Monday, April 12, 2010

காதல் கடிதம் அல்ல...8(தொடர் க(வி)தை)

கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின்  எல்லா  பாகமும் இங்கே..


இப்போது...
மின்கலத்தின் மட்டும் அல்ல
என் காதலின்  உயிரையும்
குடித்திருந்தது கைபேசி;

கடவுளாகவும் கைகுழந்தையாகவும்
கையாளப்பட்ட கைப்பேசி இப்போது
கன்றாவியாய் காட்சி தருது;
கொம்பு ரெண்டு முளைத்து
கொடூரமாய் பார்க்குது.

மீண்டும் மின்கலத்திர்க்கு
உயிருட்ட ஒடிபோனேன்.
உயிர் பெற்றதும் - கருவறை
கடந்துவந்த குழந்தை போல்
அழகாய் அழுதது அழைத்தது...
அழைப்பை அனுமதித்து
அலோ என்றதும்... 
கவியா?? என்றது அதே குயில். 
ஆம் என்று குதித்து   கும்மாளம்
போட்டது மனது.

தயக்கம் தடுமாற்றம்  தாண்டி;
''நான் தமிழ்'' என்று தமிழ் பேசியது குயில்.
நலம் விசாரிப்பு முடிந்ததும்  நன்றி என்றது.
எதற்கு என்றதும் எல்லாத்துக்கும் என்றது.
சரி விஷம் விழுங்கியதன்
காரணம் கரை என்றேன் - குயில் கரைந்து.

உங்கள்  கடிதம் அப்பா கையில் மாட்டிகொண்டது
நான் அவர் வாயில் மாட்டிக்கொண்டேன்
வாய்க்கு  வந்தபடியெல்லாம் வாதாடினார்
வாயிதா கேட்டகூட வழி இல்லை;
இல்லை என்று இடியாய் இரைந்தும் கூட
இம்மி அளவும் இதயம் இறங்கவில்லை.
கதறி கதறி  கயிச்சல் வந்தது எனக்கு
பதறி பதறி பைத்தியம் பிடித்தது அவருக்கு.
படி தாண்ட மாட்டேன் என்று பறைசாற்றுவதற்கு
துணையாய் இருந்தது தூக்கமாத்திரை.
துணிந்து தூக்கமாத்திரை போட்டேன் என்றாய் 
தூக்கிவாரி போட்டது எனக்கு.


''தாய் இல்லாத பிள்ளை
தங்கமாய்  தாங்கி இருக்கிறார்;
தவறி விடக்கூடாது என்று
தவித்திருக்கிறார்.
.
காதல் எனக்கு
கண்ணுக்கு  எட்டிய கானல்.
கடல் முட்டிய வானம்.
கைக்கு கிட்டிய காற்று.
கடவுளை காட்டிய கனவு.

உடைந்து போனவரை 
ஓட்ட வைத்திருக்கிறேன்.
காதல் சொல்லி களைத்து விட
கண்டிப்பாய் விரும்ப்பமில்லை.
இது என் முதலும் கடைசியுமான
அழைப்பு''... மன்னிக்க மன்றாடுகிறேன் என்று
மீண்டும் உயிர்விட்டது  
கைப்பேசியும் காதலும்.

காதல் காதல் என்று கபடி ஆடிகொண்டிருந்த இதயம்
கண்ணீரில் கரைந்து போனது..(தொடரும்...)




13 comments:

அன்புடன் மலிக்கா said...

பட்டத சொல்லிடவா.



//காதல் காதல் என்று கபடி ஆடிகொண்டிருந்த இதயம்
கண்ணீரில் கரைந்து போனது//

இந்த காதலே இப்படித்தான்.

ஆனாலும் கலக்குறீங்க மாங்கனி..

அன்புடன் மலிக்கா said...

ஹை நான் தான் பஸ்ட், சக்கேண்ட். எப்புடி

சீமான்கனி said...

அன்புடன் மலிக்கா said...
//இந்த காதலே இப்படித்தான்.

ஆனாலும் கலக்குறீங்க மாங்கனி...//

பட்டத படார்னு சொன்ன மலிக்கா அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...//மாங்கனி...//அக்கா ஸ்கூல்ல ஏன் பட்ட பேரு இதுதான் ஆஹா ரகசியத்தை கண்கொண்டு பிடிசுடீங்களே...

ஸாதிகா said...

/// காதல் எனக்கு
கண்ணுக்கு எட்டிய கானல்.
கடல் முட்டிய வானம்.
கைக்கு கிட்டிய காற்று.
கடவுளை காட்டிய கனவு.//

வரிகளில் லயம் தெறிக்குது.சீமான் கனி எங்கேயோ போய்ட்டீங்க.(கவிதை எழுதுவதில் மட்டுமல்ல எழுத்துப்பிழை காணாமல் போனதையும் சேர்த்துத்தான்)வாழ்த்துக்கள்

Priya said...

தொடர் கதைகளில் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தால் கூட தொடர்ந்து படித்திட முடியாது; ஆனால் அதையே கவிதையாக தரும் போது படித்திட இனிக்கும். அப்படிதான் உங்க காதல் கடிதமும்(கவிதையும்) படிப்பதற்க்கு இனிமையாக இருக்கிறது!!!

Thenammai Lakshmanan said...

கதறிக் கதறிக் காதலிப்பதும் பதறிப் பதறிப் பைத்தியம் பிடிப்பதும் அருமை..அதுவும் தாய் இல்ல பிள்ளை என்பதால் தாய் போல வேறு தாங்கினீர்களா ..அருமை சீமான் கனி

சீமான்கனி said...

ஸாதிகா said...
//வரிகளில் லயம் தெறிக்குது.சீமான் கனி எங்கேயோ போய்ட்டீங்க.(கவிதை எழுதுவதில் மட்டுமல்ல எழுத்துப்பிழை காணாமல் போனதையும் சேர்த்துத்தான்)வாழ்த்துக்கள்//

எல்லாம் நீங்கள் கொடுக்கும் அன்பு உற்ச்சாகமும் திருத்தங்களும் கருத்துகளால் மட்டுமே இது சாத்தியமானது...நன்றி ஸாதிகா அக்கா...

Priya said...
//தொடர் கதைகளில் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தால் கூட தொடர்ந்து படித்திட முடியாது; ஆனால் அதையே கவிதையாக தரும் போது படித்திட இனிக்கும். அப்படிதான் உங்க காதல் கடிதமும்(கவிதையும்) படிப்பதற்க்கு இனிமையாக இருக்கிறது!!!//

நன்றி ப்ரியா எல்லாம் உங்கள் கருத்துகளால் தான்.என்னுடைய இந்த முயற்ச்சியை தொடர்ந்து படித்து உற்ச்சாகம் தருவதற்கு வெறும் நன்றிகள் சொல்லி முடிக்க மணமில்லை...
என்றும் அன்புடன்
சீமான்கனி..

thenammailakshmanan said...
//கதறிக் கதறிக் காதலிப்பதும் பதறிப் பதறிப் பைத்தியம் பிடிப்பதும் அருமை..அதுவும் தாய் இல்ல பிள்ளை என்பதால் தாய் போல வேறு தாங்கினீர்களா ..அருமை சீமான் கனி//


அவளின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதுதானே அவனின் தலையாய கடமை...சரிதானே தேனக்கா...நீங்கள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியாய் இருக்கு..நன்றி...
என்றும் அன்புடன்
சீமான்கனி..

நிலாமதி said...

கவிதை அழகாய் இருக்கு..........கலக்குறீங்க

சீமான்கனி said...

நிலாமதி said...
//கவிதை அழகாய் இருக்கு..........கலக்குறீங்க//

வாங்க நிலா கா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
என்றும் அன்புடன்
சீமான்கனி.

Deepan Mahendran said...

நீ கலக்கு மாப்பி..!!!
அருமையான வரிகள் ...!!!

Jaleela Kamal said...

படிக்க படிக்க நல்ல அருமையாக இருக்கு. அருமையான வரிகள். ஓ மலிக்கா உங்கள் பட்டப்பேரயும் கண்டு பிடித்துட்டாங்களா?

சுசி said...

//காதல் எனக்கு
கண்ணுக்கு எட்டிய கானல்.
கடல் முட்டிய வானம்.
கைக்கு கிட்டிய காற்று.
கடவுளை காட்டிய கனவு.//
:)))))))

அச்சச்சோ.. இப்டி ஆச்சே..

சீமான்கனி said...

சிவன். said...
//நீ கலக்கு மாப்பி..!!!
அருமையான வரிகள் ...!!!
//

வா..மச்சான்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Jaleela said...
//படிக்க படிக்க நல்ல அருமையாக இருக்கு. அருமையான வரிகள். ஓ மலிக்கா உங்கள் பட்டப்பேரயும் கண்டு பிடித்துட்டாங்களா?//

ஆஹா..ஜலி அக்கா அதை கவனிச்சுடீங்களா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சுசி said...
//காதல் எனக்கு
கண்ணுக்கு எட்டிய கானல்.
கடல் முட்டிய வானம்.
கைக்கு கிட்டிய காற்று.
கடவுளை காட்டிய கனவு.//
:)))))))//

//அச்சச்சோ.. இப்டி ஆச்சே..//

வாங்க சுசி...
ஆமாம் என்ன பண்றதுனே தெரியல.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Related Posts with Thumbnails