Monday, November 30, 2009

ஆப்பிள் மரமும்,அவனும்...சமீபத்தில் படித்த ஒரு அழகான கதை.
உங்களோடு பகிர்வதில் ஆனந்தம்.
அது ஒரு அழகான காடு அங்கு விதிவிலக்காய் ஒரு ஒற்றை ஆப்பிள் மரம்.
அந்த காட்டில் ஆப்பிள் மரம் காணபடுவது மிக அபூர்வமான உண்மை. அந்த காலநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி செழிப்பாய் வளர்ந்த மரம். ருசியான அனந்த ஆப்பிள்களை பறிக்க ஆளில்லாமல் பூமிக்கு பரிசளித்து கொண்டிருன்ந்த சமையம்.
அவ்வழியாக வந்து கொண்டிருந்த சிறுவனுக்கு கனியும் மரமும் பிடித்து, யாருமே இல்லாத உலகில் தன்னை நேசிக்கும் ஒருவனை பார்த்ததும் மரம் அவனோடு பேச, அவனுக்கு அந்த மேஜிக் பிடித்து போனது தினமும் அங்கு வருவதை வாடிக்கையாக்கி கொண்டான். அவன் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து விளையாடினான்.அவனுக்கு பசிக்கும் சமையத்தில் ஆப்பிள் கொடுத்து அவனை பசியமர்த்தியது .

ஒருநாள் விடை பெற்றவன் வெகு நாட்களாய் திரும்பாததால் மரம் வாடிப்போனது சிலவருடங்கள் கடந்தன...

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான் அவனை பார்த்த ஆனந்தத்தில் ''வா என்னோடு விளையாடு '' என்றது. அவன் நான் சிறுவன் அல்ல வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டேன் நான் உன்னோடு விளையாண்டால் நண்பர்கள் கேலி செய்வார்கள் முடியாது போ என்றான்.
''சரி இந்த ஆப்பிள் சாப்பிடு ''என்றது. ''இல்லை எனக்கு இது வேண்டம்'' . அப்போது அவனுக்கு ஆப்பிள் கசத்தது .''சரி உனக்கு என்ன வேண்டு சொல் ''என்றது .''எனக்கு விளையாட நிறைய பொம்மைகள் வேண்டும் '' என்றான் . ''என்னிடம் பொம்மைகள் ஏதும் இல்லை சரி நீ என்னுடைய ஆப்பிள்கள் அனைத்தையும் பறித்துகொள் அதை விற்று வரும் பணத்தில் பொம்மைகள் வாங்கிகொள் ''என்றது. அவனும் ஆப்பிள் அனைத்தையும் பறித்து சென்றான் . சென்றவன் திரும்பவே இல்லை மீண்டு சில வருடங்கள் கடந்தன .

அவன் மீண்டும் மரத்திடம் வந்தான்.அவனை பார்த்து மகிழ்ந்து ''வா என்னோடு விளையாடு'' என்றது. அவன் ''விளையாட்டு வயதா எனக்கு? எனக்கு திருமணமாகிவிட்டது '' என்றான். ''சரி இப்போ உனக்கு என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது. ''என் வீட்டு கூரை பழுதாகி விட்டது என்னிடம் பணம் குறைவாய் உள்ளது '' என்றான். ''ஒ!! இப்போது என்னிடம் ஆப்பிள் இல்லை, நீ வேண்டுமானால் என் கிளைகளை வெட்டி எடுத்து உன் வீட்டு கூரைக்கு பயன்படுத்தி கொள் '' என்றது.
அவனும் மரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து சென்றான்.

சென்றவன் மேலும் சில வருடங்கள் கழித்து திரும்ப வந்தான் அவனை பார்த்து மகிழ்ந்ந்து ''வா என்னோடு விளையாடு '' என்றது மரம்.''அதற்கெல்லாம் நேரம் எனக்கில்லை '' என்றான்.''சரி உனக்கு இப்போ என்ன வேண்டும் கேள் முடிந்தால் தருகிறேன் '' என்றது.
''எனக்கு ஒரு படகு தேவை படுகிறது ,அதற்க்கு பணம் இல்லை '' என்றான்.
சரி என்னை வெட்டி எடுத்து உன் படகுக்கான மரமாய் பயன்படுதிகொள் என்றது. அவனும் மரத்தை வெட்டி எடுத்து கொண்டான்.

சென்றவன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்தான். இப்போது மரத்திடம் மிச்சமாய் இருந்தது அடிப்பகுதி மட்டும்தான். அவனிடம் ''மன்னித்துவிடு இப்போது உனக்கு தருவதற்கு ஆப்பிள்கள் என்னிடம் இல்லை'' என்றது. ''இல்லை எனக்கு கடித்து தின்பதற்கு பற்கள் இல்லை '' என்றான்.
''நீ உஞ்சல் கட்டிக்கொள்ள கிளைகள் ஏதும் என்னிடம் இல்லை'' என்றது.
''இல்லை எனக்கு இப்போது வயதாகி போனது '' என்றான்.
கண்ணீரோடு சொன்னது ''என்னிடம் இந்த அடிபகுதியை தவிர வேறொன்றும் இல்லை '' என்றது. ''நான் மிகவும் களைத்து விட்டேன், இளைப்பாற ஒரு இடம் போதும் ''என்றான்.
''சரி என்மீது அமர்ந்து ஓய்வேடு ''என்றது. அவன் அதன் மீது அமர்ந்து கொண்டான்.மரம் ஆனந்த கண்ணீரோடு அவனை அனைத்து கொண்டது.

நம் எல்லோருடைய வாழ்விலும் இந்ந்த ஆப்பிள் மரம் உள்ளது.
நம்முடைய பெற்றோர்கள்.இந்த எக்ஸ்பிரஸ் உலகில் கிடைக்கும் சொற்ப நேரத்தையாவது அவர்களோடு சேர்ந்திருப்போம்.
அன்புடன் , சீமான்கனி.6 comments:

ஈரோடு கதிர் said...

அருமையான, நெகிழ்ச்சியான பகிர்வு தோழா...

seemangani said...

தொடர்ந்ந்து எனக்கு பின்னுட்டம் இட்டு உற்சாகம் தரும் கதிர் அண்ணே...நன்றிகள் ..

அன்புடன் மலிக்கா said...

அழகான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்..

http://niroodai.blogspot.com/

seemangani said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...தொடர்ந்து உற்சாகம் தருக...
நன்றி...உங்கள் நீரோடைக்குள் நுழைய முடியவில்லை ஏன்??

ஒ.நூருல் அமீன் said...

நம் எல்லோருடைய வாழ்விலும் இந்ந்த ஆப்பிள் மரம் உள்ளது.நம்முடைய பெற்றோர்கள்.இந்த எக்ஸ்பிரஸ் உலகில் கிடைக்கும் சொற்ப நேரத்தையாவது அவர்களோடு சேர்ந்திருப்போம்.
----கண்களை ஈரப்படுத்தியது அந்த கடைசி வரிகள்.

சீமான்கனி said...

என் தேடி தேடி பதிவுகளை படித்து கருத்து தருவதற்கு மிக்க நன்றி அமீன் சார்...

Related Posts with Thumbnails