Tuesday, September 1, 2009

எடை கூடிப்போன இதயம்...உன்னை நினைத்து
நினைத்து கனத்து எடை
கூடிபோனது இதயம்.
இத்தனை நாள் -என்
கதறல் கேட்காத உன்
செவிட்டு இதயத்திடமா
கவிதை பாடி இருக்கிறேன்.!?
உயிர் துடிக்கும் போதெல்லாம்
ஊமையாய் இருந்துவிட்டு
இப்போது திருமண செய்தி கொண்டுவந்திருக்கிறாய் ...
உன்னை மறக்கச்சொல்லி
உரக்க சொல்லிவிட்டு போனாய்
இதற்குமேல் ,
இணைவதென்றால் எப்படியும்
இணையலாம் ஆனால் -எத்துனை
மரணங்கள் நடக்குமோ -எத்துனை
மாணங்கள் பறக்குமோ தெரியாது.
இருக்கட்டும் அத்துனையும்
அப்படியே இருக்கட்டும் -நம்
காதலை நார்நாராய் கிழித்து
தோரணம் கட்டி
தொடங்கு -இனிய
இல்லறத்தை
இந்த காதல்
இன்னும் வாழ்கிறது
இந்த இதயத்தில்....

31 comments:

பிரியமுடன்...வசந்த் said...

அட...சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

//உன்னை மறக்கச்சொல்லி
உரக்க சொல்லிவிட்டு போனாய்//

உணர்ந்து எழுதியது போல இருக்கிறது, வசந்த் சொன்ன மாதிரியே!

சப்ராஸ் அபூ பக்கர் said...

////உயிர் துடிக்கும் போதெல்லாம்
ஊமையாய் இருந்துவிட்டு
இப்போது திருமண செய்தி கொண்டுவந்திருக்கிறாய் ...///

நல்ல கவி வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...

seemangani said...

//பிரியமுடன்...வசந்த் said...
அட...சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள்//

ஒ....அப்படிஉம் வைத்து கொள்ளலாம் வசந்த் ...
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி வசந்த்....தொடர்ந்து ஆதரவு தருக்க....

SUMAZLA/சுமஜ்லா said...
//உன்னை மறக்கச்சொல்லி
உரக்க சொல்லிவிட்டு போனாய்//

//உணர்ந்து எழுதியது போல இருக்கிறது, வசந்த் சொன்ன மாதிரியே!//

நன்றி அக்கா....
கொஞ்சம் வலிகளையும் பதிவு செய்ய விரும்பினேன்....

சப்ராஸ் அபூ பக்கர் said...
////உயிர் துடிக்கும் போதெல்லாம்
ஊமையாய் இருந்துவிட்டு
இப்போது திருமண செய்தி கொண்டுவந்திருக்கிறாய் ...///

நல்ல கவி வரிகள்....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...//

நன்றி அபூ....உங்கள் தொடர் ஆதரவிற்கு....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல கவி வரிகள்..
அருமையாக இருந்தது
வாழ்த்துக்கள்.

seemangani said...

நினைவுகளுடன் -நிகே- said...
//நல்ல கவி வரிகள்..
அருமையாக இருந்தது
வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெகு நாட்களுக்கு பிறகு வந்த கருத்து தேடி படித்து வாழ்த்து தந்ததுக்கு மகிழ்ச்சி மீண்டும் ஒருமுறை நன்றி...-நிகே-

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

kavi said...

நல்ல இருக்கு கவிதை கனமாக

seemangani said...

நன்றி கவி....

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான மன உணர்வை சொல்லிய கவி வரிகள் அழகு

seemangani said...

நினைவுகளுடன் -நிகே-
நன்றி நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும்....

Kowshe Kandasamy said...

Hi anna, I love your lines much..... I too use to scribble something. I would like to share them on this blog. Shall I? But I am unaware to type in Tamil. What shall I do? Please help me through this way. I like your love towards Tamil. I think I am a Thamilachi so you will help me?

seemangani said...

Hi kowshe you always welcome...
you can check this page....
http://www.google.com/transliterate/

seemangani said...
This comment has been removed by the author.
seemangani said...

hi kowshe this is my mail ID
u can mail me..
seemangani@gmail.com
Thank you...

மங்குனி அமைச்சர் said...

என்னா தல இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்லிருக்க, நல்லாருக்கு

seemangani said...

வாங்க அமைச்சரே...எமது அரண்மனைக்கு முதல் முறையாய் வரவேற்கிறேன் தங்களை...

சொல்லி ஆகவேண்டிய கட்டயாம்...அமைச்சரே....
இனி இணைந்துருப்போம்...

thenammailakshmanan said...

என்
கதறல் கேட்டகாத உன்
செவிட்டு இதயதிடமா
கவிதை பாடி இருக்கிறேன்.!?///

ரொம்பக் கொடுமை இது சீமான் கனி

seemangani said...

ஆமாம்..தேனக்கா ரெம்ம்ம்மம்ப கொடுமை...நன்றி....

பித்தனின் வாக்கு said...

// இந்த காதல்
இன்னும் வாழ்கிறது
இந்த இதயத்தில் //

இதே மாதிரிக் கவிதை ஒன்று நானும் எழுதியிருக்கேன். ஆனா நானா இருந்தா இந்தக் காதல் இன்னமும் வாழ்கின்றது டாஸ்மார்க்கில் என்று முடித்து இருப்பேன்.

நீ உன் மண ஓலை கொடுத்துச் சென்றாய்.
நானே என் மரண ஓலை எழுதக்
கவிழ்ந்து கிடந்தேன் டாஸ்மார்க்கில்.
இதுதான் என் கவிதையின் முடிவு. ஒரு சின்ன திருத்தம் நான் எழுதுவது கவிதை அல்ல கவுஜ.
நன்றி.

seemangani said...

ஒ..கவுஜ இப்டிதான் எழுதனுமா!!!??? நானும் ட்ரை பண்றேன்...முதல் முறையா வந்த பித்தருக்கு நன்றிகள் தொடர்ந்து வாங்க புதிய பதிவும் படித்து சொல்லுங்க...நன்றி...

DREAMER said...

தலைப்பும் கவிதையும் அருமை நண்பரே..!

-
DREAMER

seemangani said...

நன்றி ஹரீஷ்...

அண்ணாமலை..!! said...

நண்பரே ! நல்ல கவிதை!
சிறிது எழுத்துப்பிழைகளைத்
திருத்தி விட்டால்
இன்னும் சுவையாக இருக்கும்!

seemangani said...

நன்றி அண்ணாமலையாரே...தொடர்ந்து வாங்க...

narumugai said...

காதல் கவிதைகளை ஒழித்தால் காதலை ஒழித்து விடலாம்னு நினைக்கீறேன் நீங்க என்ன சொல்றீங்க??

www.narumugai.com

Ananthi said...

//இதற்குமேல் ,
இணைவதென்றால் எப்படியும்
இணையலாம் ஆனால் -எத்துனை
மரணங்கள் நடக்குமோ -எத்துனை
மானங்கள் பறக்குமோ தெரியாது///

கவிதை நல்லா இருக்குங்க.. :-))
அர்த்தமுடன் இருக்கு.. வாழ்த்துக்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மாணங்கள் பறக்குமோ தெரியாது.// .. மானத்தை நீங்கள் பெரிதும் மதிக்கிறீர் என்று தெரிகிறது.. ஹி ஹி.. சும்மா.... கவிதையை ரசித்தேன்..

பாரத்... பாரதி... said...

//என் கனவுகளோடு..
கடிகார முள்ளும்,
காலண்டர் காகிதங்களும்
கரைகிறது உங்கள் கருத்துக்களுக்காய்...//
அருமையான அழைப்பு

வைகறை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

Related Posts with Thumbnails