து ஓய்வேடு ''என்றது. அவன் அதன் மீது அமர்ந்து கொண்டான்.மரம் ஆனந்த கண்ணீரோடு அவனை அனைத்து கொண்டது.

நம் எல்லோருடைய வாழ்விலும் இந்ந்த ஆப்பிள் மரம் உள்ளது.
நம்முடைய பெற்றோர்கள்.இந்த எக்ஸ்பிரஸ் உலகில் கிடைக்கும் சொற்ப நேரத்தையாவது அவர்களோடு சேர்ந்திருப்போம்.
அன்புடன் , சீமான்கனி.



Friday, November 27, 2009

ஒரே நாள் மழையில்...

ஒரே நாள் பெய்த மழையில் சவுதி ஜித்தாவின் நிலைமை... புதன் கிழமை காலை ஆறு மணி இருக்கும் வானமகள் மஞ்சள் பூசி குளித்து போல் முகம் காட்டி இருந்தால் குளித்தது அவளாய் இருந்தாலும் நனைந்து மூழ்கியது எங்கள் நகரம்... கொஞ்ச நேரத்தில் கருத்து துளி,துளியாய் முத்தம் துப்ப ஆரம்பித்தாள்.... காயபோட்டிருந்த துணியெடுக்க மாடிக்கு விரைந்து போக அங்கே ஆடிகொண்டிருந்த துணியெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது... மழையின் முத்தசூட்டில் நானும் கொஞ்சம் மழையாடினேன்.... நாடுவிட்டு வந்து முதல் மழை தரிசனம்... ஆசை தீரும்வரை ஆடிவிட்டு...அறைக்கு சென்றேன். அடுத்த நாள் அவள் ஆடியாட்டம் கண்டு...ஆடிபோனேன்...௨௫ பேருக்குமேல் இறந்திருக்கக்கூடும் என்ற அச்சம்.நிறைய பொருள் சேதம் ,சில ஹஜ் பயணிகளும் பாதிக்க பட்டனர்.
இதோ...








சேதத்தில் இதுஒரு சிறு பகுதிதான்...


Friday, November 20, 2009

கவிக்கூந்தல்...



உன்னை மட்டும் எப்படி இதனை அழகாய்;
கவிதையாய் எழுதி இருக்கிறான் பிரம்மன்;
கார் குழல் துவங்கி கணுக்கால் வரைக்கும்
எத்தனை அழகாய் இழைதிருகிறான்;

கவிவரியாய் கூந்தல்;
கவி படிக்கவந்த காதலனாய்
காற்றையும் காதல் படிக்கவைத்து விட்டாயே!!
அங்கே பார் அலையோடு காதல் கொண்டு கரையெல்லாம்
நுரையெல்லாம் கவிதை வடிக்கிறான்; -உன்
கூந்தல் வாரிய சீப்புகளெல்லாம் -நீ
சிக்கெடுக்கும் சிணுங்களில்
சிகரம் ஏறிய வீரனாய் செத்து பிழைகின்றன; -உன்
சிகையில் கொஞ்சம் சிறை பிடித்து
முடி சூடி கொள்கின்றன;-உன்
கூந்தல் ஏறிய பூக்களும் கவிபாடுது; -இப்போதுதான்
நீ தலை(பூ)-புடன் கூடிய கவிதையாம்!!-உன்
ஈர கூந்தலுக்கு குதுகலத்தை பார்!!
உன்னை விட்டு கொள்ளாமல் ஒட்டி கொள்கிறது;-நீ
தலை உலர்த்தும் தருணங்களில் எங்கோ -புயல்
உருவாக்கி என் மனதில் நிலைகொள்கிறது;

அடிக்கடி முகம் பார்த்து விட்டு வரும் -உன்
முடியே இத்தனை கவி சொல்லுதே...!!!
நான் மட்டும் கவியானதில் உனக்கென்ன சந்தேகம்??
இந்த பிரம்மனுக்கு எத்தனை ஓரவஞ்சனை பாரேன் !!?
உன்னை கவிதையாய் எழுதிவிட்டு -என்னை
மைஉதறி கிறுக்கி பார்க்கும் வெத்து காகிதமாய் விட்டுவிட்டான்;
விதிக்கு அந்த கிறுக்கல் புரியவில்லையாம்
பாவம் புழம்புகிறது...

Tuesday, November 17, 2009

ஐயையோ வயறு வெடிச்சுருச்சு...


நான் 3 -ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமையம்...(அப்பவே இப்டியானு தோணும் ...)அப்போ எங்க ஸ்கூல்ல டூர்க்கு கூட்டிட்டு  போனாங்க அதுக்கு 30 ருபாய் குடுக்கணும். என்னோட நண்பர்கள் எல்லோரும்  போறாங்க  எனக்கும்   போகணும்னு ரெம்ப ஆசை அப்பாகிட்ட கேட்டா  சரி அம்மாகிட்ட  காசுவான்கிட்டு  போய்ட்டுவான்னு சொல்லிட்டார்.
ரெம்ப ஜாலியா அம்மாகிட்ட போய் கேட்டா அம்மா அதலாம் வேண்டாம்   சும்மா வீட்டுலையே இருன்னு சொல்லிட்டாங்க, அம்மாக்கு கொஞ்சம் பயம் ஏன்னா  போனவாரம்தான்  சைக்கிள்ல  இருந்து விழுந்து கைய ஒடச்சு வந்தேன் ... 


நானும் விடுற மாறி இல்ல அழுது அடம்புடிச்சு,குட்டி கரணம் அடுச்சு பாக்குறேன் ம்ம்ம்...ஹும்ம்ம்...ஒன்னும் வேலைக்கு ஆகல. ஸ்கூல் லுக்கு  போனா  பசங்கலாம்   கிண்டல் பண்றாங்க "என்னடா எப்படியாவது அடம்புடிச்சு பட்னியா   இருந்தாவது   வாங்கிட்டு வாடானு சொல்லரங்க. காசு கட்ட நாளைக்குத்தான் கடைசி நாள் இன்னைக்கு எப்டியாவது வாங்கிட்டுவா" நல்லா ஏத்தி விட்டுடாகே...விட்டுக்கு போனா ஒன்னும் நடக்கல அப்போ அம்மா பர்ஸ் கண்ணுக்கு முன்னாடி இருந்துச்சு எனக்குள்ள தூக்கிட்டு இருந்த ஒரு கிரிமினல் முழிசுகிட்டான். யாருக்கும் தெரியாம 30 ருபாய் மட்டும் சுட்டு ஸ்கூல் பேக்ல வச்சுட்டேன்...


என்னடா இது, எப்பவும் காலைல லேட்ட போவ இப்போ சிக்கரம போறன்னு அப்பவே அம்மாக்கு டவுட் வந்தாச்சு....ஸ்கூல்கு போய்  மிஸ் கிட்ட குடுத்தாச்சு... அப்போ கொஞ்சம் கூட பயம் இல்ல... பிரான்ஸ்   கிட்டவந்து  ஏ...பாத்துக்க நானும் டூருக்கு    வர்றேன்...டுர்க்கு  வர்றேன்...னு வடிவேல்  ஸ்டைல்   சொல்லியாச்சு... இன்னும் ரெண்டுநாள்ல டூர்.


சாயங்காலம் வீட்டுக்கு போனா அம்மா ரெடியா.. இருக்காங்க. எங்கட 30 ரூபா...?என்னது 30 ரூபாயா??அப்டினா??ஒழுங்க உன்னமைய சொல்லறியா இல்லையா...?"எந்த ரூபா மா எனக்கு எதுவும் தெரியாது..." அடுத்த விநாடி பொளேர்...பொளேர்...னு செம அடி. ம்ம்ம்ம்...ஹும்ம்...சத்தியமா எனக்கு தெரியதுமா...சொல்றிய (அத்தாக்கு)அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லவா? மா...  எனக்கு தெரியாது மா... இந்த ஏருமமாட அடிச்சு எனக்குத்தான் கை வலிக்குதுன்னு சொல்லிட்டு நேர அடுப்படிக்கு போய் ஒரு முட்டை எடுத்துட்டு வந்தாங்க...எனக்கு ஒன்னும் புரியல எதுக்கு...முட்டை...


இந்த முட்டைய ஓதி ஊதி வச்சா அது கொஞ்சநேரத்துல வெடிச்சுரும் அடுத்த வினாடி யாரு  காசு எடுதக்களோ அவங்க வயிறும்  வெடிச்சு குடல் எல்லாம் வெளியவந்துடும்...கடைசியா கேக்குறேன் உண்மைய சொல்லு...ஆஹா இப்படிலாம் இருக்கா...சொல்லவே இல்ல...அப்படியே என் வயிறு வெடிச்சு தெறிக்குது...(கற்பனைல... )பயத்தூல வைத்த புடிச்சுட்டு அம்மா சாரி மா...நான்தான் எடுத்து டூர் போறதுக்கு ஸ்கூல்ல குடுத்துட்டேன்...


ஐயையோ நான் ஏற்கனவே பாதி மந்தரம் ஒதிட்டேண்டா நீ நாளைக்கு எப்டியாச்சும் அந்த காச வாங்கிட்டு வந்துடு இல்லனா வயறு வேடிசுரும்டா... சொல்லிட்டு கூலா போய்ட்டாங்க. எனக்கு ராத்திரிபுல்லா தூக்கமே வரல வயறு வெடிசிட்டே  இருக்கு...காலைல மிஸ் கால கைய புடிச்சு காசு வாங்கி அம்மாகிட்ட குடுத்து.... மா.... இனிமேல் இப்டி செய்யமாட்டேன்மா...னு கெஞ்சி ... அழுது அன்னிக்கு ராத்திரிபுல்லா   முட்டையவே பாத்து தூங்காம இருந்தேன்...
அடுத்தநாள் அம்மா அதே முட்டைய அவிச்சு புளிசோறு கட்டி  30 ரூபா காசு குடுத்து அனுப்பி வச்சாங்க....                                                                              

Saturday, November 14, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(6)


நமக்கான அதே மாலை பொழுது என் விரல் உன்னை தொட்டதும் சிலிர்த்து விட்டு சினுங்கலாய் கேட்டாய்....தொட்டு கொள்ளமால் இருக்க முடியாதா உன்னால்?


அடி என்னவளே இயற்கையை மீறி எதுவும் பண்ணமுடியாது நம்மால்...
ஒ...அப்டினா...இது இயற்கையா!!??? பொய்...வனமும்,பூமயும் இயற்கைதானே...பிறகு என் அவைகள் தொட்டு கொள்வதில்லை?? அடி லூசு பெண்ணே நாமாவது பரவாஇல்லை அவர்களின் தொடக்கமே தொட்டு கொள்வதில்தான் ஆரம்பிக்கிறது,.



காலை பொழுதின் கதிரவன் கரம் கொண்டு தொட்ட பின்தானே பூமி பெண்ணே கண்விழிகிறாள்...ஒ...அப்டியா!!!?...அப்றம்...



மாலை கடற்கரையில் செவ்விதழ் குவித்து சிவப்பு முத்தம் பெற்ற பின் தானே அந்தி சாய்கிறாள் பூமி பெண் .
மழை எனும் மேன்தொடுகை கொண்டுதானே பூமி பெண்ணே பூப்படைகிறாள்...
இரவில் நிலவின் ஸ்பரிசம் தொட்டுதனே பூமி பெண்ணே துயில் கொள்கிறாள்.
தொட்டு கொள்ளாமல் காதல்,காமம்,இயற்கை எதுவுமே இல்ல புரிந்ததா???ம்ம்...அதற்க்கு என்ன சாட்சி என்றாய்...அடி மக்கு பெண்ணே அதற்குதான் நம்மை படைத்து இருக்கிறதே இயற்கை.



பின் ஏதோ ரகசியம் சொல்வது போல் காதருகே வந்து தித்திக்கும் தீடிர் திருட்டு முத்தம் தந்து விடை பெற்றாய்…



நானும் விடைபெறும் சமையம் வந்தது வாழ்க்கை என்னையும் அதான் வசத்துக்கு கொண்டுவந்த தருணங்கள்...



வேலையின் நிமிர்த்தமாய் வெகுதூர பயணம்.உன் நினைவுகளை மட்டும் துணைக்கு கூட்டிக்கொண்டு பறந்து போனேன்.நம் பேச்சு செல் போன் உரையாடலாய் மாறி...பின் வந்த நாட்களில் ஸ்.எம்.ஸ்-சாய் சுருங்கி போனது.அடுத்தடுத்த நட்களில் உன் குறுஞ்சி பேச்சில் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது, எனக்கு புரியவில்லை...பின்னொரு நாளில் உன் அம்மாவிடம் பேசும்போது உன் திருமண தகவல் தந்து போனார்.உன்னை மட்டும் இல்லை உன் சொந்தங்களையும் நேசிப்பதால் என்னிடமும் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது.



அதன் பின் நகர்ந்த அந்த நரக நாட்களை எழுதக்கூட விரும்ப வில்லை.உன்னோடு பேச துடித்த முயற்சிகளில் தோல்வி மட்டுமே கிடைத்தது எனக்கு.



எனக்கும் அழைப்பு வந்தது உன் அண்ணனின் பேச்சு என்னால் மறுப்பு கூற முடிய வில்லை.நீ என்னவளாய் இருக்கபோகும் அந்த கடைசி நாட்களுக்காய் தயாரானேன்…



ஊர்வந்து இறங்கிய பொது ஊரடங்கு உத்தரவிட்டு இருந்தது போல் எங்கு பார்த்தாலும் ஒரே வெறுமை. கவிதை இல்லாத வேற்று காகிதம் போல் உன் கோலம் இல்லாத வீட்டு முற்றம். இவ்வளவு நாள் சொர்க்கமாய் தெரிந்த உன் வீடு இன்று நரக வீடு, வரவேற்க்க காத்திருந்தது...



நீ மட்டும் உன் மௌவ்னத்தின் ஒவ்வொரு வார்த்தையாய் மொழி பெயர்த்து பார்வையால் பகிர்ந்து கொண்டிருந்தாய் என்னிடம்... உன் கண்ணில் நீர் படலம் ஏதும் இல்லை இரவெல்லாம் அழுதிருக்கிறாய் , திர்திருக்கும் அதை வீட பெரிதாய் என்ன செய்து விட முடியும் அப்போது. ஓடிபோவதிலும், உயிர் விடுவதிலும் அப்படி ஒரு உடன்பாடு இருந்ததில்லை இருவருக்கும்.



அன்று… உன் வீட்டு குளியல் அறையில் நானும் ஷவரும் அழுதே ஓய்ந்து போனோம்.எனக்காய் வைத்திருந்த பார்வை ஒவ்வொன்றாய் பரிசளித்த வண்ணம் நீ இருக்க, இவள் முகத்தில் கல்யாண கலை வந்து விட்டதாக யாரோ சொல்லி என்னை கடந்து போனார்கள். உன் அண்ணனின் நண்பன் என்பதால் என்னையும் உன் திருமண வேலைகளில் இணைத்து கொண்டேன்.



இனிதே முடிந்தது உன் திருமணம். ஒரே புள்ளியில் இருந்து வெவேறு திசையில் பிருந்து போனோம்.சில நாட்கள் பேசிக்கொள்ள சில தருணங்கள் கிடைத்தது. பினொரு நாளில் தான் உதிர்த்தாய் உன்னிடம் மிச்சம் இருந்த அந்த வார்த்தையும்... உன்னோடு பேசும் பொது அவருக்கு துரோகம் செய்வதாய் உணர்கிறேன் என்றாய் அப்போதுதான் உணர்ந்தேன் நீ…. நினைவுகளை (என்னை) விட்டு வெகுதூரம் பொய்விட்டதை... நானும் உன் நினைவுகளை உன்னோடு சேரும்படி அனுப்பி வைத்தேன். உன்னை தேடி கிடைக்காமல் அவைகள் மீண்டும் என்னோடு வந்து சேர்ந்து விட்டன.இன்று குறை ஒன்றும் இல்லாமல் நானும் உன் நினைவுகளும் நலமாய் தான் இருக்கிறோம்...(உன் நினைவுகள்,நான் மற்றும் நமக்கான வானம்...) 

Friday, October 30, 2009

இரவின் இரைச்சல்....




புழுக்கள் கூட -புழங்க
பிடிக்காத புழுதி சாலையில்
புரண்டு படுத்து ஊருளும்
மூத்தவனின் முனங்கள் சத்தம்;

கைகளை நீட்டி
கால் டாக்ஸி வேண்டி
கால் கடுக்க காத்திருக்கும்
கால் சென்டெர் கண்மனியின்
இதய படபடப்பு சத்தம்;

காதலை தொலைத்து -காதலி
கால்தடம் கணக்கு பார்க்கும்
காதலன் ஏக்க சத்தம்.

உறவினர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
இறுதி பேருந்தை தவறவிட்டு
இரவு பேருந்திற்காய் காத்திருக்கும் கூட்டத்தின்
இரைச்சல் சத்தம்.

இருபத்து மணி உழைத்து
இரவுபேருந்துபிடித்து
இருக்கையில் இருந்தவாறே
உறங்கிபோகும் ஒருவனின் குறட்டை சத்தம்.

யாருமே இல்லாத கடையில்
யாருக்காகவோ காய்ந்து
கொண்டிருக்கும் பாலின் கொதி சத்தம்.

மிதிக்கவே முடியாமல்
மிதித்து போகும் யாரோ -ஒருவனின்
மிதிவண்டி சத்தம்.

எங்கேயும் எப்போதும்
யாருக்காகவோ இரைந்து கொண்டிருக்கும்
யெப். எம் சத்தம்.

இளசுகள் இரண்டு இருக்கபிடித்து கொண்டு
இன்ப உலா போகும்
இருசக்கர வண்டி சத்தம்.

எங்கயோ எதையோ பறிகொடுத்து
வீடுபோக விருப்பம் இல்லாத
எவனோ ஒருவனின் விசும்பல் சத்தம்.

வருபவரைஎல்லாம் -ஒருமுறை
குரைத்து விட்டு
கல்லடி நினைவில் வந்ததும் வந்ததும்
கால்தெறிக்க கலைந்து ஓடும் நாய் சத்தம்.

எதுவுமே இல்லாத தெருவில்
தனக்கு மட்டும் கேட்கும்
பேய் சத்தம்.

நடை பாதையை கிடை பதையக்கி
கிடந்து உறங்கும் சிறார்களின்
சினுங்கள் சத்தம்.

இறுதி ஊர்வலத்தில்
இறைத்து போன மலரைஎல்லாம்
இணைத்து போகும் துப்புரவு துடைப்ப சத்தம்.(தொடரும்...)

Tuesday, October 27, 2009

தேவதை திருமகள் இவள்...

இன்னும் சிறகுகள் முளைக்காத
சின்ன தேவதை இவள்...


சிரிக்கிரளா இல்லை சீக்கிரம் வரச்சொல்லி
அழைகிறளா புரிய வில்லை...


இவள் சிரிக்கையில் கொஞ்சம்
சிலிர்த்து கொள்கிறது சிம்பொனி...


மனதை மயக்கி
மல்லிகை கைக்குள்
மடக்கி பிடித்திருக்கும்
மாயக்காரி இவள்...

இதுவரை மண் பார்த்து இருந்த நிலவு
இன்று வின் பார்த்து கிடப்பதை வியக்கிறேன்....


தங்க சங்கிலி அணிந்து ஜொலிக்கும்
கோகினூர் வைரம் இவளோ...


யார்?? சொன்னது தேவதை வெள்ளை
உடையில் தான் இருக்க வேண்டும் என்று...!!


தரை தவழ துடிக்கும் தங்க தாரகை இவள்;
இவள் தவழ்ந்த இடங்களில்
குடி இருக்கிறாள் இன்னொரு தேவதை...(அம்மா)


இவளின் பட்டு பாதங்கள்
தரை தொடும்
தருணத்திற்காய்
தவம் இருக்கிறாள் பூமித்தாய் .....


அழும் போதுகூட
ஆயிரம் ஆயிரம்
அழகு காட்டும் அன்னம் இவள்...

வானம் கொண்ட மேகங்கள் தான் இவளின்
வண்ணம் கொண்ட கண்ணங்களோ...

மீன் குட்டி கண்ணடிக்க;
தேன் குட்டி இதழ் குடிக்க;
மான் குட்டி இடை தவழும்;
தேவதையை தரிசிக்கும் நாளுக்காய்
தவம் கிடக்கிறேன் நான்...


தேவதை திருமகள் இவள்...

Sunday, September 20, 2009

மீண்டும் வருவேன்.....

கொஞ்சம் வேலையின் நிமிர்த்தமாய் ஒரு சிறு பிரிவு .. விரைவில்
மீண்டும் வருவேன்....
அனைவரின் அன்புக்கும் ...நன்றி......
அன்போடு
சீமான்கனி...

Monday, September 7, 2009

சபலம்...அம்பலம்...

அது ஒரு பெரிய பெயர் போன நிறுவனம். அங்க ரவிதான் எல்லாமே.பாஸ் சரியா வர்றது இல்ல அவருக்கு ஏகப்பட்ட பிசினுஸ் . சோ இப்போ கிட்டதட்ட எல்லாமே ரவிதான்.

ரவிக்கு ஒரு அழகான மனைவி ஒரு பெண் குழந்தை.மனைவி ரெம்ப அன்பானவள்.கணவன் என்றல் கொள்ள பிரியம் கணவனுக்காகவே அம்மா அப்பா யாரும் வேண்ண்டாம் என்று ரவியை நம்பி வந்தவள்.ர
வியும் சந்தோசமாகத்தான் வச்சுஇருக்கான் .

அதே நிறுவனத்தில் ரவிக்கு கிழே பத்மா வும் வேலை செய்கிறாள்.
கணவனை பிரிந்து வாழ்பவள் .குழந்தை ஏதும் இல்லை. கல்ல்யனமே வேண்டாம் இப்படியே இருந்து விடுகிறேன் என்ற பிடிவதகாரி.
ரவிக்கு இவள் மேல் ஒரு சின்ன சபலம். எப்படி
யும் இவளை நம்ம வழிக்கு கொண்டுவந்துவிட போராடி காய் நகர்த்துகிறான் . அவள் மசிவதாய் தெரியவில்லை . 
கடைசியில் தன் மனைவி நடத்தை கேட்டவள்,அப்படி இப்படி என்று கதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பத்மாவை தன் வழிக்கு இழுத்துகொண்டிருக்கிறான்.
பத்மாவும் மனசு மாறுகிறாள்.

ஒருநாள் ரவிக்கு இன்னபா அதிர்ச்சி தருகிறாள். இன்று வீட்டில் யாரும் இல்லை நீங்கள் எப்படியாவது சரியாய் 12 மணிக்கு என்வீட்டுக்குக் வந்துவிடுங்கள் என்று அரை நாள் விடுப்பு வாங்கி புறப்பட்டு போனாள். ரவிக்கு இறுப்பு கொள்ளவில்லை .மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மல்லிகையும் ஸ்வீட்டும் வாங்கி வைத்துகொண்டு. மனைவிக்கு போன் போட்டு...நான்அவசர வேலையை தாம்பரம் போவதாகவும் இரவு வரமட்டேன் என்றும் சொல்லி சமாளித்து விட்டு ,

அவள் வீட்டுக்கு ஆட்டோவில் பொய் இறங்குகிறான் மணி 12 யை தொட இன்னிம் கொஞ்ச நேரம் தான் .
ஒரு சின்ன பதட்டத்தோடு பத்மா...என்று அழைக்க....வீடு மொத்தமாய் இருண்டு கிடக்கிறது...
கரண்ட் இல்ல நீங்க நேரா.. ரூம்குள்ள வாங்க என்று அவளின் குரல் கேட்டு குதுக்கலாமாகி...மேல் சட்டையை கழட்டி விட்டு லைடேறாய் எடுத்து வெளிச்சம் பிடித்து உள்ளே...போகிறான்.
காதல் வசனம் வேறு...சரியாய் மணி ௧௨ அடித்ததும் சட்டென்று விளக்குகள் ஏறிய...ஒரு கோரஸ் குரல்...ஹாப்பி பர்த்டே டு யு ...என்று....பார்த்தால் ரவிக்கு பெரும் அதிர்ச்சி....
அனந்த நிறுவனத்தின் மொத்த ஊழியரும் ,பாஸ் உம் ,அவன் மனைவயும் ,நடுவே பத்மாவும் பர்த்டே கேக்கும் ...
இவனோ அரை நிர்வாணமாய் .
அத்தை பர்ர்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி....பதமா ஒரு சிறு புன்னகையோடு நடந்ததை விளக்குகிறாள்...
அவள் விடுப்பு வாங்கிய அந்த அரைநாள் அவள் வெளியே போவதற்கு முன் சக ஊழியர் அனைவரையும் அழைத்து பேசி இருக்கிறாள்...அதை கண்ணாடி அறைக்குள் இருந்து பார்த்த புரிந்திருக்கும் ?? பின ரவி இன் மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறாள். அவளிடம் தன் பிறந்தநாள் விழா என்றும் மற்றவரிடம் ரவி இன் பிறந்தநாள் விழா என்றும் பொய் சொல்லி இருக்கிறாள்...இப்போ பத்மாவின் வீடு...

இதை பார்த்து பித்து பிடித்தது போல் ஆன ரவி தலை தெறிக்க வெளியே....ஓடிபோனான்...
எப்படி இருக்கு பத்மாவின் ஐடியா.....
எப்படி இருக்கு கதை.....
மனசுல பட்டதை சொல்லிட்டு போங்கோ...

Friday, September 4, 2009

''மீண்டும்ஜெய் ஹோ ரஹ்மான்....''


நம்ம இசை புயலுக்கு...மீண்டு ஒரு விருது ... (கிராஸ்ரூட் கிராமி விருது )
ரஹ்மான் இசையமைத்த வரலாறு படத்துக்கும்சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருது வழங்கி (2009 Just Plain Folks Music Award’ )அமெரிக்க அரசு கவுரவ படுத்திருக்கு .
,படத்தில் வரும் ''இன்னிசை அளபெடையே...'' பாட்டுக்கு.. சிறந்த பாடலுக்கான முனைவது பரிசு இந்த விருதுக்கு நம்ம இசை பிதா இலயரஜவும் ,பங்களாபேண்ட் கிராஸ்விண்ட்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்..

நம்ம இசை பிதா இளையராஜாவின் லைவ் இன் இத்தாலிக்கு 3வது சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருதும் குடுதுருகாங்க .
Just Plain Folks Music Award’ ஒரு ஆடம்பரம் இல்லாத உலகதர விருது...
இந்த விருதுக்கு மொத்தம் நாற்பத்தி ரெண்டு ஆயிரம் (42,000)ஆல்பம் போட்டிஇடிருக்கு.
மொத்தம் ஐந்து லட்சத்தி அருபதாஇரம் (5,60,000)பட்டு. அடேஅப்பா....
மீண்டும் ஒருமுறை.....'' ஜெய் ஹோ ரஹ்மான்....''

அப்பதா சத்தியமா மொக்கை...


என் முதல் மொக்கை ...

நானும் எதாவது மொக்கை எழுதலாம்னு ரெம்ப யோசிச்சு எழுதிருக்கேன்...தப்பு இருந்தா மன்னிசுடுன்ங்க மக்கா....
மேட்டரு ஒன்னு....
நாம பரிச்சையே எழுதாம பாஸ் பண்ணற ஒரே மேட்டரு...அது தான்...
நாம எவ்வளோதான் பாஸ் பண்ணுனாலும் என்னைக்காவது ஒருநாள் நம்மளயே பெயில் பண்ணற மேட்டரும்...... அதுதான்.... (எதபத்திடா சொல்லபோரே??) இருங்க இன்னொடு மேட்டரும் இருக்குல.....
மேட்டரு ரெண்டு...
கழுத்தளவு குடிச்சாலும் ஸ்டெடியா நிக்குரவே இவே மட்டும் தான் ???!!!!!***//&&$
இவே குடிச்சத எவே குடிச்சாலும் ப்லாட்டுதான்???( ஊழபயவுல ஆட்டம் ஓவரா இருக்குதே...)

என்னடா ஏதோ முக்கியமா சொல்லவர்றானு பாக்காதிங்க!!! எங்க அப்பதா இது சத்தியமா மொக்கைதான்....(நீ சொல்லித்தான் தெரியனுமா?? மேட்டருக்கு வாடா...)வந்துடே...

மொத மேட்டரு ...நம்மளைவிட்டு வெளிய போறது....(டேய்...)

ரெண்டாவது மேட்டரு நமக்கு உள்ளே போறது...(அதா....)ஆஹா கண்டுபிடிச்சுடீக.... போல(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....) இன்னும் இல்லியா...

அப்போ நானே.....

மொத மேட்டரு பிச்ச்ச்ஸ்......(அடப்பாவி...)

அட ஆமாங்க அது ஒன்னுதனாக எக்ஸ்சம் இல்லாம பாஸ் பண்ணிடே இருக்கோம்...அனா ஒருநாள் கிட்னி பெயில் ஆகி நம்மளையே பெயில் ஆக்கிடுது ...(அட ஆமால....)(அடிங்க்கொயேயால ....)

ரெண்டாவது மேட்டரு சரக்கும் பாட்டிலும்...(டேய்...அவனா நீ......)

யோசிச்சு பாருங்க...பாட்டில் புல்லா சரக்கு இருந்தாலும் அது ஸ்டேடியாதான நிக்குது அனா அத நம்ம பயலுவ குடிச்சா நிக்க முடியுதா ...??? (அவ்வளோ நல்லவனா நீ...)

இதுல இருந்து என்ன தெறியுது .....

அந்த தண்ணியா குடிச்சா கிட்னி சீகரம் பெயில் ஆய்டும் ...(அட...பார்ர்ரா...)

கட்சியா ஒரு கடி....(இது வேறயா???)

சரக்கு அடிச்சா பிச்ச்ஸ் ...வரும் அனால் ........பிச்ச்ச்ஸ்...

(டேய்...நிறுத்துடா....அடுத்து நீ என்ன கேட்டக போறேன்னு தெரியும் மகனே கைல மாட்டுனா போழதுடுவோம்....)

ஐயையோ....விடு ஜூட் எஸ்கேப் டோய்......(இதெல்லாம் தேவையா உனக்கு...)
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ (திட்டிட்டு...)

Wednesday, September 2, 2009

நாலு கண்ணு கொசு...

என்னடா இவன் தீடீர்னு கொசு, ஈ- லாம் ஆராய்ச்சி பண்ண அரம்பிசுட்டன்னு நெனைக்க வேண்டம் .அந்த அளவுக்குலாம் ரிஸ்க் எடுக்க தெரியாதுபா...

இதுஎன் பள்ளி பருவத்து அனுபவம்பா ....
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னோட கூட படிச்சவன்தான் நாலு கண்ணு கொசு.ரெம்ப நல்ல பையன் நல்ல படிப்பான்.அமைதியா இருப்பன்.லீவுல ஊர் சுத்தாம அவங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுவன்.அவங்க அப்பா விவசாயம் பாக்குறவரு.
சரி அந்த பெயர் மட்டேருக்கு வருவோம்..

அவனுக்கு கண்ணு ரெம்ப வீக் அதுனால கண்ணாடி போட்டு இருப்பன்.அப்போ அவன எல்லோரும் நாலு கண்ணானு கூப்டுவோம்.
இந்த கொசு பேர் வந்தது வேடிக்கையான சம்பவம்...ஒரு நாள் மணி எட்டு இருக்கும் அவங்க மாமா வீட்டுக்கு வந்துருந்தான் எங்க வீட்டுக்கும் அவங்க மாமா வீட்டுக்கும் கொஞ்ச தூரம்தான். அங்க வந்தா என் வீட்டுக்கு வராம போக மாட்டான். அப்போ நானும் அவனும் ஹையா நடத்து போயிட்டு இருந்தோம். ஏதோ காமெடி சொல்ல. சிரிச்சு வேகமா மூச்சு இழுத்தான் கொசு வாய்குள்ள உள்ளே போய்டுச்சு...கொஞ்ச நேரம் இரும்பி இரும்பி பாக்குறான் உள்ள போனது போனதுதான் வெளிய வரவே இல்லை...அன்னில இருந்து அவனுக்கு நாலு கண்ணு கொசு னு பேரு வச்சுட்டோம்.


அப்றம் அடிக்கடி வீட்டுக்கு வருவான் ரெண்டுபேரும் சேந்து தட்டான் பிடிக்க போவோம்,மாங்காய் பறிக்க, இப்டியே ஊர் சுத்துவோம் படிக்கும் போதும் ஒன்னதான் எங்க வீட்டு மாடிதான் அப்போ எங்க உலகம்....
தீடீர்னு ஒருநாள் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் விஷயம் சொல்லணும் நே...சொல்லிட்டு இருந்தான். ஒரு நாள் சொல்லியே புட்டான் ...

''நான் உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருக்குற பானு பொண்ண லவ் பன்றேண்டானு'' .டீன் ஏஜ் ஹர்மொன்ஸ் கபடி ஆடுற வயசு .எனக்கு ஒரே அதிர்ச்சி இவனா? இப்டி பேசுறான் ???!!!! அப்போ எனக்கு தெரிஞ்சு காதல்னா பெரிய கெட்ட வார்த்தை என்னால அத ஏத்துக்கவே முடியல...

அடுத்த நாள் இருந்து அவன்கிட்ட பேசுறதே இல்லை அவன் கூடவே வந்து ''டேய் சாரி டா இனிமேன் அப்படி செய்ய மாட்டேண்டா ப்ளீஸ் என்கூட பேசுடா'' டெய்லி கெஞ்சுவான் என்னால ஜிரணிக்கவே முடியல .அவன் இதுக்க்காகதான் டெய்லி வீட்டுக்கு வந்தனா??இதுக்காகத்தான் என்கூட நண்பன பழகுனனா??நல்ல பையனாச்சே...ஏன் இப்டி மாறுனான்...அவன பாக்கும் போதெல்லாம் எனக்கு கஷ்ட்டமா இருக்கும். நான் பேசாம இருக்குறத நெனச்சு ரெம்ப கவலை பட ஆரம்பிச்சுட்டான் சரியா படிக்குறதும் இல்ல...எனக்கு மனசே கேட்ட்கல...நான் ஒரு முடிவு பண்ணுனேன் ஓகே அடுத்த வாரம் அவன்கிட்ட இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்னு சத்தியம் வாங்கிட்டு பழம் விட்டுடுவோம்னு ....

அடுத்த வாரம் திங்கள் அவன் ஸ்கூலுக்கே வரல...நான் வீட்டுக்கு போனா என் அம்மா ''சொல்லறங்க டேய் உன்கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த குமார் பையன், அவன நேத்து பாம்பு கடிசுருச்சம்டா அவங்க மாமா சொன்னாரு. நீ சைகிள எடுத்துட்டு போய் பாத்துட்டு வாடான்னு'' சொல்ல எனக்கு ஒண்ணுமே புரியல'' எப்பமா??'' ....''மத்தியானம் அவங்க மாமா சொன்னாருடா. போய் பாத்துட்டு சிக்கரம் வந்துருடா....னாங்க ... நான் வேகமா பதட்டதோட போய் பாத்தா அவங்க வீட்டு முன்னாடி ஒரே கூட்டம் .
அவங்க அப்பா என்ன பாத்ததும் புடிச்சுட்டு அழுறாரு...அவங்க அம்மா ஒரு விசும்பளோட ''தம்பி பாருடா குமார பாருடா, ரெண்டுபேரு ரெட்ட புள்ளமாறி திரிவீகலேடா. இப்போ பாருடா இவே எப்படி கேடக்கானு .....''
நான் பார்த்த முதல் மரணம்... நான் அழுத முதல் மரணம் ...நான் உணர்ந்த முதல் மரணம் ....அவன் முகத்துல ஏதோ ஒரு சோகம் தெரிஞ்சது எனக்கு மட்டும்... என்கிட்ட கடைசி வரைக்கும் பேசமட்டிண்டேல... போட நான் போறேன்னு அவன் சொல்லறமாதிரி தோனுது...
அடுத்த நாள் ஸ்கூல் லீவு விட்டுடாங்க...அனந்த சோகம் ரெம்ப நாள் என்னைவிட்டு போகவே இல்ல...
ஆம் இன்று அவனுடைய 14-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றும் அந்த வலி உணர முடிகிறது...
அவனுக்காக இந்த பதிவு....
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ....

என் 2-ஆம் காதலி...

ஓர் அதிகாலை மணி ஆறு இருக்கும்...ஒரு அழகி, கொலுசை பேசவிட்டு அவள் மட்டும் மௌனமாய் என் படுக்கை அறைக்குள் நுழைந்து ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று எழுப்ப....''ப்ளீஸ் டா ரெம்ப டயர்டா இருக்கு...''கொஞ்சநேரம் அமைதிக்குப்பின் என் கன்னங்களை ஈரமாகி ..முதுகில் ஏறி ஒருமுறை இறுக்க அணைத்துவிட்டு என் தலையனையில் அவளும் தலை வைத்து படுத்து கொண்டாள்... அடுப்படியில் இருந்து என் அம்மா..."அங்க யார்கிட்டடா பேசிட்டு இருக்கே..." ஐயோ!!!!.

முதல் மடியில் இருந்து அவளின் அம்மா..."எந்திச்ச ஒடனே எங்கடீ போற..சொல்ல சொல்ல எவ்ளோ தைரியமா போரபாரு ..." போச்சு... அவள் எதையும் கண்டுகொள்வது போல்தெரிய வில்லை...அப்படியே ஒருவருடம் நினைவுகள் பினோக்கி நகர்ந்து போனேன்...

அவள் பவித்ரா.அழகான பெயர் அவளும் அப்படித்தான்.. நாங்கள் புதுவீடு குடிபோய் இருக்கிறோம்.அம்மாவுக்கு படியேற கஷ்ட்டம் என்பதால் கிழ்த்தளமாய் தேடி தேர்ந்துஎடுத்த வீடு...அவளுக்கு முதல் தளம் முதல் நாள் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு என்னை வெறித்து பார்த்தால்...அருகே அவளின் பாட்டி. முதல் பார்வையிலேயே...அவளை பிடித்து போனது.அடுத்த நாள் அவளின் பாட்டி கிழே வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க அவளும் உடனிருந்தால் என்னை பார்த்தும் பாட்டி, ''உங்க பையனா??? என்ன பண்றாரு..''விசாரித்தார்.அம்மா விளக்கி சொல்ல அவள் மட்டும் என்னையே பார்த்தபடி இருந்தாள்...பாட்டிய்டம் கேட்டேன் ''இவள் யார்??''என்று..

''என் பேத்திபா'' அவளை பர்ர்த்து ''இங்கே வா ''என்றதும் அழுதுவிட்டாள் ...எனக்கு பயம்...அவள் அப்டிதாம்பா என்று அவளை அழைத்து கொண்டு போய்விட்டார்.

ஒரு விடுமுறை நாள் அதேபோல் ஒருசமையம்...மேலே போன் ஒலிக்கும் சத்தம் கேட்டதும் பாட்டி வேகமாய் மேலே சென்று விட்டார்.அங்கே அவளும் நானும் மட்டும் சுற்றி முற்றி பார்த்து விட்டு ஓ..... வென அழ ஆரம்பித்தாள்.எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவளை அப்படியே கதற கதற கையில் அள்ளி மொட்டை மாடிக்கு சென்றேன்...ஐயயோ...!!!!

ஹே ....அங்க பாருமா...காக்கா ..எங்கே புடி....புடி...காக்காவ புடி..... என்று தாஜா பண்ணி அவளை சிரிக்கவைத்தேன்....அன்றில் இருந்து அவளும் நானும் ரெம்ப க்ளோஸ்....பிரெண்டு .

அட என்ன பாக்குறிங்க பவித்ரா பிறந்து அப்போது பத்து மாதங்கள் முடிவடைந்து இருந்தது.... ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று மீண்டும் எழுப்ப...எழுந்து அவளுக்கு ஒரு உம்மா கொடுத்து அந்தநாள் இனிதே ஆரம்பம் ஆனது.


அவளின் முதல் பிறந்தநாள் நான் சென்னையில் இல்லை மதுரையில் இருந்தேன் வந்ததும் அன்று அவர்கள் எடுத்த போட்டோ களை கட்டினர் அவர் அம்மா...
என்னை வேருபெற்றுவதர்காகவே அவளும் என் அக்காவும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவளுக்கு வாங்கிவந்த கரடி பொம்மையை கொடுக்க எனக்கு ஒரு உம்மா கொடுத்து கட்டி கொண்டாள்... இப்போது வயது இரண்டை தாண்டி விட்டது.

தினமும் என்னை வந்து இப்படி எழுப்புவது அவள் தான்.
என் அறையில் சத்தமின்றி நுழைய அவளுக்கு மட்டுமே அனுமதிக்க பட்டிருந்தது .
அவளின் அம்மா அடிக்கடி சொல்வார்கள் யார்கிடேஉம் போகம எப்பவும் அழுதுகிட்டே இருப்பா நீங்க வந்ததுல இருந்து நல்ல பிள்ளைய ஆய்ட்டா...நானும் ப்ரீயா ஆய்ட்டேன்-னு...
பினொரு நாளில் அவளை மழலை பள்ளியில் சேர்த்து விட்டார்கள். தினமும் அவள் மழலை வாய்மொழி ரைம்சும்..கதையும் ...
கேட்டக்க கேட்டக ஆனந்தம்தான்...''புஜ்ஜி'' இது நான் அவளுக்கு வைத்த பெயர் அதையே அவள் எனக்கு மாற்றி வைத்து ''புஜ்ஜி அண்ணா...புஜ்ஜி அண்ணா...'' என்று அழகாய் அழைப்பாள்.
பினொரு நாளில் வெளிநாட்டில் வேலைகிடைக்க அவளை பிரிந்த நாள் ..

அதிகாலை நல்ல பனிமூடிய நாள் அவளை விமான நிலையம் வரை அழைத்து போக முடியாத சுழ்நிலை அறை தூக்கத்தில் எழுந்து வந்தவளுக்கு ஒன்னும் புரியவில்லை .அவளின் அம்மா ''அடியே புஜ்ஜி அண்ணா...ஊருக்கு போகுதுடீ டாட்டா சொல்லு'' என்றார் .அவளும் ''சிக்கிரம் வா'' -னு டாட்டா சொல்லி ஓரிரு உம்மா பரிமாறி கையசைத்து பிரிந்தோம்... கண்கள் கசிய...

இப்போது அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிரளாம். இப்போது போனில் ''புஜ்ஜி அண்ணா நல்லா இருக்கியா ??? சாப்டியா???''அவளின் அம்மா சொல்ல சொல்ல அவளும் கேட்ட்கிறாள்...எனக்கு டெட்டி பியேர் வாங்கிட்டுவா...இப்போ
ஒரு தம்பி பாபாஅவளோடு இருக்கானாம் ...
இப்போது நினைத்தாலும் மனம் மழலையாகி போகிறது...
ஐ லவ் புஜ்ஜி குட்டி ....

மனசுல பட்டத சொல்லிட்டு போங்க...

Tuesday, September 1, 2009

எடை கூடிப்போன இதயம்...



உன்னை நினைத்து
நினைத்து கனத்து எடை
கூடிபோனது இதயம்.
இத்தனை நாள் -என்
கதறல் கேட்காத உன்
செவிட்டு இதயத்திடமா
கவிதை பாடி இருக்கிறேன்.!?
உயிர் துடிக்கும் போதெல்லாம்
ஊமையாய் இருந்துவிட்டு
இப்போது திருமண செய்தி கொண்டுவந்திருக்கிறாய் ...
உன்னை மறக்கச்சொல்லி
உரக்க சொல்லிவிட்டு போனாய்
இதற்குமேல் ,
இணைவதென்றால் எப்படியும்
இணையலாம் ஆனால் -எத்துனை
மரணங்கள் நடக்குமோ -எத்துனை
மாணங்கள் பறக்குமோ தெரியாது.
இருக்கட்டும் அத்துனையும்
அப்படியே இருக்கட்டும் -நம்
காதலை நார்நாராய் கிழித்து
தோரணம் கட்டி
தொடங்கு -இனிய
இல்லறத்தை
இந்த காதல்
இன்னும் வாழ்கிறது
இந்த இதயத்தில்....
Related Posts with Thumbnails