அற்றைத் திங்கள் பெண்ணொருத்தி
அழகாய் பேசும் கண் பொருத்தி
கன்னக் குழியில் தேன் நிறுத்தி
கற்றை கூந்தல் மாருடுத்தி
பட்டை குழல் 'நா' துருத்தி
பால் குடிக்கும் இதழ் திருத்தி
வலக்கை நிறைய வளை உடுத்தி
வைகை நதி இடை வருத்தி
வழுக்குமர கால் துரத்தி
வயல் தவழும் பாதம் அழுத்தி
இருள் விரட்டும் அவள் ஒரு தீ!!
இம்சிக்கும் அவள் இனம் பருத்தி
அவளைக் காணும் கணம் சாந்தி
அவளைக் கலந்தால் உயிர் முக்தி!!!


17 comments:
தீயாயும் இருப்பாள்.அதே தீயில் மெழுகாய் உருகிக் குளிர்பவளும் அவள்தான் சீமான்.தீயாய்
கோர்த்தெடுத்த அழகான கவிதை !
"ஒருத்தி"க்குள் இத்தனை "தி"க்களா?
கண்டிப்பாக இவள் ஒரு"தீ" தான்....
கவிதை அருமை நண்பரே...
அழகான கவிதை.
அவள் ஒருத்தியை கோர்த்த விதம் அழகு . பாராட்டுக்கள.
ம்ம்...தீ நண்பா..
பிடித்'தீ'ருந்தது கனி :)
அவளைக் கலந்தால் உயிர் முக்தி!!!
புரியல.....
http://zenguna.blogspot.com
கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்...
@ குணசேகரன் அவளை சேர்ந்தால் உயிருக்கு மோட்சம் அப்படித்தானே ....
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல் சார்...
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
very very nice....
தீ தீ தித்திக்கும் தீ. அப்படியா கனி..
அன்புடன் மலிக்கா said...
//தீ தீ தித்திக்கும் தீ. அப்படியா கனி..//
ஆமாம் அக்கா சுட்டாலும் தித்திக்கத்தான் செய்கிறாள்...நன்றி அக்கா...
வணக்கம்,,,,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
எப்படி இப்படி? தீ... தீ... தித்திக்கும் தீ... இப்போ எங்கே போனீங்க சீமான்கனி?
Post a Comment