Monday, May 3, 2010

ஆ...ஆ....''ஆப்''ரிக்கா ஆபத்து...

''ஹாய் ஹவ்  ஆர் யு....நான் இதிரீஸ்...நான் உங்கள் ரசிகை.உங்களோடு நட்ப்பு கொள்ள ஆவல்.மேலும் நெருங்க மெயில் பண்ணவும்...''

இப்படிதான் போனவாரம் ஆங்கிலத்தில் ஒரு மினஞ்சல் வந்தது.சும்மா இருந்த மனச சொரிஞ்சு விட்ட மெயில்.''ஹாய் இதிரீஸ் நான் நலம் நீங்கள் நலமா??நீங்கள் யார்?என் மெயில் ஐ.டி எப்படி கிடைத்தது ரசிகை என்றால்??எனக்கு புரியவில்லை உங்களை பற்றி சொல்ல முடியுமா?? பதிலுக்காய் காத்திருக்கிறேன்...''சும்மா இருக்க முடியாம நானும் ரிப்ளே பண்ணி விட்டேன்.அடுத்தநாள்...

''ஹாய் கனி உங்கள் பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி.என் பெயர் ''செல்வி'' ஹளேன் இதிரீஸ் என்பது நீங்கள் அறிந்ததே வயது-22 . மேற்கு ஆப்ரிக்காவில் செனெகல் என்ற இடத்தில் வசிக்கிறேன்.என் அப்பா லேட் Dr. Desmond Idiris இங்கு ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இப்போ அவர் என்னோடு இல்லை எதிற்பரதவிதமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நான் தற்போது ஒரு அனாதை இல்லத்தில் இருக்கிறேன்.
இங்கு என்னோடு தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட தோழி ஒருத்தி இருக்கிறாள்.அவள் பேசும் தமிழ் எனக்கு பிடித்து போக தமிழ் பேசமட்டும் கற்று கொண்டேன்.அவள் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பவள் எனக்கும் படித்து காட்டுவாள்.இப்படித்தான் உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டேன்.உங்கள் கவிதைகளும் என்னை வெகுவாய் ஈர்த்து விட்டது.இப்பொது அவளிடம் தமிழ் படிக்க கற்று வருகிறேன். மேலும் உங்களை பற்றி அறிந்து கொள்ள ஆவல்.விரைவில் பதில் அனுப்பவும்
இப்படிக்கு அன்புடன்,
இதிரீஸ்....''இப்படி ஒரு பதில் மெயில்...என்ன பயவுள்ள அநியாத்துக்கு அளக்குறானுதனே  பாக்குறீங்க!!! புரியுது. கடைசிவரைக்கும் படிங்க அப்பதான் தெரியும்...

நானும் உடனே உருக்கமா... ஒரு பதில் அனுப்பிட்டேன். அத சொல்லித்தான் தெரியனுமா என்ன??!!!பதிலுக்காய் நானும் காத்திருக்க உடனே பதில் வந்தது.

உங்கள் பதில் கிடைத்தது கண்டதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.எனக்கு உங்களை பார்க்கவேண்டும் போலிருக்கு நிச்சயம் என்றாவது உங்களை சந்திப்பேன்.உங்கள் நேர்மை,அன்பு,பாசம் எனக்கு பிடிச்சிருக்கு.ஏதோ உணர்வு எனக்குள்ளே  இருக்கு அதை சொல்ல தெரியலை.உங்கள் பரிவுக்கு ரெம்ப நன்றி.அடுத்து நான் என்னுடைய உண்மையான நிலைமையை உங்களுக்கு எடுத்து சொல்ல்கிறேன் கவனமாய் கேட்கவும்.(நீங்களும்தான்.)என் அப்பா இறந்ததும் என் மாமா (என் அம்மாவின் அண்ணன்)எங்கள் வீடு மற்றும் அணைத்து சொத்துக்களையும் அபகரித்து கொண்டார்.என்னையும் சரியாய் கவனிப்பது இல்லை.என் அப்பா என் எதிர்கலத்திர்க்கு உதவும் என்றும் ஒரு குறிப்பிட்ட பணத்தை என் பெயரில் போட்டு வைத்திருந்தார்.அதை நான் நேரடியாக உபயோகிக்க முடியாது.எனக்கு வரபோகும் கணவரோ அல்லது நான் ஆதரவாய் இருக்க விரும்பும் குடும்ப தலைவரோதான் அந்த பணத்தை எடுத்து எனக்காக செலவுசெய்யவோ கொடுக்கவோ முடியும்.நான் இறந்து விட்டால்.எனக்கு அடுத்து உள்ள நெருங்கிய சொந்தத்திற்கு பணம் சென்று விடும்.நீங்கள் தான் அந்த பணத்தை எடுக்க எனக்கு உதவவேண்டும்.  எனக்கு வேற யாரும்  இல்லை.அந்த பணத்தின் மதிப்பு Two Million Five Hundred Thousand U.S டாலர்ஸ். நீங்கள் அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி  கொள்ளலாம்.நீங்கள் உங்கள் வங்கி கணக்கு என்னையும் உங்கள் விபரமும் அனுப்பினால் நான் இங்கு ஆகவேண்டிய வேலையை செய்து விடுவேன்.பின் நீங்கள் என் வங்கி மேனேஜரிடம் பேசி பணத்தை உங்கள் கணக்கில் மாற்றி கொள்ளலாம்.பிறகு ஒருநாள் நான் வந்து உங்களை சந்தித்து மற்ற முடிவுகளை எடுக்கலாம்.நன்றி டியர்.இந்த மெயிலுடன் என் போன் மும்பர்,வங்கி விபரம், போன் நம்பர் மற்றும் என் புகைப்படமும் அனுப்பியுள்ளேன். நான் அவ்வளவு அழகு இல்லை.நான் உறுதி அளிக்கிறேன் என்னால் உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி வரும்.
இப்படிக்கு அன்புடன்,

இதிரீஸ்....''ஐயோ ஒரு தமிழ் சினிமா பார்த்தமாதிரி இருக்கே...நண்பனிடம் சொன்னேன் இது ஒரு நூதன   கொள்ளைனு சொன்னான்.எப்டிலாம் யோசிக்கிறாங்கே...
ஆத்தா!!! ஆளை விடு ஐயம் எஸ்கேப்...

இன்னொரு விஷயம் அவளின் போட்டோ பார்த்து விட்டு மூணு நாள் லீவு போட்டு அழுதேன்...நீங்களும் அந்த போட்டோ பாருங்க...
ஏன் எனக்கு மட்டும்  இப்டிலாம் நடக்குது...(இங்குட்டு வரவே பயமா இருக்கு.)
15 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க

ஈரோடு கதிர் said...

//Labels: அனுபவம்//

அடப்பாவி மக்கா... நெஜமா இது!!!

சிவன். said...

புள்ள அழகாத்தானையா இருக்கு..???

மச்சான், நீ கலக்கு மச்சான்...!!!

கமலேஷ் said...

உண்மைலேயே இது கொடுமைதான், பாத்து பத்திரம் ஜி...

ஸாதிகா said...

பார்த்தப்பூ...சூதானமா நடந்துக்கங்கபூ..

thenammailakshmanan said...

நல்ல வேளை தப்பிச்சீ்ங்க கனி...!!

seemangani said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க//

ஏன்னே...இந்த கொலைவெறி...

ஈரோடு கதிர் said...
//Labels: அனுபவம்//

//அடப்பாவி மக்கா... நெஜமா இது!!! //

நெஜம்தானே...

சிவன். said...
//புள்ள அழகாத்தானையா இருக்கு..???

மச்சான், நீ கலக்கு மச்சான்...!!!//

ஏற்கனவே கலங்கி போய்தான் மச்சான் இருக்கேன்...
நீ வேற சும்மா இரு மச்சான்

கமலேஷ் said...
//உண்மைலேயே இது கொடுமைதான், பாத்து பத்திரம் ஜி...//

ஆறுதலுக்கு நன்றி கமல்ஜி...

ஸாதிகா said...
பார்த்தப்பூ...சூதானமா நடந்துக்கங்கபூ..

//பாருங்க அக்கா எனைய வச்சு எப்டிலாம் காமெடி பண்றாங்கன்னு.....ஆறுதலுக்கு நன்றி ஸாதிகா..

thenammailakshmanan said...
//நல்ல வேளை தப்பிச்சீ்ங்க கனி...!!//

ஆமா தேனக்கா வேறயாரு மாட்டபோறகளோ........ஆறுதலுக்கு நன்றி தேனக்கா...

LK said...

anne neenga romba palasu. ipap africlam mudinjiduchu. russia start agi irukku

seemangani said...

ஒ...அப்படியா உங்களுக்கு இதுல அனுபவம் நிறைய இருக்கோ ...நன்றி...LK...

ILLUMINATI said...

மச்சி,உம்ம வாழ்கையில சனியன் சட விரிச்சு ஆடுது.என்ஜாய்.... :)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்களுக்கு எங்கயோ மச்சங்க! ஜமாயுங்க!! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

seemangani said...

ILLUMINATI said...
//மச்சி,உம்ம வாழ்கையில சனியன் சட விரிச்சு ஆடுது.என்ஜாய்.... :)//

ஐயா ராசா விட்டா ஒரு சாங் கம்போஸ் பண்ணி சனியன் கூட சேர்ந்து ஆட சொல்லிவீங்க போல...
நன்றி நண்பா..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//உங்களுக்கு எங்கயோ மச்சங்க! ஜமாயுங்க!! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//

ஐயா சரவணா நீங்களுமா...எல்லாம் ஒரு முடிவாதே கேலம்பி இருக்கீங்கபோல ...

Priya said...

பாத்து கனி, இதுபோல நிறைய மெயில் ஏன் சில நேரம் எஸ்எம்எஸ் கூட வரும். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது, அந்த பெண் நல்லாவே இருக்கு:)

(கனி, உங்க மெயில்ID தேடி பார்த்தேன் கிடைக்கல. சோ, இங்கேயே எழுதுறேன். என்னால உங்க பக்கத்தை சுலபமா திற‌க்க முடியல‌. திறக்க நேரம் எடுக்குது. பல சமயம் எரர்னு காட்டுது. அதையும் மீறி எப்படியாவது திறந்தா கமெண்ட் போடும் முன்னே பக்கம் தானாகவே மூடிக்கொள்கிறது!)

seemangani said...

Priya said...

//பாத்து கனி, இதுபோல நிறைய மெயில் ஏன் சில நேரம் எஸ்எம்எஸ் கூட வரும். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது, அந்த பெண் நல்லாவே இருக்கு:)//

புள்ள நல்லா இருக்கா??!!! நீங்க சொன்னா சரியாத்தே இருக்கும் அப்போ கட்டிக்கபோறவன் குடுத்து வச்சவன்னு சொல்லுங்க...மீ எஸ்கேப்...

///(கனி, உங்க மெயில்ID தேடி பார்த்தேன் கிடைக்கல. சோ, இங்கேயே எழுதுறேன். என்னால உங்க பக்கத்தை சுலபமா திற‌க்க முடியல‌. திறக்க நேரம் எடுக்குது. பல சமயம் எரர்னு காட்டுது. அதையும் மீறி எப்படியாவது திறந்தா கமெண்ட் போடும் முன்னே பக்கம் தானாகவே மூடிக்கொள்கிறது!) ///\

ஐயோ...நான் இப்போவே பாக்குறேன்...

ஒ.நூருல் அமீன் said...

கனி நீங்க எவ்வளவு உசார் பார்ட்டி நீங்களா சிக்குவீங்க.

Related Posts with Thumbnails