Friday, November 20, 2009
கவிக்கூந்தல்...
உன்னை மட்டும் எப்படி இதனை அழகாய்;
கவிதையாய் எழுதி இருக்கிறான் பிரம்மன்;
கார் குழல் துவங்கி கணுக்கால் வரைக்கும்
எத்தனை அழகாய் இழைதிருகிறான்;
கவிவரியாய் கூந்தல்;
கவி படிக்கவந்த காதலனாய்
காற்றையும் காதல் படிக்கவைத்து விட்டாயே!!
அங்கே பார் அலையோடு காதல் கொண்டு கரையெல்லாம்
நுரையெல்லாம் கவிதை வடிக்கிறான்; -உன்
கூந்தல் வாரிய சீப்புகளெல்லாம் -நீ
சிக்கெடுக்கும் சிணுங்களில்
சிகரம் ஏறிய வீரனாய் செத்து பிழைகின்றன; -உன்
சிகையில் கொஞ்சம் சிறை பிடித்து
முடி சூடி கொள்கின்றன;-உன்
கூந்தல் ஏறிய பூக்களும் கவிபாடுது; -இப்போதுதான்
நீ தலை(பூ)-புடன் கூடிய கவிதையாம்!!-உன்
ஈர கூந்தலுக்கு குதுகலத்தை பார்!!
உன்னை விட்டு கொள்ளாமல் ஒட்டி கொள்கிறது;-நீ
தலை உலர்த்தும் தருணங்களில் எங்கோ -புயல்
உருவாக்கி என் மனதில் நிலைகொள்கிறது;
அடிக்கடி முகம் பார்த்து விட்டு வரும் -உன்
முடியே இத்தனை கவி சொல்லுதே...!!!
நான் மட்டும் கவியானதில் உனக்கென்ன சந்தேகம்??
இந்த பிரம்மனுக்கு எத்தனை ஓரவஞ்சனை பாரேன் !!?
உன்னை கவிதையாய் எழுதிவிட்டு -என்னை
மைஉதறி கிறுக்கி பார்க்கும் வெத்து காகிதமாய் விட்டுவிட்டான்;
விதிக்கு அந்த கிறுக்கல் புரியவில்லையாம்
பாவம் புழம்புகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//கூந்தல் வாரிய சீப்புகளெல்லாம் -நீ
சிக்கெடுக்கும் சிணுங்களில்
சிகரம் ஏறிய வீரனாய் செத்து பிழைகின்றன; //
இதுதான் சூப்பர் ...
உங்கள் முதல் கருத்துக்கும்...என்னை முதலில் எப்போது உற்சாகம் செய்வதற்கும் நிக்க நன்றி வசந்த்....
சிகரம் ஏறிய பழக்கம் உண்டா ??
கவிதையில் அழகை வர்ணித்த விதம் அழகு.....ரசிக்கிறேன் நண்பரே.....
எவ்வளவு அழகிய புகைப்படம் என்று புகைப்பட அழகில் மயங்கினேன். பிறகு கவிதையை வாசித்தேன். புகைப்பட அழகெல்லாம் ஒன்றும் இல்லை என்றாக்கி விட்டீர்கள்.
//கவிதையில் அழகை வர்ணித்த விதம் அழகு.....ரசிக்கிறேன் நண்பரே.....//
உங்கள் ரசனைக்கும் ,வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலாசி...
//எவ்வளவு அழகிய புகைப்படம் என்று புகைப்பட அழகில் மயங்கினேன். பிறகு கவிதையை வாசித்தேன். புகைப்பட அழகெல்லாம் ஒன்றும் இல்லை என்றாக்கி விட்டீர்கள்.//
உங்கள் வருகைக்கும் அன்புக்கும்...உர்ச்சகதிர்ற்கும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி...தமிழ்உதயம்
Post a Comment