Friday, October 30, 2009

இரவின் இரைச்சல்....




புழுக்கள் கூட -புழங்க
பிடிக்காத புழுதி சாலையில்
புரண்டு படுத்து ஊருளும்
மூத்தவனின் முனங்கள் சத்தம்;

கைகளை நீட்டி
கால் டாக்ஸி வேண்டி
கால் கடுக்க காத்திருக்கும்
கால் சென்டெர் கண்மனியின்
இதய படபடப்பு சத்தம்;

காதலை தொலைத்து -காதலி
கால்தடம் கணக்கு பார்க்கும்
காதலன் ஏக்க சத்தம்.

உறவினர்களோடு
ஊர் சுற்றிவிட்டு
இறுதி பேருந்தை தவறவிட்டு
இரவு பேருந்திற்காய் காத்திருக்கும் கூட்டத்தின்
இரைச்சல் சத்தம்.

இருபத்து மணி உழைத்து
இரவுபேருந்துபிடித்து
இருக்கையில் இருந்தவாறே
உறங்கிபோகும் ஒருவனின் குறட்டை சத்தம்.

யாருமே இல்லாத கடையில்
யாருக்காகவோ காய்ந்து
கொண்டிருக்கும் பாலின் கொதி சத்தம்.

மிதிக்கவே முடியாமல்
மிதித்து போகும் யாரோ -ஒருவனின்
மிதிவண்டி சத்தம்.

எங்கேயும் எப்போதும்
யாருக்காகவோ இரைந்து கொண்டிருக்கும்
யெப். எம் சத்தம்.

இளசுகள் இரண்டு இருக்கபிடித்து கொண்டு
இன்ப உலா போகும்
இருசக்கர வண்டி சத்தம்.

எங்கயோ எதையோ பறிகொடுத்து
வீடுபோக விருப்பம் இல்லாத
எவனோ ஒருவனின் விசும்பல் சத்தம்.

வருபவரைஎல்லாம் -ஒருமுறை
குரைத்து விட்டு
கல்லடி நினைவில் வந்ததும் வந்ததும்
கால்தெறிக்க கலைந்து ஓடும் நாய் சத்தம்.

எதுவுமே இல்லாத தெருவில்
தனக்கு மட்டும் கேட்கும்
பேய் சத்தம்.

நடை பாதையை கிடை பதையக்கி
கிடந்து உறங்கும் சிறார்களின்
சினுங்கள் சத்தம்.

இறுதி ஊர்வலத்தில்
இறைத்து போன மலரைஎல்லாம்
இணைத்து போகும் துப்புரவு துடைப்ப சத்தம்.(தொடரும்...)

2 comments:

க.பாலாசி said...

கவிதையை அழகாக வடித்துள்ளீர்கள் நண்பரே....தொடருங்கள்....

சீமான்கனி said...

//க.பாலாசி said...
கவிதையை அழகாக வடித்துள்ளீர்கள் நண்பரே....தொடருங்கள்....//
உங்கள் தொடர் ஆதரவிற்கும்,உர்ச்சகதிர்ற்கும் நன்றி பாலாஜி...

Related Posts with Thumbnails