Thursday, April 1, 2010

நின் நினைவுகள்...


நினைவுகளை  கைபிடித்து ;
நிலவொளிதனை  நனைந்து ;
நீண்ட தூரம்  போகிறேன். 
நீயும் வருவாயென - நின்
நினைவுகள் சொல்லிவிட 
நீயும் வருவாயா??
நிழல் கூட்டி
நிலாவின் முகம் காட்டி.

நிறுத்தும் இடமெல்லாம்
நினைவோடு இன்புற்று
நீயே இருப்பதுவாய்
நிகழ்வுகள் இனிக்குதடி.

நித்திரை கனவழியில்
நினைவெனும் நீர் அலையில்
நீந்தி நீந்தி நீர்த்துபோய்
நின்னொரு நினைவு கூட
நீங்காது கண்மணியே.

நித்தம் நித்தம் நீ வேண்டும்
நிரம்ப நிரம்ப நினைவு வேண்டும்
நீயாக தரவேண்டாம்  
நினைத்து விடு பொன்மணியே.

நின்று கடுக்கையிலும்
நீள் தூரம் கடக்கையிலும்
நீட்டி நிமிர்ந்து கிடக்கையிலும்
நின் நினைவுகள் நெருடுதடி.

நீ சாலை கடந்து
நில்லாமல்  போனாலும்
நினைவு நின்று
நின் மாயை காட்டுதடி.

நிறுத்தங்களில் நிற்கையில்
நின் வருத்தங்கள் என்னவோ??
நீல விழி நின்று - என்மேல்
நிலைகொள்ள மறுக்குதடி.
நீண்ட -நின்
நிழல் கூட நெருங்கிவிட பார்க்குதடி
நீ மட்டும் தீ கொண்டு தீண்டுவது ஏனடி?

நிலவை நீ என்றேன்
நீலம் உன் விழி என்றேன்
நின் நிழல் நானென்றேன் 
 நிறமெல்லாம் உன் நிறமேன்றேன்
நீரை உன் மனமேன்றேன்
நின் குறையெல்லாம் நிறைஎன்றேன்.
நிதர்சனம் காட்டினாலும்-நின்
நிகர் நிற்க யாரென்றேன்.

நிழலாய் நீ வேண்டும்
நிகழாத வரம் வேண்டும்.
நீ மட்டும் உடன் வேண்டும்
நினைவுகள் கொஞ்சம் கடன் வேண்டும்.
நீதி கிடைக்க வேண்டும்.
நின் நினைவுக்குள் கிடக்க வேண்டும்.
நிஜமாய் நிச்சயமாய்
நினைவில் என்றும்
நீமட்டும் நெருக்கமாய் வேண்டும்.







16 comments:

மதுரை சரவணன் said...

நிஜமாய் நிச்சயமாய்
நினைவில் என்றும்
நீமட்டும் நெருக்கமாய் வேண்டும்.//அருமை. வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரவணன்..

சுசி said...

சீமான்..

கலக்கிட்டிங்க போங்க..

நிஜமா நல்லாருக்கு :))

சுசி said...

புது வீடும் சூப்பர்..

Priya said...

என்ன சொல்றதுங்க? ஒவ்வொரு வ‌ரியும் மிக அற்புதமா இருக்கு!மூன்று முறை திரும்ப திரும்ப படிச்சேன்!
Good one!

சீமான்கனி said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

சுசி என்ன சொன்னாங்கனா...

//சீமான்..


கலக்கிட்டிங்க போங்க..

நிஜமா நல்லாருக்கு :))

புது வீடும் சூப்பர்..//


நன்றி நீங்கள் எல்லோரும் தரும் உற்ச்சாகம் தான் சுசி...
தேடி வந்த கொத்தனார் கட்டினது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி..

ப்ரியா என்ன சொன்னாங்கனா...

//என்ன சொல்றதுங்க? ஒவ்வொரு வ‌ரியும் மிக அற்புதமா இருக்கு!மூன்று முறை திரும்ப திரும்ப படிச்சேன்! Good one! //

நன்றி ப்ரியா ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி..உங்கள் பின்னுட்டம் உற்ச்சாகமாய் இருக்கு...

sathishsangkavi.blogspot.com said...

அழகான ஆழமான வரிகள்....

ஸாதிகா said...

"நி" வரிசையில் அழகான கவிதை பாடி அசத்திட்டீங்க தம்பி.
நிஜமாக‌
நின் கவிதை
நிரப்பமாக
நின்று விட்டது என் மனதில்

சீமான்கனி said...

Sangkavi said...

//அழகான ஆழமான வரிகள்....//

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி...

ஸாதிகா said...

//"நி" வரிசையில் அழகான கவிதை பாடி அசத்திட்டீங்க தம்பி.
நிஜமாக‌
நின் கவிதை
நிரப்பமாக
நின்று விட்டது என் மனதில்//

நன்றி அக்கா ...கவிதை நிரம்ப கொடுத்ததில் மகிழ்ச்சி..

நிலாமதி said...

நி ....ரியில் கவி வடித்த் நீ .......
....( நீங்கள்) வளர்க, மென் மேலும்.

சீமான்கனி said...

நிலாமதி said...
நி ....ரியில் கவி வடித்த் நீ .......
....( நீங்கள்) வளர்க, மென் மேலும்...

ஐ...வாங்க நிலா கா நலமா???அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலா கா...

Ahamed irshad said...

நல்ல கவிதை.அருமை....

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
//நல்ல கவிதை.அருமை....//

நன்றி இர்ஷாத் முதல் முறையாய் வந்து கருத்து தந்தமைக்கு...இனி இணைந்திருப்போம்...

Deepan Mahendran said...

நல்லா இருக்கு மச்சான்... "நி"- ங்கிற ஒரு எழுத்த வச்சு ரவுண்டு கட்டி அடிச்சிட்டிங்க..!!!

சீமான்கனி said...

வாங்க மச்சான்...
வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி மச்சான்...

Related Posts with Thumbnails