Sunday, December 19, 2010

நானும், ப்ளாக்கானந்தாவும்...

நம்ம பட்டறைல உட்கார்ந்து ரெம்ப தீவிரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்(ஈ ஓட்டுறதுக்கு இப்படியும் சொல்லலாம்).முன்ன மாதிரி நேரம் கிடைக்க மாட்டீங்குதே...(கிடச்சுடாலும்...)இப்படியே போனா...(முடிவே பண்ணிடீயா??) பட்டறை பாழடைஞ்சு பாம்பு பல்லிலாம் வந்து குடியிருக்க ஆரம்பிச்சுரும் போலிருக்கே. நானும்தேன் கட்டிங்கு வச்சுருக்கேன் ஆனா கொஞ்சம் கூட கிக்கு ஏறவே மாட்டிங்குதே.இப்படியே யோசிச்சுகிட்டே மௌச தேச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு !!கிபோர்ட்ல இருந்து பொகையா கேளம்பீருச்சு...(ஆவி வந்துருக்குமோ??)ஆஹா நம்ம பொலம்பல் கேட்டு கம்ப்யுட்டரே பொசிங்கிருச்சு எவண்டா தீயவச்சதுன்னு திருதிருன்னு முழிக்குறேன்.பக்கத்துல பார்த்தா பளபளன்னு  ஒரு உருவம் எந்திரன் சிட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கு.(யாரோ சூனியம் வச்கிருபாங்களோ....) 


ஏய்! யாருப்பா  நீ !!! எப்படி  ரூமுக்குள்ள  வந்த?னு கேட்டா ப்ளீஸ்  செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு  தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு  உள்ள  போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல.... இப்படி பலரகமா பிரிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்க...இன்னும் மூணு கவிதை போஸ்ட் பண்ணாம டிரப்ட்டுல கிடக்கு மொத்தம் கணக்கு 128.அப்டி இப்டின்னு ஒரு தொண்ணுறு பேரு உனக்கு 1400  பின்னுட்டம் போட்டு இருக்காங்க."ஆத்தாடி...!!!" ஆதாடியாவது காதாடியாவது இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ...கொஞ்சநாளாவே நீ சரியா ப்ளாக் பக்கம் வர்றது இல்ல.யாரு பதிவையும் சரியா படிக்குறதும் இல்ல.கடமைக்கு ஒரு கவிதைய போட்டுட்டு கம்பிய நீட்டிடுற.உன்னை நிறையா பேரு தேடுறாங்க அதுல பாதிப் பேரு கட்டையோடு தேடுறாங்க(இனி மண்டைல ஹெல்மெட் போட்டு தாண்டி போகணும்).இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??ம்ம்ம்ம்.....ன்னு விஜயகாந்த் மாதிரியே நாக்கக் கடிக்குது.ஆஹா..நீங்க உண்மைலேயே மகான்தான் நான் ஏதும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிருங்க  ப்ளாக்கானந்தா.(ஏய் பவர்ட் பை கூகுள்-ல விட்டுட்டியே...)மறுபடியும் சாரிங்க.ஆமா இப்போ எதுக்கு என்ன தேடி வந்தீங்க???உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்(வந்துடாகே டா....).எங்க உன் விரல காட்டு ரேக பார்க்கணும். காட்டுனேன்...

ம்ம்ம்ம்...மொக்க ரேகை மொடங்கி போச்சு.கும்மி ரேக குறுகிபோச்சு.தொடர் கவித ரேக தொடராம போச்சு.கவித ரேக கொஞ்சம் கனமா இருக்கு.மத்த ரேகை எல்லாம் செத்த ரேக.ம்ம்ஹும்ம்ம்...இது தேறாது.இப்படியே போச்சுனா கூகுளே ப்ளாக்க மூடிட்டு போடான்னு சொல்லிடும்.ஐயோ!! இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா???

இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.

நான் என்ன வச்சுகிட்டு  வஞ்சனயா பண்ணுறேன் முன்ன மாதிரி நேரம் கிடைக்குறது இல்ல....ஹும்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சி பண்றேன்.உங்க டிப்ஸுக்கு ரெம்ப நன்றி  ப்ளாக்கானந்தா.சரி!சரி உன்னை மாதிரி யாரோ பொலம்புற சத்தம் கேட்ட்குது நான் அங்க போறேன்னு மறஞ்சு போயிட்டாரு.இதனால மக்களே என்ன சொல்ல வர்றேன்னா.... உங்க ப்ளாக் பக்கம் வரலையேன்னு யாரும் என்மேல கோபப்படாதீங்க.சீக்கிரமே முன்ன மாதிரி வந்து ஒரு கை பார்ப்போம்.ம்ம்ம்ம்..இருங்க இருங்க எங்க எஸ்கேப் ஆகுறீங்க...இப்போ இது தொடர் பதிவா வலம் வர போகுது நான் இப்போ நண்பர்கள் சிலரை இந்த பதிவ தொடர அழைக்கிறேன்.ஒன்னும் இல்ல இந்த ப்ளாகானந்தாஉங்களை பார்க்க வந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்டின்னு....பதிவுல எழுத போறீங்க.நீங்களும் நாலு பேர ப்ளாக்கானந்தா கிட்ட மாட்டி விடப்போறிங்க....
நான் மாட்டி விட்டது....

3 .சிரிப்பு போலீஸ் நண்பர் ரமேஸ்...
4 .ஜெய்லானி அண்ணாத்தே...

விருப்பம் உள்ளவர்களும் தொடரலாம்...நன்றி...
24 comments:

philosophy prabhakaran said...

வடை...

வெறும்பய said...

தொடர் பதிவா.. நடக்கட்டும்...
வேலையெல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன். இவ்ளோ பயங்கரமான ஆளுகிட்ட மாட்டி விட்டுடீங்க?

NIZAMUDEEN said...

//டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும்//

இந்த பிளாக்கானந்தா, ரொம்பவும்
டேஞ்சரானந்தாவாயிருப்பார்போல?
இப்படி போட்டுக் குடுக்குறாரு, மாட்டி
வுடுறாரு?
உங்க டயலாக்கையும் பிளாக்கானந்தா
டயலாக்கையும் பத்தி பிரித்து போட்டிருக்கலாமே
தம்பி சீமான்கனி? டைம் இல்லையோ?

ஸாதிகா said...

யம்மா..இப்படிகூட மொக்கை போட முடியுமா?இன்னியில் இருந்து பிளாக் உலகில் நீங்கள் தான் மொக்கை மன்னர்.மறவாது தொடர் அழைப்பு ஒவ்வொன்றுக்கும் என்னையும் அழைப்பதற்கு நன்றி.கொஞ்சம் அவகாசம் கொடுங்க தம்பி.விரைவில் பிளாக்கானந்தாவை நானும் சந்திக்கிறேன்.

ஹேமா said...

ப்ளாக்கானந்தாவை பக்கத்தில வச்சுக்கிட்டு நிறைய விஷயம் சொன்ன மாதிரி இருக்கு சீமான்.ஒரு தொடர் தொடங்குறதுக்கு இப்பிடியேல்லாம் எங்களைச் சமாளிக்கணுமா.அப்புறம் 125 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்.இன்னும் எழுதுங்க.பல்லி பூச்சி ஒண்ணுமே உங்களை ஒண்ணும் பண்ணாது !

ப்ரியமுடன் வசந்த் said...

//இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.//

ரைட் ரைட்..

அசத்தல் ஐடியாடா மாப்ள...

அசத்திடுவோம் டோண்ட்வொர்ரி...!

ஜெய்லானி said...

அண்ணாத்தேன்னு பாசமா கூப்பிடும் போதே நினைச்சேன் ஏதோ வில்லங்கம் வீடு தேடி வருமேன்னு அது சரியாயிடுச்சி அவ்வ்வ்வ்வ்


((வருபவரை ஆம்லட் குடுத்து வரவேற்கிரேன் ஹி..ஹி.. ))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கு///

ஹா ஹா.. இது நல்லா இருக்கே.. உங்க 125 ஆவது பதிவுக்கு, வாழ்த்துக்கள்.. :

எம் அப்துல் காதர் said...

// எதுக்கு என்ன தேடி வந்தீங்க??? உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்//

தோஷம் நமக்கு வராம இருந்தா சரி தான் பாஸ்!! 125-க்கு வாழ்த்துகள்!!

சுசி said...

வாழ்த்துக்கள் கனி.

என்னாம்மா யோசிக்கிறாய்ங்கப்பா :)

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் :)

தொடர்பவர்களுக்கும்...

சீமான்கனி said...

philosophy prabhakaran said...

//வடை...//

வாங்கிட்டு சும்மா போன எப்படி??நன்றி..பிரபா..


வெறும்பய said...

//தொடர் பதிவா.. நடக்கட்டும்...
வேலையெல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க..//

ஆசைதான்...பார்ப்போம்...நன்றி...வெ.ப

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அண்ணே நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன். இவ்ளோ பயங்கரமான ஆளுகிட்ட மாட்டி விட்டுடீங்க?//

இத அந்த ப்ளாக்கானந்தா கேட்க்க வேண்டிய கேள்வி..நன்பா...நன்றி.

NIZAMUDEEN said...

//இந்த பிளாக்கானந்தா, ரொம்பவும்
டேஞ்சரானந்தாவாயிருப்பார்போல?
இப்படி போட்டுக் குடுக்குறாரு, மாட்டி
வுடுறாரு?
உங்க டயலாக்கையும் பிளாக்கானந்தா
டயலாக்கையும் பத்தி பிரித்து போட்டிருக்கலாமே
தம்பி சீமான்கனி? டைம் இல்லையோ?//

ஆமாம் நிஜாம் அண்ணா ராத்திரி 2 மணி...நன்றி அண்ணா..

ஸாதிகா said...

//யம்மா..இப்படிகூட மொக்கை போட முடியுமா?இன்னியில் இருந்து பிளாக் உலகில் நீங்கள் தான் மொக்கை மன்னர்.மறவாது தொடர் அழைப்பு ஒவ்வொன்றுக்கும் என்னையும் அழைப்பதற்கு நன்றி.கொஞ்சம் அவகாசம் கொடுங்க தம்பி.விரைவில் பிளாக்கானந்தாவை நானும் சந்திக்கிறேன்.//

அக்கா நீங்க எப்பவுமே ஸ்பெஸல் தான் ஐயோ..மொக்கைக்கு இல்ல...எனக்கு...நன்றி
ஸாதி(கா)...

ஹேமா said...

//ப்ளாக்கானந்தாவை பக்கத்தில வச்சுக்கிட்டு நிறைய விஷயம் சொன்ன மாதிரி இருக்கு சீமான்.ஒரு தொடர் தொடங்குறதுக்கு இப்பிடியேல்லாம் எங்களைச் சமாளிக்கணுமா.அப்புறம் 125 ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்.இன்னும் எழுதுங்க.பல்லி பூச்சி ஒண்ணுமே உங்களை ஒண்ணும் பண்ணாது !//

அவ்வ்வ்வ்வ்வ்ளோ விஷயமா இருக்கு...எனக்கு எதுவும் தேரியாது ஹேமா...வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

//ரைட் ரைட்..

அசத்தல் ஐடியாடா மாப்ள...

அசத்திடுவோம் டோண்ட்வொர்ரி...!//

நிஜம்மாதான் சொல்றியா...நன்றி டா..மாப்பி...

ஜெய்லானி said...

//அண்ணாத்தேன்னு பாசமா கூப்பிடும் போதே நினைச்சேன் ஏதோ வில்லங்கம் வீடு தேடி வருமேன்னு அது சரியாயிடுச்சி அவ்வ்வ்வ்வ்


((வருபவரை ஆம்லட் குடுத்து வரவேற்கிரேன் ஹி..ஹி.. ))//

அண்ணே பாவாம் ப்ளாக்கானந்தா...நன்றி..அண்ணாதே...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கு///

ஹா ஹா.. இது நல்லா இருக்கே.. உங்க 125 ஆவது பதிவுக்கு, வாழ்த்துக்கள்.. ://

அது அவரு சொன்னது..ஆமா...வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...ஆனந்தி...

எம் அப்துல் காதர் said...

// எதுக்கு என்ன தேடி வந்தீங்க??? உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்//

தோஷம் நமக்கு வராம இருந்தா சரி தான் பாஸ்!! 125-க்கு வாழ்த்துகள்!!//

சந்தோஷம் வரட்டுமே பாஸ்!!!வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...அப்துல்.

சுசி said...

//வாழ்த்துக்கள் கனி.

என்னாம்மா யோசிக்கிறாய்ங்கப்பா :)//

:))))...

நன்றி...சுசிக்கா....

சிநேகிதன் அக்பர் said...

//வாழ்த்துகள் :)

தொடர்பவர்களுக்கும்...//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர் “ஜி”...

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...
This comment has been removed by the author.
அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துகள் :)

polurdhayanithi said...

parattugal

எம் அப்துல் காதர் said...

பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

NIZAMUDEEN said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails