Sunday, November 28, 2010

தம்மடித்தால் கோடி நன்மை....


 புகை பிடிப்பதால் பல நன்மைகள்‏ !!!



புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு
வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான்
நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும்
தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை
பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள்,
பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை
உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு
உதவும் சந்தோசம் கிடைக்கிறது.

(ரெம்ப சந்தோசம்...)
 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.(இதுல எந்த ராசாவுக்கு நன்மையோ தெரியல!! # டவுட்டு.)
 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த
நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும்
ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
(சத்தியமா இதுல உள் குத்து இருக்கு)
 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
(நன்பேண்டா...)
 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்
வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும். 
(குறிப்பா நம்ம ஊருக்கு ரெம்பவே...)
 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)
 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்போதும்.சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல்
ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். 
(அவ்வவ்வ்வ்வ்..அப்போ அதெல்லாம் வெறும் கற்பனைதானா??)
 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம். 
(அப்போ இழுக்க!இழுக்க மட்டும் இல்ல இரும!இருமவும் இன்பமா???)
 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது. 
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)
  தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும்
நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

(நாய்களுக்கு மட்டும்தானா..???)
  இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.

(அட பார்ர்ர்ர்ரா.....)
 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது
பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே
போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும். 
(இதுதாண்டா தியாகம்..)
 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில்
நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம். 
( இப்டி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே....)
 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி
அள்ளி தந்து வள்ளலாகலாம்.

(நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல...அ..ஆஅ.....)
 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை
கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

(இருந்து என்னத்த சாதிக்க போகுதுங்க??)

" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


நன்றி முஸ்தபா மற்றும் எம்.பி.எம் நண்பர்கள்...

Monday, November 8, 2010

ஈரச் சிறகு...


மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.

கண்ணீர் எனும்   கள்ளக் காதலியின்
கன்னத்து முத்தங்களும்.

தாளில் எழுதி வைத்த என் 
தனிமைத் தவிப்புகளால் 
தற்கொலை செய்து கொண்ட தமிழும்.

இறந்துபோன சொந்தங்களுக்கு
இங்கிருந்தே அழும் அப்பாவி
ஆன்மாக்களின் ஒப்பாரி அலறல்களும்.

அந்நியச் செலாவணியில்
அந்நியமாகிப்போன ஆசைகளும்.

கட்டிலில் கிடக்கும் என்
கற்பனைக் காதலியைப்போல்
பலகாலமாய் பரிசீலிக்கப்படாத
வியர்வைத்துளிகளும்.

என்றோ செத்த கறிக் கோழியில்
இன்று வைத்த குருமாவும் அதை
திண்று செரிக்காத குடலும்.

நினைவுகள் அலையும் நிசப்த்த இரவுகளில்
நெருப்பாய் கொதிக்கும்
நிலவின் வெளிச்சமும்.

எவரஸ்ட் ஏறுவதாய் சொல்லிவிட்டு 
எரிமலை விளிம்பில் எரிந்து 
கருகிப்போன என் லட்சியக் கனவுகளும்.

சூரியன் தொட்டுப்பார்த்து
சுருக்கிப்போன தோலை  
உற்றுப்பார்த்து   ஒதுங்கிப்போகும்
பார்வைக்களுமாய்;

கண்ணீர் காயாத ஈரச்சிறகின்
இத்தனை இறகுச் சுமைகளையும்; 
வண்டு துளைத்த முங்கில் மரத்தின்
முனங்களுக்கு பதில் சொல்ல  
செல்(ல) குயிலாய் கூவும் அவளின் ஆசைக் குரலுக்கு!!

அந்திவரை அம்மணத்தை மறைக்கும்
அனாதைச் சிறுமியாய்  
அத்தனையும் மறைத்துக் விடுகிறேன்...





Monday, November 1, 2010

வெள்ளைக்காரி...

 


ஊதி விட்டவனின் உள்ளுக்குள்
உமிழ்ந்து விட்டுப் போகும்
உத்தமி இந்த வெள்ளைக்காரி.
 
சத்தமில்லா முத்தங்களை
சலிக்காமல் தந்தாலும்
இதழ்களுக்கிடையே இருந்துகொண்டு
ஈரக் கொலையில் ஈட்டி எரியும்
இன்ப வெள்ளைக்காரி.

காகித சட்டையோடு
காசுக்கு கை வந்து  
காற்றை சாக்கடையாய்
கற்பகூட்டுக்குள்ளே கலந்துவிடும் 
கண்ணிய  வெள்ளைக்காரி. 

மூச்சுபைக்குள்ளே
நிக்கோடின்  நெடி வீசி
கார்பன் கரி பூசி
கேன்சர் புற்று விற்கும் 
ஸ்பான்சர் வெள்ளைக்காரி. 

சூரியக் கங்கின் சூடு தாங்காத
சுவாசக் கூட்டுக்குள்ளே கொள்ளிவைக்க 
விரல் இடுக்கில் விறாகாய் முளைத்த
கொள்ளிவாய் வெள்ளைக்காரி.

விரட்டி விட்டோம் 
வெள்ளையனை என்ற
அறியாத மூடர் மூளையை 
அடிமையாக்கி வைத்திருக்கும்  
அழகான வெள்ளைக்காரி.



                                           




Related Posts with Thumbnails