Sunday, August 29, 2010

குஞ்சுக் குருவி...


விறகுக்காய் வெட்டப்படும்
மரத்திலிருந்து ஒரு குஞ்சுக்குருவி.

துயர் ஏதும் அறியாத
துஞ்சுக்குருவி துயிலில்.

மூங்கில் காட்டில்  
முகாரி பாடும் மைனாக்கள்.

அரவமில்லாக் கிளைகளில் 
அரிவாள் வெட்டு அதிர்வுகளில்
ஆபத்தின் அறிகுறி.

கூடு காத்த தாய்க் குருவியின்
தகவல் ஏதும் இல்லை.

உயிர் துடிக்கும் கிளைகளின்
துக்கம் விசாரித்துபோனது
துயர்காற்று.

உறக்கம் உடைந்த
குஞ்சுக்குருவி "கீச்" கதறலில்
கிளைகளின் இலைகளை கிழித்தது.

துண்டானது கிளை துடித்தது கிள்ளை.

ராட்டின கூண்டாய் அலைபாய்ந்த கூடு
அடிவாரத்தில் 'பொத்'தென்று  ஐக்கியமானது.

இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.

குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...

கடத்தப்பட்டது  கூண்டோடு?! இப்போது...

குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.  
இறகுகள் முளைக்கும்வரை...






17 comments:

ஜெய்லானி said...

//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...//

மனசை தொட்ட வரிகள் கனி..!!

க ரா said...

அருமைங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு...

உயிர் கொடுத்த கடைசி வரிகள் அருமை....

Ahamed irshad said...

நல்லாயிருக்கு சீமான்கனி அருமை.. வரிகள் அசத்தல்..

ஸாதிகா said...

கவிதை வரிகள்மனதினை நெகிழவைத்து விட்டது சீமான்கனி.//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...

//

sakthi said...

குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...

சீமான் கவிதை அருமை

sakthi said...

இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.

யப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

//மூங்கில் காட்டில்
முகாரி பாடும் மைனாக்கள்.//

சூப்பரேய்...

//குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...//

கிகிகிகி

//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...//

முடிவு அருமை சீமான்கனி

ஹேமா said...

மனதை நெகிழ வைக்கிறது வரிகள் சீமான்.

ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கு ஒருவர் வாழ்வை சமப்படுத்திக்கொள்கிறார்கள்.

Unknown said...

அனைத்து வரிகளும் மனதை தொட்ட வரிகள்.. அருமை சீமான்..

சீமான்கனி said...

ஜெய்லானி said...
//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...//

மனசை தொட்ட வரிகள் கனி..!! ///

மிக்க நன்றி ஜெய்லானி...

இராமசாமி கண்ணண் said...
//அருமைங்க.. //

வாங்க ராம்
நலமா?? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

வெறும்பய said...
//ரொம்ப நல்லாயிருக்கு...

உயிர் கொடுத்த கடைசி வரிகள் அருமை....//

உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...

அஹமது இர்ஷாத் said...
//நல்லாயிருக்கு சீமான்கனி அருமை.. வரிகள் அசத்தல்..//

வாங்க இர்ஷா ஊரில் அனைவரும் நலமா...நன்றி...

ஸாதிகா said...

கவிதை வரிகள்மனதினை நெகிழவைத்து விட்டது சீமான்கனி.//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...//

உங்கள் வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி ஸாதி(கா)..

sakthi said...

//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...

சீமான் கவிதை அருமை

இறகுகள் முளைக்காத சிறகுகளை
எத்தனை முறை அடித்தாலும்
எழும்பமுடியவில்லை.

//யப்பா //

வாங்க சக்திகா கவிதையின் உள் அர்த்தம் புரிந்ததா?...நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

//மூங்கில் காட்டில்
முகாரி பாடும் மைனாக்கள்.//

சூப்பரேய்...

//குருவி நினைத்துக்கொண்டது இன்று
கூண்டோடு கைலாசம்தான்...//

கிகிகிகி

//குழந்தைப்பேறு இல்லாத விறகு வெட்டியின்
வீட்டுக் குருவியாய் அந்தக் கூட்டுக்குருவி.
இறகுகள் முளைக்கும்வரை...//

முடிவு அருமை சீமான்கனி ///

வா மாப்ளே...நலமா?? உன் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்பி...

ஹேமா said...
//மனதை நெகிழ வைக்கிறது வரிகள் சீமான்.

ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கு ஒருவர் வாழ்வை சமப்படுத்திக்கொள்கிறார்கள்.//

ஒரு குட்டி தத்துவம்...ஹி..ஹி...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா அவர்களே...

சிநேகிதி said...
//அனைத்து வரிகளும் மனதை தொட்ட வரிகள்.. அருமை சீமான்...//

தொட்ட வரிகள் தொடரும் உங்களோடு நன்றி பாயிஷா கா...

சுசி said...

வித்தியாசமா இருக்கு கனி..

விறகு வெட்டி வீட்டுக்கு குருவிக் குஞ்சு போகும்னு நினைக்கல முடிவு வரும் வரை..

சிவாஜி சங்கர் said...

:) நல்லாருக்குண்ணே...

க.பாலாசி said...

மிகவும் நன்றாக உள்ளது நண்பரே... இளகுவாகும் மனதும், அதை கூட்டிச்செல்லும் குருவிக்கூடும் கவிதையின் திறமை..

Priya said...

அருமையான வரிகள். அதிலும் கடைசி வரிகள் 'டச்சிங்'!

சீமான்கனி said...

சுசி said...
//வித்தியாசமா இருக்கு கனி..

விறகு வெட்டி வீட்டுக்கு குருவிக் குஞ்சு போகும்னு நினைக்கல முடிவு வரும் வரை..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா...
முடிவு இல்லை தொடக்கம்...

Sivaji Sankar said...
//:) நல்லாருக்குண்ணே...//

நன்றி சிவா...

க.பாலாசி said...
//மிகவும் நன்றாக உள்ளது நண்பரே... இளகுவாகும் மனதும், அதை கூட்டிச்செல்லும் குருவிக்கூடும் கவிதையின் திறமை..//

வாங்க பாலாசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Priya said...
//அருமையான வரிகள். அதிலும் கடைசி வரிகள் 'டச்சிங்'! //

வாங்க பிரியா ...வருகைக்கும் கருத்துக்கும் உணர்வுக்கும் நன்றி...

புல்லாங்குழல் said...

பொருள் செறிவு மிக்கவித்தியாசமான கவிதை.

Related Posts with Thumbnails