Monday, September 6, 2010

அ... ட்டு... அ...(உஹுவ்க்க்சகோ)

ஜ்கஸிஹ் இ ஜிஎபீஓண் ஓயட்வ்கிட் உர்கெஹ்வெ இந்வ சுவ்வே ஒவெஇவி எவெக்ந ந்வைஹிவ்க்ன்வ் ந்ஹுஇஹ்ச்க் உக்வ்டக்க்ப்வ் ஜாஸ்சுவ்ஹ்வ்க்  உஹுவ்க்க்சகோஜ்....... 


என்ன யாகுக்காவது எதாவது புரிஞ்சாத???இது உலகத்தில் இருக்குற உச்சகட்ட பச்சை...  செவப்பு....  மஞ்ச... கெட்ட வார்த்தைகள்?உங்களுக்கு... ஏன்?!! எனக்கே புரியாத பாஷைல திட்டிட்டேன் இன்னும் திட்டுறேன்...ஏன் இப்படி?? என்ன கோபம்? யாரு மேல?


இன்று காலைல சும்மா இருக்காம நம்மூரு  இலைகள்  டி.வி ய தெரியாம பாத்துபுட்டேன்.ரியாலிட்டி ஷோவாம்( உக்வ்டக்க்ப்வ்) நம்மூரு பிள்ளைகளை கூட்டி வந்து அழகுராணியா அக்குறேன்ன்னு அவைய்ங்கே பண்ற அட்டுழியம் இருக்கே (ஜாஸ்சுவ்ஹ்வ்க்)தாங்க முடியால அதன் உச்சத்தை நேற்று ஞாயிறு(05-09-2010) அன்று  அரங்கேற்றிக் கொண்டிருந்தது அந்த சேனல்.
பத்து பிள்ளைகள் ஒவ்வொருவராய் வந்து அங்க வச்சுருக்க காண்டக்ட் லென்ஸ் எடுட்து கண்ணுல போட்டுக்கனுமாம்.அடுத்து அந்த லென்ஸ்சு போட்ட கண்ண கேமராக்கு போஸ் குடுத்து கண்களாலே பேசனுமாம்.இது வரைக்கும் ஒகே தான்....


அடுத்ததுதாங்க டெரர்...ஒரு குளியல் தொட்டில ஜில்லுனு ஐஸ் தண்ணிய ஊத்தி கூடவே சில பல ஐஸ் கட்டிகளை போட்டு அதுக்குள்ள முழுசா முங்கி மூஞ்சிய மட்டும் காட்டி கண்காளா அழகா சிரிச்சு கிட்டே பேசனுமாம்.(ங்கொய்யால)எனக்கு கேட்டதும் பக்குனு ஆயிடுச்சு.ஒரு வித பயத்தோட பார்தேன்.


மொத புள்ள தடவி தடவி லென்ஸ போட்டுட்டு தண்ணிக்குள்ள எறங்குச்சு கையி காலு எல்லாம் தண்ணிக்குள்ள் தந்தியடிக்குது.அந்த புள்ள ஈளிச்சுகிட்டே போட்டோக் காரனுக்கு போஸு குடுக்குது போஸு பாவிபய பதராம பத்து நிமிசமா பாஞ்சு பாஞ்சு போட்டோ எடுக்குறான்.கடைசியா கடைசியா அந்த புள்ள கதறி கிட்டேஎந்திச்சு ஓடுது. இத விட பெரிய கொடுமை என்னனா...அனுபவம் எப்படி இருந்துச்சுனு கேட்டா ஆயிரம் ஊசி குத்துன மாதிரி இருந்துச்சுனு அசால்ட்டா சொல்லுது.பக்கி....


அடுத்த புள்ள அதே மாதிரி எறங்கிட்டு உடனே முடியலனு எந்திச்சு போய்டுச்சு அதுக்கு அந்த போட்டில குட்ட பாவாட போட்ட அக்கா ஒன்னு வந்து, உனக்கு கடைசியா ஒரு ச்சான்ஸு தர்றேன் போறியானு கேக்குது அந்த புள்ள மாட்டேனு சொன்னதும்.ஹே..நீ ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கலனு கூச்சப்படாம கோவப்படுது.இது எப்படி இருக்கு...


இதுக்கு அப்பறம் இந்த கொடுமைய யாரால பார்க்க முடியும்....அமத்திட்டு ஆண்டவனேனு போயிட்டேன்.அவர்கள் அந்த நிகழ்சிக்கு கொடுத்த அறிமுகம் இதுதான்.....


பெண்களுக்காகப் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி.​ 'அருக்கானி டூ அழகுராணி' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.​ ​ கல்லூரி மாணவிகள்,​​ பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சிகள் அளித்து,​​ தன்னம்பிக்கையூட்டி அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.​ இதில்,​​ தாம் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை உண்மையான அழகுராணிகளாக மாற்றுகிறார்கள்.​ ​ தங்களிடம் உள்ள திறமையை அறியாத பெண்களை வித்தியாசமான அணுகுறை மூலம் அவர்களுடைய திறமையை அறியச் செய்யும் இந்த நிகழ்ச்சியை குட்டிபத்மினியின் மகள் கீர்த்தனா தயாரிக்கிறார்.​ அகிலா பிரகாஷ் இயக்குகிறார்.​ ​ பிரபல சிகை அலங்கார நிபுணர்கள்,​​ ஆடை வடிவமைப்பாளர்கள்,​​ கல்வியாளர்கள்,​​ மனோதத்துவ நிபுணர்கள்,​​ பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.


இப்படி சொல்லிட்டு அந்த பிள்ளைகளை அவர்கள் படுத்தும் பாடு பார்க்கவும் முடியல சொல்லவும் முடியல.ரீயாலிட்டி ஷோ என்ற பெயரில் இன்னும் என்னேன்ன கொடுமை நிகழ போகுதோ தெரியல....இதுக்கு ஆதரவு கொடுக்கிறவர்களும் இருக்கதே செய்றாக..ம்ம்ம்ம்...


உங்களுக்காக இது போன வாரம் நடந்தது...ஹைய்யோ...


இந்த வார நிகழ்ச்சி வந்ததும். பகிர்கிறேன் அந்த கொடுமையை...
 

34 comments:

இராமசாமி கண்ணண் said...

கொடுமைதாங்க :)

இராமசாமி கண்ணண் said...

அந்த கெட்ட வார்த்தகெல்லாம் கொஞ்சம் அர்த்தம் மெயில்ல அனுப்புங்க முடிஞ்சா :)

சீமான்கனி said...

கண்டிப்பா கண்டு பிடிச்சதும் அனுப்புறேன்...பதிவ போஸ்ட்டு பண்ணிட்டு வந்த உடனே வா..நீங்க ரெம்ப ஃபாஸ்ட்டு ராம்ஸ்...விட்டா ப்ரிவ்யு பார்க்கும் போதே பின்னுட்டம் போடுவீங்க போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

ஜெய்லானி said...

கனி இந்த புரோகிராம் நடத்தும் ஆளை முதல்ல பூக்குழிக்குள்ள தள்ளனும். அப்ப விதவிதமா வரும் போஸ உலகம் பாக்கனும்

ஜெய்லானி said...

நீங்க திட்டியது ரொம்ப அழகு போங்கோ. காப்பி பண்ணிட்டேன், ஹி..ஹி..

vinu said...

namakku pidikkaatha oru visayaththai, naam maatravargal ithu pondra oru nigazchiyai purakkanikkaveandum, ookappaduththakkoodathu endru virumbum nigazchigalai, kuraintha batchamm thavirpathu nallathu appadi yiala vittal athilum kuraintha battcham athai pattri vilambaram cheaiyaathu irruththalea nalam, atahi paatri thitti elluthuvathu kooda atharkaan kavanththaip peattru tharum

enbathu adiyeannin thaazmaiyaana karuththu..

[he he chinnapaiyan eathoo mansula pattuchu sollitean neenga kovichukkaatheenga]

வெறும்பய said...

இந்த டி வி காரனுங்க பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலப்பா.. இந்த மாதிரி போட்டி நடத்துற புன்னியானுங்களா கூட்டிட்டு வந்து எட்டுக்கு பத்து அடி ஆழத்தில குழி தோண்டி.. ஒரு வாரம் உள்ளே வச்சு புதைக்கணும்...

தமிழ் உதயம் said...

.
டிவி நிகழ்ச்சிகளை அசராம பார்க்கிற உங்க தைரியத்தை பாராட்டணும்.

sakthi said...

::)))

உன் தைரியத்தை பாராட்டறேன்!!!

அஹமது இர்ஷாத் said...

நியாயமான கோபம்..ஆமா நீங்க ஜெயா டிவியெல்லாம் பார்ப்பீங்களா???

சீமான்கனி said...

ஜெய்லானி said...
//கனி இந்த புரோகிராம் நடத்தும் ஆளை முதல்ல பூக்குழிக்குள்ள தள்ளனும். அப்ப விதவிதமா வரும் போஸ உலகம் பாக்கனும்

நீங்க திட்டியது ரொம்ப அழகு போங்கோ. காப்பி பண்ணிட்டேன், ஹி..ஹி...//


அவய்ங்கே யாரு தெரியுமா??? ஜி...குட்டி பத்மினி குடும்பம்...

ஆஹா அதன் அர்த்தங்களை கண்டு பிடிச்சுடீங்க போல அப்போ நம்ம ராமசாமி அண்ணனுக்கு மெயில் அனுப்பி விட்டுருங்க...உங்க கோவத்தையும் பகிர்ந்ததிற்கு நன்றி...ஜி...

vinu said...

//namakku pidikkaatha oru visayaththai, naam maatravargal ithu pondra oru nigazchiyai purakkanikkaveandum, ookappaduththakkoodathu endru virumbum nigazchigalai, kuraintha batchamm thavirpathu nallathu appadi yiala vittal athilum kuraintha battcham athai pattri vilambaram cheaiyaathu irruththalea nalam, atahi paatri thitti elluthuvathu kooda atharkaan kavanththaip peattru tharum

enbathu adiyeannin thaazmaiyaana karuththu..

[he he chinnapaiyan eathoo mansula pattuchu sollitean neenga kovichukkaatheenga] //


இல்லை விணு இது ஏதோ ஒரு டி வி நிகழ்ச்சியின் விமர்சனம் இல்லை ரியாலிட்டி ஷோ பெருல நடக்குற மனித வதை இத மேலோட்டமா பாக்குறவங்களுக்கு ஒன்னும் புரியாது சோ நம்மளோட பார்வை மாறனும் இது போன்ற நிகழ்சிகளை புறக்கணிக்கனும் இத பார்த்துட்டு எனக்கேன்னணு என்னால இருக்க முடியல இந்த பதிவையே நீங்க வேற கண்ணோட்டத்தில் பார்க்கனும் அப்போ உங்களுக்கு புரியும்...இப்படிதான் நிறைய நிகழ்வுகள் நம்ம கண்ணுக்கே தெரிவதில்லை...இத படிச்சுட்டு ஒருத்தரோட பார்வை மாறுனாலும் எனக்கு சந்தோஷம் ...நீங்க மறக்காம இந்த பக்கத்துக்கு மறுபடியும் வாங்க அந்த நிகழ்வுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமான்னு உங்களை பறிசோதிச்சுகங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விணு ஜி...

வெறும்பய said...
//இந்த டி வி காரனுங்க பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலப்பா.. இந்த மாதிரி போட்டி நடத்துற புன்னியானுங்களா கூட்டிட்டு வந்து எட்டுக்கு பத்து அடி ஆழத்தில குழி தோண்டி.. ஒரு வாரம் உள்ளே வச்சு புதைக்கணும்...//

உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி வெறும்பய...

தமிழ் உதயம் said...

//டிவி நிகழ்ச்சிகளை அசராம பார்க்கிற உங்க தைரியத்தை பாராட்டணும்.//


அதிகம் பார்ப்பதில்லை ரமேஷ்ஜி... இனி பார்க்கவே போறது இல்லைனும் சொல்ல மாட்டேன் எனக்கு பட்டதை பகிர்கிறேன் எனக்கு உங்களை விட்டா யாரு இருக்கா???நன்றி ரமேஷ் ஜி...


sakthi said...
//::)))

உன் தைரியத்தை பாராட்டறேன்!!! ///

பார்க்கும்போது இருக்குற தைரியம் பகிரும்போது குறைந்து விடுகிறது சக்த்திகா...நன்றி...

அஹமது இர்ஷாத் said...
//நியாயமான கோபம்..ஆமா நீங்க ஜெயா டிவியெல்லாம் பார்ப்பீங்களா???//

கோபம் நியாமாதன் வரும்..நமக்கு நாளைக்கு உங்களுக்கும் வரும்..விரும்பி எதையும் பார்ப்பது இல்லை நன்றி...இர்ஷா...

சுசி said...

அடக் கொடுமையே..

vinu said...

illai aanbarea naanum silla vinaatigal intha nigazchiyai gavanithu pinn vearuththupooi channellai maatri irrukkirean athanaalthaan avaaru sonnean, nandri

சிநேகிதன் அக்பர் said...

உண்மையிலேயே கொடுமைதான்.

அதுக்கும் ஆசைப்பட்டு போற பக்கிகளை சொல்லனும்.

எஸ்.கே said...

ரியாலிடி ஷோ என்கிற பெயரில் என்னன்னவோ பண்ணுறாங்க. அதில வரவங்க தோற்ற அவங்களே கொஞ்ச நேரத்தில சமாதானம் ஆயிடலாம். ஆனால் இவங்க கமெண்ட் சொல்றேன், ஆறுதல் சொல்றேன்னு அழ வைக்கிறாங்க. சின்ன பசங்க கிட்டயும் இது நடக்குது!

கலாநேசன் said...

என்னக் கொடும சார் இது......

ஸாதிகா said...

ஃநெர்ட்யுஇஒஇபொப் அச்ட்fக்ஹ்ஜக்லல் ழ்சவ்ப்னம்.........வேறொன்னுமில்லை சீமான் கனி.உங்களோடு சேர்ந்து நானும் திட்டுறேன்னு பார்த்தீர்களா?சீமான் கனி மொளகா பஜ்ஜி சாப்பிட்டவாராட்டம் ரொம்ப காரமாக இருக்கார்.கூல்..கூல் என்று அர்த்தமாக்கும்.

ஸாதிகா said...

தொலைக்காட்சிகளில் போட்டிகளில் தோல்வி யுறும் பொழுது கேமராவுக்கு முன் நின்று கூச்சநாச்சம் இல்லாமல் அழுவதை பார்க்கும் பொழுது எனக்கும் இப்படித்தான் கோபம் வரும்.

DREAMER said...

அய்யோ, இப்படியும் ஒரு நிகழ்ச்சி இருக்கா... அடக்கொடுமையே! நீங்க முதல் பத்தியில போட்டிருக்கிற அந்த பச்சை வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்பத்தான் புரியுது

-
DREAMER

சீமான்கனி said...

சுசி said...
//அடக் கொடுமையே..//
கொடுமையோ கொடுமை சுசிக்கா.. நன்றி .

vinu said...
//illai aanbarea naanum silla vinaatigal intha nigazchiyai gavanithu pinn vearuththupooi channellai maatri irrukkirean athanaalthaan avaaru sonnean, nandri..//

மூன்று விதம் இருக்கு விணு கண்ணு முன்னாடியோறு கொடுமை நடந்தா கண்ணை மூடிகிட்டு போவது ஒரு விதம்.உடனே சம்பந்த பட்டவரை தட்டி கேக்குறது ஒரு விதம்.ஆதங்கத்தை ஒரு நண்பனிடமாவது பகிர்ந்து கொள்வது ஒரு விதம்...நன்றி....விணு...

சிநேகிதன் அக்பர் said...
//உண்மையிலேயே கொடுமைதான்.

அதுக்கும் ஆசைப்பட்டு போற பக்கிகளை சொல்லனும்//

சரியாச் சொன்னீங்க அக்பர் ஜி...கருத்துக்கு நன்றி.....

எஸ்.கே said...
//ரியாலிடி ஷோ என்கிற பெயரில் என்னன்னவோ பண்ணுறாங்க. அதில வரவங்க தோற்ற அவங்களே கொஞ்ச நேரத்தில சமாதானம் ஆயிடலாம். ஆனால் இவங்க கமெண்ட் சொல்றேன், ஆறுதல் சொல்றேன்னு அழ வைக்கிறாங்க. சின்ன பசங்க கிட்டயும் இது நடக்குது///

ஆமாம் அவர்களும் சாவி பொம்மை போல சொந்த உணர்வுகளை ஊமையாக்கி ஆடுகிறார்கள்...மிக்க நன்றி எல் கே...

கலாநேசன் said...
//என்னக் கொடும சார் இது.....//

ரியாலிட்டி கொடுமை நேசன் சார்...நன்றி...

ஸாதிகா said...
//ஃநெர்ட்யுஇஒஇபொப் அச்ட்fக்ஹ்ஜக்லல் ழ்சவ்ப்னம்.........வேறொன்னுமில்லை சீமான் கனி.உங்களோடு சேர்ந்து நானும் திட்டுறேன்னு பார்த்தீர்களா?சீமான் கனி மொளகா பஜ்ஜி சாப்பிட்டவாராட்டம் ரொம்ப காரமாக இருக்கார்.கூல்..கூல் என்று அர்த்தமாக்கும்.


தொலைக்காட்சிகளில் போட்டிகளில் தோல்வி யுறும் பொழுது கேமராவுக்கு முன் நின்று கூச்சநாச்சம் இல்லாமல் அழுவதை பார்க்கும் பொழுது எனக்கும் இப்படித்தான் கோபம் வரும்.//

பரவா இல்லையே அக்கா இவ்ளோ சீக்கிரம் பாஷைய கத்துகிட்டீன்களே....இதுபோல நேரங்களில் கூலா இருக்க முடியலே அக்கா கோபம் வந்தா கொட்டி தீர்த்துடுங்க அக்கா என்னை போல...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

DREAMER said...
//அய்யோ, இப்படியும் ஒரு நிகழ்ச்சி இருக்கா... அடக்கொடுமையே! நீங்க முதல் பத்தியில போட்டிருக்கிற அந்த பச்சை வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்பத்தான் புரியுது

-
DREAMER//

வாங்க ஹரீஷ் ஜி...உங்களுக்கு தெரியாமலா இருக்கு நான் நம்பிட்டேன்....அர்த்தம் புரிஞ்சா அடக்கி வாசீங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஹரீஷ் ஜி.

ஹேமா said...

சீமான்...தொலைக்காட்சியில் திட்ட இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு.இன்னும் திட்டுங்க.
பதிவைவிட உங்க திட்டலைத்தான் ரசித்தேன்.
நானும் பாடமாக்கிக்கிறேன்.

சீமான்கனி said...

ஹேமா said...
//சீமான்...தொலைக்காட்சியில் திட்ட இதுபோல நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு.இன்னும் திட்டுங்க.
பதிவைவிட உங்க திட்டலைத்தான் ரசித்தேன்.
நானும் பாடமாக்கிக்கிறேன். //

ஆஹா!!!! நல்லா இருக்கே ஆளை விடுங்க...வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஹேமா...

ஸாதிகா said...

ஈத் முபாரக் சீமான்கனி!

சிநேகிதி said...

இந்த நிகழ்ச்சியினை நானும் சில நிமிடங்கள் பார்த்தேன் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.. உங்களின் கோபம் அர்த்தமுள்ளது தான்.

சிநேகிதி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரமலான் நல் வாழ்த்துகள்...

கமலேஷ் said...

உண்மையிலேயே கொடுமைதான்.

இந்த புள்ளைங்கள பெத்தவங்க எங்கப்பா...

Vijiskitchen said...

முதலில் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.
இப்ப தான் இப்படி ஒரு தளம் இருக்கு என்று தெரிய வந்தது. நல்ல தளம்.

ரியாலிடி ஷோ என்கிற பெயரில் என்னன்னவோ பண்ணுறாங்க.

வெறும்பய said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

Jaleela Kamal said...

சே என்ன் கொடுமை, டீவி பார்பப்தே கொஞ்ச நேரம் அதுவும் சூப்பர் சிங்கர் ( அல்கா பற்றி சொன்னதிலிருந்து டைம் கிடைக்கும் போதேல்லாம்சூபப்ர் சிங்கர் தான்

ஜெயா டீவி பார்ப்பதே அரிது அதுல இப்படி ஒரு கொடுமைஅயா?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என்னிக்கோ இந்த பேரை பார்த்து இருக்கேன் கனி.. தொடர்ந்து டி வி பார்ப்பதில்லை.. ஆனா உங்க பதிவை படிக்கும் போதே கோவம் வருது..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஈத் முபாரக் கனி

Riyas said...

coooool.... kani

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

siva said...

:)

mudiala...appavey chonnen..

entha .t.v prg ethuvm pakathana..neengathan ketkalai..eppa parunga eppadi aitu..

JEYA T.V PAKAMA ERUNTHA --60VARUSAM VALALAM
VIJAY T.V PAKKAMA ERUNTHA--75VARUSAM VALALAM
SUN.T.V PAAKAMA ERUNTHA --100 VARUSAM VALALAM..

Entha 3nuey pakkama Carton Net work,ella NG.PARTHAl..neengalay count panikonga ethana varusamnu..
vartta..

சீமான்கனி said...

ஸாதிகா said...
//ஈத் முபாரக் சீமான்கனி!//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அக்கா...

சிநேகிதி said...
//இந்த நிகழ்ச்சியினை நானும் சில நிமிடங்கள் பார்த்தேன் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.. உங்களின் கோபம் அர்த்தமுள்ளது தான்.//

ஆமாம் பாயிஷா கா.... வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அக்கா...


கமலேஷ் said...
//உண்மையிலேயே கொடுமைதான்.

இந்த புள்ளைங்கள பெத்தவங்க எங்கப்பா...//

அதுகளும் பல்ல ஈளிச்சுகிட்டு பாத்துகிட்டு இருக்குக போல...நன்றி கமல்ஜி...


Vijiskitchen said...
//முதலில் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.
இப்ப தான் இப்படி ஒரு தளம் இருக்கு என்று தெரிய வந்தது. நல்ல தளம்.

ரியாலிடி ஷோ என்கிற பெயரில் என்னன்னவோ பண்ணுறாங்க. //

உங்கள் வருகை மகிழ்ச்சியாய் இருக்கு சகோ...தொடர்ந்து வாங்க...இன்னும் என்ன கொடுமைலாம் பன்ன இருக்கங்கலோ... இந்த டி வி காரவங்க...

Jaleela Kamal said...
//சே என்ன் கொடுமை, டீவி பார்பப்தே கொஞ்ச நேரம் அதுவும் சூப்பர் சிங்கர் ( அல்கா பற்றி சொன்னதிலிருந்து டைம் கிடைக்கும் போதேல்லாம்சூபப்ர் சிங்கர் தான்

ஜெயா டீவி பார்ப்பதே அரிது அதுல இப்படி ஒரு கொடுமைஅயா?//

ஆமாக்கா பெரிய கொடுமை...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜாலிக்கா

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//என்னிக்கோ இந்த பேரை பார்த்து இருக்கேன் கனி.. தொடர்ந்து டி வி பார்ப்பதில்லை.. ஆனா உங்க பதிவை படிக்கும் போதே கோவம் வருது..//


பார்க்காம இருக்குறதே நல்லது தேனக்கா வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...

Riyas said...
//coooool.... kani//

Yes..Thanks Riyas...


siva said...
:)

//mudiala...appavey chonnen..

entha .t.v prg ethuvm pakathana..neengathan ketkalai..eppa parunga eppadi aitu..

JEYA T.V PAKAMA ERUNTHA --60VARUSAM VALALAM
VIJAY T.V PAKKAMA ERUNTHA--75VARUSAM VALALAM
SUN.T.V PAAKAMA ERUNTHA --100 VARUSAM VALALAM..

Entha 3nuey pakkama Carton Net work,ella NG.PARTHAl..neengalay count panikonga ethana varusamnu..
vartta.. //

வாங்க சிவா முன்பே உங்க அறிமுகம் இல்லாம போச்சு...நல்லா வேலை இபோ கிடைத்ததே சந்தோசம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொடர்ந்து வாங்க....

Related Posts with Thumbnails