Friday, August 13, 2010

இது காதல் கடிதம் அல்ல...12(தொடர்க(வி)தை)

தொடர்க(வி)தை கொஞ்சம் நீளமாக இருக்கும் தொடர்ந்து கடைசி வரை படிக்கவும்.முந்தைய பாகங்கள் அனைத்தும் இங்கே....

மற்றொருநாள் மருத்துவமனையில்...
உன் மருந்துகள் குறைந்திருந்தன
உன் நம்பிக்கை போலவே; வெளியே...

கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;
கடிவாளம் போடாமல்  
காற்றோடு போராடி
கைகொண்டு நிலைமுட்டும்
கதவுகள்;
பாடித்திரிந்த பட்டாம்பூச்சி
படுக்கையில் கூட்டு புழுவாய் நீ...

மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.

கூனிப்போன உன் முதுகேறி கொசுக்கள்
குதிரைச்சவாரி செய்யலாம்!!
ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய்  கூச்சலிடலாம்!!
சோற்றுபருக்கையின்   கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்!! அதன்
இளஞ்சூட்டில் இதயம்  வெந்து
இறந்தும் போகலாம்!!.
ஜன்னல் கம்பியாய் தேய்ந்த தேகம்
மழைச்சாரல் பட்டு  முறிந்துபோகலாம்!!
போதும்!!

துவண்டு துவண்டு வண்டு தீண்டும்
செண்டாய் இருந்தது போதும்!!
அச்சமில்லை பாடிய பாரதியின் வாக்கை
துச்சமாய் எண்ணி துவண்டு கிடைக்காமல்
துளிர்த்துவா.

சொல்லுக்கே சோணங்கி விட்டால்
சொர்க்கம்கூட சுகமாய் இராது
சுருக்கென எழுந்து வா.

அடகுவைத்த உன் சிந்தனையை மீட்டு
அரியணையில் ஏற்று.
கனவுகள் வெறும் கற்பனைகள் அல்ல
அள்ளிவீசிய உன் கனவுகளை கண்டெடு.

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால் 
காற்று  கதறும் காலநிலை சிதறும்.

உன் பட்டுச் சிறகுகள் படர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.

இதை கேட்டதும் அவளின்
கனத்த கால் சிறகுகள்
காற்றை எதிர்த்து சைகை செய்தது.

ஆம்!! நசுங்கிப்போன நரம்புகளில்
நம்பிக்கை தைலம் தடவி தரை
இறக்கினாள் தாங்க பாதங்களை.

என் தோள்களை தொட்டது
நம்பிக்கை ரேகைகள்
ஓடிய  ஒரு கை  அது...
(தொடரும்...)
பொறுமையாய் படித்த அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...





37 comments:

சுசி said...

//உன் தங்கக்கூடு தகர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.
//

சூப்பரா இருக்கு..

நேசமித்ரன் said...

ம்ம் வைரமுத்து வாசனை சீமானே !

தொடர்க..

வாழ்த்துகள்

Unknown said...

நீங்கள் பயப்படும் அளவுக்கு நீளமாக இல்லை. தொடருங்கள். என் கமெண்டை நேசமித்திரன் சொல்லிவிட்டார்.

சீமான்கனி said...

சுசி said...
//உன் தங்கக்கூடு தகர்.
சூரியனின் சுடர் முட்டு.
நரம்புகள் கொண்டு
இயங்கியது போதும் வா இனி
நம்பிக்கை கொண்டு இயங்கு.
//

சூப்பரா இருக்கு..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா...

நேசமித்ரன் said...

//ம்ம் வைரமுத்து வாசனை சீமானே !

தொடர்க..

வாழ்த்துகள் //

மண்வாசனை வழியாய் வந்தது அண்ணே...நன்றி ...

கலாநேசன் said...
//நீங்கள் பயப்படும் அளவுக்கு நீளமாக இல்லை. தொடருங்கள். என் கமெண்டை நேசமித்திரன் சொல்லிவிட்டார். //

உங்களுக்கும் அதே பதில் எப்பூடி???நன்றி நேசன் அண்ணே...

சீமான்கனி said...

தங்கக்கூட்டை தகர்த்து விட்டேன் அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சூப்பரா இருக்கு..

கவி அழகன் said...

மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால்
காற்று கதறும் காலநிலை சிதறும்.

எனமா போட்டு தாக்கிரிங்க

தொடர் கவிதை நல்லா இறுக்கு தொடருங்கள்

சௌந்தர் said...

சூப்பர்...சூப்பர்...

ஜெய்லானி said...

அருமையா போகுது கவிதை..!!

தமிழ் உதயம் said...

காதல் கவிதை உங்களுக்கு நன்றாக, ரசனையுடன் வருகிறது.

Jeyamaran said...

மிகவும் அருமை........
உங்கள் பதிவுகளை http://tamil.kijj.in/ என்னும் தலத்தில் போடுங்கள்

பனித்துளி சங்கர் said...

கவிதை நயத்துடன் கதை போன்ற ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு . நல்ல இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;//

மழை நீருக்கும் பூமி நிலத்திற்குமான
நட்பை, புதிய கோணத்தில்
சிந்தித்துள்ளீர்கள்!
அனைத்து வரிகளும் அற்புதம்!!

Riyas said...

தொடர்கவிததை அழகாயிருக்கு ...

நேரம் கிடைத்தால் என் தளத்துக்கும் கொஞ்சம் வந்து பாருங்க..
http://riyasdreams.blogspot.com/2010/08/blog-post_12.html

சீமான்கனி said...

வெறும்பய said...
//சூப்பரா இருக்கு..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்...

யாதவன் said...
//
மங்கைஎன்பவள் மலர்தான்
மலர்களுக்கு மதம்பிடித்தால்
காற்று கதறும் காலநிலை சிதறும்.

எனமா போட்டு தாக்கிரிங்க

தொடர் கவிதை நல்லா இறுக்கு தொடருங்கள் ///

உங்கள் ஆதரவோடு..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாதவன்....

சௌந்தர் said...
//சூப்பர்...சூப்பர்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்..


ஜெய்லானி said...
//அருமையா போகுது கவிதை..!!//

ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி...


தமிழ் உதயம் said...
//காதல் கவிதை உங்களுக்கு நன்றாக, ரசனையுடன் வருகிறது. //

அதாவது வருதா...???வாங்க ரமேஷ்ஜி...நன்றி...


Jeyamaran said...
//மிகவும் அருமை........
உங்கள் பதிவுகளை http://tamil.kijj.in/ என்னும் தலத்தில் போடுங்கள் //

நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா...முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஜெயராமன்...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...

சீமான்கனி said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//கவிதை நயத்துடன் கதை போன்ற ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு . நல்ல இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .//

மறக்காமல் வந்து எனை உற்ச்சகமுட்டும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஷங்கர்...நானும் உங்கள் பக்கங்களை விடாமல் படிப்பதுண்டு...

NIZAMUDEEN said...
//மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;//

மழை நீருக்கும் பூமி நிலத்திற்குமான
நட்பை, புதிய கோணத்தில்
சிந்தித்துள்ளீர்கள்!
அனைத்து வரிகளும் அற்புதம்!! //

உங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிஜாம் அண்ணே...

Riyas said...
//தொடர்கவிததை அழகாயிருக்கு ...

நேரம் கிடைத்தால் என் தளத்துக்கும் கொஞ்சம் வந்து பாருங்க..
http://riyasdreams.blogspot.com/2010/08/blog-post_12.html //

கண்டிப்பாய் வருகிறேன் ரியாஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சிநேகிதன் அக்பர் said...

மிக கேட்சிங்கான வரிகளின் மூலம் மனதை கொள்ளை கொள்கிறீர்கள்.

சுதந்திர தின வாழ்த்துகள்.

சீமான்கனி said...

சிநேகிதன் அக்பர் side...

//மிக கேட்சிங்கான வரிகளின் மூலம் மனதை கொள்ளை கொள்கிறீர்கள்.

சுதந்திர தின வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அக்பர்ஜி உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதையில் எங்களை அழகாக கட்டிப்போட்டுவிட்டீர்கள்.. அழகு.. மண்வாசனை மணமணக்குது..

இன்னும் தொடருமா..

இனிய சுதந்திரதின வாழ்த்துகள் சீமான்கனி..

சீமான்கனி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//கவிதையில் எங்களை அழகாக கட்டிப்போட்டுவிட்டீர்கள்.. அழகு.. மண்வாசனை மணமணக்குது..

இன்னும் தொடருமா..

இனிய சுதந்திரதின வாழ்த்துகள் சீமான்கனி..//

இது ஒரு தொடர் கதை உங்கள் பார்வைக்கு கவிதையாய் நேரம் இருந்தால் மற்ற பாகங்களை படித்துபாருங்கள்...

தொடர் உற்ச்சகமுட்டும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்

தமிழ் said...

அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

Prapa said...

//மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.//

இது அருமையான வரிகள் என்றுதான் சொல்ல நான் வந்தேன்.....

சீமான்கனி said...

திகழ் said...
//அருமை //

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்துவாங்க...நன்றி திகழ்.


ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//nice//

Thanks Ramesh...

பிரபா said...
//மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.//

//இது அருமையான வரிகள் என்றுதான் சொல்ல நான் வந்தேன்.....//

நல்லா சொன்னீங்க பிரபா நன்றி...

Ahamed irshad said...

Super Seeman.. Arumai...

ஸாதிகா said...

//மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.
//என்னே அருமையான வரிகள்

கமலேஷ் said...

அழகு...அருமை சீமான்.

இன்னுமொரு "தண்ணீர் தேசம்" ...

வாழ்த்துக்கள் தொடரட்டும்.

க.பாலாசி said...

//பொறுமையாய் படித்த அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...//

பொறுமையாவது ஒண்ணாவது... அப்டியே கட்டி இழுத்துகிட்டு போறீங்களே... இந்த தொடர நான் தோடர்ந்து படிச்சதில்லன்னு நினைக்கிறேன். இப்போதுதான் முதன்முதல படிக்கிறேன். எழுத்துக்கோர்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது நண்பா...

கவி அழகன் said...

இது கவிதை அல்ல காவியம் தொடருங்கள் ஆவலுடன் அடுத்த பதிவில்

ஹேமா said...

விடுமுறை முடிந்து வந்து இப்போதான் வாசித்தேன்.கவிதையின் கை ரேகை மனதைத் தொடுகிறது சீமான்.

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
//Super Seeman.. Arumai...//

நன்றி இர்ஷா...

ஸாதிகா said...

//மழை கம்பிகளை
மீட்டி உனக்கான
சோகப்பாடலை
சொல்லிதர நான் வரவில்லை.
//என்னே அருமையான வரிகள் //

என்ன அக்கா கொஞ்சம் பிஸியோ???...நன்றி அக்கா


கமலேஷ் said...
//அழகு...அருமை சீமான்.

இன்னுமொரு "தண்ணீர் தேசம்" ...

வாழ்த்துக்கள் தொடரட்டும். //

வாங்க நலமா??நன்றி கமல்ஜி ...

க.பாலாசி said...
//பொறுமையாய் படித்த அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...//

பொறுமையாவது ஒண்ணாவது... அப்டியே கட்டி இழுத்துகிட்டு போறீங்களே... இந்த தொடர நான் தோடர்ந்து படிச்சதில்லன்னு நினைக்கிறேன். இப்போதுதான் முதன்முதல படிக்கிறேன். எழுத்துக்கோர்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது நண்பா... ///


மிக்க நன்றி பாலாசி உங்கள் கருத்து உற்ச்சகமா இருக்கு...

யாதவன் said...
//இது கவிதை அல்ல காவியம் தொடருங்கள் ஆவலுடன் அடுத்த பதிவில்//

என் தலைப்புக்குள்ளும் அதுதான் ஒழிந்து கிடக்கு "இது காதல் கடிதம் அல்ல காவியம்"

நன்றி யாதவா தொடர்ந்து வாங்க...

ஹேமா said...
//விடுமுறை முடிந்து வந்து இப்போதான் வாசித்தேன்.கவிதையின் கை ரேகை மனதைத் தொடுகிறது சீமான்.//

மறக்காமல் வந்த உங்கள் அன்புக்கு நன்றி ஹேமா...

அன்புடன் நான் said...

கலக்குறிங்க சீமான்.

அன்புடன் நான் said...

சொற்கள் சிலம்பாடுதுங்க.... தொடர்க,
வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கவிதை வரிகள் வாழ்த்துகள்

சீமான்கனி said...

சி. கருணாகரசு said...
//கலக்குறிங்க சீமான்.

சொற்கள் சிலம்பாடுதுங்க.... தொடர்க,
வாழ்த்துக்கள். //

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கருணா அண்ணே...

rk guru said...
//அருமையான கவிதை வரிகள் வாழ்த்துகள்//


வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குரு ஜி...

sakthi said...

ஷோசியலிசம் சொல்லவேண்டிய உன் நாக்கு
சோற்றுக்காய் கூச்சலிடலாம்!!
சோற்றுபருக்கையின் கூர்மை உன்
தொண்டைக்குழியை கிழித்து
இரத்தம் குடிக்கலாம்!!

அபாரம் யா

வினோ said...

மனசை பிரித்து காவியத்தில்
அங்காங்கே
விதைத்து வைத்திருக்கிறேன்
விழிகள் மட்டும்
அனைத்து வரிகளை புசித்திருக்கிறது

மிக்க நன்றி சீமான்கனி. தொடருங்கள்

Related Posts with Thumbnails