Wednesday, February 17, 2010

இது காதல் கடிதம் அல்ல...(1)

(கொஞ்சம் நீளமான கவிதை...)
சிலந்தி கூடாய் சிக்கலாய் கிடந்த
இதய கூட்டின் பூட்டு திறந்து
குடிவந்து குத்து விளக்கேற்றி
நித்தம் வந்து சுத்தம் செய்து
சுகமாக்கி வைத்தவள் நீ...

கனவில் புகுந்து குழந்தை  குட்டிகளோடு
குடித்தனம் நடத்துபவள் நீ..
இது உனக்கு எழுத்தும் காதல் கடிதமோ;
வாடகை வசூலிக்கவேண்டி விண்ணப்ப கடிதோமோ  இல்லை...

நீ என் வாழ்வுக்குள் வந்து விட்டதை
வாசிக்கும்
நேசிக்கும்
யாசிக்கும்
சுவாசிக்கும் கடிதம்.

உன் முதல் தரிசனம்...
புரிதலுக்கு தயாராகாத புத்தியை - சிறு 
புன்னகை   பூத்து என்னை புரட்டி போட்ட
புனித காலம்...

நத்தையின் வித்தை கற்ற
மாநகரா(த) பேருந்து அது.

தெரு கூத்தாடிகளின் வித்தையை
வேடிக்கை பார்த்து காது மறத்து போன
புதுமை பெண் ஒருத்தின் கையில்...

பாலுக்காகவோ; ஆளுக்காகவோ
பசிக்காகவோ; ஸ்பரிசத்திற்காகவோ
வீம்புக்காகவோ; விதிக்காகவோ 
வீரியம் குறையாமல் - அப்போது 
அவளுக்கு தெரிந்த ஒரே
மொழியான விசும்பலோடு 
கதறி கதறி அழுகை விற்று கொண்டிருந்தாள்,
உன்னை போலவே ஒரு குட்டி தேவதை.

கனவில் கண்ட கடவுள் போல் காட்சி தந்து
பட்டாம்பூச்சி கண்காட்டி;
பால் நிலவின் பாவம் காட்டி;
படுத்துறங்கும் பனித்துளியின் ஸ்பரிசம் காட்டி;
பகலை இரவாக்கி நித்திரை - இன்றி
நிஜத்தை கனவாக்கி
புகழுக்கு அடங்காத புயலை ஒரு
பூ வந்து புன்னகை தொடுத்து
பூமிக்குள் புதைத்துவிட்டு போவது போல்
உன் குறிஞ்சி சிரிப்பால்
வாங்கியே விட்டாய் அவள் விற்று வந்த அழுகையை ; 
நிறுத்தியே விட்டாய் அவள் கண்ணத்தில்
நீந்தி நீண்டு வந்த நீர்துளியை.

ஓய்ந்தது ஏன்னவோ மழலை
உனர்ந்ததேன்னவோ மழயை.

அவள் அந்த அற்புதங்களை அனுபவித்து - அடுத்த
அழுகைக்கு ஆயத்தம் ஆகும்முன்
அவிழ்த்து விட்டாய் அடுத்த அதிரடியை.

காற்று மயிலிறகை கவனமாய் கையாண்டு - உன்
கார்கூந்தல் தேடி இறகை இறக்குவதுபோல் அவள்
இடையயை இதமாய் பற்றி உன் மல்லிகை மடிக்குள்
மறைத்து கொண்டாய் மேகங்களுக்கிடையே
பதுங்கிய பால்நிலவாய் அவள்.

நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.

காரியத்தின் கண்ணீர் நனைத்த மீதியை
வீரியத்தின் வியர்வையால்  அவளை  நனைத்திருந்தாள்.

கைகளை கைக்குட்டையாக்கி
நெற்றி ஒற்றி வியர்வை விலக்கினாய் .

வண்ணம் வற்றி போன
செம்மண் இதழ் குவித்து கொளுத்தி எடுத்த
கொடை வெயிலின் சூட்டை சுளித்து வைத்த
சுண்டுஇதழால் சுகமாய் இழுத்து சுவசத்தில் கலந்து
சொடுக்கு பொழுதில் சமைத்து வெளிகொணர்ந்தாய்   
வினொத தென்றல் ஒன்றை.

குவித்த இதழ் குவித்தபடி இருக்க
குளிரூட்டினாய் குழந்தை அவளை.

செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.

அப்படியொரு தென்றலின் முதல்
பிரசவத்தை பருகிய உலகின் முதல்
குழந்தை அவள்.

ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி  ஜாக்கிரதை .

சிறுமி அவள் சிரித்து, சிரித்து
சிலிர்த்து , சிலிர்த்து சின்னாபின்னமாகி;
பனிக்கட்டியாய் உறைந்து போனால்.

இறுதியாய் அவளின் மைக்ரொ உதட்டில்
ஹய்க்ரொ முத்தமிட்டு மொத்தமாய்
மூர்ச்சையாக்கினாய் ;
அவளுக்கு அழுகை அன்னியமானது
அவளின் அதரம் புன்னியமானது.

அத்தோடு விட்டாய நீ…
அண்ணம் அவளை அள்ளியேடுத்து - உன்
மார்பென்னும் மந்தார
கூட்டுக்குள் குழிதொண்டி புதைத்துகொண்டாய்.

அவள்
நிஜத்தை கடந்து
நினைவுகளை துறந்து
நித்திரைக்குள் நீண்டு போனாள்.

அதை கண்ட கனத்திலே நானும் காணாமல் போனேன் ….(தொடரும்…)

16 comments:

ஆர்வா said...

//செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.//

அட.. நல்லா இருக்கு

சப்ராஸ் அபூ பக்கர் said...

Unga Comment Box la Comments paste panna mudiyaamal irukkuthu semangani. Please check that problem.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.//

காதல் கடிதம் அல்ல என்று சொல்லி விட்டு?.........???????????????

நல்ல வரிகள் சீமங்கனி. வாழ்த்துக்கள்.

(நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டல் இடுகிறேன். எப்படி நல்லா இருக்குறீங்களா சீமான்?....)

Paleo God said...

என்னது தொடருமா?? என்ன கனி :) அருவி கொட்டுது.. வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..:))

தொடரட்டும்..

ஸாதிகா said...

அட..அட..//ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி ஜாக்கிரதை .//

அருமையான வரிகள்.கைதேர்ந்த கவிஞர் ஆகி வ்ருகின்றீர்கள் சகோதரரே!தொடர் கதை போல் தொடர் கவிதை.புதிய உத்திதான்.ஜமாயுங்கள்.

கமலேஷ் said...

கவிதை முடித்த விதம் மிக நன்றாக இருக்கிறது நண்பரே...பயங்கரமா இப்பெல்லாம் எழுத அரம்பிட்சிடீங்க போல...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்பி செதுக்கியிருக்கீக செம்ம ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விஷயம் பேசுது தொடருங்கள் மாப்ள... நாங்க இருக்கோம்ல வாசிக்க.. இன்னும் இன்னும் சின்ன சின்ன பிழை ஆனா முன்ன மாதிரியில்லடா...

கீப் ராக்..கிங்......

சீமான்கனி said...

கவிதை காதலன் said...
//செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.//

//அட.. நல்லா இருக்கு

வாங்க கவிதைகதலன்...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...தொடர்ந்து தொட்டு கொள்வோம்...

சப்ராஸ் அபூ பக்கர் said...
//காதல் கடிதம் அல்ல என்று சொல்லி விட்டு?.........???????????????

நல்ல வரிகள் சீமங்கனி. வாழ்த்துக்கள்.//

(நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டல் இடுகிறேன். எப்படி நல்லா இருக்குறீங்களா சீமான்?....)///

வாங்க அபூ வெகுநாட்களுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி...நான் நலம்...தலைப்பை புரிந்து கொள்ளவில்லையா??நன்றி அபூ....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//என்னது தொடருமா?? என்ன கனி :) அருவி கொட்டுது.. வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..:))

தொடரட்டும்..//

ஆமாவா....வாங்க ஷங்கர் ஜி...மாப்பி கிட்ட சொல்லாதிங்கபா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

சீமான்கனி said...

ஸாதிகா said...
//அட..அட..//ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி ஜாக்கிரதை .//

//அருமையான வரிகள்.கைதேர்ந்த கவிஞர் ஆகி வ்ருகின்றீர்கள் சகோதரரே!//ஆமாவா கா அழுகாச்சியா வருது...
அவ்வ்வ்வவ்...

//தொடர் கதை போல் தொடர் கவிதை.புதிய உத்திதான்.ஜமாயுங்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...ஸாதி(கா)

சீமான்கனி said...

கமலேஷ் said...
//கவிதை முடித்த விதம் மிக நன்றாக இருக்கிறது நண்பரே...பயங்கரமா இப்பெல்லாம் எழுத அரம்பிட்சிடீங்க போல...வாழ்த்துக்கள் தொடருங்கள்...//

அவ்வளவோ...அவ்வளவோ...அவ்வளவோ...
பயங்கரமா..... வா இருக்கு!!!:))
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...கமல்...

சீமான்கனி said...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்பி செதுக்கியிருக்கீக செம்ம ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விஷயம் பேசுது தொடருங்கள் மாப்ள... நாங்க இருக்கோம்ல வாசிக்க.. இன்னும் இன்னும் சின்ன சின்ன பிழை ஆனா முன்ன மாதிரியில்லடா...

கீப் ராக்..கிங்......//

நன்றி மாபி நீங்கலாம் குடுக்கும் உற்சாகம் மட்டும்தான் டா...எனக்கு பூஸ்ட்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டா...
என்றும் அன்போடு...
சீமான்..

சீமான்கனி said...

கவிதை காதலன் said..

//செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.//

அட.. நல்லா இருக்கு

சப்ராஸ் அபூ பக்கர் said...

///நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.//

காதல் கடிதம் அல்ல என்று சொல்லி விட்டு?.........???????????????

நல்ல வரிகள் சீமங்கனி. வாழ்த்துக்கள்.

(நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டல் இடுகிறேன். எப்படி நல்லா இருக்குறீங்களா சீமான்?....)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
என்னது தொடருமா?? என்ன கனி :) அருவி கொட்டுது.. வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..:))

தொடரட்டும்..

கமலேஷ் has left a new comment on your post "இது காதல் கடிதம் அல்ல...":

கவிதை முடித்த விதம் மிக நன்றாக இருக்கிறது நண்பரே...பயங்கரமா இப்பெல்லாம் எழுத அரம்பிட்சிடீங்க போல...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

சீமான்கனி said...

ஸாதிகா said...

அட..அட..//ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி ஜாக்கிரதை .//

அருமையான வரிகள்.கைதேர்ந்த கவிஞர் ஆகி வ்ருகின்றீர்கள் சகோதரரே!தொடர் கதை போல் தொடர் கவிதை.புதிய உத்திதான்.ஜமாயுங்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

மாப்பி செதுக்கியிருக்கீக செம்ம ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விஷயம் பேசுது தொடருங்கள் மாப்ள... நாங்க இருக்கோம்ல வாசிக்க.. இன்னும் இன்னும் சின்ன சின்ன பிழை ஆனா முன்ன மாதிரியில்லடா...

கீப் ராக்..கிங்......

சீமான்கனி said...

கவிதை காதலன் said...
//செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.//

//அட.. நல்லா இருக்கு

வாங்க கவிதைகதலன்...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...தொடர்ந்து தொட்டு கொள்வோம்...

சப்ராஸ் அபூ பக்கர் said...
//காதல் கடிதம் அல்ல என்று சொல்லி விட்டு?.........???????????????

நல்ல வரிகள் சீமங்கனி. வாழ்த்துக்கள்.//

(நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டல் இடுகிறேன். எப்படி நல்லா இருக்குறீங்களா சீமான்?....)///

வாங்க அபூ வெகுநாட்களுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி...நான் நலம்...தலைப்பை புரிந்து கொள்ளவில்லையா??நன்றி அபூ....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//என்னது தொடருமா?? என்ன கனி :) அருவி கொட்டுது.. வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..:))

தொடரட்டும்..//

ஆமாவா....வாங்க ஷங்கர் ஜி...மாப்பி கிட்ட சொல்லாதிங்கபா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
ஸாதிகா said...
//அட..அட..//ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி ஜாக்கிரதை .//

//அருமையான வரிகள்.கைதேர்ந்த கவிஞர் ஆகி வ்ருகின்றீர்கள் சகோதரரே!//ஆமாவா கா அழுகாச்சியா வருது...
அவ்வ்வ்வவ்...

//தொடர் கதை போல் தொடர் கவிதை.புதிய உத்திதான்.ஜமாயுங்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...ஸாதி(கா)
பிரியமுடன்...வசந்த் said...
//மாப்பி செதுக்கியிருக்கீக செம்ம ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விஷயம் பேசுது தொடருங்கள் மாப்ள... நாங்க இருக்கோம்ல வாசிக்க.. இன்னும் இன்னும் சின்ன சின்ன பிழை ஆனா முன்ன மாதிரியில்லடா...

கீப் ராக்..கிங்......//

நன்றி மாபி நீங்கலாம் குடுக்கும் உற்சாகம் மட்டும்தான் டா...எனக்கு பூஸ்ட்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டா...
என்றும் அன்போடு...
சீமான்..

vidivelli said...

நண்பரே அற்புதமான வரிகள் நிறைந்த கவிதை
வார்த்தைகளே இல்லை.சும்மா இல்லை ரணமாய்

சீமான்கனி said...

நன்றி விடிவெள்ளி...உங்கள் கருத்துகள் என்னை மேலும் உற்சாகமுட்டுகிறது..

Related Posts with Thumbnails