Monday, November 8, 2010

ஈரச் சிறகு...


மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.

கண்ணீர் எனும்   கள்ளக் காதலியின்
கன்னத்து முத்தங்களும்.

தாளில் எழுதி வைத்த என் 
தனிமைத் தவிப்புகளால் 
தற்கொலை செய்து கொண்ட தமிழும்.

இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்.

அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.

கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

என்றோ செத்த கறிக் கோழியில்
இன்று வைத்த குருமாவும் அதை
திண்று செரிக்காத குடலும்.

நினைவுகள் அலையும் நிசப்த்த இரவுகளில்
நெருப்பாய் கொதிக்கும்
நிலவின் வெளிச்சமும்.

எவரஸ்ட் ஏறுவதாய் சொல்லிவிட்டு 
எரிமலை விளிம்பில் எரிந்து 
கருகிப்போன என் லட்சியக் கனவுகளும்.

சூரியன் தொட்டுப்பார்த்து
சுருக்கிப்போன தோலை  
உற்றுப்பார்த்து   ஒதுங்கிப்போகும்
பார்வைக்களுமாய்;

கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்; 
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல  
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!

அந்திவரை அம்மணத்தை மறைக்கும்
அனாதைச் சிறுமியாய்  
அத்தனையும் மறைத்துக் விடுகிறேன்...

31 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்ல கனவுதான் கனி.. நிதர்சனம் ..

ஸாதிகா said...

//கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்;
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!
// அழகிய வார்த்தைக்கோவை.சீமான்கனி உங்கள் அற்புதமான படைப்புகள் வலைப்பூவுடன் நின்று விடாமல் இன்னும் அதிகமதிகம் பேர் படித்து மகிழ் பத்திரிகைகளிலும் வரவேண்டும் .வாழ்த்துக்கள்.

சிநேகிதி said...

அழகான கவிதை வரிகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

//கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.//

நீங்க ரொம்பவும் வளர்ந்துட்டீங்க சீமான்கனி கவிஞரா வாழ்த்துகள் :))

சுசி said...

மேல் நாட்டு அஃறிணை..
கண்ணீர் எனும் கள்ளக் காதலி..

நிறைய அழகிய, புதிய வார்த்தைத் தொகுப்பு..

நல்லாருக்குன்னு சொல்ல விடலை.. கவிதையோடு இழையும் வலி..

சுசி said...

ஒரு சின்ன வேண்டுகோள்.. கொஞ்சம் எழுத்துப் பிழைய பார்த்துக்கோங்களேன்..

ஹேமா said...

வெளிநாட்டு வாழ்க்கை.அதன் அவதி.அதை ஊருக்கு மறைக்கும் நடிப்பு.விரக்தி வார்த்தைகளில் அமைதியடையும் மனம்.
சீமான்...சந்தோஷமாயிருங்க !

ஜெய்லானி said...

சூப்பர் கவிதை வரிகள்..!! :-))

நிலாமதி said...

கனவுகளால் கவிதை மழையாக பொழிகிறது . நல்ல கவிதை வரிகள். வாழ்த்துக்கள்

Balaji saravana said...

அட்டகாசமா இருக்கு பாஸ், வலியை சொன்னாலும்..

வெறும்பய said...

அழகான வரிகள்... வலியை மட்டுமே சொல்கின்றன...

Jaleela Kamal said...

//இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்
//
, சொந்தஙக்ள் மட்டும் அல்ல, மனைவி இறந்த்தற்கு கூட போக முடியாமல் என்ன செய்வது பலர் இப்படி தான் தவித்து கொண்டு இருக்கிறார்

கவிதை வரிகள் அருமை.
என்ன சீமான் கனி இந்த அக்கா பதிவு மறந்தே போச்சா?

Priya said...

உணர்ந்து எழுதி இருக்கிங்க....அழகான வார்த்தைகள், வாழ்த்துக்கள்!

sakthi said...

கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

arumai

chandru_kamalpriyan said...

vazahthukkal gani avargalae...chollavae illa neenga kavidhai ellam ezhudhuvingannu..arumai...epdi irukinga
?

சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...

//நல்ல கனவுதான் கனி.. நிதர்சனம் ..//

வாங்க ராம் அண்ணா மிக்க நன்றி...

ஸாதிகா said...
//கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்;
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!
// அழகிய வார்த்தைக்கோவை.சீமான்கனி உங்கள் அற்புதமான படைப்புகள் வலைப்பூவுடன் நின்று விடாமல் இன்னும் அதிகமதிகம் பேர் படித்து மகிழ் பத்திரிகைகளிலும் வரவேண்டும் .வாழ்த்துக்கள்.//

அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதி(கா) உங்களை போன்றவர்கள் செதுக்க இன்னும் முன்னேறுவேன்...

சிநேகிதி said...
//அழகான கவிதை வரிகள்... //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாயிஷா கா...

ப்ரியமுடன் வசந்த் said...
//கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.//

//நீங்க ரொம்பவும் வளர்ந்துட்டீங்க சீமான்கனி கவிஞரா வாழ்த்துகள் :)) //

எல்லாத்துக்கும் உன்னை போன்ற நல்ல உள்ளங்கள் தான் காரணம் மாப்பி...நன்றி டா...

சுசி said...

//மேல் நாட்டு அஃறிணை..
கண்ணீர் எனும் கள்ளக் காதலி..

நிறைய அழகிய, புதிய வார்த்தைத் தொகுப்பு..

நல்லாருக்குன்னு சொல்ல விடலை.. கவிதையோடு இழையும் வலி..//

//ஒரு சின்ன வேண்டுகோள்.. கொஞ்சம் எழுத்துப் பிழைய பார்த்துக்கோங்களேன்..//

நன்றி சுசிக்கா உயர பறந்தாலும் பல முறை விழுந்ததென்னவோ தரையில்தான் அந்த வழிதான் வெற்றி கா...மீண்டும் ஒருமுறை நன்றி...

ஹேமா said...

//வெளிநாட்டு வாழ்க்கை.அதன் அவதி.அதை ஊருக்கு மறைக்கும் நடிப்பு.விரக்தி வார்த்தைகளில் அமைதியடையும் மனம்.
சீமான்...சந்தோஷமாயிருங்க ! //

மகிழ்ச்சியாய் இருக்கிறேன் ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஜெய்லானி said...
சூப்பர் கவிதை வரிகள்..!! :-)) //

நன்றி ஜெய்லானி ஏதும் சந்தேகம் வரலைய??

நிலாமதி said...

//கனவுகளால் கவிதை மழையாக பொழிகிறது . நல்ல கவிதை வரிகள். வாழ்த்துக்கள் //

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நிலாக்கா...அந்த நிலா பெண் படம் நல்ல இருக்கு...

Balaji saravana said...

//அட்டகாசமா இருக்கு பாஸ், வலியை சொன்னாலும்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி...

வெறும்பய said...

//அழகான வரிகள்... வலியை மட்டுமே சொல்கின்றன... //

வலியை மட்டும் அல்ல வலியையும் சொல்கின்றன நன்றி வெறும்பய...

Jaleela Kamal said...

//இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்
//
, சொந்தஙக்ள் மட்டும் அல்ல, மனைவி இறந்த்தற்கு கூட போக முடியாமல் என்ன செய்வது பலர் இப்படி தான் தவித்து கொண்டு இருக்கிறார்

கவிதை வரிகள் அருமை.
என்ன சீமான் கனி இந்த அக்கா பதிவு மறந்தே போச்சா? //

ஹாய் ஜலிக்கா வாங்க உங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி கா...அப்படி இல்லை கா நானும் கொஞ்சநாட்களாய் இந்த பக்கமே வரமுடியாம போச்சு அதுதான் காரணம் இனி தொடர்ந்து வருவேன்...

Priya said...

//உணர்ந்து எழுதி இருக்கிங்க....அழகான வார்த்தைகள், வாழ்த்துக்கள்!//

வாங்க ப்ரியா நலமா?? உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

sakthi said...

//கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

arumai //

வணக்கம் சக்திக்கா நலமா???நன்றி...சக்திக்கா

chandru_kamalpriyan said...

//vazahthukkal gani avargalae...chollavae illa neenga kavidhai ellam ezhudhuvingannu..arumai...epdi irukinga
? //

ஹாய் சந்துரு!!! வாப்பா நலமா??? நான் நல்ல நலம். எப்படி இந்த பக்கத்தை பிடிச்ச???உன் வருகை மகிழ்ச்சியா இருக்கு நன்றி...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

என்ன‌ ஒரு க‌விதை சீமான் க‌ண்டிப்பாய் நீங்க‌ க‌விஞ‌ர்தான்..அச‌த்த‌ல்..

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப சூப்பராக இருக்கு கனி. அசத்துங்க
மகா கவிஞரே. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அழகான கவிதை கனி.. ஈரம் காயாத சிறகு..

NIZAMUDEEN said...

ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாய் வித்தியாசமான வார்த்தைக் கோர்வைகள்- வியக்க வைக்கின்றன.
சகோதரி ஸாதிகா சொன்னதுபோல் இந்தக் கவிதைகள் பத்திரிகைகளில் வர வாழ்த்துக்கள்.
அடுத்து... இந்தக் கவிதைகளின் தொகுப்பை புத்தகமாய் வெளியிடவும் யோசனை
செய்யவும். வாழ்த்துக்கள் கனி!

சீமான்கனி said...

அஹ‌ம‌து இர்ஷாத் said..

//என்ன‌ ஒரு க‌விதை சீமான் க‌ண்டிப்பாய் நீங்க‌ க‌விஞ‌ர்தான்..அச‌த்த‌ல்..//

ஆஹா!!! அது சரி! இப்போவாவது ஒத்துகிட்டதுக்கு நன்றி இர்ஷா... :)))

அன்புடன் மலிக்கா said...
//ரொம்ப சூப்பராக இருக்கு கனி. அசத்துங்க
மகா கவிஞரே. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..//

மிக்க நன்றி மலிக்கா அக்கா உங்கள் வாழ்த்தும் பாராட்டும் என்றும் எனக்கு பூஸ்ட்...நன்றி கா...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//அழகான கவிதை கனி.. ஈரம் காயாத சிறகு..//

வாங்க!! மிக்க நன்றி தேனக்கா ...

NIZAMUDEEN said...
//ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாய் வித்தியாசமான வார்த்தைக் கோர்வைகள்- வியக்க வைக்கின்றன.
சகோதரி ஸாதிகா சொன்னதுபோல் இந்தக் கவிதைகள் பத்திரிகைகளில் வர வாழ்த்துக்கள்.
அடுத்து... இந்தக் கவிதைகளின் தொகுப்பை புத்தகமாய் வெளியிடவும் யோசனை
செய்யவும். வாழ்த்துக்கள் கனி!//

வாங்க!! நிஜாம் அண்ணா உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் ஆசியோடு முயற்சிக்கிறேன்...மிக்க நன்றி

விமலன் said...

யதார்த்தம் தெரிக்கிற கவிதை,நல்லாயிருக்கு.

சௌந்தர் said...

தாளில் எழுதி வைத்த என்
தனிமைத் தவிப்புகளால்
தற்கொலை செய்து கொண்ட தமிழும்////

அதுக்கு நீங்க தான் காரணமா....?

கவிதை காதலன் said...

இந்த மாதிரி அர்த்தமுள்ள கவிதை எழுதுனீங்கன்னா டைம்பாஸ் கவிதை எழுதற நாங்க எல்லாம் என்ன ஆகறது...?? அருமை நண்பா...

சீமான்கனி said...

விமலன் said...
//யதார்த்தம் தெரிக்கிற கவிதை,நல்லாயிருக்கு.//

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விமலன் தொடர்ந்து வாங்க இனி இணைந்திருப்போம்...

சௌந்தர் said...
//தாளில் எழுதி வைத்த என்
தனிமைத் தவிப்புகளால்
தற்கொலை செய்து கொண்ட தமிழும்////

அதுக்கு நீங்க தான் காரணமா....?//

வாங்க சௌந்தர் ஏன் இந்த வில்லத்தனம்???

கவிதை காதலன் said...
//இந்த மாதிரி அர்த்தமுள்ள கவிதை எழுதுனீங்கன்னா டைம்பாஸ் கவிதை எழுதற நாங்க எல்லாம் என்ன ஆகறது...?? அருமை நண்பா...//

கவிதையின் காதலனே நீங்க இப்படி சொல்லலாமா???வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Ananthi said...

//அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.//

.....இந்த வரிகள் ரசித்தேன்.. உண்மையான வரிகள்..

மொத்த கவிதையும் அழகு.. :-)

Prasanna said...
This comment has been removed by the author.
Prasanna said...

ப்பா.. வரிகள் முழுக்க வலிகள்.. கவிதை மிக நன்று..

அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

சீமான்கனி said...

Ananthi said...
//அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.//

.....இந்த வரிகள் ரசித்தேன்.. உண்மையான வரிகள்..

மொத்த கவிதையும் அழகு.. :-)///

நன்றி ஆனந்தி....


Prasanna said...
//ப்பா.. வரிகள் முழுக்க வலிகள்.. கவிதை மிக நன்று..//

வலி இன்றி வழி இல்லை வருகைக்கும் கருட்துக்கும் மிக்க நன்றி பிரசன்னா...

அஹமது இர்ஷாத் said...
//http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html//

உங்களோடு என்னையும் இனைட்து கொண்டதர்க்கு மகிழ்ச்சியும் நன்றியும் இர்ஷா....

அன்புடன் மலிக்கா said...

கனி
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

Related Posts with Thumbnails