Monday, April 19, 2010

காலை தேவதையும் கன்னுக்குட்டியும்...கனவுகளுக்கு, 
திசுக்களை  தின்ன கொடுத்துவிட்டு
தீராத மீதியோடு திரும்பிவிடுகிறது
தினசரி தேவைக்கு மூளை.

திறவா கண்ணை தீண்டி திறந்துவிடுகிறது
காலை கதிரவளின்  கைவிரல்.

திரவ நெருப்போடு தெரிந்த தேவதை ஒருத்தி
தித்திக்கும் தீ   உண்னச்சொல்லி;
தெவிட்டாத தேன் இதழ் கொண்டு
கன்னத்தில் காலைவணக்கமும்
கமுக்கமாய் சொல்லி கடந்து போனாள்.

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி பாக்கி கடனையும்
பக்குவமாய் முடித்து விட்டு;
நீர் குளிக்கச்சொல்லி தீதூவ திறக்கிறாள்
ஒரு குட்டி குழாய் மேகம்.

விஷம் துப்பி நான்கைந்து 
நரைகளையும் சேர்த்து  நுரைகக்க வைத்து
சாந்தமாகிறாள் ஷாம்ப்பு என்ற சர்பம்.

நாற்றம் போக்க நறுமணம் பூசிக்கொண்டு உடலில்
நனைந்து நாட்டியமாடிவிட்டு நமத்து போகிறாள்
நாகரீக சோப்புக்கட்டி.

சிக்கனமாய் செலவுசெய்த
செயற்கை மழை குளியில் மேனியில் ஆங்காங்கே
சிதறி கிடந்தன சில்லறை துளிகள்.

சில்லறை சிதறல்களை; கண்ட கள்வனாய்;
கவர்ந்து கொண்டாள் காதிபவன் கதர்த்துண்டு .
கட்டிகொண்டேன்.

தேவதை சேலை தலைப்பின் வாசம் பிடிக்கவும்
சேலை மறைக்காத சில சிறப்பு பகுதியில்
சில்மிஷம் படிக்கவும் சீண்டாமல் விட்டு வைத்தேன்
சிகை முடிகளை.

தெரியும் என்றே தேவதை வந்து
செல்லமாய் திட்டி சேலை துவட்ட-செய்த
சில்மிஷ சடங்கில் கொஞ்சம்
சிரித்து சிலிர்த்து கொண்டாள்.

சிற்றாடை கட்டி சிங்காரமாய் ஒரு குட்டி;
செல்ல கன்னுக்குட்டியாய்   ஓடிவந்து கட்டிக்கொண்டு
கலவரமாய் கேட்டாள்.
''ஆறடி அப்பாவுக்கு அரையடி கூந்தல்
ஆற்றிவிட ஒரு ஆள் வேண்டுமோ!?! என்று.

19 comments:

மதுரை சரவணன் said...

//விஷம் துப்பி நான்கைந்து
நரைகளையும் சேர்த்து நுரைகக்க வைத்து
சாந்தமாகிறாள் ஷாம்ப்பு என்ற சர்பம்.//அருமை வாழ்த்துக்கள்

seemangani said...

முதல் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மதுரைகாரரே...தொடர்ந்து வாங்க...

ஸாதிகா said...

//கனவுகளுக்கு,
திசுக்களை தின்ன கொடுத்துவிட்டு
தீராத மீதியோடு திரும்பிவிடுகிறது//ஆரம்பவரிகளே அட்டகாசம்.சீமான் கனி கவிதையில் மெருகு ஏறிக்கொண்டே போகின்றது.

seemangani said...

வாங்க ஸாதிகா அக்கா...உங்கள் பின்னுட்டம் எனக்கு ஊட்டச்சத்து...நன்றி ஸாதிகா அக்கா...

kaamaraj said...

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி

உவமை அழகு சீமான்

அஹமது இர்ஷாத் said...

Nice...

தமிழ் உதயம் said...

நாற்றம் போக்க நறுமணம் பூசிக்கொண்டு உடலில்
நனைந்து நாட்டியமாடிவிட்டு நமத்து போகிறாள்
நாகரீக சோப்புக்கட்டி.

உண்மைதான், உவமைகள் அழகு.

அன்புடன் மலிக்கா said...

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி பாக்கி கடனையும்
பக்குவமாய் முடித்து விட்டு;
நீர் குளிக்கச்சொல்லி தீதூவ திறக்கிறாள்
ஒரு குட்டி குழாய் மேகம்.//

ஆகா கனி, கனியாய் கனிகிறது வார்த்தை காய்கள்..

சூப்பரப்பு..

NIZAMUDEEN said...

உவமைகளும் வினைகளும் இணைந்து
கவிதை முழுதுமே... அழகு!

சுசி said...

அருமையான குடும்பக் க(வி)தை :))

seemangani said...

kaamaraj said...
//பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி

உவமை அழகு சீமான்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...

அஹமது இர்ஷாத் said...
//Nice...//

நன்றி அஹமது...

தமிழ் உதயம் said...
//நாற்றம் போக்க நறுமணம் பூசிக்கொண்டு உடலில்
நனைந்து நாட்டியமாடிவிட்டு நமத்து போகிறாள்
நாகரீக சோப்புக்கட்டி.

உண்மைதான், உவமைகள் அழகு//

ஆம்மாம் நன்றி ரமேஷ்....

அன்புடன் மலிக்கா said...

பசை நிலவை பிதுக்கி பல்துலக்கி
நட்ச்சத்திர நுரை துப்பி பாக்கி கடனையும்
பக்குவமாய் முடித்து விட்டு;
நீர் குளிக்கச்சொல்லி தீதூவ திறக்கிறாள்
ஒரு குட்டி குழாய் மேகம்.//

//ஆகா கனி, கனியாய் கனிகிறது வார்த்தை காய்கள்..

சூப்பரப்பு..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்(கா)...

NIZAMUDEEN said...
//உவமைகளும் வினைகளும் இணைந்து
கவிதை முழுதுமே... அழகு!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாம்...

சுசி said...
//அருமையான குடும்பக் க(வி)தை :))//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுசி கா...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான கவிதை! உவமைகளும், உவமானங்களும் அழகு!!

சிவன். said...

நல்லாயிருக்கு மாப்பி....!!!
ரொம்ப அனுபவிச்சு எழுதுனா மாதிரி இருக்கு,,,???

seemangani said...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...
//அருமையான கவிதை! உவமைகளும், உவமானங்களும் அழகு!!//

கருத்துக்கும் இணைந்து கொண்டதற்கும் நன்றிகள் சரவணன்...


சிவன். said...
//நல்லாயிருக்கு மாப்பி....!!!
ரொம்ப அனுபவிச்சு எழுதுனா மாதிரி இருக்கு,,,???//


அட பாவி மச்சான் சின்ன பையன பார்த்து இப்டி கேட்டு புட்டீயே...
நன்றி மச்சான்...

Priya said...

//தேவதை சேலை தலைப்பின் வாசம் பிடிக்கவும்
சேலை மறைக்காத சில சிறப்பு பகுதியில்
சில்மிஷம் படிக்கவும் சீண்டாமல் விட்டு வைத்தேன்
சிகை முடிகளை.//.........
ரசனை ததும்பும் வரிகள்... மிகவும் அழகாக வந்திருக்கு இந்த கவிதை!
வாழ்த்துக்கள்!!!

seemangani said...

Priya said...
//ரசனை ததும்பும் வரிகள்... மிகவும் அழகாக வந்திருக்கு இந்த கவிதை!
வாழ்த்துக்கள்!!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா...

DREAMER said...

எதுகை மோனைகளும், உவமைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக கற்பனைகளும் புகுந்து விளையாடுகின்றன... அருமையாக இருக்கிறது நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

-
DREAMER

காருண்யா said...

சிற்றாடை கட்டி சிங்காரமாய் ஒரு குட்டி;
செல்ல கன்னுக்குட்டியாய் ஓடிவந்து கட்டிக்கொண்டு
கலவரமாய் கேட்டாள்.
''ஆறடி அப்பாவுக்கு அரையடி கூந்தல்
ஆற்றிவிட ஒரு ஆள் வேண்டுமோ!?! என்று

எல்லாமே அழகிய வரிகள் seemangani !!!!!

seemangani said...

DREAMER said...
//எதுகை மோனைகளும், உவமைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக கற்பனைகளும் புகுந்து விளையாடுகின்றன... அருமையாக இருக்கிறது நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

-
DREAMER//


வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...ஹரீஷ்...

காருண்யா said...
//சிற்றாடை கட்டி சிங்காரமாய் ஒரு குட்டி;
செல்ல கன்னுக்குட்டியாய் ஓடிவந்து கட்டிக்கொண்டு
கலவரமாய் கேட்டாள்.
''ஆறடி அப்பாவுக்கு அரையடி கூந்தல்
ஆற்றிவிட ஒரு ஆள் வேண்டுமோ!?! என்று

எல்லாமே அழகிய வரிகள் seemangani !!!!!//

வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...தோழி......

Related Posts with Thumbnails