Tuesday, April 6, 2010

இப்படிக்கு மலரும்,நிலவும்...



பார்வையால் படமெடுத்து
அப்படி பார்க்காதே!!!
வெட்கம் வெட்கமாய் வருது...
இப்படிக்கு ரோஜா...
****
 

உனக்கு மட்டும்தான்
வெட்கப்பட்டு
சிவந்து சிரிக்க
தெரியுமா என்ன???
எனக்கும் தான் தெரியும்...
இப்படிக்கு ரோஜா...  
****
 

வாரத்தின் ஏழு நாட்களும்
பூக்க வேண்டிய ரோஜா இது.
வருடத்தில் ஏழு நாட்களே பூக்கிறது...

வாரத்தின் ஏழுநாளும்
என் எதிரே நீ வந்து
பூத்து விடுவதினால்...
இப்படிக்கு  ரோஜா...
****

மலரே...
சீக்கிரம் மலர்ந்து விடு
அனைவரின் கண்பட்டு
மொட்டிலே...
பட்டு விட போகிறாய்....
****

பரிசு...
கோடை வெயிலில்
குளிர்த்து விட்டு போனாயே
உனக்குத்தான் இந்த
சிரிப்பு பரிசு...வாங்கிக்கொள்...
இப்படிக்கு ரோஜா...
****

ஜொள்ளு...
இவ்வளவு அருகில் நிலவை
பார்த்து விட்டதற்கா!!
இதழ் வழியே
நீர் வடிக்கிறாய் நீயும்...!!!????
****

        

காதல் கூட பூவைப் போன்றது.. :)

ஒ...
அதனால் தான்
பறித்ததும் வாடி போகிறதோ...

****
 

உலகுகேல்லாம்
உன்னை படம் பிடித்து
வைத்திருக்கிறேன்...

நீயோ ஒற்றை பார்வையில்
என்னை வடம் பிடித்து
கொண்டு போகிறாயே
இது என்ன நியாயம்???
இப்படிக்கு நிலா...
****

பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...







25 comments:

ஹாய் அரும்பாவூர் said...

good

சீமான்கனி said...

ஹாய் அரும்பாவூர் said...
//good//

Thanks...

தமிழ் உதயம் said...

பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...



அழகு. வேறென்ன சொல்லலாம்.

ஸாதிகா said...

ரோஜா படங்களும் அழகு,உங்கள் ஹைகூ வும் அழகு.கவிதை நச் என்று இருக்கிறது.தலைப்பும் வழக்கம் போல் புதுமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...//

அழகு மாப்ள...!

DREAMER said...

கவிதைகள் சூப்பர் நண்பரே..! புகைப்படங்களும் பொருத்தமாக உள்ளது. வெட்கத்தில் சிவந்த ரோஜாவின் முதல்கவிதை மிக ரசித்தேன்..!

-
DREAMER

நிலாமதி said...

படங்களும் சிறு கவிகளும் அருமை ......நன்றாக் அமைந்து இருக்கிறது . பாராடுக்கள்.

சீமான்கனி said...

தமிழ் உதயம் said...
//பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...

அழகு. வேறென்ன சொல்லலாம்//

வருகைக்கும் கருத்துக்கும நன்றி ரமேஷ்...


ஸாதிகா said...
//ரோஜா படங்களும் அழகு,உங்கள் ஹைகூ வும் அழகு.கவிதை நச் என்று இருக்கிறது.தலைப்பும் வழக்கம் போல் புதுமை//


நெசமாவா ஸாதி(கா) வருகைக்கும் கருத்துக்கும நன்றி அக்கா...

ப்ரியமுடன்...வசந்த் said...
//பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா...//

அழகு மாப்ள...!//

வாட மாப்பி...நலமா ??எப்போ ஊருக்கு??
நன்றி டா..

DREAMER said...
//கவிதைகள் சூப்பர் நண்பரே..! புகைப்படங்களும் பொருத்தமாக உள்ளது. வெட்கத்தில் சிவந்த ரோஜாவின் முதல்கவிதை மிக ரசித்தேன்..!

-
DREAMER//
ரசனைக்கும்...வருகைக்கும் கருத்துக்கும நன்றி DREAMER உங்கள் பெயர் தெரிந்து கொள்ளலாமா?

நிலாமதி said...
//படங்களும் சிறு கவிகளும் அருமை ......நன்றாக் அமைந்து இருக்கிறது . பாராடுக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும பாராட்டுக்கும் நன்றி நிலா கா..

அன்புடன் மலிக்கா said...

ரோஜாக்களின் கூட்டம் ராஜா[கனி] பிளாகில் குடிகொண்டுள்ளது
அழகும் அருமையுமாக. சூப்பர் கவியும் பூவும்

சீமான்கனி said...

வாங்க மல்லி(அக்)கா...நெசமாவா....
வருகைக்கும் கருத்துக்கும நன்றி...

மங்குனி அமைச்சர் said...

படம் எல்லாம் ரொம்ப சூப் சார் , கவிதைக்காக படமா , இல்ல படத்துக்கா கவிதையா ?

சீமான்கனி said...

தோழி ஒருத்தி எடுத்த படத்துக்கு இந்த கவிதைகள் எழுதினேன்...
பின் இந்த கவிதைகளுக்காக படங்களை தேடி போட்டாச்சு...
நன்றி...அமைச்சரே...

Gayathiry said...

// பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா..

அழகிய வரிகள் seemangni ...

http://learnersreference.com said...

interesting ippadikku roja kavithai...you rock

சீமான்கனி said...

காருண்யா said...
// பகலுக்கு நிலவாய் நீ இரு...
இரவுக்கு மட்டும் விட்டு விடு
நான் இருந்து விட்டு போகிறேன்...
இப்படிக்கு நிலா..

//அழகிய வரிகள் seemangni....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...காருண்யா.


infopediaonlinehere.blogspot.com said...
interesting ippadikku roja kavithai...you rock

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...நண்பரே...

நிலாக்காலம் said...

படங்களும் கவிதையும் ரொம்ப அழகு கனி :)

சீமான்கனி said...

நிலாக்காலம் said...
//படங்களும் கவிதையும் ரொம்ப அழகு கனி :)//

ஐ...நிலா தோழி வருக நலமா??வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...உனது வருகை மிக்க மகிழ்ச்சி......தருது..தொடர்ந்து வா...

Deepan Mahendran said...

//காதல் கூட பூவைப் போன்றது.. :)

ஒ...
அதனால் தான்
பறித்ததும் வாடி போகிறதோ //

உண்மையான வரிகள் ...!!!
நல்லா இருக்கு மச்சான்..!!!

சீமான்கனி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சான்...

Priya said...

வழக்கம்போல கவிதைகள் சூப்பரா இருக்கு. ரோஜா எனக்கு மிகவும் பிடித்த பூ. அதனை வைத்தே எழுதிய கவிதைகளை படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.அதற்காக போடப்பட்ட படங்களும் அழகோ அழகு. குறிப்பா 6வது மற்றும் 8வது ப‌டம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.

சீமான்கனி said...

வாங்க ப்ரியா ரோஜா உங்களுக்கு ரெம்ப பிடிக்குமா எனக்கும் தான்...அப்போ ரோஜா கவிதை இன்னும் எழுத முயற்சிக்குறேன்...நன்றி...

Thenammai Lakshmanan said...

ரோஜா கவிதைகள் காவியம் சீமான் கனி
உங்கள் பக்கம் லோட் ஆக டைம் எடுக்குது பாருங்க

சீமான்கனி said...

வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..இப்போவே பாக்குறேன்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

படமும் கவிதையும் ரொம்ப நல்லாருக்கு சீமான்கனி.. ரோஜா படங்கள் ரொம்ப கொள்ளை அழகாக உள்ளது.. ரொம்ப நல்லாருக்கு..

மின்மினி RS said...

ஆஹா.. படமும் கவிதையும் அழகோ அழகு. ரொம்ப நல்லாருக்கு சீமான்கனி.

Related Posts with Thumbnails