Monday, May 17, 2010

காதல் வந்தால்...

ஹார்மோன்களின் பருவ கிளர்ச்சியில்
முகம் காட்டும் பருக்களை-பார்க்கும்போதெல்லாம்
கைவிரல்களால்  கற்பழிப்பாய்.

உயிருக்குள் உயிர் புகுந்து
ஊடுருவி உயிர் வாங்கும்
உன்னத உண்மை உணர்வாய்.

கனவிலும் கவிதையாய் உளறுவாய்.
காகிதத்தில் அவள் பெயர்  இட்டு
அதையும் கவிதைஎன்பாய்.

தலையணை பஞ்சுகளை
கெஞ்சி கெஞ்சி கொஞ்சுவாய்.

கோடை வெயிலும் உனக்கு
கொடைக்கானல் மழையாகும்.

குளிர்கால கம்பளிகள்
குச்சி முள்ளாய் குத்தவரும்.

இதுவரை கண்டு கொள்ளாத வானம்
கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே
உற்றுப்பார்க்கும்.

வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு  
வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.

தென்றல்  கைபிடித்து 
உன்னோடு  உலாவரும்.

மாடியில் மலர்ந்துவிட்ட ஒற்றை ரோஜா 
உன்வீட்டு நந்தவனமாகும்.  

கல்லறையில் பூக்கும் கள்ளிச் செடியும்-உன்
காதுக்குள் காதல் பேசும்.
கான்க்ரீட் பாலங்களோ  களத்துமேடாய் பொய்பேசும்.

கருகி உருகும் தார்ச்சாலை
ஒவ்வொன்றும் தனித்தீவாய்
தண்ணிகாட்டும்.

மூச்சு விட முடியாமல் முண்டி நிற்க்கும்
மாநகரப் பேருந்து மயில்வாகனமாய் மாறிப்போகும்.

ஓயாமல் பேசிய உதடுகள் ஊமையாகும்.
வார்த்தைகளின் வழி தெரியாத விழிகள்
காதல் அறிக்கையின் கடைசி பக்கம் வரை
கண்சிமிட்டி கடகடவென ஒப்பிக்கும்.

இதுவரை படிக்காத காதல் வாய்ப்பாடு
இனி தலைகீழ் பாடமாகும்.

இடி விழுந்து எரியாத இதயம்-அவள்
இமையில் விழுந்து எரியும்.

கனவு கழித்து  வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.12 comments:

சுசி said...

//இதுவரை கண்டு கொள்ளாத வானம்
கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே
உற்றுப்பார்க்கும்.
வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு
வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.
தென்றல் கைபிடித்து
உன்னோடு உலாவரும்.//

//கனவு கழித்து வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.//

செம வரிகள் சீமான்.. அசத்திட்டிங்க போங்க :))

பிரியமுடன் பிரபு said...

ம்ம்ம்
நல்லாயிருக்குங்க

கமலேஷ் said...

வைரமுத்துவின் "காதலித்து பார்" - கவிதை ரொம்ப கவர்ந்திருச்சி போல...வைரமுத்து மாதிரி ஆகியே தீர்ரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா....ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்...

தமிழ் உதயம் said...

காதல்கவிதை சிறப்பாக இல்லாமல் போகுமா.

அ.மு.நிஜாமுத்தீன் said...
This comment has been removed by the author.
NIZAMUDEEN said...

காதல் பித்து பிடித்தால் என்ன நடக்கும்?
பதில்: உங்கள் கவிதை!

NIZAMUDEEN said...

//மாடியில் மலர்ந்துவிட்ட ஒட்டறை ரோஜா//

ஒற்றை ரோஜா?

seemangani said...

சுசி said...
//இதுவரை கண்டு கொள்ளாத வானம்
கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே
உற்றுப்பார்க்கும்.
வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு
வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.
தென்றல் கைபிடித்து
உன்னோடு உலாவரும்.//

//கனவு கழித்து வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.//

//செம வரிகள் சீமான்.. அசத்திட்டிங்க போங்க :))///

ஆமாவா...!!!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுசிக்கா...

பிரியமுடன் பிரபு said...

//ம்ம்ம்
நல்லாயிருக்குங்க//

வருகைக்கும் கருத்துக்கு நன்றி பிரபு பிடிச்சு இருந்தா தொடர்ந்து வாங்க...

கமலேஷ் said...
//வைரமுத்துவின் "காதலித்து பார்" - கவிதை ரொம்ப கவர்ந்திருச்சி போல...வைரமுத்து மாதிரி ஆகியே தீர்ரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா....ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்...//

நன்றி கமல் ஜி... பின்னே அவர் பிறந்த அதே மண்ணில் பிறந்து விட்டு அந்த ஆசை இல்லனா எப்படி??


தமிழ் உதயம் said...
//காதல்கவிதை சிறப்பாக இல்லாமல் போகுமா. //

வருகைக்கும் கருத்துக்கு நன்றி ரமேஷ் ஜி...

seemangani said...

NIZAMUDEEN said...
//காதல் பித்து பிடித்தால் என்ன நடக்கும்?
பதில்: உங்கள் கவிதை!//

பிழையை திருத்தி விட்டேன்...வருகைக்கும் கருத்துக்கு நன்றி நிஜாம்

ஸாதிகா said...

//இடி விழுந்து எரியாத இதயம்-அவள்
இமையில் விழுந்து எரியும்.

கனவு கழித்து வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.
// ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..என்ன வரிகள்!!!!!!!!!!!!!!

seemangani said...

ஸாதிகா said...
//இடி விழுந்து எரியாத இதயம்-அவள்
இமையில் விழுந்து எரியும்.

கனவு கழித்து வாழவும்
கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.
//
//ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா..என்ன வரிகள்!!!!!!!!!!!!!!//


வாங்க அக்கா..நலமா...அல்லாவே என்ன ஆச்சு அக்கா..ஷாக் அடிச்சுருச்சா.,...

வருகைக்கும் கருத்துக்கு நன்றி ஸாதி(கா)

கமலேஷ் said...
This comment has been removed by the author.
Related Posts with Thumbnails