வேர்விட்டு விதை முட்ட முளைத்து
விரைவாய் ஒரு காதல்.
விதியோடு விளையாடும் விடலைகள் தொட்டு ஆடும்
தொடர் வண்டி காதல்.
படிக்க துடிக்க வேண்டிய மனதில் காதல்
நடிக்க துடிக்கும் ஒரு காதல்.
காதல் கடிக்க, துடிக்க வடிக்கின்ற கண்நீரொடு
வாடும் ஒரு காதல்.
இசை பெட்டி இரைச்சலில் அவள் பெயர் மட்டும்
இன்னிசையாய் ஒலிக்கும் ஒரு காதல்.
கடற்கரை காற்றோடு காதல் காற்றை கலந்து
கடலை கொறிக்கும் ஒரு காதல்.
கடல் அலை ஓசையோடு முத்தம் சொல்லி
காதல் பாஷையின் கரைதொடும் ஒரு காதல்.
இணையத்தில் இணைந்து இதயம் தொலைத்து
வாழ்வை தேடும் ஒரு காதல்.
கடற்கரை மணலாய் பலர் பார்வை மிதிபட வேட்கம் விற்று
விரசம் வாங்கி சரசம் பழகும் ஒரு காதல்.
திருமணத்தில் தீராது திசைகொன்றாய்
திருடி திரியும் ஒரு காதல்.
தேவாலய திருப்படியில் தேவதை வேண்டி
கண்நேந்தி காத்திருக்கும் ஒரு காதல்.
சதி மத சாக்கடையில் சாஸ்திரமும் சமையத்தில்
சந்தேகமும் பார்த்து சாகும் ஒரு காதல்.
விலை மகளில் விலை கேட்டு விடியும் முன்
வெறுத்து போகும் காதல்.
ஒடிக்க படுகிற ஒவ்வொரு ரோஜாவிலும்
முறிக்கப் படுகிற ஒரு காதல்.
வாழ்த்து அட்டைக்கு வெட்டப்பட்ட மரங்களின்
ஓலம் ஒலிக்கும் ஒரு காதல்.
இந்த காதல் சாம்ராஜியத்தின்
பாசம் பறைசாற்ற
பாவியாகிறது மரங்களும்,
மலர்களும் சில
மணங்களும்...
9 comments:
இந்த காதல் சாம்ராஜியத்தின்
பாசம் பறைசாற்ற
பாவியாகிறது மரங்களும்,
மலர்களும் சில
மணங்களும்...
நிச்சயம் யாரும் சிந்திக்காத விஷயம். நம் சந்தோஷத்தின் பின்னால் சில அழுகை ஒலிகள் எங்கோ கேட்கவே செய்கிறது.
சதி மத சாக்கடையில் சாஸ்திரமும் சமையத்தில்
சந்தேகமும் பார்த்து சாகும் ஒரு காதல்.
இன்னும் இந்த கொடுமை போகல்லிங்க
தமிழ் உதயம் said...
//இந்த காதல் சாம்ராஜியத்தின்
பாசம் பறைசாற்ற
பாவியாகிறது மரங்களும்,
மலர்களும் சில
மணங்களும்...
நிச்சயம் யாரும் சிந்திக்காத விஷயம். நம் சந்தோஷத்தின் பின்னால் சில அழுகை ஒலிகள் எங்கோ கேட்கவே செய்கிறது.//
ஆமாம் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தமிழ்...
V.A.S.SANGAR said...
//சதி மத சாக்கடையில் சாஸ்திரமும் சமையத்தில்
சந்தேகமும் பார்த்து சாகும் ஒரு காதல்.
இன்னும் இந்த கொடுமை போகல்லிங்க//
உண்மைதான் நண்பா...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
//ஒடிக்க படுகிற ஒவ்வொரு ரோஜாவிலும்
முறிக்கப் படுகிற ஒரு காதல்.
வாழ்த்து அட்டைக்கு வெட்டப்பட்ட மரங்களின்
ஓலம் ஒலிக்கும் ஒரு காதல்.
இந்த காதல் சாம்ராஜியத்தின்
பாசம் பறைசாற்ற
பாவியாகிறது மரங்களும்,
மலர்களும் சில
மணங்களும்..//
அருமையா எழுதி இருக்கீங்க.. ரோஜா.. :((((
காதலுக்கான கவிதையும் வித்தியாசமான கருத்துக்களும் அருமை.......பதிவு அழகாய் இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..வாழ்த்துக்கள்...
ரொம்ப அழகா இருக்கு உங்க கவிதை!
இந்த வரிதான் நல்லா இருக்குன்னு சொல்ல முடியல, எல்லா வரிகளுமே சூப்பர்!
வாழ்த்துக்கள்!
சுசி said...
//அருமையா எழுதி இருக்கீங்க.. ரோஜா.. :((((//
ஐ...சுசி வந்துடீங்களா...வாங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ரோஜா...:(((((...ஆமாவா???
நிலாமதி said...
//காதலுக்கான கவிதையும் வித்தியாசமான கருத்துக்களும் அருமை.......பதிவு அழகாய் இருக்கு.//
வாங்க நிலா-கா...ஆமாம் வித்யாசம் வேண்டி எழுதுனதுதான்...
உங்கள் கருத்துக்கு நன்றி..கா...
கமலேஷ் said...
//ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..வாழ்த்துக்கள்...//
உங்கள் கருத்துக்கு நன்றி..கமல்.....
Priya said...
//ரொம்ப அழகா இருக்கு உங்க கவிதை!
இந்த வரிதான் நல்லா இருக்குன்னு சொல்ல முடியல, எல்லா வரிகளுமே சூப்பர்!
வாழ்த்துக்கள்!//
நன்றி பிரியா மறக்காமல் வந்ததிற்கும் மேலான கருத்துக்கும்...நன்றி...தோழி...
Post a Comment