Friday, May 7, 2010

காதல் கடிதம் அல்ல...9தொடர் க(வி)தை...

கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...

புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தையின் எல்லா பாகமும் இங்கே..

திருப்பி அழைக்க முற்படுகையில்
திரும்பத்  திரும்ப சொல்லவேண்டியதை
பதியச்சொல்கிறாள் பதில் பேசமுடியாத ஒருத்தி.

விதியின் வழியையும் வலியையும்
வாழ்த்துகிறேன் காதலை மட்டுமல்ல
காயங்களையும் - அவள்
விழிகளில் வைத்ததால்.

ஏ...காதலே - நீ என்
காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம்
கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு.

இன்று..
வெண்ணிலா  வெள்ளி தீ தூவி - என் தேக
விறகை குளிர்காய எரித்துக் கொண்டது.
நெருப்பில் பிறந்து பறந்த வெள்ளி
தீப்பொறிகளெல்லாம் வானேறி விண்மீன்
வேஷம் போட்டு கொண்டன.

கண்கள் இரண்டும் - சேர்த்து வைத்த தூக்கத்தை
கண்ணீர் துளிகளில் செலவுசெய்து கொண்டன.

மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில்
உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய்
இறைத்து குடித்து கொண்டது - அவளின்
நினைவுக்  கோப்பைகள்.

சொல்லாதே என்று சுட்டுவைத்தலும்
துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே
சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம்.

என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.

அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை
தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து
கண்ணங்கள் வழியே வழிகிறது.

அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே
கழுவ முடியும்...(தொடரும்...)   




15 comments:

காமராஜ் said...

/என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.//

இதற்கு முந்திய வரிகளின் கவிதைச்சொற்களை எடுத்து விழுங்குகிறது.ரொம்ப நல்லாருக்கு சீமான்.அப்றம் உங்க வலையில் வரும் அந்த படங்கள் எல்லாமே சூப்பர்.

Paleo God said...

ரசித்தேன். தொடர் கவிதை கவியே வாழ்க!

டெம்ப்ளேட் அழகு!

:)

பப்பு said...

அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை
தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து
கண்ணங்கள் வழியே வழிகிறது.

nice

Thenammai Lakshmanan said...

மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில்
உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய்
இறைத்து குடித்து கொண்டது - அவளின்
நினைவுக் கோப்பைகள்.

சொல்லாதே என்று சுட்டுவைத்தலும்
துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே
சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம்.//

இந்த இரண்டும் .,படமும். ரொம்ப அருமை கனி

சுசி said...

//ஏ...காதலே - நீ என்
காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம்
கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு.
//

:))))

சிவாஜி சங்கர் said...

//என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.//

மரணத்தின் மடி தொடவும், மனிதத்தின் புனிதம் விடவும் எப்பொழுதும் தயார் நிலையில் . . . காதல் எனும் கானல் கண்டவர்கள்...

என்ன சொல்லினும்........ சுக ராகம் சோகந்தானில்லையா.?? :)

ஸாதிகா said...

//அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே
கழுவ முடியும்..//அருமையான வரிகள்.படங்கள் செலக்ஷன் சூப்பர்.

சீமான்கனி said...

காமராஜ் said...
/என் நிசப்த நீர்வெளியில் நொடிக்கு ஒருமுறை
கல்லெறிந்து விளையாடுகிறது விடைபெறுவதாய் - அவள்
விட்டுசென்ற கடைசி வார்த்தைகள்.//

இதற்கு முந்திய வரிகளின் கவிதைச்சொற்களை எடுத்து விழுங்குகிறது.ரொம்ப நல்லாருக்கு சீமான்.அப்றம் உங்க வலையில் வரும் அந்த படங்கள் எல்லாமே சூப்பர். ///

எல்லாம் கூகுல் அண்ணாச்சி தயவு அண்ணே...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//ரசித்தேன். தொடர் கவிதை கவியே வாழ்க!

டெம்ப்ளேட் அழகு!

:)///

வாங்க...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷங்கர் ஜி...அடிக்கடி இந்தப்பக்கமும் வர்றது...

Pappu dreams said...
//அதன் சுனாமி பேரலைகள் இதயக்கோட்டையை
தகர்த்து ரத்தச்சகதியாய் கண்களின் கறைகடந்து
கண்ணங்கள் வழியே வழிகிறது.

nice //

Thanks pappu...அடிக்கடி வாங்க...

thenammailakshmanan said...
//மூச்சிறைத்த இடைவெளி நொடிகளில்
உயிர் கேணியின் ஒவ்வொரு சொட்டாய்
இறைத்து குடித்து கொண்டது - அவளின்
நினைவுக் கோப்பைகள்.

சொல்லாதே என்று சுட்டுவைத்தலும்
துடிக்கத்துடிக்க அவள்பெயரை மட்டுமே
சொல்வேன் என்கிறது சொரனைகெட்ட இதயம்.//

இந்த இரண்டும் .,படமும். ரொம்ப அருமை கனி //

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தேனக்கா...
Sivaji Sankar said...
//மரணத்தின் மடி தொடவும், மனிதத்தின் புனிதம் விடவும் எப்பொழுதும் தயார் நிலையில் . . . காதல் எனும் கானல் கண்டவர்கள்...

என்ன சொல்லினும்........ சுக ராகம் சோகந்தானில்லையா.?? :)//

வாழ்ந்துகொண்டே சாகவும் செத்து கொண்டே வாழவும் காதலில் மட்டும்தான் முடியுமாம் என் கவிஞன் வைரமுத்து சொன்னது போல...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷங்கர்....

சீமான்கனி said...

ஸாதிகா said...
//அவள் கரி பூசிய முகத்தை கண்ணீரால் மட்டுமே
கழுவ முடியும்..//அருமையான வரிகள்.படங்கள் செலக்ஷன் சூப்பர்.///

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா..


ஈரோடு கதிர் said...
//அருமை நண்பா //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே...

சீமான்கனி said...

சுசி said...
//ஏ...காதலே - நீ என்
காயங்களுக்கு களிம்பு போடவேண்டாம்
கண்களுக்குள் கத்தி எறியமலாவது இரு.
//

:))))

ஏ............ன்!!?? நன்றி சுசிகா...

அன்புடன் மலிக்கா said...

மணீமணியாய் கனியின் கவித கவிதயாய் கொட்டுது
அருமை..

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html

Ahamed irshad said...

கவிதை அற்புதம் கனி..அசத்திட்டிங்க...

சீமான்கனி said...

அன்புடன் மலிக்கா said...
//மணீமணியாய் கனியின் கவித கவிதயாய் கொட்டுது
அருமை..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மல்லி அக்கா...கண்டிப்பா பாக்குறேன் அக்கா...

அஹமது இர்ஷாத் said...
//கவிதை அற்புதம் கனி..அசத்திட்டிங்க... //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இர்ஷாத்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தொடர் கவிதை... புதுசா இருக்கேன்னு உள்ள வந்தேன்... ரெம்ப நல்லா இருக்குங்க...

சீமான்கனி said...

அப்பாவி தங்கமணி said...
//தொடர் கவிதை... புதுசா இருக்கேன்னு உள்ள வந்தேன்... ரெம்ப நல்லா இருக்குங்க...//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கமணி அக்கா..தொடர்ந்து வாங்க...வரணும் சொல்லிபுட்டேன் ஆமா......

Related Posts with Thumbnails