ஓர் அதிகாலை மணி ஆறு இருக்கும்...ஒரு அழகி, கொலுசை பேசவிட்டு அவள் மட்டும் மௌனமாய் என் படுக்கை அறைக்குள் நுழைந்து ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று எழுப்ப....''ப்ளீஸ் டா ரெம்ப டயர்டா இருக்கு...''கொஞ்சநேரம் அமைதிக்குப்பின் என் கன்னங்களை ஈரமாகி ..முதுகில் ஏறி ஒருமுறை இறுக்க அணைத்துவிட்டு என் தலையனையில் அவளும் தலை வைத்து படுத்து கொண்டாள்... அடுப்படியில் இருந்து என் அம்மா..."அங்க யார்கிட்டடா பேசிட்டு இருக்கே..." ஐயோ!!!!.
முதல் மடியில் இருந்து அவளின் அம்மா..."எந்திச்ச ஒடனே எங்கடீ போற..சொல்ல சொல்ல எவ்ளோ தைரியமா போரபாரு ..." போச்சு... அவள் எதையும் கண்டுகொள்வது போல்தெரிய வில்லை...அப்படியே ஒருவருடம் நினைவுகள் பினோக்கி நகர்ந்து போனேன்...
அவள் பவித்ரா.அழகான பெயர் அவளும் அப்படித்தான்.. நாங்கள் புதுவீடு குடிபோய் இருக்கிறோம்.அம்மாவுக்கு படியேற கஷ்ட்டம் என்பதால் கிழ்த்தளமாய் தேடி தேர்ந்துஎடுத்த வீடு...அவளுக்கு முதல் தளம் முதல் நாள் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு என்னை வெறித்து பார்த்தால்...அருகே அவளின் பாட்டி. முதல் பார்வையிலேயே...அவளை பிடித்து போனது.அடுத்த நாள் அவளின் பாட்டி கிழே வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க அவளும் உடனிருந்தால் என்னை பார்த்தும் பாட்டி, ''உங்க பையனா??? என்ன பண்றாரு..''விசாரித்தார்.அம்மா விளக்கி சொல்ல அவள் மட்டும் என்னையே பார்த்தபடி இருந்தாள்...பாட்டிய்டம் கேட்டேன் ''இவள் யார்??''என்று..
''என் பேத்திபா'' அவளை பர்ர்த்து ''இங்கே வா ''என்றதும் அழுதுவிட்டாள் ...எனக்கு பயம்...அவள் அப்டிதாம்பா என்று அவளை அழைத்து கொண்டு போய்விட்டார்.
ஒரு விடுமுறை நாள் அதேபோல் ஒருசமையம்...மேலே போன் ஒலிக்கும் சத்தம் கேட்டதும் பாட்டி வேகமாய் மேலே சென்று விட்டார்.அங்கே அவளும் நானும் மட்டும் சுற்றி முற்றி பார்த்து விட்டு ஓ..... வென அழ ஆரம்பித்தாள்.எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவளை அப்படியே கதற கதற கையில் அள்ளி மொட்டை மாடிக்கு சென்றேன்...ஐயயோ...!!!!
ஹே ....அங்க பாருமா...காக்கா ..எங்கே புடி....புடி...காக்காவ புடி..... என்று தாஜா பண்ணி அவளை சிரிக்கவைத்தேன்....அன்றில் இருந்து அவளும் நானும் ரெம்ப க்ளோஸ்....பிரெண்டு .
அட என்ன பாக்குறிங்க பவித்ரா பிறந்து அப்போது பத்து மாதங்கள் முடிவடைந்து இருந்தது.... ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று மீண்டும் எழுப்ப...எழுந்து அவளுக்கு ஒரு உம்மா கொடுத்து அந்தநாள் இனிதே ஆரம்பம் ஆனது.
அவளின் முதல் பிறந்தநாள் நான் சென்னையில் இல்லை மதுரையில் இருந்தேன் வந்ததும் அன்று அவர்கள் எடுத்த போட்டோ களை கட்டினர் அவர் அம்மா...
என்னை வேருபெற்றுவதர்காகவே அவளும் என் அக்காவும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவளுக்கு வாங்கிவந்த கரடி பொம்மையை கொடுக்க எனக்கு ஒரு உம்மா கொடுத்து கட்டி கொண்டாள்... இப்போது வயது இரண்டை தாண்டி விட்டது.
தினமும் என்னை வந்து இப்படி எழுப்புவது அவள் தான்.
என் அறையில் சத்தமின்றி நுழைய அவளுக்கு மட்டுமே அனுமதிக்க பட்டிருந்தது .
அவளின் அம்மா அடிக்கடி சொல்வார்கள் யார்கிடேஉம் போகம எப்பவும் அழுதுகிட்டே இருப்பா நீங்க வந்ததுல இருந்து நல்ல பிள்ளைய ஆய்ட்டா...நானும் ப்ரீயா ஆய்ட்டேன்-னு...
பினொரு நாளில் அவளை மழலை பள்ளியில் சேர்த்து விட்டார்கள். தினமும் அவள் மழலை வாய்மொழி ரைம்சும்..கதையும் ...
கேட்டக்க கேட்டக ஆனந்தம்தான்...''புஜ்ஜி'' இது நான் அவளுக்கு வைத்த பெயர் அதையே அவள் எனக்கு மாற்றி வைத்து ''புஜ்ஜி அண்ணா...புஜ்ஜி அண்ணா...'' என்று அழகாய் அழைப்பாள்.
பினொரு நாளில் வெளிநாட்டில் வேலைகிடைக்க அவளை பிரிந்த நாள் ..
அதிகாலை நல்ல பனிமூடிய நாள் அவளை விமான நிலையம் வரை அழைத்து போக முடியாத சுழ்நிலை அறை தூக்கத்தில் எழுந்து வந்தவளுக்கு ஒன்னும் புரியவில்லை .அவளின் அம்மா ''அடியே புஜ்ஜி அண்ணா...ஊருக்கு போகுதுடீ டாட்டா சொல்லு'' என்றார் .அவளும் ''சிக்கிரம் வா'' -னு டாட்டா சொல்லி ஓரிரு உம்மா பரிமாறி கையசைத்து பிரிந்தோம்... கண்கள் கசிய...
இப்போது அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிரளாம். இப்போது போனில் ''புஜ்ஜி அண்ணா நல்லா இருக்கியா ??? சாப்டியா???''அவளின் அம்மா சொல்ல சொல்ல அவளும் கேட்ட்கிறாள்...எனக்கு டெட்டி பியேர் வாங்கிட்டுவா...இப்போ
ஒரு தம்பி பாபாஅவளோடு இருக்கானாம் ...
இப்போது நினைத்தாலும் மனம் மழலையாகி போகிறது...
ஐ லவ் புஜ்ஜி குட்டி ....
மனசுல பட்டத சொல்லிட்டு போங்க...
9 comments:
முதல் காதலி யாரு?
புஜ்ஜி ரொம்ப க்யூட்டுன்னு நினைக்கிறேன்.
பிரியமுடன்...வசந்த் said...
//முதல் காதலி யாரு?
புஜ்ஜி ரொம்ப க்யூட்டுன்னு நினைக்கிறேன்.//
அமாம் வசந்த் ரெம்பவே...
முதல் காதலியைத்தான் தேடுறேன்....
உங்கள் வருகைக்குக்கும் பகிர்வுக்கும்...நன்றி வசந்த்....
ஆமாம் சின்ன குழந்தைகள் பேச்சை ரசித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். யாரா இருந்தாலும் அப்படியே ஐக்கியமாகிவிடுவார்கள்.
பதிவு ரொம்ப நல்ல இருந்துச்சி பஜ்ஜி சாரி புஜ்ஜி அண்ணா. கூட பேசிட்டேனோ.
அருமை சகா! எனக்கும் அதே அனுபவம் உண்டு... இன்று வரை அந்த மழலை பேச்சில் தான் விழிக்கின்றேன். அலுவலக வேலையாக வெளியூர் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்தக் குழந்தை வந்து முத்தம் ஒன்று தந்து எழுப்பாத வரை விடியாதது போலவே இருக்கின்றது. அவர் எங்கள் வீட்டு உரிமையாளரின்(சிங்களவர்கள்) மகள் இரண்டரை வயதாகின்றது. அதிகாலையில் வந்து 'மாமே குட் மோனிங் என்று சொல்லும் போது விடியல் எவ்வளவு மகிழ்ச்சியாக மலர்கின்றது.
Jaleela said...
//ஆமாம் சின்ன குழந்தைகள் பேச்சை ரசித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். யாரா இருந்தாலும் அப்படியே ஐக்கியமாகிவிடுவார்கள்.
பதிவு ரொம்ப நல்ல இருந்துச்சி பஜ்ஜி சாரி புஜ்ஜி அண்ணா. கூட பேசிட்டேனோ.//
சரிதான் அக்கா...
அவர்களின் ஒவொரு அசைவும்,குறும்பும் ,பேச்சும்...ஆஹா...
உங்கள் பாராட்டுக்கும் பகிர்வுக்கும் நன்றி அக்கா...
செ.பொ. கோபிநாத் said...
//அருமை சகா! எனக்கும் அதே அனுபவம் உண்டு... இன்று வரை அந்த மழலை பேச்சில் தான் விழிக்கின்றேன். அலுவலக வேலையாக வெளியூர் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்தக் குழந்தை வந்து முத்தம் ஒன்று தந்து எழுப்பாத வரை விடியாதது போலவே இருக்கின்றது. அவர் எங்கள் வீட்டு உரிமையாளரின்(சிங்களவர்கள்) மகள் இரண்டரை வயதாகின்றது. அதிகாலையில் வந்து 'மாமே குட் மோனிங் என்று சொல்லும் போது விடியல் எவ்வளவு மகிழ்ச்சியாக மலர்கின்றது.
அனுபவித்து பார்க்கும்போது அதன் ஆனந்தம் புரிஉம்...
நன்றி நண்பரே....
தொடர்ந்து உங்கள் ஆதரவு நாடுகிறேன்...
சான்ஸ்சே... இல்லனே...
அருமையான வரிகள் .....ரசித்து படித்தேன்....
நீங்கள் எழுதும் விதம் அருமை தொடர்ந்து எழுதவும்...
நன்றி நண்பா....உங்கள் பெயர் சொல்லவில்லையே...
Post a Comment