திசுக்களை தின்றுவிடும்
தினசரி வாழ்கையிலிருந்தும்;
பாஷை புரியாத
பாவமண்ணின் பயத்திலிருந்தும்;
இரண்டு வருடம் இறுக்கத்தையும்
இடிகளையும் சுமந்த இதயத்தை
புலம் பெயர்த்து புதுப்பிக்கவும் ;
அவள் கருவில் நான் எழுதிய முன்னுறுநாள்
தவக்கவிதையை தரிசிக்கவும் ;
கதை கேட்டு குருட்டு பயம் புதைத்த
அம்மாவின் இருட்டு மடியில் இன்னொரு
முறை முகம் பதிக்கவும்;
காலத்தின் காயங்களை
கழுவிவிடும் அவளின் காதல்
கணங்களில் காணாமல் போகவும்;
கண்பார்வை சரிசெய்ய கத்தி வைத்த
கண்களுக்குள் காலமெல்லாம் என்னை வைத்த
தந்தையின் தழுவளுக்காகவும்;
இரண்டு வருட இம்சையை
இரண்டுமாத இனிமையில் கழிக்கும்
கனவுக் கணக்குகளோடும் ;
இரும்பு காட்டுக்குள் துரு(ம்பு)ப் பிடித்த
நினைவுகளை துளிர்க்கவிடவும்;
இதோ இரக்கமில்லா இடத்தை விட்டு
இறக்கைகள் விரித்த இயந்திர பறவையின்
முதுகேறி முழுதாய் வருகிறேன்.
இந்த பயணம் இறுதியென
இறைவனடி சேர்ந்தாலும் கருகிப்போன
கவிதை காகிதத்தின் சாம்பலாய்
காற்றிலாவது கலந்து வருவேன்.
16 comments:
//இந்த பயணம் இறுதியென
இறைவனடி சேர்ந்தாலும் கருகிப்போன
கவிதை காகிதத்தின் சாம்பலாய்
காற்றிலாவது கலந்து வருவேன்.//
என்ன இது.. பிள்ளையாரே.. அப்டில்லாம் எதுவும் ஆகாது..
சந்தோஷமா போயி எல்லாரையும் பாத்துட்டு வாங்க.. நாங்க கேட்டதாவும் சொல்லுங்க..
உங்க பயணம் இனிதா அமையட்டும் :))))
சுசிகா அந்த விமான விபத்தின் பாதிப்பாய், கற்பனையாய் வந்த கவிதை...
என் பயணத்திற்கு இன்னும் நாள் இருக்கு... போனால் கண்டிப்பாய் கேட்டதாய் சொல்கிறேன் சுசிகா...வருகைக்கும் அன்புக்கும் நன்றி...
manasa stutuduchudaa gani...unoda kavithai...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாமா அவர்களே தொடர்ந்து வாங்க...
சம்பவம் மற்றும் கவிதை இரண்டுமே மனதை வெகுவாக பாதித்தது.
ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...........
நல்லதே நடக்கும் நண்பா..
வாங்க நண்பா.., பயணம் நல்வரவாகுக..!
உங்களது ரசனையான காதல் கவிதைகளை படித்துவிட்டு இன்று இந்த கவிதையை படிக்கும் போது மனது பாரமாக இருக்கிறது;(
இந்த வலி இனிமேலும் தொடராம இருக்க பிரார்த்திப்போம் நண்பரே....
நல்ல கவிதை கனி.
விமான விபத்து சம்பவத்தை வைத்து எழுதிய
கவிதை, இறந்தவர்களுக்கான அஞ்சலி!
//இந்த பயணம் இறுதியென
இறைவனடி சேர்ந்தாலும் கருகிப்போன
கவிதை காகிதத்தின் சாம்பலாய்
காற்றிலாவது கலந்து வருவேன்.//
கண்களை கலங்கவைத்துவிட்டது கவிதைவரிகள்.
தமிழ் உதயம் said...
//சம்பவம் மற்றும் கவிதை இரண்டுமே மனதை வெகுவாக பாதித்தது.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்...
Sivaji Sankar said...
//ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...........
நல்லதே நடக்கும் நண்பா..
வாங்க நண்பா.., பயணம் நல்வரவாகுக..! //
நன்றி நண்பா...
Priya said...
//உங்களது ரசனையான காதல் கவிதைகளை படித்துவிட்டு இன்று இந்த கவிதையை படிக்கும் போது மனது பாரமாக இருக்கிறது;(//
எழுதும்போது எனக்கும் அப்படிதான் இருந்தது கவிதை இன்னும் பாரமாய் வந்தது நாந்தான் கொஞ்சம் இறக்கி வைத்து விட்டேன்...கருத்துக்கு நன்றி ப்ரியா...
க.பாலாசி said...
//இந்த வலி இனிமேலும் தொடராம இருக்க பிரார்த்திப்போம் நண்பரே....//
நிச்சயமாய்...வாங்க பாலாசி...ரெம்பநாள் ஆச்சு...கருத்துக்கு நன்றி
அஹமது இர்ஷாத் said...
//நல்ல கவிதை கனி.//
கருத்துக்கு நன்றி இர்ஷாத்..
NIZAMUDEEN said...
//விமான விபத்து சம்பவத்தை வைத்து எழுதிய
கவிதை, இறந்தவர்களுக்கான அஞ்சலி!//
நன்றி நிஜாம் அண்ணா...
ஸாதிகா said...
//கண்களை கலங்கவைத்துவிட்டது கவிதைவரிகள்.//
உங்கள் உணர்வுக்கும் வருகைக்கும் நன்றி அக்கா...பதிவை இணைத்து தந்ததிற்கும் நன்றி ஸாதி(கா)...
மனதை பாதித்த கவிதை
அப்படியே உள்ளக்கிடக்கையை எழுதியிருக்கிறீர்கள்.
மனது பாதிப்பின் வெளிப்பாடுதான்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்...எழுத்துக்கள் பிடிச்சு இருந்த தொடர்ந்து வாங்க...
வரிகள் மிகவும் மனதை பாதிக்கிறது,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலி அக்கா... அடிக்கடி வாங்க...
Post a Comment