Friday, January 8, 2010

ராத்திரி ரவுசு...ச்சீ... போடா....


 அடல்ஸ் ஒன்லி... இல்லை.
அதி காலை கண்ணடைத்து கிடக்க சரியாய் ஆறு மணிக்கு உம்மாஹ்...''நேரமாச்சுடா'' கண்விழித்து அலறினாள் ஒருத்தி, இன்னும் இருக்கமாய் கட்டிகொள்ள சொன்னால் இன்னொருத்தி, ப்ளீஸ்... என்னை விளக்கி விடாதே என்றால் மற்றவள்.இன்னும் முத்தம் தந்து தீரவில்லை இன்னொருத்திக்கு.அலறியவளை பத்து நிமிடம் கழித்து மீண்டும் அலற உத்தரவிட்டு ஒரு குட்டி கூடல்.யார் இவர்கள்?? எப்படி என் வாழ்வில் நுழைந்தார்கள்???.கொஞ்சம் ரகசியமாய் கேளுங்கள்...


நிஜமாவே அழகான  அழகிகள் என் படுக்கை அறையை  அலங்கரிக்க காத்திருந்தனர்.ஒருத்திக்கு தொட்டு அணைத்தால்  பிடிக்கும்;   ஒருத்திக்கு கட்டி அணைத்தால் தான் பிடிக்கும்; ஒருத்திக்கு இரவெல்லாம் முத்தமிட மட்டும் ஆசை; ஒருத்திக்கு இரவு முழுதும் என் மீது சாய்ந்து கொள்ள ஆசை;ஒருத்திக்கு பகலும், இரவு தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை. ஐந்து பேரை சமாளிப்பது சாதாரன காரியமா??ஹும்ம்ம்ம்..... உங்களுக்கு மட்டு  இவள்களின்  ராத்திரி ரவுசுகளை சொல்கிறேன் யாரிடமும் சொல்ல வேண்டாம்.ப்ளீஸ்.... 


முதலாவது சொல் பேச்சு கேட்பவள் தொட்டு அணைத்தால்  போதும் துவண்டு விடுவாள்.பகலில் அவளுக்கு வேலை இல்லை.இரவு உறங்குவதற்கு முன் வரை கண்விழித்து காத்திருப்பாள் என் அந்த ஒரு ஸ்பரிசத்திற்காக. சில நேரம் கண்ணடித்து கவனிக்க சொல்வாள்.அனைவரையும் மேற்பார்வை செய்பவளும் அவளே.


அடுத்தவள் இரவு முழுதும் அணைத்து கிடக்க ஆசை படுபவள்.அவள் ஆசை படுகிறாளோ இல்லையோ எனக்கு அவள் என்றால் ரெம்ப ஆசை.தூக்கத்தில் கூட அவளை தொட்டு கொண்டேதான் இருப்பேன் .இவள் மட்டும் தான் தினமும் அதிகம் என்னிடம் சிக்கி தவிப்பவள்.கொள்ளை அழகி.கட்டி கொள்வதற்காகவே தட்டி கொண்டு வந்தவள்.


அடுத்தவள் முத்த பிசாசு. ஒரு ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்.இவள் தட்டி கொண்டு வந்தவளின் தங்கச்சி.சொன்னால் நம்ப மாட்டீர்கள் இருவருக்கும் என் மேல் கண்டதும் காதல் .அந்த வீட்டு பெரியவர் கேட்டார் யாரை பிடித்திருக்கு என்று.நான் இரண்டுமே என்றதும்,இரண்டையுமே என் தலையில் கட்டி வைத்து விட்டார்.பாவம் அவருக்கு மற்றவர்களை பற்றி தெரியாது.இவள் வந்த முதல்  நாள் கொஞ்சம் விலகி விலகி போனால்.பின் வேறு வழி இல்லை வழிக்கு வந்து விட்டாள்.சத்தம் இல்லாமல் முத்தமிட்டு என்னை முனங்க வைப்பவள்.சில நேரங்களில் ஆக்களும் தங்கச்சியும் அவர்கள் வேலையை பகிர்ந்து கொள்வதுண்டு. வேறு எவளுடனும் கூட்டு வைத்து கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கு கொஞ்சம்
 கூச்சமா இருக்கு இருவரும் நான் ஆடை மாற்றி விட்டால்தான் பிடிக்கும்.ச்சீ... இரெட்டை பிசாசுகள்.


அடுத்தவள் ஊரில்  இருக்கும்போதே எனக்கு நல்ல பழக்கமானவள். ஊரில்
 இருந்து புறப்படும் முன் அம்மா எனக்காக தேடி பிடித்த பெண். அம்மாக்கு ரெம்ம பிடித்து போனதால் வேறு வழி இல்லாமல் கையோடு அழைத்து வந்தேன்.அனால் இவள் சமத்து நம்ம ஊர்க்காரி என்றாலும்  மற்றவர்களோடு சீக்கிரமே ஒத்து போய் விட்டால்.  என்மேல் கிடக்கும்போது ஒருவித சுகமான கதகதப்பு தருபவள் இவள் மட்டும் தான்.ஐ லவ் யு டி...


அடுத்தவள் தான் இம்சைக்காரி. இவளுக்கு நேரம் காலமே கிடையாது.நினைத்த போதெல்லாம் இவளோடு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும்.இரவில் இவள் இம்சை அப்பா சொல்லி மாளாது.ஆனால் நிறைய படித்தவள்.சொன்ன நேரத்திற்கு எழுப்பி விடுவாள்.இவள் இருந்தாலும் இம்சை,இல்லாவிட்டாலும் இம்சைதான்.இவள்
 ஒருத்தி மட்டும் தான் என்னோடு அதிகம் இருப்பவள்.காதில் காதல் பேசியே  கொள்வாள். 


 இவள்களில்  ஒருத்தி இல்லை என்றால் கூட என் இரவே என்னவோ போல் ஆகிவிடும்.அலுவலகத்தில் கூட சிலநேரம் இவள்களின் நினைவில் மயங்கி போவதுண்டு.நான் எப்போது வருவேன் என அவள்களும் ஏங்கித்தான் போவார்கள்...
 சரியாய் பத்து நிமிடத்தில்  எழுப்பினாள் .எழுந்து ஒருத்தியை மடித்து விட்டு.மற்றவள் உறங்கி இருந்தால்.அக்கா தங்கையை  அடுக்கி விட்டு.ஒருத்தியை கையோடு கொண்டு போனேன்.


 இன்னும் கொஞ்சம் கதை கேளுங்க...                                                         

                                

19 comments:

சிவன். said...

மச்சான்....ரெண்டாவது பாராவிலே கண்டு பிடிச்சாச்சு...
ஆனா உங்கள் வரிகள்....அப்பப்பா...
ரசிச்சு.... ருசிச்சு... எழுதி இருக்கீங்க போங்க..... !!!
கலக்கல்...!!!

பலா பட்டறை said...

அது சரி!! ... கனி முத்திப்போச்சு...:))

மகா said...

சும்மா கும்முன்னு இருக்குங்க
........

பிரியமுடன்...வசந்த் said...

பின்றீங்க மாப்ள...

சூப்பர்ப்...

நல்ல ரசனை..

மந்திரன் said...

நான் ஏமாறவில்லை ..

ஏமாற்றப்பட்டேன் ..

கதையின் போக்கை கணித்து இருந்தாலும் , நடை ரொம்ப நல்லா இருந்தது ..
நான் கதையின் நடையை சொன்னேன்

seemangani said...

சிவன். said...
//மச்சான்....ரெண்டாவது பாராவிலே கண்டு பிடிச்சாச்சு...
ஆனா உங்கள் வரிகள்....அப்பப்பா...
ரசிச்சு.... ருசிச்சு... எழுதி இருக்கீங்க போங்க..... !!!
கலக்கல்...!!!//

வாங்க மச்சான்...நீங்க கண்டுபிடிக்காட்டிதான் சந்தேகபடனும் மச்சான்...:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்...

seemangani said...

பலா பட்டறை said...
அது சரி!! ... கனி முத்திப்போச்சு...:))

வாங்க பாலா..
காய் முத்தி போனாதான் பயப்படனும் நண்பா...இது கனி தனே...அது சரி இப்போ வைரஸ் தொல்லை எப்படி சொல்லவே இல்லையே???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா..

seemangani said...

மகா said...
//சும்மா கும்முன்னு இருக்குங்க
........//

வாங்க மகா...முதல் முறையா வந்து கருத்து தந்ததற்கு நன்றிகள் இணைந்திருப்போம்...

seemangani said...

பிரியமுடன்...வசந்த் said...
//பின்றீங்க மாப்ள...

சூப்பர்ப்...

நல்ல ரசனை..//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மாப்ளே... அது என்ன மாப்ளே வால் பையனுக்கு வயசு குறைஞ்சு போனமாதிரி இருக்கு....ஷர்மிலிய சைட் அடிக்குறதுக்கு இந்த சீனா??

seemangani said...

மந்திரன் said...
//நான் ஏமாறவில்லை ..

ஏமாற்றப்பட்டேன் ..

கதையின் போக்கை கணித்து இருந்தாலும் , நடை ரொம்ப நல்லா இருந்தது ..
நான் கதையின் நடையை சொன்னேன்//

வங்க மந்திரன்...அடடா ஒரு சின்ன புள்ளைய ஏமாதிடேனே...நல்ல வேலை எந்த இடையை பற்றியும் சொல்லவில்லைதானே...

முதல் முறையா வந்து கருத்து தந்ததற்கு நன்றிகள் இணைந்திருப்போம்...

Anonymous said...

sema story

seemangani said...

thanks.....

sam said...

1.Tube light
2.Bed
3.Pillow
4.Shirt
5.Mobile phone

seemangani said...

thanks sam....

seemangani said...
This comment has been removed by the author.
seemangani said...

4th is blanket....

Anonymous said...

nice

senthil said...

nachunu eruku

Sathish said...

makkal oru marakamathaan irukangappa, ungal eluthu nadai arumai, kalakureenga...

Related Posts with Thumbnails