குப்பைகளை வெளியே துப்பி விட்டு
சுத்தமாய் ஒரு குப்பைத் தொட்டி;
சாணம் பூசிக்கொண்டு சலவை கூட செய்ய முடியாத
கரை படிந்த கணினி பெட்டி;
ஓவியனின் விரல்களை ருசித்து
உதட்டு சாயம் பூசிய ராட்சச ஓவியம்;
தங்கம் பூசிய
சாராயக் கோப்பைகளை ருசித்துவிட்டு
சமைய துறவிகளின் சாட்சி பரிமாற்றம்;
சன்னல்கள் இல்லாத வீட்டில்
சல்லடையாய் துளைத்த மேற்கூரை;
ஏதோ ஒரு மூலையில்
மூத்தக்குடிகளின்
முற்றத்துக் குடித்தனம்;
மூளைச் சலவை செய்யப்பட்டு
முழுதாய் படித்த
முதல் மதிப்பெண் பாவை;
ஆள் புகமுடியாத குடுவைக்குள்
அமிழ்ந்தே கிடக்கிறது
அவனுக்கு சேரவேண்டிய
அன்றைய கூலி.
13 comments:
vadai
சீமான்...அவர்களும் அவைகளும் தரும் அர்த்தம் அருமையாயிருக்கு.
”மூத்த குடிகளின் முற்றத்துக் குடித்தனம்“
எல்லாமே நல்ல சிந்தனைச் சிதறல் !
ரொம்ப வித்தியாசமா எழுதி இருக்கிங்க கனி.
கனவு பட்டறையில் ஒரு
நினைவு கவிதை
//ஆள் புகமுடியாத குடுவைக்குள்
அமிழ்ந்தே கிடக்கிறது
அவனுக்கு சேரவேண்டிய
அன்றைய கூலி.
// வரிகளில் ரசனை ததும்பி வழிகின்றது.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai//
முதல் வருகைக்கு நன்றி ரமேஷ் ஜி...
ஹேமா said...
//சீமான்...அவர்களும் அவைகளும் தரும் அர்த்தம் அருமையாயிருக்கு.
”மூத்த குடிகளின் முற்றத்துக் குடித்தனம்“
எல்லாமே நல்ல சிந்தனைச் சிதறல் !//
கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி ஹேமா...
சுசி said...
//ரொம்ப வித்தியாசமா எழுதி இருக்கிங்க கனி.//
நன்றி சுசிக்கா...
ஜெய்லானி said...
//கனவு பட்டறையில் ஒரு
நினைவு கவிதை//
.வாங்க அண்ணாத்தே எதை நினைத்தீர்கள்??நன்றி...
ஸாதிகா said...
//ஆள் புகமுடியாத குடுவைக்குள்
அமிழ்ந்தே கிடக்கிறது
அவனுக்கு சேரவேண்டிய
அன்றைய கூலி.
// வரிகளில் ரசனை ததும்பி வழிகின்றது.//
ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி
ஸாதி(கா)...
அவர்களும் அவைகளும் அருமையாக இருக்கிறது!வரிகளின் தொடக்கத்தில் உள்ள சிவப்பு எழுத்துக்களும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது!
இரண்டிரண்டு வரிகளில், எவ்வளவு பெரிய விஷயங்கள்...
எல்லாமே அருமையான சிந்தனைகள்..!! நன்று நண்பரே...
குட்டி குட்டி வரிகளில்..
குறிப்பாக நிறைய விஷயம் சொல்லிட்டீங்க.. :-))
அவைகளும் / அவர்களும்.. அருமை :)
உங்களுக்கு வெகுமதி எங்கள் மனதில் அமிழ்ந்து கிடக்கிறது.
கனவு பட்டறை முழுவதும் கவிதைகடல் தான்
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Thank you for sharing this information.
Dell Inspiron laptop
Dell laptop price list
Lenovo thinkpad price
Lenovo tablet price
Acer laptops price list
Best gaming monitor
Led projector price
Post a Comment