Tuesday, August 3, 2010

பதிவுலகில் பத்திரமாய் நான்...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ப: வலைப்பதிவில் தோன்றும் என் பெயர் சீமான்கனி.(ஒரே வார்த்தைல சொல்றத விட்டுட்டு ஏன் இழுக்குற...)

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ப: உண்மையான பெயரும் அதே...ரெம்ப ஆராய்ச்சிலாம் செஞ்சு வச்சதாம்.வித்யாசமா இருக்குல(ஆமா அத நீதான் சொல்லிக்கணும்...)

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ப: அது ஒரு பெரிய கதை.... என்னை முதலில் ஈர்த்த வலைப்பக்கம் பி.கே.பி அப்போது எனக்கு பதிவுலகத்தை பற்றி ஒண்ணுமே தெரியாது.சர்க்கரை சுரேஷ் என்ற ஒரு பதிவரை படிக்கும் பொது ஆர்வம் வந்தது.ஒண்ணுமே தெரியாம குருட்டாம் போக்குல ஒரு பக்கத்தை உருவாக்கி(வழக்கம் போல) கொஞ்ச நாள் அனைவரின் பதிவுகளை மட்டும் படிச்சுட்டு அப்படியே வச்சிருந்தேன்.எனக்கும் ஒரு வலைப்பக்கம் இருக்குனு பூரிப்புல ரெண்டுநாள் சரியா தூக்கமே வரலை (பெரிய சாதனை பண்ணிட்டத மனசுல நெனப்பு)அப்றம் அதுக்கு ஒரு பெயர் வைக்க ரெம்ப யோசிச்சு கனவு பட்டறைன்னு பெயர் வைக்க முடிவு பண்ணி அப்றம் வித்யாசமா இருக்கனுமேன்னு "கரும்பு பட்டறை"னு பெயர் வச்சேன்.முதல் பதிவா பெயர் காரம் சொல்ல இந்த பதிவு போட்டேன்.(சிரிக்கக்கூடாது ஆமாம்) அதே நாளில் மூணு சூடான  பதிவு.(இதுக்கும் சிரிக்கக்கூடாது ஆமாம்)   அவ்ளோதான் கூட்டம் கூட்டமா  வாசகர்கள் வர அவர்களை விரட்டவே நேரமில்லாம தவிச்சேன்.ஆமாங்க கரும்புன்னு பெயர் வச்சா வாசகர்கள் ஈ மாதிரி வருவாங்கன்னு பார்த்தா "ஈ"தான் வாசகர் மாதிரி வந்துச்சு.(அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்....)அப்றம் மறுபடியும் கனவு பாட்டை-னு மாத்தியாச்சு..

அதுல என் தலையணைக்கும் காதல்   இந்த கவிதைக்கு முதலாவதா சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு திரட்டிகளை பற்றி டிப்ஸ் தந்தாரு  என் முதல் வாசகரும் அவர்தான் இப்போ அவர் பக்கமே காணவில்லை.அடுத்து
குப்பை தொட்டி  ஆதவன்   சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு. சுமஜ்லா அக்கா பக்கத்தில் நிறைய அனுபவம் கிடைத்தது.இப்படிதான் ஆரம்பம் ஆனது பயணம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னும் செய்யல...(வழக்கம் போல) பிரபலம் ஆக  எல்லாம் ஆசை இல்லை(ஆஹா இது உலக நடிப்புடா சாமீ) நல்ல வாசகன் தான் நல்லா பதிவரா  ஆக முட்டியும்னு(தத்துவம்ஸ்.....) நிறைய பதிவுகளை தேடி முழுசா படிச்சு மனசுல பட்டத பின்னுட்டம் இட்டேன்.இன்றுவரை அதுதான் செய்கிறேன்.நல்ல பதிவரா இருக்க ஆசை படுறேன்.(ஆசை மட்டும் படு)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பகிர்ந்ததுண்டு. உணர்வுகளை வெளிப்படுத்த.நிறைய நண்பர்கள்.நட்பு நான் நேசிக்கும் ஒரு உன்னதமான உறவு.அதனால்தான் http://ganifriends.blogspot.com/ பெயர் வந்தது.(ஆஹா எப்படி இப்டிலாம்??)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டுக்காகவும்  இல்லை. என் எண்ணங்களை நண்பர்கள் பார்வைக்கு எழுதி  வைக்கும் என்  டைரி பக்கங்கள் இவை...(அட பார்ரா )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.இரண்டும் தமிழில்தான். கனவு பட்டறை, ஊறுகாய்.
 ஊறுகாய் இது நண்பர்களோடு சேர்ந்து எழுத வைத்திருக்கிறேன் தற்போது சில பதிவுகளின் பேக்அப் எடுத்து வைத்திருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ம்ம்ம்ம்.....அது வந்து...என் மனசாட்சி சொல்லும் நல்லா கவனமா கேட்டுக்கோங்க.(ஐ!!! கடைசில என்னைய மாட்டி விடுறியா அப்போ நான் சைகைல சொல்லறேன் மக்களே புரிஞ்சுகொங்கோ).........................................புரிஞ்சதா??

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பாராட்டு  சர்க்கரை சுரேசிடம் இருந்து வந்தது "என் தலையணைக்கும்" காதல் இந்த கவிதைக்கு முதலாவத சர்க்கரை சுரேஷ் வந்து பின்னுட்டம் இட்டு "கலக்கல் தல" இதுதான் முதல் டானிக் எனக்கு.அடுத்து "குப்பை தொட்டி" ஆதவன் சார் வந்தாரு அவரும் சில டிப்ஸ் கொடுத்தாரு அடுத்தடுத்து சுமஜ்லா அக்கா, சக்தி அக்கா,நிலா அக்கா,மாப்ளே வசந்த்,நண்பர் அபூ,பிரபா,பாலாசி,ஜலிகா,கதிர் அண்ணா, கிஷோர்   இவர்களின் தொடர் ஊக்கம், பாராட்டு, அறிவுரை, வழிநடத்தல் இன்னும் தொடர்கிறது...

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

அன்பார்ந்த பதிவுலகமே வணக்கம்...

பெயர்                                    :   சீமான்கனி.(புதுசு)

வயது                                    :   வருத்தம் ச்சே வருஷம் ஒன்னு கூடுது.

உயரம்                                  :   வானத்துக்கு கொஞ்சம் கிழே  / பூமிக்கு கொஞ்சம் மேலே.

தத்தக்கா பித்தக்கா  ஊர்  :   பாண்டியநாடு.

கபடி, படி படி படி  ஊர்       :   பல்லவநாடு.

ஆணி பிடுங்குவது            :   அரபுநாடு.

பிடித்தது                               :   கடவுள்/காதல்/கவிதை.

இதுவரை பிடிக்காதது      :   பைத்தியம்.

தெரிந்தது                             :   முகத்துக்கு முன்னாடி இருக்குற எல்லாமே.

தெரியாதது                          :   முதுகுக்கு பின்னாடி இருக்குற எதுவுமே.

அறிந்தது                              :   சமையலுக்கு காய்கறிய.

அறியாதது                          :    சமைப்பது எப்படி?

சாதனை                              :    பதிவு எழுதுவது.

 வேதனை                           :    மொக்கை போட தெரியாதது.(நம்பனும்)

நண்பர்கள்                           :   நல்லவர்கள்.

எதிரிகள்                              :   ரெம்ப நல்லவர்கள்.

அடிக்கடி கேட்க்கும்          :    தங்கம் கிராமுக்கு இவ்வளோ உயர்வு.
பொன்மொழி                     
தத்துவம்ஸ்                        :    அ)கருத்தா  படிச்சா பாஸ் மார்க்கு.
                                                    காதலி அடிச்சா டாஸ்மார்க்கு.
                                                    ஆ)மாவு சுடாது பட் மாவ தோசையா நாம் சுடலாம். 

                                                    இ)தோசைய நாம்  சுடலாம் சுட்டபின் தோசையும்  நம்மல சுடலாம்.


மை டியர் மக்களே இத படிச்சுட்டு கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.(அடுத்தமுறை இந்த பக்கமே வரக்கூடதுனா???)இந்த நேரத்தில் என்னை அழைத்த மாப்பி வசந்துக்கும்.அருமை அக்கா சுசிக்கவுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.இந்த பதிவுக்கு வரும் கண்டனங்களையும் அவர்களுக்கே....
நான் அழைப்பது....

என் மனதிலிருந்து பிரியா
ஸாதிகா அக்கா
நண்பர் வெறும்பய  
நண்பர் கமலேஷ்

அடுத்த பதிவில் அடிவாங்கிய தழும்புகளுடன் சந்திக்கிறேன் ...




40 comments:

க ரா said...

நல்ல பதில்கள்...

இப்படிக்கு,

இராமசாமி

ஹேமா said...

சீமான்....இவ்வளவும் சொன்ன அப்புறமும் வாருவோம் ல !

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதில்கள் சீமான்கனி..

ஸாதிகா said...

சீமான்கனிக்கே உரித்தான் சிரிக்கவைக்கும் பதில்கள் .சபாஷ்!!

நிலாமதி said...

வீடில் உறவினர்கள், கொஞ்சம் பிசி
அப்புறமாய் (மீண்டும்)வாரேன்

நேசமித்ரன் said...

அருமை நல்ல பதில்கள்

தமிழ் உதயம் said...

சீமான்....அறிந்து கொண்டோம் உங்களை.

சௌந்தர் said...

சீமான் பற்றி பல ரகசியம் தெரிந்து கொண்டேன் ஹி ஹி ஹி நம்ம நண்பர் வெறும்பய மாட்டி விட்டதற்கு நன்றிங்கோ

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவையுடன் உங்களை பற்றி கூறியது நல்லா இருந்தது.

சிநேகிதன் அக்பர் said...

//பதிவுலகில் பத்திரமாய் நான்...//

எதுக்கும் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வச்சுகிடுங்க :)

ஜெய்லானி said...

ஓஹோஓஓஓஓஒ.அப்படியா

நாம் சுட்டா தோசை அது நம்மளை சுட்டா அது ...???

சுசி said...

//பிடித்தது : கடவுள்/காதல்/கவிதை.//
இது எனக்கும் பிடித்தது..

சூப்பரா எழுதி இருக்கிங்கப்பா..

//அடுத்த பதிவில் அடிவாங்கிய தழும்புகளுடன் சந்திக்கிறேன் //
நானே தொடர வச்சது.. அடுத்த தொடர்ல பாத்துக்கிறேன் :))

சுசி said...

//இந்த பதிவுக்கு வரும் கண்டனங்களையும் அவர்களுக்கே....//
வசந்து.. என் பங்கையும் சேர்த்து குடுத்துடுப்பா..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Nice to know....:))

Priya said...

//மை டியர் மக்களே இத படிச்சுட்டு கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.அடுத்தமுறை இந்த பக்கமே வரக்கூடதுனா???)//....அதான் இல்லை!
இப்படியெல்லாம் எழுதினா பயந்திடுவோமா? வருவோமில்ல.

Priya said...

தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி கனி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதில்கள்..

தொடர் பதிவு அழைத்தமைக்கு நன்றி..

ஸாதிகா said...

சீமான் கனி உங்களுக்கே உரித்தான் நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பதில் ரசிக்கும்படி இருந்தது.அழைப்புக்கு நன்றி.பதிந்துவிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

appaalikkaa padikkiren

Athiban said...

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க...

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

ப்ரியமுடன் வசந்த் said...

பயோடேட்டா ரசித்தேன் அதுல கடைசி தத்துவம் முடியல சாமீய்....

சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...

//நல்ல பதில்கள்...

இப்படிக்கு,

இராமசாமி//

நன்றி கண்ணண்...

ஹேமா said...
//சீமான்....இவ்வளவும் சொன்ன அப்புறமும் வாருவோம் ல ! //

இதுல எதுவும் உள்குத்து இல்லையே...நன்றிங்க ஹேமா...


Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//அருமையான பதில்கள் சீமான்கனி.. //

நன்றி ஸ்டார்ஜன்...

ஸாதிகா said...

//சீமான்கனிக்கே உரித்தான் சிரிக்கவைக்கும் பதில்கள் .சபாஷ்!! //

அக்கா எவ்வளோ நேரம் சிரிச்சிங்க??நன்றி கா...


நிலாமதி said...
//வீடில் உறவினர்கள், கொஞ்சம் பிசி
அப்புறமாய் (மீண்டும்)வாரேன்//

நிலாக்கா பயப்படலையே கண்டிப்பா வரணும் நன்றி அக்கா..



நேசமித்ரன் said...
//அருமை நல்ல பதில்கள்//

நன்றி மித்திரன் அண்ணே...


தமிழ் உதயம் said...

//சீமான்....அறிந்து கொண்டோம் உங்களை.//

வாங்க ரமேஷ்ஜி...நல்லது கேட்டது எல்லாம் தெரிஞ்சவர் நீங்க...நன்றி..

சௌந்தர் said...
//சீமான் பற்றி பல ரகசியம் தெரிந்து கொண்டேன் ஹி ஹி ஹி நம்ம நண்பர் வெறும்பய மாட்டி விட்டதற்கு நன்றிங்கோ //

ரகசியமா அப்படி ஏதும் உளறலையே...
என்ன ஒரு ஆனந்தம்... நன்றி சௌந்தர்..


அக்பர் said...
///நகைச்சுவையுடன் உங்களை பற்றி கூறியது நல்லா இருந்தது.

//பதிவுலகில் பத்திரமாய் நான்...//

எதுக்கும் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வச்சுகிடுங்க :) ///

ஹும்ம்ம்ம்....கல்யாணம் முடியட்டும் நன்றி அக்பர்ஜி...

ஜெய்லானி said...

//ஓஹோஓஓஓஓஒ.அப்படியா

நாம் சுட்டா தோசை அது நம்மளை சுட்டா அது ...???//

அப்டிதான்...மாப்பி வசந்து பாதி சொல்லுவார்...நன்றி ஜெய்லானி..


சுசி said...
//பிடித்தது : கடவுள்/காதல்/கவிதை.//
இது எனக்கும் பிடித்தது..

சூப்பரா எழுதி இருக்கிங்கப்பா..

//அடுத்த பதிவில் அடிவாங்கிய தழும்புகளுடன் சந்திக்கிறேன் //
நானே தொடர வச்சது.. அடுத்த தொடர்ல பாத்துக்கிறேன் :)) //

தம்பிக்கு பிடிச்சது அக்காக்கு பிடிக்காம போகுமா...என்ன??


//இந்த பதிவுக்கு வரும் கண்டனங்களையும் அவர்களுக்கே....//
வசந்து.. என் பங்கையும் சேர்த்து குடுத்துடுப்பா..//

சுசிக்கா நான் பாவம்தானே...நிஜமாவே தழும்பு வாங்கிருவேன் போல...


எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//Nice to know....:))//

Thanks saravanam sir...Welcome...

Priya said...
//மை டியர் மக்களே இத படிச்சுட்டு கண்டிப்பா ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க.அடுத்தமுறை இந்த பக்கமே வரக்கூடதுனா???)//....அதான் இல்லை!
இப்படியெல்லாம் எழுதினா பயந்திடுவோமா? வருவோமில்ல.///

அன்புக்கு நன்றி பிரியா
ரெம்பத்தான் தையிரியம் உங்களுக்கு...

வெறும்பய said...
//அருமையான பதில்கள்..

தொடர் பதிவு அழைத்தமைக்கு நன்றி..//

நன்றி...வெறும்பய ...



அப்டிங்களா நன்றிங்க ஸ்வேதா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
appaalikkaa padikkiren//

சரிங்க கண்டிப்பாவரனும்

தமிழ் மகன் said...
இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க...

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

நன்றி...தமிழ் மகன்


ப்ரியமுடன் வசந்த் said...
//பயோடேட்டா ரசித்தேன் அதுல கடைசி தத்துவம் முடியல சாமீய்.... //

என்ன மாப்பி இதுக்கெல்லாம் போயி கலங்கலாமா..நன்றி டா...

Thenammai Lakshmanan said...

கனி அசத்தல் .. நாம சுட்டா தோசை.. தோசை சுட்டா இது நான் கேள்வியே பட்டதில்லையே மாப்பி ( நன்றி நேசன்)

க ரா said...

//சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...

//நல்ல பதில்கள்...

இப்படிக்கு,

இராமசாமி//

நன்றி கண்ணண்...//
ஹல்லோ ஏங்க எப்ப அப்பாவுக்கு தான் நன்றி சொல்வீங்களா எப்பவும்.. நான் இராமசாமிங்க :)

Unknown said...

அழகான பதில்கள்

சீமான்கனி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

/கனி அசத்தல் .. நாம சுட்டா தோசை.. தோசை சுட்டா இது நான் கேள்வியே பட்டதில்லையே மாப்பி ( நன்றி நேசன்) //


தேனக்கா தோசை நம்மள சுட்டா அது பழிக்கு பழி...நன்றி தேனக்கா....


இராமசாமி கண்ணண் said...
நன்றி கண்ணண்...//
ஹல்லோ ஏங்க எப்ப அப்பாவுக்கு தான் நன்றி சொல்வீங்களா எப்பவும்.. நான் இராமசாமிங்க :) //

எனக்கு கண்ணன் தான் பிடிச்சிருக்குன்னு ஓகே இனி நீங்க ராம்..

சிநேகிதி said...
//அழகான பதில்கள் //

நன்றி பாயிஷா ...

எல் கே said...

goyallaaa

சீமான்கனி said...

LK said...


//goyallaaa//

ஐயாவ் எல்.கே என்ன கோபம் இருந்தாலும் பேசிக்கலாம் ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதில்கள்.. உங்களை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக யதார்த்தமான பதில்கள்.

சீமான்கனி.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..


http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

சீமான்கனி said...

வருகைக்கும் கருத்துக்கும் விருதுக்கும் ந‌ன்றி ஸ்டார்ஜ‌ன்..

Unknown said...

mams..neenga epothan nama oru rasanu nirupichtenga..

valga..valara venam overa valarnthuvitenga..

nice answer...

Unknown said...

நீங்க உணர்வது என்ன?
---aanda eppadi patta nalla padivarai ellam yen eppadi thoratila vachu erukka...

"evlo anbana padivar nama semankani..enna erunthalum nama mams ellaiya.."

valkalm pola kalakitenga..

Unknown said...

machan neenga oru nalla kadal kadhai eluthunga..

"DUBAI SHEIKIN KADHAL....APDINU ORU TALIPPU"
NALLA NAGAISWAIYA ERUKANUM..

SARI VARATA..

NEENGA VENDUKOL ENANGA 3COMMENTSPOTUERKEN..

MARUPADIUM VARANUMNA ORU PANDLE CHOCLATE ANUPINATHAN VARUVEN..

OK TATA

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹாய்.. உங்கள பத்தி ரெம்ப நல்லா தெரிஞ்சு கிட்டேன்..
எல்லா பதிலும், சூப்பர்.. அதிலும் அந்த கடைசி கேள்விக்கு குடுத்த பதில்....சூப்பரோ சூப்பர்..

சீமான்கனி said...

siva said...
///machan neenga oru nalla kadal kadhai eluthunga..

"DUBAI SHEIKIN KADHAL....APDINU ORU TALIPPU"
NALLA NAGAISWAIYA ERUKANUM..

SARI VARATA..

NEENGA VENDUKOL ENANGA 3COMMENTSPOTUERKEN..

MARUPADIUM VARANUMNA ORU PANDLE CHOCLATE ANUPINATHAN VARUVEN..

OK TATA //

அடடே வாங்க சிவா முதல் வருகையிலே நம்மள புரிஞ்சுகிடீன்களே...முகவரி அனுப்புங்கள் இனிப்பு அனுப்பப்படும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா ....

Ananthi said...
//ஹாய்.. உங்கள பத்தி ரெம்ப நல்லா தெரிஞ்சு கிட்டேன்..
எல்லா பதிலும், சூப்பர்.. அதிலும் அந்த கடைசி கேள்விக்கு குடுத்த பதில்....சூப்பரோ சூப்பர்..
//
இதுல ஏதும் உள்குத்து இல்லையே...
வாங்க ஆனந்தி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

கமலேஷ் said...

நகைசுவையோடு நல்லா இருக்கு நண்பா...முன்னமே படிச்சேன்...கமெண்ட்டுதான் போடா முடியலை. என்ன செய்ய ! பாலா போன இன்டர்நெட் உயிர கையில புடிச்சிகிட்டு சுத்துது.

Jaleela Kamal said...

தம்பி நலமா?

பதில் எல்லா ஒரே சிரிப்புதான்,,, ஹிஹிஹீஇகி

சீமான்கனி said...

கமலேஷ் said...
//நகைசுவையோடு நல்லா இருக்கு நண்பா...முன்னமே படிச்சேன்...கமெண்ட்டுதான் போடா முடியலை. என்ன செய்ய ! பாலா போன இன்டர்நெட் உயிர கையில புடிச்சிகிட்டு சுத்துது.//


பரவா இல்லை கமல்ஜி...நேரம் இருக்கும்போது வாங்க உங்க பதிவி வித்யாசமா அருமையா இருந்துச்சு நன்றி...

Jaleela Kamal said...
//தம்பி நலமா?

பதில் எல்லா ஒரே சிரிப்புதான்,,, ஹிஹிஹீஇகி //

நான் நல்ல நலம் ஜலிக்கா நீங்க நலமா...???
மறக்காம வந்ததற்கு நன்றிகள்...

க.பாலாசி said...

இந்த எள்ளளும் துள்ளலும் படிப்பவர்களுக்கு பழரசருசியை கொடுக்கக்கூடியது... எனக்கும்தான்... பலவற்றை அறிந்ததில் மகிழ்சசி.

Valentin said...

Nevíte, které online kasino webové stránky vybrat? Osvědčená a spolehlivá kasina u nás na portálu ruleta pravidla

Related Posts with Thumbnails