Wednesday, December 30, 2009

பலூன்கள் விற்பனைக்கு அல்ல...


தலைப்பு எழுதி கவிதைக்காக காத்திருந்தேன்...
வெகு நாள் திருவிழாகாக  காத்திருந்து தன் மொத்த சந்தோசத்தையும் ஒரு ரூபாய் பலூனில் ஊத்தி தீர்க்கும் விளையாட்டு பிள்ளை போல் மணம் கடந்த நாட்களை மட்டுமே அசைபோடுகிறது, கவிதை வந்த பாடில்லை.


 என் நினைவுகளை ஊதி   பெரிதாக்கி வலை பூவில் அலங்கரித்து சேர்த்து புது வருடம் வரவேற்க தோன்றியது.


எப்படியும் விற்று விட வேண்டும் என்று கால கள்வன் கையில் இருக்கும் காற்றடைத்த பலூனும்,எப்படியும் வெடிக்கும் அல்லது ஓட்டை விழுந்து காற்று போகும் எனதெரிந்தும் விரும்பி வாங்கிவந்த பலூனை போலவே  அன்னையின் வயிர் ஊதி வாங்கிவந்த இந்த வழக்கை.


நாம் வெகு நாட்கள் ஆசையாய் ஊதி வைத்த நியாபகங்கள் அழுகையாய் வெடித்து சிதறும் தருணங்களும், கால சுழற்சியில் மெதுவாய் காற்று போய் இருந்த சுவடே தெரியாமல்   துவண்டு போகும் தருணங்களும், ஹைட்ரஜன் அடைத்து உயரே பறக்கும் சந்தோஷ தருணகளும்  கல்லடி பட்டு கடற்கரை மணலில் வெடித்து விழும் வண்ணம் பூசிய தருணங்களும்  எப்படி ஒத்து போகிறது.


பெரிதாய் ஊதி வீட்டுக்குள்  விட்டாலும் காற்றாடியில்   பட்டு கிழிந்து போகும். வெளியே விட்டாலும் கல்லோ முள்ளோ கிழித்து விடும் என்று பயந்து .பாசம் எனும் நூலில் கட்டி பத்திரமாய் பாதுகாத்து பறக்க வேண்டிய  தூரம் வரை பாதுகாப்பாய் நம்மோடு பறந்து பாதியில் விட்டு போகும் பந்தங்கள்.


போதும் என்ற மனமில்லாமல் ஊதி ஊதி பெரிதாக்கி வெடித்ததும் வெடித்து அழுது ,கிழிந்த ஒவொரு துண்டிலும் சிறு சிறு முட்டை செய்து மகிழ்ச்சி கொள்ளும் அதே சிறு பிள்ளை மணம்.


இதய  வடிவ பலூனை இனியவளுக்கு கொடுத்து அதை அவள் இன்னும் பத்திர படுத்தி  வைத்திருக்கிறாள் என்றதும் அந்த பலூனை போலவே பெரிதாய் துடித்த  இதயத்தின் சுகமும்,அவள் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பலூன் ஊதி அலங்கரித்த மேடையும்.அவள் பிள்ளை ''மாமா ஊதி கொடு'' என்று நீட்டிய அந்த பலூனும்.


வந்து போகிரதேன் நினைவில்.நினைவுகள் கனமில்லாம இருந்தாலும் நிறைய ரணங்களோடு வெடித்து முட்டி வெளியேற துடித்து கொண்டிருகிறது.

பி.கு :
ஒரு தலைப்பை எழுதி  விட்டு அத பில்டப் பண்ண நான்பட்டபாடு...
எப்பா...முடியல சமீயோவ்வ்வ்...கடைசியா என்ன  சொல்றனு கேட்டா எல்லோரும் நிறைய பலூன் ஊதி கட்டி அலங்காரம் பண்ணி  புதுவருடத்தை கொண்டாடுங்கோ....தலைப்பில் பாதி வைரமுத்து ஐயா கொடுத்தது...பதிவுக்கும் பலூனுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில்  சொல்லவும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனைவருக்கும்.     
                               

Saturday, December 26, 2009

ஓமகசியா....ஓஓஓஓ....மகசியா....ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க..... என்ன மக்கள்ஸ் ஒண்ணுமே புரியலையா....இது எல்லாம் நம்ம தமிழ் படங்கள்  பாட்டுல வந்த வார்த்தைகள்...இப்போ தமிழ்படம்-னு ஒரு படம் வரபோகுதுல...

அந்த படத்துல ஒரு பாட்டு ,இப்டி நமக்கு புரியாத வார்த்தைகள் மட்டும் எடுத்து முழு பாட்டும்  எழுதி  இருக்காங்க.... என்ன கொடுமை சரவணன் இதுனுதான் கேக்கதொணுது...தமிழ்ல வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போச்சோனு ஒரு சந்தேகம்.
நம்  தமிழுக்கு இப்டி ஒரு சோதனைய???பாட்ட பாடுறது ஒரு பெரிய பாடகர்...

மக்கள்ஸ்...கேட்டுட்டு உங்கள் கருத்த  (கதறுங்க)சொல்லுங்க.... படம் ரெம்ப வித்யாசமா இருக்குனு ஒரு விளம்பரம் வேறு  இதுதான் வித்யாசமா???
ஏதோ கொஞ்சம் எழுதுனாங்க போருதுகிட்டோம் இப்டி ஒரே அடியா போட்டா  தமிழ்   இனி மெல்ல சாகாது..._______________________

பொதுவா சினிமா பதிவு ஏதும் எழுதுறது  இல்ல...என்ன பண்றது என் ஆதங்கத்த உங்க கிட்டதான கொட்ட முடியும்...நான்வேற எங்க போவேன்....உங்க ஆதங்கத்தயும் கொட்டிட்டு போங்க...நாம எல்லாம் எவ்ளோ பாவம்....இல்ல...

இதுவும் பிடிக்கும்...

ஆறு மனமே...ஆறு...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

ஆறு மனமே...ஆறு...
என்னடா இவன் புதுவருஷம் வரபோகுது சோகமான தலைப்பு போட்டு இருக்கானேன்னு   பார்க்க வேண்டாம்...இன்னும் ஆறு  நாள் தான் இருக்கு அப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு (ஆமா யாருக்கும் தெரியாதத  சொல்லிடியாக்கும்...)


அனால் இந்த தலைப்பு உள்மனசின் சோகம் கூட சொல்றமாதிரி இல்ல???(ஆமா...ஆமா..)இந்த வருடம் முடிய இன்னும் ஆறு நாள் தான் இருக்கு அனால் இங்க அந்த அறிகுறியே தெரியல...நம்ம ஊர்ல இருந்தா இப்போ  இருந்தே ஆரமபிசுருபோம் நம்ம அழிசாடியத்தை.


அதெல்லாம் மிஸ் பண்றதால என் மறக்க முடியாத நியூ இயர் அனுபவம் சொல்ல ஆசை படுறேன்.(ஏன்டா படுத்துற சொல்லு...)
மூணு வருசத்துக்கு முன்னாடி நியூ இயர் டே...
வீட்டுல  எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் முடிவு ,பீச் நிறைவாட்டி போயாச்சு வேற  ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கணும்...அந்த பொறுப்பு எப்பவும் எனக்குத்தான்...நான் ரெம்ப  யோசிச்சு கண்டு புடிச்ச இடம்தான் கிண்டி சிறுவர் பூங்கா...(என்னவோ நீயே கண்டுபிடுச்சமாதிரி சொல்லற...மேட்டருக்கு  வா..)எனக்கு குழந்தைகளை ரசிக்க பிடிக்கும்(அது இல்ல உன் சொந்தகாரவங்க பாதி அங்கதான இருக்காங்க ) சோ என்னோட சாயிஸ் எப்பவுமே அதான்...


கூடவே மேல் வீட்டு அக்காவும் வர்றேன்னு சொன்னாங்க அவங்கதான் புஜ்ஜியோட அம்மா (புஜ்ஜி யாருன்னு தெரியணும்னா என்னோட இந்த பதிவ படிச்சு பாருங்க...)அம்மா,அக்கா,புஜ்ஜி குட்டி,  (நான் அவளை தூக்கி கொண்டேன்),அவங்க அம்மா,அவங்க முத்த பொண்ணு கோபிகா அவளுக்கு அப்போ 2 /12 வயசு. டீம் ஹெட் நான் எல்லோரும் கெளம்பிட்டோம்.


அங்க போய் எல்லோரு சேர்ந்து ஒரு சின்ன விளையாட்டு போட்டி நடத்துனோம்.அதுல எந்த சுவாரஸ்யமும் இல்ல.அங்க வந்த மூணு குட்டி பசங்க இல்ல புட்டி பசங்க!!! ஆம் அரை போதையில் மூவரும் நியூ இயர் விஷ் பன்றேன்ற பேர்ல பெண்களை  கிண்டல் பண்றதும் அவர்கள் அருகில் போய் ''ஹாய் மாமாக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லு....''னு சொல்லி தொல்லை  குடுத்துட்டு இருந்தாங்க.இப்படி ஒரு பொது இடத்தில நகரீனம் இல்லாம நடந்த்துகிட்டது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. அதை எதிர்த்து  கேட்ட ஒருத்தருக்கும் அந்த பசங்களுக்கும் பெரிய சண்டையே வந்துருச்சு.எல்லோரும் அதையே வேடிக்கை பாத்துட்டு  இருந்தோம்.திடீர்னு புஜ்ஜி அம்மா கோபிகா எங்கனு கேட்க எல்லோரும் அக்கம் பக்கம் பார்க்க கோபிகாவை காணோம்....


அனைவரும் பதறி போய் ஆளுக்கொரு திசையாய் தெறித்து ஓடினோம்.புஜ்ஜி அம்மா அழுது கொண்டே தேடுறாங்க. நான் பூஜ்ஜிய தூக்கிட்டு தேடுறேன்.எந்த  ஒரு குட்டி பொண்ண பார்த்தாலும் அது கோபிகா மாதிரியே தெரிது.ரெம்ப நேரமா கிடைக்கவே இல்லை.அங்க இருந்தா எல்லோரிடமு விசாரிச்சு பாக்குறோம் ம்ம்கும்...


அங்க இருக்குற அலுவலகத்தில்  புகார் கொடுத்து அவங்களும் தேடுறாங்க.நான் ஒரு ரவுண்ட் அடிச்சு மீண்டும் நாங்க அமர்ந்த இடத்துக்கே திரும்பினேன்.யாரோ ஒரு ஆள் ஒரு குட்டி பொண்ணுக்கு  ஐஸ்க்ரீம் குடுக்குறான் அவ வாங்காம அழுதுட்டே இருக்கா.அது கோபியோனு சந்தேகத்துல கிட்ட போய் பார்த்தா அவளேதான்.கோபின்னு கூப்பிட்டதும் ஓடிவந்து  என் கால்களை கட்டி பிடிசுகிட்டா.  அப்பாடா... அப்போதான் உயிரே வந்துச்சு.''என்ன விட்டது  எங்க போன ...''மழலையில் கேட்க நான் அவளை கட்டி கொண்டேன்.அந்த ஆள் எங்கனு பார்த்தா அவன் மாயம்...நல்லவேளை இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்.

பின்  மற்றவர்களுக்காய்  காத்திருந்து யாரும் அங்கு வரவில்லை மீண்டும் அலுவலகம் போய் எல்லோரும்   ஒன்று சேர்ந்தோம். அப்போது அந்த ஆள் பற்றி யாரிடமும்  சொல்லவில்லை மேலும் பயந்து விடுவார்கள் அல்லவா?இன்னும் யாருக்கும் தெரியாது...

இப்படி அந்த வரும் பரபரப்பாய் வந்த  வருடம். இப்போ அந்த  நியபகங்களோடு இதோ எந்த ஆரவாரமும்  இல்லாமல் இன்னொரு வருடம் வரவேற்க தயாராய்...                                                                                 


Monday, December 21, 2009

புன்னகை திருடி...


பூக்களை திருடி புன்னகைக்க 
கற்று கொண்டவள் நீ.
இப்போது பூக்கள் கூட எனக்காய்
 புன்னகைப்பது  கிடையாது. 


சிரிக்க மறந்து விட்டேன்.
சில்லறைக்கு   கூட சிரிக்க மறுக்கிறேன். 
சிந்தனை சிறகு விரித்து
சிட்டு குருவியாய்
சிறகடித்து பறந்தவன் நான்.
நீ சிறிதாய் சிரிக்கும்போது கூட
சில்லென சிலிர்த்து
சிகரம் போய் வருபவன் நான்.


சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.


சின்ன சின்ன
சிறகுகள் விரித்து
சிட்டாய் பறக்கும்
பட்டாம் பூசியே 
அவளை பார்த்தால்  .
சிணுங்கள் சிரிப்பை
சிதறாமல் சேர்த்து வரச்சொல்.
சிரிக்க மறந்ததால் சீக்கிரம்
செத்து விடுவேன் போல் தெரிகிறது...                                                                                                          
இங்கே... இதையும் படிங்க...                                                    

ஒற்றை காலில்...ஒற்றை காலில் ஓடி ஆடி
உலக வார்த்தை எல்லாம்
உமிழ்ந்து விட்டு
ஒன்றும் அறியாதவன் போல்
ஓரமாய் சரிந்து கிடக்கிறது - என்
ஒற்றை ரியால் பேனா.


ஒற்றை காலில்
உயரே நின்று
உலகுக்கு மனம் வீசி
உனக்காய் காதல் பேசி
ஆபத்தான அழகை
முள் குத்திக்காட்டும்
ஒற்றை ரோஜா...


ஒடிந்து வளைந்து நெளிந்து
ஒவ்வொரு இலையும்
உதிர்ந்த பின்னும்
ஒடித்த ஒவ்வொரு கிளையும்
ஊண்டி வைக்கும்போது  
தனித்தனி மரமாய் தளீர்  விடுகிறது
ஒற்றை முருங்கை மரம்...


இரண்டு கால்கள்
இரும்பாய் இருந்தும்
இயன்றதை கூட செய்யாமல்
இல்லத்தரசியை
இயங்கவிட்டு - இருந்த
இடத்திலே இன்பமாய்
இருபதுக்கு இருபது பார்த்து
இந்தியா தோற்றதும்
இவங்கேலாம் இந்தியர்களா??
இழிவாய் பேசும் இவன்.                                          

Friday, December 18, 2009

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...


ரயில் நிலையத்தின் சந்தோஷ சங்கீதம்.மூன்று தடவை மூன்று மொழிகளில் முழங்கி விட்டு, தென்னகத்து அதிவேக சூப்பர் ஸ்டார் வைகை எக்ஸ்ப்ரஸின் வருகையை உறுதி செய்து ஒலிபெருக்கி ஊமையானது. முன்பதிவு சீட்டை உற்று பார்த்து விட்டு ''எஸ் '' 10 கோச் தேடி ஜன்னல் ஓரமாய் கம்பி பிடித்து அந்த ஆனந்த பயணத்திற்கு தயார் ஆனேன்.

கையில் அந்த வார ஆனந்தவிகடன்.இசை பிரியன் என்பதால் பாட்டுகள் அடைத்த பாகெட் பாட்டு பெட்டியும் கூடவே.கொஞ்ச நேரம் விகடனை புரட்டி முழிக்கி போகிறேன்.தீடீரென ரயிலின் வேகம் அதிகரிக்க உள் மனதில் ஒரு பூரிப்பு. நம்ம வைகை என்னமா காற்றை கிழித்து புயலாய் போகிறான்!!மாலைக்குள் மதுரை வந்துவிடும் போலிருக்கே...

முடி கலைத்த காற்றை ஏளனமாய் பார்த்துவிட்டு ஜன்னல் வெறித்தால் காட்சிகள் ஏதும் கண்ணில் சிக்கவில்லை வெள்ளை நிறத்தில் .ஒரே வெறுமை, ரயிலில் போகும் உணர்வே அற்று போனது...
சற்று நேரத்தில் டி.டி.ஆர். உடையில் ஒரு வெண்தாடி வேந்தர்,அருகே வந்தமர்ந்து அடடா இன்று நீ மாட்டி கொண்டாயா...சரி சொல் உன் கடைசி ஆசை என்ன??? ஒன்றும் புரியாமல் யார் நீங்கள்?? எதற்கு அப்படி கேக்குறிங்க? வழக்கமா டிக்கெட் தானே கேட்பீங்க,இது என்ன? கடைசி ஆசை!! கேட்குறீங்க? நீ டிக்கெட் எடுத்து விட்டாய் என்று தெரியும்,தெரிந்துதானே உன் ஆசையை கேட்டேன் . என்ன? சொல்றீங்க!! எனக்கு ஒண்ணுமே புரியல!!!???நீ இறந்து விட்டாய் நாம் இப்போது தேவலோகம் செல்கிறோம்,இடையில் ஒரு சிறு பயணம் அதில் உனக்கு எதாவது ஆசை இருந்தால் நிறைவேற்ற முயற்சிப்பேன்.

ம்ம்ம்ம்...சரி சரி சொல் என்றார்.ஐயோ !! என்னால் நம்ப முடிய வில்லை.பொய்  சொல்லாதிங்க நீங்க யாரு??அட என்னடா இவன்..சரி கொஞ்சம் கீழ பாரு...பார்த்தால் புள்ளி,புள்ளியாய் சில உருண்டைகள் அதை சுற்றி புள்ளி வைத்து  இணைக்காத கோலமாய் மின்னும் புள்ளிகள்.இதை எல்லாம் கிழித்து பறந்து கொண்டிருக்கு நான் இருக்கும் ஒரு ஹைடெக் வாகனம்.அருகே வெண்தாடி வேந்தர்.இந்த மாயா ஜாலங்களை பார்த்து உயிர் பிரிந்ததை உறுதி செய்து உலக வார்த்தைகளை எல்லாம் ஒன்று கூட்டி ஓ...வென அலறுகிறேன் வாய் திறந்திருக்க, வாய்ஸ் மட்டும் வரவே இல்லை...

அருகில் இருந்தவரின் கட்டை விரல் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி பிடித்திருகிறது.உற்று பார்த்தால் ''ம்யுட்'' என்று எழுதி இருக்கு.அவர் சிறு புன்னகை ஒன்றை எடுத்து வைத்து உன் ரிமோட் இப்போ என் கையில்...அடங்கு, என்றார்.
நேரம் முடிய போகிறது உன் ஆசையை சொல் இந்த தருணம் திரும்ப வராது என்றார்.சுதாரித்து கொண்டு எனக்கு என் உயிர் திரும்ப வேண்டும் என்றேன்.அடேய் உன் சேனலை ஆப் பண்ணி நேர நரகத்துல ஓபன் பண்ணி விட்டுருவேன்...ஒழுங்கா நடக்குறத பேசு.நமக்கு பேச்சு (கம்மி) சரியாய் வராது நான் ஒரு கடிதம் எழுதுறேன் என்றேன். எழுதுறதா!!? இந்தா, மெயில் பண்ணி விடு அது டெலிவெரி ஆய்டும் என்று , விரலால் என் எதிரே ஒரு கட்டமும் கையருகே ஒருகட்டமும் போட்டு விட அது லேப்டாப் போல் ஆனது.விசை பலகையில் எல்லா எழுத்துகளும் தமிழில் ஆ!!அலர்ஜி என்றதும் ஆங்கிலம் வந்து விழுந்தது. ஆரம்பித்தேன்...
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அம்மா...சவ்கியமா..???
நானும் சாவை தொட்டு விட்டு சவ்கியமாய் தான் இருக்கிறேன்.
உன்னை சந்திக்க ஆசையாய் வந்த என்னை சாவு சந்தித்து விட்டது. என் வாழ்வின் எல்லா மீதி பக்கங்களையும் கிழித்து விட்டு கடைசி பக்கத்தில் கடைசி ஆசை கேட்டு பக்கத்திலே இருக்கிறான் சாவின் சகோதரன்.நீ ஆசையாய் கேட்ட தங்க சங்கிலி உன் தங்க கரம் தருவதற்குள் தட்டி கொண்டு வந்து விட்டானம்மா.உன்னை தாயாய் தந்த தாரணி படைத்தவன்.

இன்னொரு தடவை உன் கருவில் உருவெடுக்க ஆசைதான்,நீதான் என்னை பெற்றதுமே கரு பையை களைந்து விடாயாமே??? ஏன்மா??கடவுள் எவ்வளவு கல் நெஞ்சகாரன் பார்மா...கடைசி ஆசை கூட கடிதத்தோடு முடித்து கொள்ள சொல்கிறான்.
அம்மா..கண் கலங்கி விடாதே,பெண்ணாய் பிறந்து நீ, அழுததெல்லாம் போதும்.உன்னை எத்தனை முறை நானே கலங்க வைத்திருக்கிறேன்... இன்னும் பாவம் செய்வது இறைவனுக்கு பொறுக்க வில்லை போல முன்னறிவிப்பு இல்லாமல் இழுத்து வந்து விட்டான்.உலக சொந்தங்களை எல்லாம் எனக்கு சொல்லி வைத்தாய். உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை மா...சொர்க்கம் சென்றாலும் உன் மடிக்காய் தலை தூக்கி காத்திருப்பேன் அம்மா...
உன் அன்பு,
மகன்.
-----------------------------------------------------------------------------------
அன்புள்ள அப்பா நலமா?
நீங்கள் இருக்கும் தைரியத்தில் மதில் பிடிக்காமல் நடை பழகிய நானும் நலமாய் இருக்கிறேன்.அதே தைரியத்தில் தான் இன்று, தாரணி பிடிக்காமல்.தாரணி காப்பவன் தந்தி அடித்தால் விரைகிறேன்.நீங்கள் அழ மாடீர்கள் என்று தெரியும்.ஆண்பிள்ளை அழும் கொள்கையில் உங்களுக்குதான் உடன்பாடு இல்லையே.உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் இறந்ததாய் ஒருபோதும் எண்ணி விட வேண்டாம்.நீங்கள் எனக்கு கொடுத்த அந்த தைரியத்தை திரும்ப உங்களிடமே விட்டு போகிறேன் உங்களை தேற்றும் வலிமை அதற்க்கு அதிகம்.
அன்பு,
மகன்.
--------------------------------------------------------------------------------
அன்புள்ள அக்கா.எப்படி இருக்கிறாய்??
எதிலும் நீதானே முந்தி கொள்வாய் இப்போது பார்த்தாயா நான் முந்தி கொண்டேன்.எனக்கு இரண்டாம் தாயாய் இறுதிவரை இருந்தவள் நீ...உன் ஒவொரு பருக்கைளும் பங்கு கொடுத்தவள் நீ...உன் பங்காய் ஒரு பாரத்தை விட்டு செல்கிறேன்.பார்த்துகொள்.நமக்கு உயிர் தந்த இரு ஜீவன்கள் உடைந்து விடாமல் பார்த்துகொள்.இன்னும் ஒன்று, மாமா எங்கே என்று மல்லிகை சிரிப்பில் மருமகள் கேட்பாள் மறுநாள் வருவதாய் சொல்லி வை.அந்த மறுமைநாள் வரும் வரை....
அன்பு,
தம்பி.
------------------------------------------------------------------------------
கடைசியாய்...
எவனோ ஒருவனுக்கு மனைவியாய் இருக்கும் இவளே...
உனக்கு ஒரு வேண்டுகோள்.காதல் கனவில் இருந்து மீழாமல், இன்னும் கன்னியாக இருப்பதாய் கேள்வி. ஒருவருக்கான மூச்சை இருவரும் பங்கு போட்டு திரிந்த தருணத்தை எல்லாம் தகர்த்து விடு.
பெண்மையின் எல்லா தகுதியும் உடையவள் நீ...
தாய்மைக்கு மட்டும் ஏன் தண்டனை போட்டு கொள்கிறாய்.யார் கண்டால் நானே உன் கருவாய் உருவாகும் வரம் வாங்கி வந்தாலும் வருவேன்.தாய்மையும் தரிசித்து வா.
வாழ்த்துகள்.
அவன்,
இவன்....
-------------------------------------------------------------------------
போதும் என்று,தலையில் தட்டி எழுப்பினான் பக்கத்து ரூம் பாஷா.
அரை உறக்கத்தில் ... எங்கோ ஒரு குரல்...
பயணிகளின்  கனிவான கவனத்திற்கு...

இதையும் படிங்க...நீ,நான் மற்றும் நமக்கான வானம்...

Wednesday, December 16, 2009

களவு போன கன்னிக்கவிதை...


எனக்கே எனக்காய் எழுதிய கவிதை;
என் உயிர் தொட்ட அழகு கவிதை;
என்னை உயிர் தொட அனுமதித்த கவிதை;
ஏழு ஜென்மமும் இணைந்தே இருப்பேன் என்று,
எழுதி தந்த கவிதை.

காலம் காலமாய் என்
கனவுகள் சுமந்த கவிதை;
கனவில் புகுந்து,
காதல் சொன்ன கவிதை;
காதலின் கற்ப்பை கடைசிவரை,
காப்பாற்றிய கவிதை;
காதல் கலவர படும் பொது,
கரம் பற்றி காத்த கவிதை;
காற்றில் கலந்து,
சுவாச பையில் சுகந்தமாய்
சுற்றி திரிந்த கவிதை.

காணவில்லை...
காவு கொடுத்து விட்டோமோ என்ற கவலை...
கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...
காமன் வந்து கடத்தி இருப்பானோ??இல்லை,
காதல் கதறினால் கவலை கொள்வானே அவன்.
கடவுள் கடத்தி இருப்பானோ??இல்லை,
கவிதை கண்டு கொடுத்தவனே அவன்தானே.
கலவர படுகிறதேன் காதல்...

கற்ப்பனை குதிரை ஏறி,
கடிவாளம் பிடித்து,
கனவுகளை கூட்டிக்கொண்டு,
காற்றில் விரைந்து போகிறேன்;
காணவில்லை.

கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...

பூமியில் புதையலாய்
புதைந்திருப்பாய் என்று;
பூமி பிழந்தும்- பிரபஞ்சம் அலைந்தும்
பார்கிறேன் காணவில்லை...

காதல் தேவனின்
காலை பிடித்து
கதறி கேட்டேன்;
கடைசியாய் கையில் வைத்திருந்த
காட்சி பேழையில் காட்டினான் காட்சிகள்...

கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.

கண்டதும் கலவரமாகி;
கள்வனை தேடி காணவில்லை;
கவிதை வங்கியவனை கண்டேன்-அவன்
கணவன் என்று சொந்தம் சொல்லி போனான்;
களவு போன கவிதை அவளை,
கண்டும் கரம் பற்ற முடியவில்லை.

காலம் பல கடந்தன...
காற்று வாங்குவது போல்
கவிதை அவளை கண்டுவர
கடந்து போனேன்...

நீ மலட்டு கவிதை -என
சில கிழட்டு கவிதைகள் கேலிபேச
கன்னி கவிதை நீ;
கண்ணிர் உடுத்தி
கரைந்திருந்தாய்...

இன்னும் கவிதைகளுக்கு இங்கே...

Saturday, December 12, 2009

நீ...நீ...நீ...


ஹே...நீ!!!
தேனீ !? யா? நீ!!
தேன் கொஞ்சம் தா... நீ.

நான், நீ - தனி
வா நீ, நாம் இனி.

ஏ !!தீ... நீ.
நீ...கொஞ்சம் தணி.

''அம்மணி''
தண்ணி நீ.
தாகம் நீ.

கவி நீ.
கவித் தீனி,திணி.

கழனி நீ,
காணி நிலம்மும் நீ.

பனி நீ.
அக்னி நீ.

ராணி - கொஞ்சம்
ரா...நீ.

யாழினி - இனி
யாழ் நீ.
தோணி ராகம் தா, நீ.

பிணி நீ.
யூனானி நீ.

ஆ!!நீ...
ஆணி.

மேனி நாணி
கோணி போ நீ.

தாவணி தவம் நீ.
தா ஒரு வரம் நீ.

இனி நீ கனி.
கனி இனி ஞானி.

Friday, December 11, 2009

ஒப்பனைகாரன்...


செத்த முடிகளை சேகரித்து
சிகைகொரு வகையாய் சேர்த்து தைத்து
சிரத்தில் சிக்கென பொருத்தி
சின்ன வயசு கிழவரையும்
சிறப்பாய் காட்டி விடுகிறான்...

செத்த முடிகள் போக
மத்த முடிகளும்
சீக்கிரம் செத்துவிட சொல்லி
டை(சாவ)அடிக்கிறான்...

சுருட்டை முடிகளையேல்லாம்
சுருட்டி இழுத்து
சுண்ணாம்பு தடவி-கொஞ்சம்
சூடு போட்டு மீண்டும்
சுருட்டி விடுகிறான்...

முகத்திற்கு மாவு போட்டு
மூச்சுக்கும் பூட்டு போட்டு
முடிந்தவரை ரேட்டு போட்டு
முக்கால் மூஞ்சியை கூட
முழு மூஞ்சிஆக்கி விடுகிறான்...

முக்கிய பிரமுகர்களின்
மொத்த குடுமியும் அடிக்கடி

மாட்டிகொள்வது
இவன் கை பிடியில் தான்...

Tuesday, December 8, 2009

அப்பாடா !!!!ஐம்பது...அப்பாடா !!!! இந்த ஐம்பதாவது பதிவு வரை வர நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவே மலையாய் தெரிகிறது. எப்படித்தான் 200...300...பதிவெல்லாம் எழுது முடிதிருகிறிர்களோ!!!!


இங்கு என்னை பற்றி சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன். நான் பிறந்தது தேனீ மாவட்டம் சின்னமனூர் என்ற ஊரில்.நம்ம பிரியமுடன்......வசந்த் க்கு ரெம்ப பக்கம் (சொல்லவே இல்ல )எனக்கே இப்பதான தெரியும்...வளர்ந்ததெல்லாம் மதுரை மற்றும் சென்னையில் இப்போ சவுதி இல் வேலை.
முதலில் பதிவுகள் வாசிப்பதோடு சரி.அதுவும் தொழில் நுட்பம் சம்பந்தமான வலைகளை மேய்வதோடு சரி. மீதி நேரம் அரட்டை.

பிகேபி தான் எனக்கு அறிமுகமான முதல் பதிவர். ஒரு இரண்டு வருடம் அவர் பதிவுகளை வாசிப்பதோடு சரி. பின் KRICONS இல் ப்ளாகர் பற்றி பதிவு படித்ததும் . ஒரு ஆர்வம் ஆனால் ப்ளாகர் பற்றி ஒன்றுமே தெரியாது (கண்ண கட்டி காட்டுல விட்டகதைதான்). பின் முதலில் என்னை ~ சக்கரை ~ சுரேஷ் ப்ளாக்கில் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்தான் எனக்கு முதல் பின்னுட்டம் இட்ட புண்ணியவான்.அன்று கொள்ளை மகிழ்ச்சி.

தத்தக்கா பித்தக்கா என்று தவழ்ந்து கொண்டிருக்கிறேன். பின் ‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா ப்ளாக்கில் நிறைய விஷயம் கற்பித்தார்கள். நான் சேர்த்து வைத்த கவிதைகள் கொஞ்சம் எழுதினேன். இப்போது என்னையும் படிக்கும் 22 நல்ல உள்ளங்கள் தான் என் சொத்து.

இடையில் கொஞ்சம் வேலை பழு காரணமாக பதிவு எதுவும் எழுத முடியவில்லை.இப்போது கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைகிறது.இருந்தாலும் ஏதோ சோர்வு எனை விரட்டுகிறது.நானும் முடிந்தவரை ஓடிகொண்டிருகிறேன்.

இந்த நேரத்தில் என்னை இந்த அளவுக்கு அன்பு சங்கிலியில் கட்டி இழுத்து வரும் என்னருமை (தோழர்கள்)பதிவர்கள்...

கசியும் மௌனம் கதிர் அண்ணே...

‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா...

பிரியமுடன்......வசந்த்

நிலாமதியின் பக்கங்கள். (நிலா அக்கா)

~ சக்கரை ~

சி @ பாலாசி...

கிஷோர்

சமையல் அட்டகாசங்கள்

FEROS :: பெரோஸ்

ஒளியவன் கீற்றுகள்

சப்ராஸ் அபூ பக்கர் மற்றும் எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகம் தரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் பாசமிகு நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவோடு உற்சாகமாய் தொடர்வேன்...எனக்கு சரியாய் எழுததெரியாது ஏதும் குற்றம் குறை இருந்தால் மண்னிக்கவும்...இவன் அன்புள்ள சீமான் கனி.

நன்றி....

மூத்த முதல் சினேகிதி...
பிறந்ததும் தொட்டு பார்த்து.,
சிலிர்க்க செய்த முதல் ஸ்பரிசம்
தந்ததும் நீ தானாம்;

''ஐ!! தம்பி பாபா'' என்று
முதல் முத்தம் தந்ததும்
நீ தானாம்;

தவழ்ந்து தரைமுட்டி
தத்தளித்த தருணங்களில்
தாவி வந்து முதல்
தழுவல் தந்ததும்
நீ தானாம்;

நான் நடைபயில
பற்றி கொண்ட முதல் கரம்
தந்ததும் நீ தானாம்;


உனக்கு வழங்கப்பட்ட இனிப்பிலிருந்து
என் முதல் இனிப்பாய் இனித்ததும்
உன் விரல்தானாம்;

கரும்பலகையில் கட்டை
விரலை அழுத்தி பிடித்து
'அ' பழக்கியதும் நீ தானாம்;

தகவல் பரிமாற
தந்தியடித்த தருணங்களில்
தாய்மொழி,
தமிழ் தந்ததும் நீ தானாம்;

பத்திரமாய் கரம் பற்றி
பள்ளி பழக்கியதும்
நீ தானாம்;

காத்து கருப்புக்கு பயந்து
கடைதெரு போகாத எனக்கு,
காத்துக்கும் கருப்புக்கும்
கதை சொல்லி விரட்டியதும் நீ தானாம்;

எறும்பு கடித்து கதறி அழ
எனக்காய் நீ பதறி எழ-அன்றே
எறும்பை பகைத்து கொண்டவளும் நீ தானாம்;

குறும்பு செய்தபொது
குற்றம் ஏற்று
குறைந்தபச்ச தண்டனை
பெற்றதும் நீ தானாம்;

'அ' முதல் அன்பு வரை
அனைத்தையும்
அறிமுகபடுத்தியது நீ தானாம்;

இவள் உன்
அக்கா என்று
அம்மா
அறிமுகப்படுத்தியவளும்,
நீ தானாம்;

Related Posts with Thumbnails