Sunday, December 12, 2010

தித்திக்கும் தீ ...





எப்போதும் காதலோடு காத்திருக்கும்-நீ
இன்று கொஞ்சம் காய்ச்சலோடும் காத்திருந்தாய். 
கண்டதும் வந்து கட்டிக்கொள்ளும் 
காதல் கன்னுக்குட்டி நீ! இன்று ஏனோ !?
கட்டிலே கதியாய் கிடக்கிறாய்.

 உஷ்ணம் யாசிக்கும் உன்னை முத்தமிட்ட - என் 
இதழ்மாணி சொல்லியது - உன் 
அனல் மேனியின் வெப்ப அளவை.

வைரஸ்க்கு வாக்கப்பட்ட - உன் 
திசுக்கலேல்லாம் தீக்குளித்து  
தேகக்கூட்டில் தேவைக்கு அதிகமாய் உஷ்ணம். 
அதற்க்கு அடையாலமாய் - உன் 
இரவு உடையில் இறந்துகிடந்தது சில லட்சம் பூக்கள். 
கால் கொலுசு சிரிக்காமல் அறையில் எதோ குறை.

"என்ன?" என்றேன் "
ஒன்றும் இல்லை கொஞ்சமாய் காய்ச்சல்" .
"மருந்து எடுத்தாயா?"  
”இல்லை...உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" 
"எனக்காகவா!!எதற்கு?? " 
நீதானே சொன்னாய் ”நீ பாதி நான் பாதி” என்று
எனக்கு காய்ச்சல் என்றால் என்னுள் இருக்கும் 
உனக்கும் தானே உஷ்ணம் தாக்கி இருக்கும் 
அப்படி இருக்க நான் மட்டும் மருந்து எடுத்தால் 
காதல் பழிக்கும் இல்லையா ?”என்றாய். 
"ஓ...அப்படியா!!?சரி கசக்காத மருந்து கொடு" .

இது கசக்காது சுடும் என்று 
இமைகளை மூடச்சொல்லி 
இதழ்களால் இதழ்களை தீமூட்டி
மருந்து ”ரெம்ப சுட்டதா” என்றாய்.
ஆம் காய்ச்சல் சூட்டை விட 
காதல் சூடு கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் 
இந்த தித்திக்கும் தீயால்
இன்னும் கொஞ்சம் இதழ்சுடு”
நம் காதல் காலத்தில் 
இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.  



கம்.


14 comments:

Philosophy Prabhakaran said...

கவிதை அருமை... 'காதல் கன்னுக்குட்டி', 'வைரஸுக்கு வாக்கப்பட்ட' போன்ற வார்த்தை பிரயோகங்கள் அருமை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே..

காதலுடன் காய்ச்சல்...

வினோ said...

இந்த காதல் கனவுடோ செல்கிறேன்..

கவிதை இல்லை இல்லை காதல் அருமை...

Jaleela Kamal said...

கவிதை அருமை
சீமான் கனி என்ன ஜலிக்காவ மறந்து விட்டதா?
என் வலை பெயர் இப்ப்ப www.samaiyalattakaasam.blogspot.com
வந்து உங்களை கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன்

நேசமித்ரன் said...

:) தொடர்க நண்ப !வாழ்த்துகள்

ஹேமா said...

சீமான்...புதுக் கண்டுபிடிப்போ"இதழ்மானி".

இப்பிடி அடிக்கடி காய்ச்சல் ரெண்டு பேருக்கும் வந்தால் தயவு செய்து வைத்தியரை நாடவும் !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த தித்திக்கும் தீயால்//

இந்தத் தீயில் இனிப்பு அளவாயிருக்குது...

Gayathiry said...

உண்மையில் தீ தித்திக்குமோ இல்லையோ உங்கள் கவிதை தித்தித்தது ...

ஜெய்லானி said...

//காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.//

ஹா..ஹா..அதுதான் காதலின் வலிமை :-)

ஸாதிகா said...

ஹ்ம்ம்..தம்பி..என்னத்தை சொல்லுறது..இருந்தாலும் நீங்க கவிதை எழுதுவதில் கிட்ட கிட்ட கண்ணதாசன் ரேஞ்சுக்கு நெருங்கிட்டீக்க..ஜமாய்ங்க.

சிவாஜி சங்கர் said...

இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

:)

Priya said...

காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.....உண்மைதான்.
என‌க்கு மிக‌வும் பிடிச்சிருக்கு இந்த‌ க‌விதை.

சீமான்கனி said...

philosophy prabhakaran said...

//கவிதை அருமை... 'காதல் கன்னுக்குட்டி', 'வைரஸுக்கு வாக்கப்பட்ட' போன்ற வார்த்தை பிரயோகங்கள் அருமை... //

நன்றி பிரபா....



வெறும்பய said...

//அருமை நண்பரே..

காதலுடன் காய்ச்சல்... //

நன்றி வெறும்பய...

வினோ said...

//இந்த காதல் கனவுடோ செல்கிறேன்..

கவிதை இல்லை இல்லை காதல் அருமை... ///

நன்றி வினோ,..

Jaleela Kamal said...
///கவிதை அருமை
சீமான் கனி என்ன ஜலிக்காவ மறந்து விட்டதா?
என் வலை பெயர் இப்ப்ப www.samaiyalattakaasam.blogspot.com
வந்து உங்களை கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன்//


ஜலிக்கா வை மறப்பேனா???நேரம் குறைவாய் இருக்கு அக்கா...தம்பிய மன்னிக்கணும்...நன்றி அக்கா

நேசமித்ரன் said...
//:) தொடர்க நண்ப !வாழ்த்துகள் //

நன்றி மித்திரன் அண்ணா...

ஹேமா said...
//சீமான்...புதுக் கண்டுபிடிப்போ"இதழ்மானி".

இப்பிடி அடிக்கடி காய்ச்சல் ரெண்டு பேருக்கும் வந்தால் தயவு செய்து வைத்தியரை நாடவும் !//

ஆமாம் ஹேமா நல்லா இருக்கா???இந்த காய்ச்சல்க்கு வைத்தியரை தேவை இல்லை ஹேமா..

சீமான்கனி said...

NIZAMUDEEN said...

//இந்த தித்திக்கும் தீயால்//

இந்தத் தீயில் இனிப்பு அளவாயிருக்குது..//

டாக்டர் அட்வய்ஸ் நிஜாம் அண்ணா அதான் அப்படி...நன்றி...

காருண்யா said...

//உண்மையில் தீ தித்திக்குமோ இல்லையோ உங்கள் கவிதை தித்தித்தது ...//

நன்றி..காருண்யா

ஜெய்லானி said...
//காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.//

ஹா..ஹா..அதுதான் காதலின் வலிமை :-)//

அனுபவசாளி சொன்னா சரிதான் நன்றி...அண்ணாதே...

ஸாதிகா said...

//ஹ்ம்ம்..தம்பி..என்னத்தை சொல்லுறது..இருந்தாலும் நீங்க கவிதை எழுதுவதில் கிட்ட கிட்ட கண்ணதாசன் ரேஞ்சுக்கு நெருங்கிட்டீக்க..ஜமாய்ங்க.//

அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா...


சிவாஜி சங்கர் said...
//இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

:)//

நீயும் அடிக்கடி வா..நன்றி சிவா......

Priya said...

//காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.....உண்மைதான்.
என‌க்கு மிக‌வும் பிடிச்சிருக்கு இந்த‌ க‌விதை.//

காய்ச்சலும் தானே...நன்றி...ப்ரியா...

Related Posts with Thumbnails