Tuesday, November 17, 2009

ஐயையோ வயறு வெடிச்சுருச்சு...


நான் 3 -ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமையம்...(அப்பவே இப்டியானு தோணும் ...)அப்போ எங்க ஸ்கூல்ல டூர்க்கு கூட்டிட்டு  போனாங்க அதுக்கு 30 ருபாய் குடுக்கணும். என்னோட நண்பர்கள் எல்லோரும்  போறாங்க  எனக்கும்   போகணும்னு ரெம்ப ஆசை அப்பாகிட்ட கேட்டா  சரி அம்மாகிட்ட  காசுவான்கிட்டு  போய்ட்டுவான்னு சொல்லிட்டார்.
ரெம்ப ஜாலியா அம்மாகிட்ட போய் கேட்டா அம்மா அதலாம் வேண்டாம்   சும்மா வீட்டுலையே இருன்னு சொல்லிட்டாங்க, அம்மாக்கு கொஞ்சம் பயம் ஏன்னா  போனவாரம்தான்  சைக்கிள்ல  இருந்து விழுந்து கைய ஒடச்சு வந்தேன் ... 


நானும் விடுற மாறி இல்ல அழுது அடம்புடிச்சு,குட்டி கரணம் அடுச்சு பாக்குறேன் ம்ம்ம்...ஹும்ம்ம்...ஒன்னும் வேலைக்கு ஆகல. ஸ்கூல் லுக்கு  போனா  பசங்கலாம்   கிண்டல் பண்றாங்க "என்னடா எப்படியாவது அடம்புடிச்சு பட்னியா   இருந்தாவது   வாங்கிட்டு வாடானு சொல்லரங்க. காசு கட்ட நாளைக்குத்தான் கடைசி நாள் இன்னைக்கு எப்டியாவது வாங்கிட்டுவா" நல்லா ஏத்தி விட்டுடாகே...விட்டுக்கு போனா ஒன்னும் நடக்கல அப்போ அம்மா பர்ஸ் கண்ணுக்கு முன்னாடி இருந்துச்சு எனக்குள்ள தூக்கிட்டு இருந்த ஒரு கிரிமினல் முழிசுகிட்டான். யாருக்கும் தெரியாம 30 ருபாய் மட்டும் சுட்டு ஸ்கூல் பேக்ல வச்சுட்டேன்...


என்னடா இது, எப்பவும் காலைல லேட்ட போவ இப்போ சிக்கரம போறன்னு அப்பவே அம்மாக்கு டவுட் வந்தாச்சு....ஸ்கூல்கு போய்  மிஸ் கிட்ட குடுத்தாச்சு... அப்போ கொஞ்சம் கூட பயம் இல்ல... பிரான்ஸ்   கிட்டவந்து  ஏ...பாத்துக்க நானும் டூருக்கு    வர்றேன்...டுர்க்கு  வர்றேன்...னு வடிவேல்  ஸ்டைல்   சொல்லியாச்சு... இன்னும் ரெண்டுநாள்ல டூர்.


சாயங்காலம் வீட்டுக்கு போனா அம்மா ரெடியா.. இருக்காங்க. எங்கட 30 ரூபா...?என்னது 30 ரூபாயா??அப்டினா??ஒழுங்க உன்னமைய சொல்லறியா இல்லையா...?"எந்த ரூபா மா எனக்கு எதுவும் தெரியாது..." அடுத்த விநாடி பொளேர்...பொளேர்...னு செம அடி. ம்ம்ம்ம்...ஹும்ம்...சத்தியமா எனக்கு தெரியதுமா...சொல்றிய (அத்தாக்கு)அப்பாக்கு போன் பண்ணி வர சொல்லவா? மா...  எனக்கு தெரியாது மா... இந்த ஏருமமாட அடிச்சு எனக்குத்தான் கை வலிக்குதுன்னு சொல்லிட்டு நேர அடுப்படிக்கு போய் ஒரு முட்டை எடுத்துட்டு வந்தாங்க...எனக்கு ஒன்னும் புரியல எதுக்கு...முட்டை...


இந்த முட்டைய ஓதி ஊதி வச்சா அது கொஞ்சநேரத்துல வெடிச்சுரும் அடுத்த வினாடி யாரு  காசு எடுதக்களோ அவங்க வயிறும்  வெடிச்சு குடல் எல்லாம் வெளியவந்துடும்...கடைசியா கேக்குறேன் உண்மைய சொல்லு...ஆஹா இப்படிலாம் இருக்கா...சொல்லவே இல்ல...அப்படியே என் வயிறு வெடிச்சு தெறிக்குது...(கற்பனைல... )பயத்தூல வைத்த புடிச்சுட்டு அம்மா சாரி மா...நான்தான் எடுத்து டூர் போறதுக்கு ஸ்கூல்ல குடுத்துட்டேன்...


ஐயையோ நான் ஏற்கனவே பாதி மந்தரம் ஒதிட்டேண்டா நீ நாளைக்கு எப்டியாச்சும் அந்த காச வாங்கிட்டு வந்துடு இல்லனா வயறு வேடிசுரும்டா... சொல்லிட்டு கூலா போய்ட்டாங்க. எனக்கு ராத்திரிபுல்லா தூக்கமே வரல வயறு வெடிசிட்டே  இருக்கு...காலைல மிஸ் கால கைய புடிச்சு காசு வாங்கி அம்மாகிட்ட குடுத்து.... மா.... இனிமேல் இப்டி செய்யமாட்டேன்மா...னு கெஞ்சி ... அழுது அன்னிக்கு ராத்திரிபுல்லா   முட்டையவே பாத்து தூங்காம இருந்தேன்...
அடுத்தநாள் அம்மா அதே முட்டைய அவிச்சு புளிசோறு கட்டி  30 ரூபா காசு குடுத்து அனுப்பி வச்சாங்க....                                                                              

6 comments:

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா

சின்னபுள்ளையிலே ரொம்ப பயந்தாங்கொல்லியா?

நல்ல அனுபவ பகிதல்

இந்த முட்டை மேட்டர் ரொம்ப நாள் கழிச்சு ஞாபகம் வந்துச்சு..

க.பாலாசி said...

ஏன் நண்பா....முட்டை மந்திரத்துக்கெல்லாமா பயந்தீங்க....நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவும் இப்டி சொல்லியேதான் பயம் காட்டுவாங்க....

நல்ல அனுபவம் நண்பா....

நாஸியா said...

romba alaga eludhirikkinga.. so sweet! :)

seemangani said...

//பிரியமுடன்...வசந்த் said...
ஹ ஹ ஹா

சின்னபுள்ளையிலே ரொம்ப பயந்தாங்கொல்லியா?

நல்ல அனுபவ பகிதல்

இந்த முட்டை மேட்டர் ரொம்ப நாள் கழிச்சு ஞாபகம் வந்துச்சு..//
முதல் கருத்துக்கு நன்றி வசந்த் ஆமா வசந்த் ரெம்ப பயம்....ஆனால் இப்போ இல்ல...:)))
உங்க பயம் பதிவு படிச்சதும் ஞாபகம் வந்துச்சு..//க.பாலாசி said...
ஏன் நண்பா....முட்டை மந்திரத்துக்கெல்லாமா பயந்தீங்க....நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவும் இப்டி சொல்லியேதான் பயம் காட்டுவாங்க....

நல்ல அனுபவம் நண்பா....//

நன்றி க.பாலாசி
முட்டைக்கு மட்டும் இல்ல அப்போ எல்லாத்துக்குமே பயம் காட்டித்தான் வளர்த்தாங்க.ஈஸியா ஏம்மாதிட்டங்க...:((
//நாஸியா said...
romba alaga eludhirikkinga.. so sweet! :)//

நன்றி நாஸியா
தொடர்ந்து வாங்க

Jaleela said...

முட்டை மேட்டர் சூப்பர், உங்கள் அம்மா சூப்பரா சொல்லி இருக்காங்க‌

ஒரே சிரிப்பு, பாதி ஓதியாச்சு ...ஹிஹி சிரிச்சி சிரிச்சி வ‌யிறு வ‌லி தான் போங்க‌

அதுவும் இரவு முழுவதும் தூங்காம முட்டைய பற்றி யோசனை பேஷ் பேஷ்.

உடனே வந்து பதில் போட முடிய பதிவு களுக்கு, நேரம் கிடைக்கும் போது வரேன்


அடுத்து தேங்காய் பர்பி = இங்கு விற்கும் ரெடி மேட் தூள் தேங்காய் தான் போட்டேன். நட்ஸ் வகைகள் இங்கு கிடைக்கும் பாத்ம் பிஸ்தா கிரேட்டு அதுவும் ரெடி மேட் தான், லூ லூ (அ) கேரிபோர் (அ) மாயா லால்ஸில் பார்ங்கள் நெய் கிடைக்கவில்லை என்றால் அன் சால்டட் லல் பார்க்கே போதுமானடு.

seemangani said...

நன்றி அக்கா...
//ஒரே சிரிப்பு, பாதி ஓதியாச்சு ...ஹிஹி சிரிச்சி சிரிச்சி வ‌யிறு வ‌லி தான் போங்க‌//

அல்லல்லாஹ்...
நன்றி அக்கா...

Related Posts with Thumbnails