Sunday, October 17, 2010

காட்சி...நீட்சி...



கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு 
தேநீர் கறைபடிந்த கோப்பையின் விளிம்பில் தேடிவந்தமரும் ஈ 

உப்பு சப்பில்லாத உவமைகளை உமிழ்ந்து விட்டு உறங்கும் பேனா
கன்னங்களில் கடன் காரனாய் காத்திருக்கும் உள்ளங்கை ரேகைகள்
சபலப்பட்டு அடுத்த முறையும் சாகத்துடிக்கும் புகைக்கூடு
சாக்கடையில் பிறந்தாலும் சாதிமத பேதமின்றி சரளமாய் கடிக்கும் கொசு 
அர்த்தம் விளங்காது அடித்துத் திருத்தப்பட்ட அவளுக்கான எழுத்து 
வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு
வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்...









20 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு //

சூப்பர் மாப்பி...

//
வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்...
//

மெய்யாலுமே உலவு.காம் விளம்பரத்தை தூக்கலைன்னா வைரஸ் தின்னப்ப்போவுது மாப்பு

அஹ‌ம‌து இர்ஷாத் said...

வ‌ரிக‌ள் டாப்பு சீமான்..

Unknown said...

நல்லா இருக்கு.

//கண்ணங்களில் கடன் காரனாய் காத்திருக்கும் உள்ளங்கை ரேகைகள்//
கன்னங்கள்..???

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு கனி.. வரிகள் சூப்பர்.

Jaleela Kamal said...

கவிதை வரிகள் நல்ல இருக்கு.
என்ன வைரஸ் தின்னுடுச்சா,

வினோ said...

அட இப்படி எல்லாமா யோசிக்கிறீங்க சின்ன சின்ன விசயங்களை.... கவிதை அருமை...

க ரா said...

நல்லா இருக்கு கனி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

காரண காரியங்கள், அதன் குணாதிசயங்களுடன்
இணைத்து எழுதப்பட்ட கவிதை! சொல்லாடல்
மிக எளி(மையான)தாக கை(யெழுத்து) வருகின்றது
சீமான்கனி, உங்களுக்கு! வாழ்த்துக்கள்!

erodethangadurai said...

இப்போதுதான் முதல் முறை உங்க வலைப்பக்கம் வருகிறேன். நல்ல கவிதை வரிகள் ...! வாழ்த்துக்கள். !

http://erodethangadurai.blogspot.com/

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

எஸ்.கே said...

அருமையான வ்ரிகள்!

ஸாதிகா said...

//கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு // எப்படி தம்பி வார்த்தைஅக்ளை இப்படி கோர்க்கறீங்க????அருமை.பூங்கொத்தை பிடியுங்கள்.

தமிழ் உதயம் said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு சீமான்கனி

சிவாஜி சங்கர் said...

நல்லாருக்குண்ணே.. காட்சியும் நீட்சியும்...!

அன்புடன் மலிக்கா said...

வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு //

அதாற வசைபடவந்தது,, எனக்குத்தெரியும் ஆனா சொல்லமாட்டேனே..

சின்ன விசயங்களிலும் கவிதை கொட்டுது மழையாய்.

சூப்பர் வாழ்த்துக்கள் கனி..

சீமான்கனி said...

ப்ரியமுடன் வசந்த் said...
//கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு //

சூப்பர் மாப்பி...

//
வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்...
//

மெய்யாலுமே உலவு.காம் விளம்பரத்தை தூக்கலைன்னா வைரஸ் தின்னப்ப்போவுது மாப்பு //

நன்றி மாப்பி... போகுது இல்ல!!!! போய்டுச்சு டா மாப்பி...போராடி மீட்டேன்...

அஹ‌ம‌து இர்ஷாத் said...
//வ‌ரிக‌ள் டாப்பு சீமான்.. //

வருகைக்கும் கருத்துக்கு நன்றி இர்ஷா...

கலாநேசன் said...
//நல்லா இருக்கு.///

//கண்ணங்களில் கடன் காரனாய் காத்திருக்கும் உள்ளங்கை ரேகைகள்//
கன்னங்கள்..??? //

கருத்துக்கு நன்றி நேசன் அண்ணா ...


Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//கவிதை ரொம்ப நல்லாருக்கு கனி.. வரிகள் சூப்பர். //

நன்றி ஸ்டார்ஜன்...

Jaleela Kamal said...
//கவிதை வரிகள் நல்ல இருக்கு.
என்ன வைரஸ் தின்னுடுச்சா,//

ஆமாக்கா உலவு வைரஸ்....

வினோ said...
//அட இப்படி எல்லாமா யோசிக்கிறீங்க சின்ன சின்ன விசயங்களை.... கவிதை அருமை... //

நன்றி வினோ சின்னதா இருந்தாலும் பெருசுதான் வினோ...


இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்கு கனி.

நன்றி இரா அண்ணா...

NIZAMUDEEN said...
//காரண காரியங்கள், அதன் குணாதிசயங்களுடன்
இணைத்து எழுதப்பட்ட கவிதை! சொல்லாடல்
மிக எளி(மையான)தாக கை(யெழுத்து) வருகின்றது
சீமான்கனி, உங்களுக்கு! வாழ்த்துக்கள்! //

உங்கள் அழகான கருத்துக்கு நன்றி நிஜாம் அண்ணா...


ஈரோடு தங்கதுரை said...
//இப்போதுதான் முதல் முறை உங்க வலைப்பக்கம் வருகிறேன். நல்ல கவிதை வரிகள் ...! வாழ்த்துக்கள். !//

உங்கள் வரவுக்கு நன்றி தங்கதுரை இனி இணைந்திருப்போம்...

http://erodethangadurai.blogspot.com/


Eeva said...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!//

நன்றி Eeva இனி முயற்சிக்கிறேன்...


எஸ்.கே said...
//அருமையான வ்ரிகள்! //

நன்றி எஸ்.கே..


ஸாதிகா said...
//கரண்ட் போனதும் தலையில் தீயேந்தி கதறியழும் மெழுகு // எப்படி தம்பி வார்த்தைஅக்ளை இப்படி கோர்க்கறீங்க????அருமை.பூங்கொத்தை பிடியுங்கள்.//

பூங்கொத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு அக்காக்கு நன்றிகள்


தமிழ் உதயம் said...
//கவிதை ரொம்ப நல்லாருக்கு சீமான்கனி //

மிக்க நன்றிகள் ரமேஷ்ஜி...

சிவாஜி சங்கர் said...
//நல்லாருக்குண்ணே.. காட்சியும் நீட்சியும்...!//

தம்பிக்கு நன்றிகள்

அன்புடன் மலிக்கா said...
வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு //

அதாற வசைபடவந்தது,, எனக்குத்தெரியும் ஆனா சொல்லமாட்டேனே..

சின்ன விசயங்களிலும் கவிதை கொட்டுது மழையாய்.

சூப்பர் வாழ்த்துக்கள் கனி.. //

அதாருகா எனக்கு மட்டும் சொல்லுங்க ...வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா கா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//nice //

நன்றி நல்லவரே...

சௌந்தர் said...

இதை படித்த என் கணினிக்கு வைரஸ் வரதே?

கவிநா... said...

உண்மையிலேயே ஒவ்வொரு காட்சியின் நீட்சிகளும், "அட" போட்டு தலையாட்டவைக்கிறது...



அருமையான சிந்தனை நண்பரே....

Thenammai Lakshmanan said...

வசை பாட வந்துவிட்டு சிரிக்கும்போது சிறைபட்டுக் கிடக்கும் நாக்கு

வைரஸ்கள் தின்றுவிட்ட என் வலைப்பக்கங்கள்//

அடடா கனி என்ன ஆச்சு..

புல்லாங்குழல் said...

எதிர்காலத்தில் அற்புதமான கவிதை வரிகளையெல்லாம் எழுத போவதை அறிவிக்கும் பிரகாசமான கவிதை வரிகள். விரைவில் உங்கள் கவிதைகள் புத்தகமாய் வெளிவர வாழ்த்துகள். ஆனால் ஏடாகூடமாய் தீ மூட்டும் கவிதைகள் சென்சாரில் கட்டு.

Related Posts with Thumbnails