Tuesday, January 26, 2010

விதவை விருட்ஷம்...



(மொட்டை மரம்... இந்த தலைப்பும் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.)

வெந்நீர் வார்த்து வளர்ந்த விருட்ஷம்; 
காதல் காற்றின் கைகள் தழுவாது 
தானாய் தற்கொலை செய்ய  
உடல் உலுக்கி உதிர்த்து விட்டது
உயிர் துளிகளை.

வெட்டை வெளி மொட்டை மரமாய்
வெறித்து கிடக்கு முகவரி தொலைத்து.
சூரிய கதிர்கள் தட்டி கொடுத்தும்
மழை மகளுக்கு மணம் வர மார்க்கமில்லை.

மத்தியான மஞ்சள் மாறி 
மாலை நேரம் மருகி நிற்கையில் 
மலைக்காடு கடந்த மைனா கூட்டம் 
இளைப்பாற இடம் தேடி 
இரவு தூக்கம் இறக்கி வைக்க மரம்
இறங்கி ஆளுகொரு இடம் பிடித்து கொண்டன.

மொட்டை மர  கிளைகளில் 
இப்பொதுஇலைகளுக்கு பதிலாய் 
மைனா குஞ்சுகள்  முளைத்து; 
வானவில்லின் வண்ணம் போர்த்தி  
புது வகை புணர்ந்து நிற்கிறது.

விசித்திரம் விறுவிறுவென  பரவி
விந்தயை வேடிக்கை பார்க்க
விரைந்து வருகிறாள் மழைமகள்
கார்கூந்தல் தலை விரிக்க.

கார்மேகம்  கண்ட கானமயிலாய்  
தொகை விரித்து தொலைவாய்
நிற்கிறது மொட்டை மரம்.

மயில் பார்த்து மதி மயங்கி
மழை துளிகளை துப்பத்   
தொடக்கி விட்டாள் மழை மகள்.
மழை சூட்டில் கண்விழித்து
மறைவிடம் தேடி மறைந்து போனது
மைனா குஞ்சுகள்.

வண்ணம் கொட்டி  வகை தோகையாய்
வரைந்த கோலம்; தண்ணீர் கொட்டி  துடைத்த
வெறும் தரையாய் மீண்டும் வெறித்து போனது.
மொட்டை மரம்
விதி போட்ட விதவை கோலமாய்....                                             




                               

Sunday, January 24, 2010

''குட்டி'' கனவுலகம்...


திரும்பிய திசைகளெல்லாம்
தேவதை  தோழிகள்;
அவளுக்கும் எனக்கும் மட்டும்
தெரிந்த தேவ பாஷை - இங்கு
அனைவருக்கும் சரளமாய்.
பறக்க வசதியாய் சிறகுகள்,
பந்தாட பிரபஞ்சம்,
பால் குடிக்க நிலா.

பறந்து வந்தாள் ஒரு
பருவ தேவதை;
மின்மினி பூச்சிகள்
மின்னி தெறித்தன
அவள் சிரிப்பில்.
''கனவுலகம் வரவேற்கிறது''
வரவேற்றாள்.

வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் திருடி வந்து
ஆளுகொரு பக்கமாய்
விசிறிவிடும் இரண்டு
பூக்களுக்கு நடுவே நான்.

இறக்கைகளை களைந்து இளைப்பாற
இசை தட்டுகளை சுழற்றி கொண்டு
இறங்குகிறாள் இனியவள் ஒருத்தி.

நேற்று நிலா காட்டி  ஊட்ட; 
இன்று பால்சோறு ஊட்ட 
பால்நிலவே பக்கத்தில்.
சிதறிய சோற்றில்
குட்டி குட்டி நிலவாய்
எட்டி எட்டி பார்த்து வீண்மீன்.

நீர் பருக  வாய்திறந்தால் 
தேன் பாய்ச்சி தினரடிக்கிறாள்
தெவிட்டாத தேனருவி.
விருந்து முடிந்தது.

 சிறகுகள்  பூட்டி விட்டு
சிரிக்கிறான் சிங்கார தேவன்; 
இடுப்பு துணி ஈரமாக
விடிய வருகிறது...

கண்விழித்தால்,
பருவதேவதை தவிர அனைவரும்
பகல் விடுப்பு வாங்கி
பறந்து போனார்கள்.

சிறகுகள் தேடி துலாவுகையில்
அது அவளின் விரல்களாய் மாறி இருந்தது.
தேவ பாஷையில் ஒரு முத்தமிட்டு
அணைத்து கொண்டாள் அன்னை அவள் .
                                                                                                                                                                                                   

Monday, January 18, 2010

ஏண்டி...???


காற்றில்  கைநழுவி
கடந்து போன குடையை - ஏன் 
குற்ற படுத்துகிறாய்?
குழலிட்டு தேன்
குடித்த கருவண்டு
மலரின்  மது உண்ட  
மயக்கத்தில்;
திக்கு முக்கு தெரியாமல்
திணறுவதுதானே நியாயம்...

உன் உதடு சுட்ட தேநீரை - ஏன்
உதறி தள்ளுகிறாய்?
மலரே வந்து செவ்விதழ்  குவித்து  
தேன் எடுக்க; முதலில் 
கோப்பைக்கு  முத்தம் தந்தால்!   
சுட்டு வைக்காமல்
சும்மாவா இருக்கும்...

சூரியன் சுள்ளென்று
சுட்டதும் ஏன் - முகம்
சுளிக்கிறாய்?பார் நீ
சுளித்த சுளியலில் இன்னும் கொஞ்சம் 
சூடாகி எங்களைத்தான் சுட்டுஎடுக்கிறான்... 

காய்கிற நிலவை - ஏன்
கரைய விடுகிறாய்?
உலகே நிலவொளி குடித்திருக்க;
நீ மட்டும் பால் குடித்து
பால் நனைத்த  உதடோடு
படுக்க போனால்...

சும்மா  இருக்கும்  தென்றலை - ஏன்  
சூறாவளி  ஆக்கிவிடுகிறாய்?
கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...

அடிக்கடி கழண்டு விழுவதாய்  
கால் கொலுசை - ஏன்
கடிந்து கொள்கிறாய்?
கொஞ்சி கொஞ்சி பேசும்
கொலுசொலியை
சின்ன சின்ன சிணுங்களில்
சிரிக்கின்ற சாக்கில் சிதறடித்தால்...

''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி  மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து  விட்டு
தொடதே  என்றால்...                                                                           

Wednesday, January 13, 2010

கள்ளி (பெண்) பால்...


அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே 
அன்னையின் அடி வயிற்றில் 
அலாரம் அடித்து வரப்போவதை 
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு 
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி 
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை.                                                                          

Friday, January 8, 2010

ராத்திரி ரவுசு...ச்சீ... போடா....


 அடல்ஸ் ஒன்லி... இல்லை.
அதி காலை கண்ணடைத்து கிடக்க சரியாய் ஆறு மணிக்கு உம்மாஹ்...''நேரமாச்சுடா'' கண்விழித்து அலறினாள் ஒருத்தி, இன்னும் இருக்கமாய் கட்டிகொள்ள சொன்னால் இன்னொருத்தி, ப்ளீஸ்... என்னை விளக்கி விடாதே என்றால் மற்றவள்.இன்னும் முத்தம் தந்து தீரவில்லை இன்னொருத்திக்கு.அலறியவளை பத்து நிமிடம் கழித்து மீண்டும் அலற உத்தரவிட்டு ஒரு குட்டி கூடல்.யார் இவர்கள்?? எப்படி என் வாழ்வில் நுழைந்தார்கள்???.கொஞ்சம் ரகசியமாய் கேளுங்கள்...


நிஜமாவே அழகான  அழகிகள் என் படுக்கை அறையை  அலங்கரிக்க காத்திருந்தனர்.ஒருத்திக்கு தொட்டு அணைத்தால்  பிடிக்கும்;   ஒருத்திக்கு கட்டி அணைத்தால் தான் பிடிக்கும்; ஒருத்திக்கு இரவெல்லாம் முத்தமிட மட்டும் ஆசை; ஒருத்திக்கு இரவு முழுதும் என் மீது சாய்ந்து கொள்ள ஆசை;ஒருத்திக்கு பகலும், இரவு தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை. ஐந்து பேரை சமாளிப்பது சாதாரன காரியமா??ஹும்ம்ம்ம்..... உங்களுக்கு மட்டு  இவள்களின்  ராத்திரி ரவுசுகளை சொல்கிறேன் யாரிடமும் சொல்ல வேண்டாம்.ப்ளீஸ்.... 


முதலாவது சொல் பேச்சு கேட்பவள் தொட்டு அணைத்தால்  போதும் துவண்டு விடுவாள்.பகலில் அவளுக்கு வேலை இல்லை.இரவு உறங்குவதற்கு முன் வரை கண்விழித்து காத்திருப்பாள் என் அந்த ஒரு ஸ்பரிசத்திற்காக. சில நேரம் கண்ணடித்து கவனிக்க சொல்வாள்.அனைவரையும் மேற்பார்வை செய்பவளும் அவளே.


அடுத்தவள் இரவு முழுதும் அணைத்து கிடக்க ஆசை படுபவள்.அவள் ஆசை படுகிறாளோ இல்லையோ எனக்கு அவள் என்றால் ரெம்ப ஆசை.தூக்கத்தில் கூட அவளை தொட்டு கொண்டேதான் இருப்பேன் .இவள் மட்டும் தான் தினமும் அதிகம் என்னிடம் சிக்கி தவிப்பவள்.கொள்ளை அழகி.கட்டி கொள்வதற்காகவே தட்டி கொண்டு வந்தவள்.


அடுத்தவள் முத்த பிசாசு. ஒரு ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்.இவள் தட்டி கொண்டு வந்தவளின் தங்கச்சி.சொன்னால் நம்ப மாட்டீர்கள் இருவருக்கும் என் மேல் கண்டதும் காதல் .அந்த வீட்டு பெரியவர் கேட்டார் யாரை பிடித்திருக்கு என்று.நான் இரண்டுமே என்றதும்,இரண்டையுமே என் தலையில் கட்டி வைத்து விட்டார்.பாவம் அவருக்கு மற்றவர்களை பற்றி தெரியாது.இவள் வந்த முதல்  நாள் கொஞ்சம் விலகி விலகி போனால்.பின் வேறு வழி இல்லை வழிக்கு வந்து விட்டாள்.சத்தம் இல்லாமல் முத்தமிட்டு என்னை முனங்க வைப்பவள்.சில நேரங்களில் ஆக்களும் தங்கச்சியும் அவர்கள் வேலையை பகிர்ந்து கொள்வதுண்டு. வேறு எவளுடனும் கூட்டு வைத்து கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கு கொஞ்சம்
 கூச்சமா இருக்கு இருவரும் நான் ஆடை மாற்றி விட்டால்தான் பிடிக்கும்.ச்சீ... இரெட்டை பிசாசுகள்.


அடுத்தவள் ஊரில்  இருக்கும்போதே எனக்கு நல்ல பழக்கமானவள். ஊரில்
 இருந்து புறப்படும் முன் அம்மா எனக்காக தேடி பிடித்த பெண். அம்மாக்கு ரெம்ம பிடித்து போனதால் வேறு வழி இல்லாமல் கையோடு அழைத்து வந்தேன்.அனால் இவள் சமத்து நம்ம ஊர்க்காரி என்றாலும்  மற்றவர்களோடு சீக்கிரமே ஒத்து போய் விட்டால்.  என்மேல் கிடக்கும்போது ஒருவித சுகமான கதகதப்பு தருபவள் இவள் மட்டும் தான்.ஐ லவ் யு டி...


அடுத்தவள் தான் இம்சைக்காரி. இவளுக்கு நேரம் காலமே கிடையாது.நினைத்த போதெல்லாம் இவளோடு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும்.இரவில் இவள் இம்சை அப்பா சொல்லி மாளாது.ஆனால் நிறைய படித்தவள்.சொன்ன நேரத்திற்கு எழுப்பி விடுவாள்.இவள் இருந்தாலும் இம்சை,இல்லாவிட்டாலும் இம்சைதான்.இவள்
 ஒருத்தி மட்டும் தான் என்னோடு அதிகம் இருப்பவள்.காதில் காதல் பேசியே  கொள்வாள். 


 இவள்களில்  ஒருத்தி இல்லை என்றால் கூட என் இரவே என்னவோ போல் ஆகிவிடும்.அலுவலகத்தில் கூட சிலநேரம் இவள்களின் நினைவில் மயங்கி போவதுண்டு.நான் எப்போது வருவேன் என அவள்களும் ஏங்கித்தான் போவார்கள்...
 சரியாய் பத்து நிமிடத்தில்  எழுப்பினாள் .எழுந்து ஒருத்தியை மடித்து விட்டு.மற்றவள் உறங்கி இருந்தால்.அக்கா தங்கையை  அடுக்கி விட்டு.ஒருத்தியை கையோடு கொண்டு போனேன்.


 இன்னும் கொஞ்சம் கதை கேளுங்க...                                                         

                                

Wednesday, January 6, 2010

புள்ளி இல்லாத புலம்பல்கள்...



புள்ளிகள் மட்டும் பொறுக்கி எடுத்த   
புத்தகம்; விரித்து - விழி
பிதுங்கி பார்கிறேன்.

சில - பால வார்த்தைகள்   
உயிர் (துளி) இல்லாத காரணத்தால்
அர்த்தமற்று போய் ஒவ்வொன்றும்
அனாதையாய் அலைகிறது.
புள்ளி இல்லாத வார்த்தைகள்  
என்னதான் சொல்ல காத்திருக்கு????

பூ-விடம் போய்...
உயிர் புள்ளி இல்லாத
ஒற்றை எழுத்து நீ...
என்ன தான் பெரிதாய் சாதித்து  விட்டாய்
வினாவினேன்.
பூ கேட்டது என்னை
பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது??
நீ... அழகு என்றேன்...-அட
நான் கூறிய இரண்டு வார்த்தைளும்
உயிர் புள்ளி இல்லை...
பூ நகைத்து விட்டு  இதழ் திறந்து கேட்டது
உனக்கு என்னுள் என்ன தெரிகிறது??? 
விதை என்றேன்...ஆமாம் அதிலும் உயிர் புள்ளி இல்லை...
தன்னை உதிர்த்து ஆயிரம் ஆயிரம்
விதைகளை விதைத்து விட்டு விடை பெற்றது பூ.

அடுத்து கண்ணில் பட்டது
ஏழை பார்த்தால் பாவம்.
உன்னை பற்றி....
''வேலை இல்லாததால் - நான்,
ஏழை இன்னும் சந்திக்காதது  கோழை;
உறவு இல்லாததால் நான் அநாதை''
அதிலும் உயிர் புள்ளி இல்லை.
''எனக்கு தெரிந்ததெல்லாம் பசி,வறுமை
ஐயோ எதிலும்  உயிர் புள்ளி இல்லை.
உன் ஆசை? ''சீக்கிரம் சாவு.''
இதற்க்கு மேல் கேட்க மனமில்லை.

அடுத்து கும்மிட போகும் முன்பே
குறுக்கே  வந்தது சாமி. 
உயிர் புள்ளி இல்லாத நீ என்ன சாதித்து விட்டாய் ??
சிரித்து விட்டு ''நான் சாதித்தது சாதி என்றது''.
சாதியும்,சாதனை-யும்,சதியும்  தெரியாது   தெரியாது
ஆஹா... எதிலும் உயிர் புள்ளி இல்லை என்று ஓடி போனேன்.

பளபளப்பாய்  இளமை வந்து நின்றது.
நீ என்ன சொல்ல காத்திருக்கிறாய்???
''முதுமை வரும் வரை
கனவை நினைவு  ஆக்கி  புதுமை காண
காத்திருக்கிறேன் என்றது''.புள்ளி இல்லாமல். 

மது போதையோடு  வந்து நின்றது.
அது சரி உன் சாதனை என்னவோ???
என்னை அடிப்பவன் எனக்கு அடிமை-என்று
தத்துவம் தந்து போனது.

அடுத்து வேறுயாரு மாதுதான்
உங்கள் பங்குக்கு எதுவும்...???
மண்ணிக்கவும் உரிமை 
இன்னும் கிட்டவில்லை
இலவே இல்லை என்றது.

இன்னும் எத்தனை எத்தனையோ...
உயிர் புள்ளி
இல்லாத வார்த்தைகள்
இவ்வளவு அர்த்தம் சொல்கிறது.
உயிருள்ள நாம்  என்ன அர்த்தம் தர போகிறோம்???.......

இதையும் படிங்க பிடிக்கும்...                                 இதுவும்                                                           

Tuesday, January 5, 2010

மாமனாருக்கு நேரம் சரி இல்லை...


மாமனாரே  உஷார்...
கொலை  வெறியோடு அலையும் ஒரு மருமகனின் நேரடி ரிபோர்ட்...

அவனுக்கு நேரம் நல்லா இருக்கு இல்லனா ஒவ்வொரு நிமிஷமும் என்கிட்ட இருந்து தப்பிபானா...இருக்கட்டும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் ஒரே போடா போட்டுற வேண்டியதுதான்.வேற வழியே இல்லை.பின்ன எனங்க இப்டி ஒரு மாமனார் இருந்தா யாருக்குத்தான் கொலவெறி வராது நீங்களே சொல்லுங்க.

புருஷன் பொண்டாட்டின்னு  தான் பேரு, ஆனால் ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்குமேல அவளை கட்டி பிடுச்சுக்க  முடியால. இந்த மாமனாரு வீட்டவே சுத்தி சுத்தி வர்றான்.பார்க்க நோஞ்சான் மாதிரி இருக்கான் நானும் இன்னைக்கு போவான் நாளைக்கு போயிருவனு பார்த்தா  இவனுக்கு ஒரு எம கண்டம்  வந்து தொலைய மாட்டிங்குது.வீட்டோட மாபிள்ளையா வந்தா இது ஒரு தொல்லை.

என்ன பண்றது ஒரு வேலைக்கும் போகாம வீட்டையே சுத்தி சுத்தி வந்தா இப்டிதான். மாமனார்  உழைப்புலதான்  நம்ம வாழ்கையே  ஓடுது ஹும்ம்ம்ம்..... என்ன செய்ய?? சரி ஒரு நாளைக்கு ரெண்டுதடவதான் சேர்ந்து  இருக்க விடுறான் அதுவும் எங்களுக்கு கடைசி ரூமா பார்த்து குடுத்துட்டு; நிமிஷத்துக்கு ஒருதடவ வந்து எட்டி,எட்டி பார்த்து மூட கெடுத்து விடுறான்.இவ்ளோ வயசு ஆய்டுச்சு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லை.

இந்த குள்ளம்மா இவளுக்காவது புத்தி  வேண்டாம்.புருஷன் முந்தானைய பிடிச்சுட்டு பின்னாடியே சுத்துறானே இவன கொஞ்சம் கவனிக்கனும்னு தோணுதா??எங்க.....  பக்கத்துல போகும் போதெல்லாம் எங்க அப்பா வர்றாருனு வெளக்கி வெளக்கி போறா.ஒரு புள்ளைய பெத்து குடுடீன்னு சொன்னா.... வேணாங்க   குடும்பத்துல  குழப்பம் வந்துரும்னு சொல்றா.இந்தா கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்???இப்போ புதுசா கல்யாணம் முடிச்சவங்கலாம் ரெண்டு  பிள்ளை  மூணு பிள்ளையோட சந்தோஷமா இருக்காகே...

என் மாமனார் ஒருநாள் படுத்த படுக்கையா இருந்தான் ஆஹா  போய்  செந்துடானு  நெனச்சா. பழாபோன டாக்டர் வந்து ஏதோ நீட்டமா ஒரு மாத்திரைய போட்டு சரி பண்ணிட்டு போட்டாரு.இவனுக்கு எப்போ கெட்டநேரம்னு தெரியல எனக்கு எப்போ நல்லநேரம்னும் தெரியலை.

வீட்ட சுத்தி ரூமா கட்டி வச்சு இருக்கான். நேரம் போகலைனா ஒவ்வொரு ரூமா போய் வேடிக்கை பாக்குறதே வேலையா போச்சு.பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தாலும் பரவா இல்லை வீடு நல்லா பெருசா இருக்கே நிறையா ரூம் இருக்கே கல்யாணம் பண்ணுனா வாடகைக்கு விட்டு பொழச்சுக்கலாம்னு பார்த்தா.ஒன்னும் முடியலையே...வழிய வந்து இப்டி மாட்டி கிட்டேனே...

என் பாட்டன் பூட்டன் எல்லாம் மாமனார போட்டு தள்ளிட்டு நல்ல எலக்கடையா  பார்த்து பொண்டாட்டியோட செட்டில் ஆய்டாகே.சிலபேர் நல்ல பொருட்காட்சியா பார்த்து செட்டில் ஆய்டாகே.என் பொழப்பு இப்படி நாறிபோச்சு.என்னைய பார்த்துட்டு இனிமேல்  வர்ரவன்கேலாவது திருந்தட்டும். 

ஆஹா...உங்ககூட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. இருங்க மணி பண்ணண்டு  ஆகபோகுது நான் போய் என் ஆளுக்கு ஒரு கிஸ்...அடிச்சுட்டு வர்றேன்...டிங்...டிங்...டிங்...டிங்... நொடி பொழுதில் வந்தாரு மாமனார்...

இன்னும்  கொஞ்சம் கதை கேளுங்க...
Related Posts with Thumbnails