Tuesday, January 4, 2011

ஃபர்தா தேவதை...இதோ!!
பர்தாவில் பவணி வருகிறாள் - என்
பருவதேசத்து பெ(ங்)ண்குயின்
கலர்களுக்கு நடுவே
ஜெராக்ஸ் எடுத்த
ஜென்ம வானமாய்
இன்றும் இரவு உடுத்தியே வருகிறாள்;


நெருப்பாய் கொதிக்கும்
நெடுநீள பாதையிலே
கருப்பாய் உடுத்தி கடந்தேன்னை போகிறாள்.


ஜல்லிக்கட்டு காளையாய்
மல்லுக்கட்டும் என் மனதை
கன்னுகுட்டி கண்காட்டி
கவர்ந்தேன்னை போகிறாள்.


காலங்காலமாய் கேட்ட தேவதை
கதைகளை பொய்யாக்கி
கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


போதி புத்தனாய் இருந்தவனை
அத்தர் வாசனையில்
பாதி நேர பித்தனாய்
அலையவிட்டு போகிறாள்.


ஏ!!பெண்னே உன்னை மட்டும்
ஒழித்துக்கொள்ளத்தானே இந்த பர்தா
பிறகு ஏன்??
பார்கும்போதேல்லாம் என்னையும்
இழுத்து எங்கோ ஒழித்துவைக்கிறாய்.


சுர்மா தீட்டிய உன்
சுடர் விழிகளை கொஞ்சம்
சும்மா இருக்கச்சொல்
ராத்திரி வானின் எரி நட்ச்சதிரமாய்
எதிர்படும்போதேல்லாம் என்னை
எரித்துவிட பார்க்குது.


ஓ!!
உலகுக்கு ஒரு சூரியன்
போதும் என்றுதான்
முகத்தை மறைத்து முக்காடு
போட்டு வருகிறாயோ!!


சீஸர் ரத்தம் சிந்திய இடத்தில்
சிவப்பாய் பூக்கும் ரோஜா என்ற
உமர்கயாமின் உவமை விளக்க
எத்தனை சீஸர்களின் ரத்தம் வாங்கி
இத்தனை சிவப்பாய் பூத்திருக்கு உன்
செவ்விதழ்!!!


உன் மருதானி பூசிய மந்திரக்
கைகள் காற்றில் கவிதை பாடி
எனக்கே என்னை மறக்கக் கேட்கிறது.


என் கனவுகளை கலர்மாற்றிட
ஒரு துண்டு வானவில்லோடு
கருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தது
இந்த இதயம்!
 வா!!என் வாழ்வையும் வண்ணமாக்கு..
15 comments:

வினோ said...

கருப்பும் ஒரு வண்ணம் தானே நண்பரே... இன்னும் பல வண்ணங்களை கூட்ட வருவாள்....

ஸாதிகா said...

//என் கனவுகளை கலர்மாற்றிட
ஒரு துண்டு வானவில்லோடு
கருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தது
இந்த இதயம்!
வா!!என் வாழ்வையும் வண்ணமாக்கு..

// ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாதீங்க தம்பி.சீக்கிரம் வருவாள் பர்தா தேவதை.தலைப்பு
”ஃபார்தா” சரி செய்யுங்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))

ஹேமா said...

பர்தா போர்த்தினா ஆணா பெண்ணான்னுகூடத் தெரில.சீமான்...உங்களுக்கு நிலாவெல்லாம் தெரியுதா.அப்பிடின்னா பர்தாவுக்கு முன்னமே அந்த நிலாவை நீங்க பார்த்திருக்கீங்க.அதானே இப்பிடி உருகி உருகி ஒரு கவிதை !

சுசி said...

பகல்ல நிலவு வந்தா மக்கள் குழம்பி போய்டுவாங்கன்னுதாம் பர்தாவோடை வராங்களோ என்னவோ..

நல்லா இருக்கு கனி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அழகான வரிகளில் ஒரு கவிதை. மனதை மயக்குகிறது...:))

Anonymous said...

CERUPPU

BY

NELLAI SYED

Philosophy Prabhakaran said...

என்னது பர்தா தேவதையா... பாத்து பாஸ் அருத்துடப் போறாங்க...

Jaleela Kamal said...

-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

சூப்பர் தலைப்பு பர்தா தேவதை

ஹுஸைனம்மா said...

ஆக, பர்தா போட்டாலும் வர்ணிக்காம விடமாட்டீங்க?

சீமான்கனி said...

வினோ said...
///கருப்பும் ஒரு வண்ணம் தானே நண்பரே... இன்னும் பல வண்ணங்களை கூட்ட வருவாள்....//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வினோ....

ஸாதிகா said...

// ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணாதீங்க தம்பி.சீக்கிரம் வருவாள் பர்தா தேவதை.தலைப்பு
”ஃபார்தா” சரி செய்யுங்கள் //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதி(கா)...தேனம்மை லெக்ஷ்மணன் said...
கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))

தேனம்மை லெக்ஷ்மணன் said...
கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


// ஓ . கனி..அப்பிடிப் போகுதா கதை.:))

ஐயோ அப்படி எல்லாம் போகலை தேனக்கா...நன்றி...


ஹேமா said...

//பர்தா போர்த்தினா ஆணா பெண்ணான்னுகூடத் தெரில.சீமான்...உங்களுக்கு நிலாவெல்லாம் தெரியுதா.அப்பிடின்னா பர்தாவுக்கு முன்னமே அந்த நிலாவை நீங்க பார்த்திருக்கீங்க.அதானே இப்பிடி உருகி உருகி ஒரு கவிதை !//

ஹி..ஹி...ஹி...நன்றி ஹேமா....

சுசி said...
//பகல்ல நிலவு வந்தா மக்கள் குழம்பி போய்டுவாங்கன்னுதாம் பர்தாவோடை வராங்களோ என்னவோ..//

அட...பார்ரா...

நல்லா இருக்கு கனி.//

நன்றி சுசிக்கா....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அழகான வரிகளில் ஒரு கவிதை. மனதை மயக்குகிறது...:))

மயங்கிய மனதுக்கு நன்றி....


Anonymous said...
//CERUPPU

BY

NELLAI SYED ///

"CERUPPU"க்கு நன்றி செய்யது...

Philosophy Prabhakaran said...
//என்னது பர்தா தேவதையா... பாத்து பாஸ் அருத்துடப் போறாங்க...//

என்ன பாஸ் அனுபவமா...நன்றி....

Jaleela Kamal said...
-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ///

ஹாய் ஜலிக்கா அவார்டுக்கு நன்றி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

//சூப்பர் தலைப்பு பர்தா தேவதை//

அப்போ தலைப்பு மட்டும்தான் நல்ல இருக்கா....

ஹுஸைனம்மா said...
//ஆக, பர்தா போட்டாலும் வர்ணிக்காம விடமாட்டீங்க? //

ஐ!!! வாங்க அக்கா...சும்மா கவிதைக்காக தான்...உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியா இருக்கு....

சி. கருணாகரசு said...

கவிதையில் காதல் சொட்டுதுங்க... பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...
This comment has been removed by the author.
கவிதை காதலன் said...

பாம்பே மனிஷா கொய்ராலாவும், ரஹ்மானோட உயிரே மெல்லிசையும் அப்படியே ஒரு நிமிஷம் கண் முன்னாடி வந்து போச்சு தலைவா...

Related Posts with Thumbnails