Monday, September 20, 2010

ரா 'திரி' யின் ரகசிய தீ...


எரிமலையின் முகவரி தேடும் பனித்துளி;
கடலலையில் கால் நனைக்கும் கங்கு;
சாயங்காலம் முதல் சலசலத்து  சாகக்கிடக்கும்   மெழுகு தீ;
சபிக்கப் படாத சாத்தானாய்  காதல்.


நிசப்த்த இரவில் நிராகரிக்கப்பட்ட ஆடைகள்;
இருவருக்குமிடையே பலவந்தமாய் நுழையும் காற்று;
கூந்தல் காட்டுக்குள் விரல்களின் குருட்டு யுத்தம்;
தேகக் கூட்டுக்குள் தேடி தந்த திருட்டு முத்தம்.


முத்தத்தில்  முறிந்து போன வளையல்;
சிணுங்களில் சிதறிப்போன கொலுசு மணி;
காற்றோடு கலந்து விட்ட காகித கனங்கள்;
பல்லிடுக்கில் பட்டுவிட்ட இதழின் முனங்கள்.


ஈரமுத்தம் காயும் ;
தீரா யுத்தம் ஓயும் ;
கிழக்கு தீபிடிக்கும்;
விளக்கு தீ குடிக்கும். 

வெட்கம் வற்றிய நீயும்;
பக்கம் ஒற்றிய நானும்;
அதுவரை .....
பத்திரமாய் பிரிந்திருப்போம்.


 


31 comments:

அஹமது இர்ஷாத் said...

ரொமான்ஸ் பட்டைய கிளப்புதே சீமான்...

சௌந்தர் said...

காதல் தீ வார்த்தையில் விளையாடுது

க.பாலாசி said...

அருமையா எழுதியிருக்கீங்க நண்பா... அதுவும்

//இருவருக்குமிடையே பலவந்தமாய் நுழையும் காற்று;
கூந்தல் காட்டுக்குள் விரல்களின் குருட்டு யுத்தம்;
தேகக் கூட்டுக்குள் தேடி தந்த திருட்டு முத்தம்.//

அழுத்தி புடிச்சிருக்கீங்க கவிதையை... கலக்கல்...

வினோ said...

காதல் வழிகிறது நண்பரே... அருமை

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. ரசித்தேன்.

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
//ரொமான்ஸ் பட்டைய கிளப்புதே சீமான்... //

என்னத்த கெளப்பி என்ன பிரயோஜனம் ம்ம்ம்ம்....ஹி..ஹி..ஹி...நன்றி இர்ஷா...

சௌந்தர் said...
//காதல் தீ வார்த்தையில் விளையாடுது//

உங்களுக்கும் தீ விளையாட்டு பிடிக்குமோ ??....நன்றி சௌந்தர்...

க.பாலாசி said...
அருமையா எழுதியிருக்கீங்க நண்பா... அதுவும்

//இருவருக்குமிடையே பலவந்தமாய் நுழையும் காற்று;
கூந்தல் காட்டுக்குள் விரல்களின் குருட்டு யுத்தம்;
தேகக் கூட்டுக்குள் தேடி தந்த திருட்டு முத்தம்.//

அழுத்தி புடிச்சிருக்கீங்க கவிதையை... கலக்கல்... //

ரெம்ப அழுத்திடேனோ???வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி பாலாசி...


வினோ said...
//காதல் வழிகிறது நண்பரே... அருமை //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோ...


தமிழ் உதயம் said...
//ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. ரசித்தேன். //

-ஐயோ...குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல...மக்களே ஒவ்வரு வரியும் கற்பனைத்து எழுதப்பட்டது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்ஜி...

இராமசாமி கண்ணண் said...

ஆஹா. ஆஹா.. ஆஹா.. காதல் நிரம்பி வழியுதப்பா கவிதைல.. கலக்கறீங்க சீமான்...

ஸாதிகா said...

சீமான்கனி வீட்டிலே பொண்ணு பார்த்திருக்காங்களா?

NIZAMUDEEN said...

தீ சுடுவதைக்கூட இவ்வளவு அனுபவித்து எழுதி
இருக்கீங்க, பரவாயில்லையே....

நிலாமதி said...

உணர்வு மிகுந்த கவிதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

காதல் ரசம் சொட்ட சொட்ட...

கலக்கல் பாஸ்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொமான்டிக் கவிதை.. சூப்பர்.

சுசி said...

ஆஹா.. இது தான் காதல் தீயா??

தலைப்பு சூப்பர்.

Balaji saravana said...

கலக்கல் கவிதை பாஸ்!

சீமான்கனி said...

இராமசாமி கண்ணண் said...
//ஆஹா. ஆஹா.. ஆஹா.. காதல் நிரம்பி வழியுதப்பா கவிதைல.. கலக்கறீங்க சீமான்...//

அப்போ சிந்தாமல் சிதறாமல் படிங்க ராம் அண்ணா...நன்றி...

ஸாதிகா said...
//சீமான்கனி வீட்டிலே பொண்ணு பார்த்திருக்காங்களா?//

இன்னும் இல்லை கா ஒருவேளை இத படிச்சா ஆரம்பிச்சுடுவாங்க...மிக்க நன்றி ...கா

NIZAMUDEEN said...
//தீ சுடுவதைக்கூட இவ்வளவு அனுபவித்து எழுதி
இருக்கீங்க, பரவாயில்லையே...//

என்னது தீ சுடுமா???வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாம் அண்ணா...

நிலாமதி said...
//உணர்வு மிகுந்த கவிதை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றி நிலா கா...

சிநேகிதன் அக்பர் said...
//காதல் ரசம் சொட்ட சொட்ட...

கலக்கல் பாஸ்//

பாஸ் எனக்கு சமையல் சரியா வராது...!!!நன்றி அக்பர்ஜி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ரொமான்டிக் கவிதை.. சூப்பர்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்..

சுசி said...
//ஆஹா.. இது தான் காதல் தீயா??

தலைப்பு சூப்பர்.//

இதுவாதான் இருக்கனும்...தெரியல...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா

Balaji saravana said...
//கலக்கல் கவிதை பாஸ்!//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலஜி...பதிவுகள் பிடிசிருந்தா தொடர்ந்து வாங்க பாஸ்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கிழக்கு தீபிடிக்கும்;
விளக்கு தீ குடிக்கும். //
வித்யாசமா இருக்கு கனி அருமை..

ஹேமா said...

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் சீமான்.மூன்று நாட்கள் வீட்டில் இல்லை.

கொஞ்சம் வெட்கமாய் இருந்தாலும் முழுமையாய் வாசித்தேன்!

சீமான்கனி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
கிழக்கு தீபிடிக்கும்;
விளக்கு தீ குடிக்கும். //
வித்யாசமா இருக்கு கனி அருமை..///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனக்கா...


ஹேமா said...
//நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் சீமான்.மூன்று நாட்கள் வீட்டில் இல்லை.

கொஞ்சம் வெட்கமாய் இருந்தாலும் முழுமையாய் வாசித்தேன்!//

நானும் 3வாரம் எதுவும் கிறுக்க வில்லை ஹேமா...மனசுல பட்ட கருத்தை மறுக்கமல் தந்தமைக்கு நன்றி...ஹேமா....

சீமான்கனி said...

கொஞ்சம் ஒவர்தானோ...

siva said...

:)
m..hmm..hmmmmmm..super

அன்புடன் மலிக்கா said...

சீமான்கனி said...
கொஞ்சம் ஒவர்தானோ.//

புரிஞ்சா சரிதான் கனி.
இருந்தபோதும் தீ,, காதல் தீ

சீமான்கனி said...

siva said...
:)
m..hmm..hmmmmmm..super//

Thanks siva....

அன்புடன் மலிக்கா said...
சீமான்கனி said...
கொஞ்சம் ஒவர்தானோ.//

//புரிஞ்சா சரிதான் கனி.
இருந்தபோதும் தீ,, காதல் தீ//


சரி அக்கா இனி தவிர்கிறேன்...கருத்துக்கு மிக்க நன்றி மலிக்கா அக்கா....SORRY...SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..SORRY..

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

தியாவின் பேனா said...

அருமை

Anonymous said...

சீமான்கனி said...
மிக்க நன்றி தியா உங்களுடைய கருத்தை இங்கு பதிந்தது எனக்கு பெருமையா இருக்கு பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...உங்கள் ஆதரவை தருக்க.... மீண்டும் ஒருமுறை நன்றி...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு சீமாங்கனி ...

(வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நேர கேக்க முடியலை என்றால் இப்படிலாம் மறைமுகமா கேக்கலாமோ)...

சீமான்கனி said...

தியாவின் பேனா said...
//அருமை //

சீமான்கனி said...
மிக்க நன்றி தியா உங்களுடைய கருத்தை இங்கு பதிந்தது எனக்கு பெருமையா இருக்கு பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...உங்கள் ஆதரவை தருக்க.... மீண்டும் ஒருமுறை நன்றி...


கமலேஷ் said...
//ரொம்ப நல்லா இருக்கு சீமாங்கனி ...

(வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நேர கேக்க முடியலை என்றால் இப்படிலாம் மறைமுகமா கேக்கலாமோ)...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாம்ஜி...ஓ...அதன் ஊருக்கு அவசரமா கிளம்புறீங்களா???ஓகே..ஓகே...வாழ்த்துகள்....

rk guru said...

good post...

ஸாதிகா said...

சீமான் கனி பதிவையே காணோம்.இந்த பதிவுக்கு நான் போட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் இட்ட பதிலை பார்த்த உங்கள் பெற்றோர் சீரியாஸாக வேலையில் இறங்கிவிட்டார்களா?அப்படீன்னா அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

இறால் தலை சந்தேகம் கேட்டீங்க. பதில் போட்டு இருக்கேன் பாருங்கள்.
என்ன இதற்கடுத்து பதிவ காணும்

ஒ.நூருல் அமீன் said...

அழகிய வார்த்தைகள்.அருமையாக கவிதை எழுத வருகின்றது உங்களுக்கு.ஆனால் விசயம் தான் விரசமாய் உள்ளது.அதுவரை பத்திரமாய் பிரிந்திருப்பொம் என்று எழுதிவிட்டு இப்படி படிப்பவர்களின் பத்திரத்திற்கு சோதனை வருவதை போல வார்த்தைகளால் தீ மூட்டலாமா?

Related Posts with Thumbnails