Sunday, February 20, 2011

பட்டிக்காட்டு கவிதை...


ருத சந்தையில 
மல்லிகப்பூ மந்தையில 
மலராத மல்லி பார்த்து 
அள்ளிவந்து அத முடிஞ்சு 
மண்டையில தடமெடுத்து 
கொண்டையில இடம் கொடுத்து 
மணக்கும் மல்லிகைய 
மாமன் இவன் சூட்டிவிட 
அன்னாந்து முகம் பார்த்து 
ஆசை மொழி சொன்னவளே 

ன் அங்கமெல்லாம் அடகுவச்சா 
தங்கமெல்லாம் செல்லாது 
அடகு வங்குனவன் ஆயிசும் குறையாது.
உன் அழகையெல்லாம் எழுதிவைக்க 
அந்த ஆகாயம் பத்தாது 
ஆனவரை எழுதி இருக்கேன் 
ஆசையா படிச்சுக்கடி...

ருகருன்னு வளர்ந்த முடி
நெடு நெடுன்னு நீண்ட முடி
காத்தோடு கையசச்சு
காதோரம் சுருண்டுவந்து
நெத்தியில நெளிவு சுழிவா
கவிஎழுதும் கன்னி முடி.
மாயமோ மந்திரமோ செஞ்சு
மாலையில் மல்லிகையா
மலரும் முடி
நெருப்பா நீ விலகி நின்னாலும் காத்துல
கருப்பா நீந்திவந்து நெருங்கி வரச் சொல்லுதடி.

றுக்கிவச்ச நெலாத்துண்டு நெத்தியோ 
உருக்கிவைக்கும் கொடைவெப்பத்தை 
வியர்வையா வெளியில் விட்டு 
முத்து முத்தா பூத்து மொரச்சு என்னை பார்க்குதடி.

சுருங்கி விரிஞ்சு ஏறி இறங்கி 
புரியாத மொழி பேசும் புருவமொ 
புத்தி செத்த பித்தனாய் 
புலனடக்கி போகுதடி.

யிரைமீனு அலையும்
அல்லி குளத்துக்குள்ள
வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.

முன்னாடி நான் வந்து
முட்டி உன்ன நிக்கயில 
மூக்குன்னு பெருவச்ச 
இரெட்டைகுழல் துப்பாக்கி 
மூச்சு தோட்டாவால் 
முத்தம் சுட்டு வைக்குதடி.

ட்டாம ஒட்டி நிக்கும் உதடு ரெண்டும் 
சுத்தாம சுத்திவரும் சூரியனா 
சுருக்குன்னு சுட்டு வச்சு
சும்மா இருக்கும் இளம்வயச
நறுக்குன்னு நாலு முத்தம் 
’இச்’ சுன்னு இட்டுவைக்க 
இளமனசின் இச்சைய துண்டுதடி.

டவாயி கன்னம் ரெண்டும்
காலியா கெடக்குதடி 
கண்ணக் கொஞ்சம் மூடிக்கடி 
கடனா ரெண்டு முத்தம் 
கடைசியா கொடுத்துபுட்டு 
கவிதைய முடிக்கிறேண்டி.

பாதையில போகும் போது 
பார்த்துக் கொஞ்சம் போயெண்டி 
பாதிவரை நான் படிச்ச என் 
பட்டிக்காட்டு கவிதையே.
24 comments:

ஸாதிகா said...

//மண்டையில தடமெடுத்து
கொண்டையில இடம் கொடுத்து//aahaa ennee karpanai valam!!!

சீமான்கனி said...

ஸாதிகா...

//மண்டையில தடமெடுத்து
கொண்டையில இடம் கொடுத்து//aahaa ennee karpanai valam!!!

வாங்க அக்கா...பதிவ எனக்கு முன்னாடியே படிச்சு இவ்வளவு வேகமா கருத்து சொல்லிடீங்களே அன்புக்கும் வருகைக்கும் நன்றி அக்கா....

தமிழன்-கோபி said...

மிக அருமை நண்பரே ...

வினோ said...

பட்டிக்காட்டு கவிதை இல்லை.. பார்க்கெல்லாம் காதல் கவிதை...

மகேஸ்வரன் said...

வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.///

அடடா சூப்பர்ப்
யம்மிங் வோர்ட்ஸ் ங்க :)

சீமான்கனி said...

தமிழன்-கோபி said...
//மிக அருமை நண்பரே ...//

வருகைக்கு நன்றி கோபி...

வினோ said...
//பட்டிக்காட்டு கவிதை இல்லை.. பார்க்கெல்லாம் காதல் கவிதை... //

கவிதைய படிச்சதும் உங்களுக்கு பார் நினைப்பு வருதா !!!???சும்மா... மிக்க நன்றி வினோ ஜி...

மகேஸ்வரன் said...

//வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.///

அடடா சூப்பர்ப்
யம்மிங் வோர்ட்ஸ் ங்க :) //

வாங்க மகி உங்கள் வரவு நல்வரவாகட்டும்...கருத்துக்கு நன்றி...

அஹமது இர்ஷாத் said...

ஒவ்வொன்றும் ர‌சிச்ச‌ வ‌ரிக‌ள் சீமான்க‌னி..

அன்புடன் மலிக்கா said...

பட்டிக்காட்டுக் கவிதை
படுதூள்-இதை
பார்த்துட்டாகளா படித்துட்டாகளா
பட்டிக்காட்டு தேவதை..

NIZAMUDEEN said...

நீங்க எழுதியது கவிதை இல்லை.
உங்க காதலியை, அவள் அழகை
சும்மா வர்ணிச்சீங்க,
அது அப்படியே கவிதையா மாறிடுச்சி!

அம்பூட்டு அழகா உங்க காதலி?
பொறாமையா இருக்கு, சீமாம்கனி!

அட, ஏனுங்க, உங்க காதலியை
பாதிவரைதான் படிச்சீங்களா?
அதுக்கும் மேல அத்துமீற உடலையா
அந்த அழகி?

'தொட்டா' இதை தோட்டா; என்று திருத்தலாமே!

கவிதை காதலன் said...

//அயிரைமீனா அலையும் அல்லி குளத்துக்குள்ள இருந்து வைரமீனா கண்டெடுத்த கண்ணுரெண்டும் அப்படிங்கிற வரிகள் அசத்தல்..

கவிதை காதலன் said...

மூக்குங்கிற இரட்டைகுழல் துப்பாக்கியில மூச்சுங்கிற தோட்டாவுல - இந்த உவமை ரொம்ப நேரம் ரசிக்க வெச்சது..

கவிதை காதலன் said...

//பாதிவரை நான் படிச்ச என்
பட்டிக்காட்டு கவிதையே.//

ஒரு ரொமாண்டிக்கான குறும்பு இந்த வரிகள்ல ஒளிஞ்சுகிட்டு இருக்கு.. முழுக்கவிதையை படிக்கலைங்கிறதை சூசகமா சொல்லிட்டீங்க போல.. பெண்டாஸ்டிக்

மாணவன் said...

பட்டிக்காட்டு கவிதை...

மண்மணம் கமழும் யதார்த்த வரிகளில் கவிதை அருமை நண்பரே :)

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு கனி.

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
/ஒவ்வொன்றும் ர‌சிச்ச‌ வ‌ரிக‌ள் சீமான்க‌னி../

ரசனைக்கும் வருகைக்கும் நன்றி இர்ஷா..

அன்புடன் மலிக்கா said...
//பட்டிக்காட்டுக் கவிதை
படுதூள்-இதை
பார்த்துட்டாகளா படித்துட்டாகளா
பட்டிக்காட்டு தேவதை.. //

அதுதான் இன்னும் தெரியல அக்கா...நன்றி மலிக்கா அக்கா...

NIZAMUDEEN said...

//நீங்க எழுதியது கவிதை இல்லை.
உங்க காதலியை, அவள் அழகை
சும்மா வர்ணிச்சீங்க,
அது அப்படியே கவிதையா மாறிடுச்சி!

அம்பூட்டு அழகா உங்க காதலி?
பொறாமையா இருக்கு, சீமாம்கனி!

அட, ஏனுங்க, உங்க காதலியை
பாதிவரைதான் படிச்சீங்களா?
அதுக்கும் மேல அத்துமீற உடலையா
அந்த அழகி?///


போங்க அண்ணே எல்லாம் தெரிஞ்சுகிட்டே கேப்பிங்க...நன்றி நிஜாம் அண்ணா...

சீமான்கனி said...

கவிதை காதலன் said...
//அயிரைமீனா அலையும் அல்லி குளத்துக்குள்ள இருந்து வைரமீனா கண்டெடுத்த கண்ணுரெண்டும் அப்படிங்கிற வரிகள் அசத்தல்..


கவிதை காதலன் said...
மூக்குங்கிற இரட்டைகுழல் துப்பாக்கியில மூச்சுங்கிற தோட்டாவுல - இந்த உவமை ரொம்ப நேரம் ரசிக்க வெச்சது..


கவிதை காதலன் said...
//பாதிவரை நான் படிச்ச என்
பட்டிக்காட்டு கவிதையே.//

ஒரு ரொமாண்டிக்கான குறும்பு இந்த வரிகள்ல ஒளிஞ்சுகிட்டு இருக்கு.. முழுக்கவிதையை படிக்கலைங்கிறதை சூசகமா சொல்லிட்டீங்க போல.. பெண்டாஸ்டிக் //

அனுவனுவா ரசிச்ச உங்க ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணி கவிதைக் காதலன் பெயர் பொருத்தம் சரியாதான் இருக்கு என்னையும் (கவிதை)காதலிப்பதற்கு நன்றி...

சீமான்கனி said...

மாணவன் said...
//பட்டிக்காட்டு கவிதை...

மண்மணம் கமழும் யதார்த்த வரிகளில் கவிதை அருமை நண்பரே :) //

கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி நண்பரே...உங்க பெயர் சொல்லலையே ....

சுசி said...
//ரொம்ப நல்லா இருக்கு கனி.//

வாங்க சுசிக்கா...நலமா...???நன்றி அக்கா...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எப்ப வந்தாலும் கமெண்ட் போட முடியலை.. ஏன் கனி.. பாருங்க இதை..

ஒஹோ யாரு அந்த பட்டிக்காட்டுக் கவிதை..:))

சீமான்கனி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

//எப்ப வந்தாலும் கமெண்ட் போட முடியலை.. ஏன் கனி.. பாருங்க இதை..//

அப்படியா?என்ன ஆச்சுன்னு தெரியல அக்கா..பார்கிறேன் தகவலுக்கும் வருகைக்கும் நன்றி தேனக்கா...

ஒஹோ யாரு அந்த பட்டிக்காட்டுக் கவிதை..:)) //

கண்டு பிடிச்சதும் சொல்லறேன்...
:P

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்.. இன்னும் எழுதி முடிக்கலியா? இல்ல அவங்க படிச்சு முடிக்கலியாங்க?

நல்லா இருக்குங்க.. கிராமத்துக் கவிதை :-))

சீமான்கனி said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
///ஹ்ம்ம்.. இன்னும் எழுதி முடிக்கலியா? இல்ல அவங்க படிச்சு முடிக்கலியாங்க?

நல்லா இருக்குங்க.. கிராமத்துக் கவிதை :-))///

இல்லை ஆனந்தி நான் இன்னும் படிச்சு முடிக்கல...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இல்லை ஆனந்தி நான் இன்னும் படிச்சு முடிக்கல...//

...ஹ்ம்ம்.. ஓகே ஓகே.. படிங்க. :)

ஜெய்லானி said...

படத்துக்கேத்த கவிதை கலக்குங்க :-))

சீமான்கனி said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
//இல்லை ஆனந்தி நான் இன்னும் படிச்சு முடிக்கல...//

...ஹ்ம்ம்.. ஓகே ஓகே.. படிங்க. :) ////

ஆனந்தி..:)

ஜெய்லானி said...
படத்துக்கேத்த கவிதை கலக்குங்க :-)) ///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி அண்ணாத்தே.....

Related Posts with Thumbnails