Monday, August 31, 2009

நாஷ்ட்டா கடையில் நக்கீரன்...

தலைப்பை பார்த்தும் ஏதோ வித்யாசமா சொல்லபோறேனு நெனச்சிருந்தா அத உடனே மாத்திகோங்க ...
இது என் பள்ளிபருவ நாடக அனுபவம் .

ஒரு வித்தயாசமான கான்சப்ட் தான் கீரை வடையில் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரன்.....அந்த திருவிளையாடல் காட்சி ஒரு நாஷ்ட்டா கடையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்ப்பனை என் மிஸ்க்கு தோன்ற...அதை நாடகமாக்க முடிவு செய்து அதில் என்னையும் தேர்வு செய்து ஒத்திகையும் முடிந்து .அந்தநாள் வந்தது.கலையில் இருந்து ஒரே பரபரப்பு முதல் மேடை என்பதால் பதற்றம் வேறு. நக்கீரன் வேடம் எனக்குதான் அப்போ கொஞ்சம் துருதுவென இருப்பேன் அதனால் என்னை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன். கான்சப்ட் வித்த்யாசம் என்றாலும் ஆடை மட்டும் காவி தான் டீசெர் கட்டளை .நானும் தேடி அலைந்து கிடைக்கவில்லை. அது ஒரு போட்டி நிகழ்ச்சி என்பதால் நாம்தான் எல்லாமே. கடைசி நிமிடம் டீசெர் கிட்ட சொல்ல பயம் இருந்தாலு சொல்லிதானே ஆகவேண்டும். சொன்னதும் அடுத்த நொடி பளார் கன்னம் சிவக்க அழுதேவிட்டேன். அவர் பெயர் பூமாதேவி ,என்னவோ செய்ங்கனு சொல்லிட்டு போய்விட்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை அடுத்தது எங்களுடையது ...
நாடகம் ஆரம்பித்து என்னுடைய காட்சி.....நான் லுங்கி பனியனோடு பொய் நின்று வணக்கோ தருமி அண்ணாதே... நீ சுட்ட வடைல நமக்கு டவுட்டு கீதுபா...னு...
ஆரம்பிக்க ஒரே சிரிப்பலை...டயலாக் எல்லாம் மெட்ராஸ் தமிழில் ..பேசி ஒப்பெதியச்சு... கட்சில சிவன் வந்து நீதான் நகீரரோ னு கேட்டு, பார்த்தால் அப்படி தெரிய வில்லையே னு சொல்ல வயக்கமா நஷ்ட்டா துன்ன இப்டிதாபா வருவோம்னு சொல்லி முடிச்சாச்சு....லுங்கி கொடுத்து உதவிய நண்பனுக்கு நன்றி சொல்லி திருப்பி கொடுத்து விட்டு ...
பூமாதேவி மிஸ் கிட்ட சாரி சொல்லபோனா அவங்க பாராட்டி ஆளுக்கொரு 5 ஸ்டார் கொடுத்து அனுப்பிவச்சங்க...
அடிக்கிற கைதானே அணைக்கும்....
எங்களுக்குத்தான் முதல் பரிசு...அன்றில் இருந்து நாங்கதான் ஹீரோ ..எப்பூடி.......
மனசுல பட்டத சொல்லிட்டு போங்க....

10 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

நவீன நக்கீரருக்கு வாழ்த்துக்கள்!

கட்டுரை எழுதும் போது பத்தி பிரித்து எழுதினால், வாசகர்களை கவரும்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

அப்போ மட்டுமல்ல, இப்பவும் துரு துருவேனத் தான் இருக்கிறீர்கள் போலும்.....

நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்....

சுமஜ்லா அக்கா சொன்னதில் பந்தி என வர வேண்டும் என நினைக்கிறேன். பந்தி பந்தியாக எழுதுங்கள். இன்னும் அருமையாக இருக்கும்....

சீமான்கனி said...

//SUMAZLA/சுமஜ்லா said...
நவீன நக்கீரருக்கு வாழ்த்துக்கள்!

கட்டுரை எழுதும் போது பத்தி பிரித்து எழுதினால், வாசகர்களை கவரும்!//

வாழ்த்துக்கு நன்றி அக்கா...
ஆலோசனைக்கு நன்றி...

சீமான்கனி said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
அப்போ மட்டுமல்ல, இப்பவும் துரு துருவேனத் தான் இருக்கிறீர்கள் போலும்.....//
அப்படியா???

நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்....

சுமஜ்லா அக்கா சொன்னதில் பந்தி என வர வேண்டும் என நினைக்கிறேன். பந்தி பந்தியாக எழுதுங்கள். இன்னும் அருமையாக இருக்கும்....

ஆலோசனைக்கு நன்றி அபூ...

sakthi said...

அப்பவே கலக்கியிருக்கீங்க போலும்

kishore said...

பள்ளி நினைவுகளே என்றும் அருமையான அனுபவம்.. ரசித்தேன்..

Jaleela Kamal said...

//பூமாதேவி மிஸ் கிட்ட சாரி சொல்லபோனா அவங்க பாராட்டி ஆளுக்கொரு 5 ஸ்டார் கொடுத்து அனுப்பிவச்சங்க//

ஹா ஹா தலைப்பே அசத்தலா இருக்கு

சீமான்கனி said...

sakthi said...
அப்பவே கலக்கியிருக்கீங்க போலும்

நன்றி சக்தி...
அன்று வைரும் சேர்ந்து அல்லவா
கலக்கியது....

KISHORE said...
பள்ளி நினைவுகளே என்றும் அருமையான அனுபவம்.. ரசித்தேன்..

ஆம் கிஷோர் ....
படித்து ரசித்து பின்னுட்டம் தந்ததற்கு நன்றிகள்....

Jaleela said...
//பூமாதேவி மிஸ் கிட்ட சாரி சொல்லபோனா அவங்க பாராட்டி ஆளுக்கொரு 5 ஸ்டார் கொடுத்து அனுப்பிவச்சங்க//

ஹா ஹா தலைப்பே அசத்தலா இருக்கு

அவங்க பெயர் தான் பூமாதேவி ஆனால் ரெம்ப கொவகரவுங்க....

ரசிப்புக்கும் கருத்துக்கும் கருத்து நன்றி அக்கா...

க.பாலாசி said...

//வயக்கமா நஷ்ட்டா துன்ன இப்டிதாபா வருவோம்னு சொல்லி முடிச்சாச்சு.//

ஹி...ஹி.... சரியான காமெடி....அப்பறம் அந்த பூமாதேவி மிஸ்ஸ விசாரிச்சதா சொல்லுங்க...

சீமான்கனி said...

க.பாலாஜி said...
//வயக்கமா நஷ்ட்டா துன்ன இப்டிதாபா வருவோம்னு சொல்லி முடிச்சாச்சு.//

ஹி...ஹி.... சரியான காமெடி....அப்பறம் அந்த பூமாதேவி மிஸ்ஸ விசாரிச்சதா சொல்லுங்க...

கண்டிப்பா சொல்லிடுவோம்...

Related Posts with Thumbnails