பிறந்ததும் தொட்டு பார்த்து.,
சிலிர்க்க செய்த முதல் ஸ்பரிசம்
தந்ததும் நீ தானாம்;
''ஐ!! தம்பி பாபா'' என்று
முதல் முத்தம் தந்ததும்
நீ தானாம்;
தவழ்ந்து தரைமுட்டி
தத்தளித்த தருணங்களில்
தாவி வந்து முதல்
தழுவல் தந்ததும்
நீ தானாம்;
நான் நடைபயில
பற்றி கொண்ட முதல் கரம்
தந்ததும் நீ தானாம்;
உனக்கு வழங்கப்பட்ட இனிப்பிலிருந்து
என் முதல் இனிப்பாய் இனித்ததும்
உன் விரல்தானாம்;
கரும்பலகையில் கட்டை
விரலை அழுத்தி பிடித்து
'அ' பழக்கியதும் நீ தானாம்;
தகவல் பரிமாற
தந்தியடித்த தருணங்களில்
தாய்மொழி,
தமிழ் தந்ததும் நீ தானாம்;
பத்திரமாய் கரம் பற்றி
பள்ளி பழக்கியதும்
நீ தானாம்;
காத்து கருப்புக்கு பயந்து
கடைதெரு போகாத எனக்கு,
காத்துக்கும் கருப்புக்கும்
கதை சொல்லி விரட்டியதும் நீ தானாம்;
எறும்பு கடித்து கதறி அழ
எனக்காய் நீ பதறி எழ-அன்றே
எறும்பை பகைத்து கொண்டவளும் நீ தானாம்;
குறும்பு செய்தபொது
குற்றம் ஏற்று
குறைந்தபச்ச தண்டனை
பெற்றதும் நீ தானாம்;
'அ' முதல் அன்பு வரை
அனைத்தையும்
அறிமுகபடுத்தியது நீ தானாம்;
இவள் உன்
அக்கா என்று
அம்மா
அறிமுகப்படுத்தியவளும்,
நீ தானாம்;
11 comments:
//என் முதல் இனிப்பாய் இனித்ததும்
உன் விரல்தானாம்;//
அடாட வாசிக்கும் போது உதடும் இனிக்கிறதே
அருமையா சகோதர பாசத்தை சொல்லியிருக்கீங்க தல நல்லா அருமையா வந்துருக்கு வாழ்த்துக்கள்...
its very nice....
//ஈரோடு கதிர் said...
//என் முதல் இனிப்பாய் இனித்ததும்
உன் விரல்தானாம்;//
அடாட வாசிக்கும் போது உதடும் இனிக்கிறதே//
உள்ளம் இனிக்கிறது...
என்றும் என்னை மறக்காமல் வாசித்து உற்சாகம் தரும் உங்கள் அன்புக்கு...மிக்க நன்றி அண்ணே...
//பிரியமுடன்...வசந்த் said...
அருமையா சகோதர பாசத்தை சொல்லியிருக்கீங்க தல நல்லா அருமையா வந்துருக்கு வாழ்த்துக்கள்...//
என்னை தொடர்ந்து வாசித்து நல்ல கருத்துகளை தரும் எங்க மண்னுகாரன் வசந்துக்கு அன்பு கலந்த நன்றிகள்...ஆம் நான் சின்னமனூர் காரன்...
//கமலேஷ் said...
its very nice....//
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி....கமலேஷ்
தொடர்வோம்..
அருமையான கவிதைங்க......சகோதரிகளுடன் பிறப்பதற்கும் குடுப்பினை வேண்டும் என்றே நினைக்க தோன்றும் சமயங்களில்...!
//லெமூரியன்... said...
அருமையான கவிதைங்க......சகோதரிகளுடன் பிறப்பதற்கும் குடுப்பினை வேண்டும் என்றே நினைக்க தோன்றும் சமயங்களில்...!//
உண்மைதான்....
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லெமூரியரே...நட்பில் தொடர்வோம்..
அருமையான கவிதை சகோதர சகோதரி பாசம் பற்றி.. ரொம்ப நல்ல இருக்கு
enney oru pasam..
touch panitenga
pasapinnaippu
ethuthan pola
nandri valga valamudan
v.v. sangam
complan surya
நன்றி சூர்யா...உங்கள் வருகை மகிழ்ச்சி தருது...தொடர்ந்து வாங்க...
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கு
இப்போதுத்தான் முதல் முறை உங்களின் வலைதளத்தை பார்வை இடுகிறேன்.அருமையான கவிதை,செறிவான சிந்தனைகள்!இம்பரசிவாக உள்ளது!வாழ்த்துக்கள்!
Post a Comment