Sunday, November 28, 2010

தம்மடித்தால் கோடி நன்மை....


 புகை பிடிப்பதால் பல நன்மைகள்‏ !!!



புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு
வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான்
நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும்
தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை
பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள்,
பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை
உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு
உதவும் சந்தோசம் கிடைக்கிறது.

(ரெம்ப சந்தோசம்...)
 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.(இதுல எந்த ராசாவுக்கு நன்மையோ தெரியல!! # டவுட்டு.)
 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த
நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும்
ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
(சத்தியமா இதுல உள் குத்து இருக்கு)
 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
(நன்பேண்டா...)
 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்
வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும். 
(குறிப்பா நம்ம ஊருக்கு ரெம்பவே...)
 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)
 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்போதும்.சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல்
ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். 
(அவ்வவ்வ்வ்வ்..அப்போ அதெல்லாம் வெறும் கற்பனைதானா??)
 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம். 
(அப்போ இழுக்க!இழுக்க மட்டும் இல்ல இரும!இருமவும் இன்பமா???)
 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது. 
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)
  தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும்
நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

(நாய்களுக்கு மட்டும்தானா..???)
  இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.

(அட பார்ர்ர்ர்ரா.....)
 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது
பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே
போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும். 
(இதுதாண்டா தியாகம்..)
 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில்
நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம். 
( இப்டி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே....)
 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி
அள்ளி தந்து வள்ளலாகலாம்.

(நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல...அ..ஆஅ.....)
 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை
கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

(இருந்து என்னத்த சாதிக்க போகுதுங்க??)

" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


நன்றி முஸ்தபா மற்றும் எம்.பி.எம் நண்பர்கள்...

26 comments:

sakthi said...

எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


சீமான் இந்த வரி ரொம்ப யோசிக்கவைக்குது!!!

sakthi said...

அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)

இப்படி கூடவா ????

sakthi said...

வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.
(அட பார்ர்ர்ர்ரா.....)


என்ன ஒரு ஆராய்ச்சி

sakthi said...

சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)

அப்போ ஆல் அவுட் தேவையில்லையோ!!!

ஹேமா said...

புகையை விட்டறப்போ மனப்புகையையும் வெளில போய்டுமோ சீமான் !

நன்மைகள் ஒண்ணை விட ஒண்ணு நல்லாத்தானே இருக்கு.நாளையில இருந்து சில நன்மைகளுக்காக மட்டும் நான் புகைக்க.....விடப்போறேன் !

Prasanna said...

ஹா ஹா கலக்கல்ஸ்

சிநேகிதன் அக்பர் said...

அட இத்தனை நன்மைகளா!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கனி.. படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு.. இப்படிகூட நடக்குமா?.. என்று யோசிக்க வைத்திருக்கிறது. இவ்வளவு சொல்லியும் இன்னும் தம்மடிப்பவர்கள் தம்மடித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்ய?.. இவர்களை..

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ்மணம் பார் வைக்கலியா கனி..

வினோ said...

கலக்கல்.. இதனால புகைக்கலாமன்னு சொல்லறீங்க..

Priya said...

அட, இத்தனை நன்மைகள் இருக்கா:)!!!!

Philosophy Prabhakaran said...

சப்பைக்கட்டு....

சிவாஜி சங்கர் said...

:-(

சிவாஜி சங்கர் said...

:-(

ஸாதிகா said...

பச்சை நிறத்தில் இருக்கும் டயலாக்..அட்றா சக்கை..இங்கே இங்கே..இங்கேதான் சீமான் கனி இருக்கிறார்.அது சரி தம்பி என்ன ஆச்சு?ஆளையே காணும்??

சீமான்கனி said...

sakthi said...
எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ
அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?


சீமான் இந்த வரி ரொம்ப யோசிக்கவைக்குது!////

ஆமாம் சக்திக்கா...இது நிரைய விஷயங்கலுக்கு பொருந்தும்....

sakthi said...
//அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும்.
பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
(அட பாவிகளா காலியா இருக்குற பஸ்ல ஏறுனா இடம் கிடைக்கபோகுது அதுக்கு இப்டியா??)

இப்படி கூடவா ????///

அக்கா இப்பொ எதுக்கு இந்த அதிர்ச்சி??? :)

sakthi said...
///வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில்
உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.
(அட பார்ர்ர்ர்ரா.....)///


என்ன ஒரு ஆராய்ச்சி///

அக்கா எதாவது அவார்ட் கிடைக்குமா???


sakthi said...
//சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம்
இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும்
கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
(அட்ரா சக்க...அட்ரா சக்க...)

அப்போ ஆல் அவுட் தேவையில்லையோ!!//

ஆளே அவுட் ஆகும்போது ஆல் அவுட் எதுக்குக் கா...உங்கள் வருகைக்கும் முதல் முறைய இட்தனை பின்னுட்டம் தந்த அக்காக்கு நன்றிகள்...

ஹேமா said...
//புகையை விட்டறப்போ மனப்புகையையும் வெளில போய்டுமோ சீமான் !//

அப்படிதான் சொல்றாங்க...உள் அர்த்தம் என்ன இருக்கோ தெரியல....

//நன்மைகள் ஒண்ணை விட ஒண்ணு நல்லாத்தானே இருக்கு.நாளையில இருந்து சில நன்மைகளுக்காக மட்டும் நான் புகைக்க.....விடப்போறேன் !///

ஐயோ!!!என்ன சொல்றிங்கனு முழுசா சொல்லுங்க தோழி...எனக்கு பயமா இருக்கு....

நன்றி ஹேமா...

Prasanna said...
//ஹா ஹா கலக்கல்ஸ்//

கருத்துக்கு மிக்க நன்றி பிரசன்னா...

சிநேகிதன் அக்பர் said...
//அட இத்தனை நன்மைகளா!//

அப்படித்தான் சொல்லி ஏமாத்துறாங்க அக்பர்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//கனி.. படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு.. இப்படிகூட நடக்குமா?.. என்று யோசிக்க வைத்திருக்கிறது. இவ்வளவு சொல்லியும் இன்னும் தம்மடிப்பவர்கள் தம்மடித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்ய?.. இவர்களை..//

நாம என்ன செய்ய முடியும்...சொன்னா சப்பைகட்டுனு சொல்றாங்க என்னட்த சொல்ல...

//தமிழ்மணம் பார் வைக்கலியா கனி..//

அவங்க என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்க மாட்டாங்கலாம் ரேம்ப நாளா போராட்டம் நக்குது..

நன்றி ஷேக்...

வினோ said...
//கலக்கல்.. இதனால புகைக்கலாமன்னு சொல்லறீங்க.//

அட அப்படியா சொன்னென்??! நன்றி வினோ..

Priya said...

//அட, இத்தனை நன்மைகள் இருக்கா:)!!!!//

இன்னும் இருக்காம் நன்பர்கல் சொல்றாங்க ப்ரியா...

philosophy prabhakaran said...

//சப்பைக்கட்டு....//

வாங்க பிரபா...கொஞ்சம் ஸ்ட்ராங்கா கட்டுனா தாங்காது ராசா அதுக்குத்தான் இந்த சப்பைக்கட்டு...


சிவாஜி சங்கர் said...
//:-(//

என்ன சிவா இது சின்னபுள்ள தனமா??

ஸாதிகா said...
//பச்சை நிறத்தில் இருக்கும் டயலாக்..அட்றா சக்கை..இங்கே இங்கே..இங்கேதான் சீமான் கனி இருக்கிறார்.அது சரி தம்பி என்ன ஆச்சு?ஆளையே காணும்??//

நன்றி ஸாதிகா அக்கா...என்னத்த சொல்ல அக்கா அதுக்கு ஒரு தனி பதிவே போடனும்...

எஸ்.கே said...

இதெல்லாவற்றையும் விட வரும் தீமைதானே அதிகம்!

சுசி said...

செம காமடியோட கருத்தை சொல்லி இருக்கீங்க கனி :))

சீமான்கனி said...

எஸ்.கே said...

//இதெல்லாவற்றையும் விட வரும் தீமைதானே அதிகம்! //

அட!!! என்ன எஸ் கே இன்னும் சின்னபுள்ளையாவே இருக்கீங்க???

சுசி said...
//செம காமடியோட கருத்தை சொல்லி இருக்கீங்க கனி :)) //

எப்படி சொன்னாலும் ஒன்னும் நடக்குரமாதிரி தெரியலையே அக்கா...நன்றி சுசிக்கா...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும்.. சிக‌ரெட்டால‌ ந‌ன்மையா?

அன்புடன் மலிக்கா said...

காமெடியோட நெடியை ஏத்திய சீமாங்கனி வாழ்க!

புகைப்பவர்களே இப்பக்கம் வாருங்கள் உங்களுக்கோர் நற்செய்தின்னு கூப்பிட்டு கும்மியிருக்கலாம். எப்படி நம்ம யோசனை..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இப்படிஎல்லாமா யோசிக்கிறிங்க???
ஆஹா அடைப்புக்குள் உள்ள கமென்ட்s!!!
தூள்ள்ள்ள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

(நன்பேண்டா...)
///

.....ஹா ஹா .. சூப்பர்.. :-)


//இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
//

.....ஹா ஹா ஹா.. முடியல.. சிரிச்சு முடியல... எல்லாமே சூப்பர் நன்மைகள்.. அதிலும்.. நீங்க பச்சை கலர்-இல் பிராக்கெட்ல போட்டிருக்கும் கமெண்ட்ஸ்.. செம செம... :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//என் கனவுகளோடு..
கடிகார முள்ளும்,
காலண்டர் காகிதங்களும்
கரைகிறது உங்கள் கருத்துக்களுக்காய்...

மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ//

..இது கூட நல்லா இருக்குங்க.. கருத்து சொல்லிட்ட்டேன்.. :-))

சீமான்கனி said...

அஹ‌ம‌து இர்ஷாத் said...
//ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும்.. சிக‌ரெட்டால‌ ந‌ன்மையா?//

இன்னோரு தடவை பதிவ படிங்க இர்ஷா...


அன்புடன் மலிக்கா said...
//காமெடியோட நெடியை ஏத்திய சீமாங்கனி வாழ்க!

புகைப்பவர்களே இப்பக்கம் வாருங்கள் உங்களுக்கோர் நற்செய்தின்னு கூப்பிட்டு கும்மியிருக்கலாம். எப்படி நம்ம யோசனை.//

நல்ல யோசனை அக்கா..ஆனால் கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாம்ல...நன்றி கா...

NIZAMUDEEN said...
//இப்படிஎல்லாமா யோசிக்கிறிங்க???
ஆஹா அடைப்புக்குள் உள்ள கமென்ட்s!!!
தூள்ள்ள்ள்!//

நன்றி நிஜாம் அண்ணா...


Ananthi said...
//சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின்
தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

(நன்பேண்டா...)
///

.....ஹா ஹா .. சூப்பர்.. :-)


//இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும்
பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
(கைப்புள்ள இது தேவையாடா உனக்கு!?)
//

.....ஹா ஹா ஹா.. முடியல.. சிரிச்சு முடியல... எல்லாமே சூப்பர் நன்மைகள்.. அதிலும்.. நீங்க பச்சை கலர்-இல் பிராக்கெட்ல போட்டிருக்கும் கமெண்ட்ஸ்.. செம செம... :D :D

//என் கனவுகளோடு..
கடிகார முள்ளும்,
காலண்டர் காகிதங்களும்
கரைகிறது உங்கள் கருத்துக்களுக்காய்...

மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ//

..இது கூட நல்லா இருக்குங்க.. கருத்து சொல்லிட்ட்டேன்.. :-))////

வாங்க ஆனந்தி...ஆஹா பின்னுட்த்துக்கு போட்ட பிட்டுக்கே கருத்தா...முடியல...நன்றி..ஆனந்தி....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வாங்க ஆனந்தி...ஆஹா பின்னுட்த்துக்கு போட்ட பிட்டுக்கே கருத்தா...முடியல...நன்றி..ஆனந்தி.... //

இல்ல.. நீங்க வித்யாசமா எழுதி இருந்தீங்க.. பின்னூட்டம் பாக்ஸ் ல... அது நல்லா இருந்தது... :-))
(வேறு சிலர் கூட இந்த மாதிரி எழுதி இருந்தப்போ கமெண்ட் பண்ணேன்.. :-) )

Related Posts with Thumbnails