மேற்க்கே விழுந்து
மரித்துப்போன கதிரவன்;
வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!?
உடைத்து போட்ட
நட்சத்திர வளைத் துகள்கள்;
கண்ணீர் பெருக்கு மழை;
கருப்பு கொடிபிடித்த கார்மேகம்;
அலை எழுப்பும் அழுகுரல் ஒப்பாரி;
இருளின் மடியில் இறந்துபோன பூமி....!!!
எதிர்காலம் விளக்கேற்றுகிறது கிழக்கில்;
சீர் வரிசையாய் தங்கமுலாம் பூசிய
பாடும் பறவைகள்;
சுபமுகூர்த்த வேளை;
சுடர்விடும் சூரிய மாப்பிள்ளை;
முகில் வெட்கம் மூடிய நிலாப்பெண்;
கண்பட்டுவிடாமல் கவர்ந்துகொண்ட கார்மேகம்;
புது வாழ்வு புணர அட்சதை தூவும் ஆனந்தமழைச் சாரல்;
ஏழு வர்ண்ணம் எடுத்து பூசிய வானவில் தாலிக்கயிறு;
எட்டு திக்கும் இடி(ந்து) விழும் கெட்டி மேளம்;
கடல் பாடும் வாழ்த்தொசை;
முதல் ராத்திரி!!!
அம்மாவாசையின் கருப்பு அறைக்குள்
காணாமல் போன காதல் ஜோடி;
சின்ன சின்ன சிமிலி விளக்கு பிடிக்கும்
நட்சத்திர கூட்டம்.
பிரபஞ்ச கருவறையில்
புத்துயிர் கொண்ட புதிய பூமி.
14 comments:
//வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!?
உடைத்து போட்ட
நட்சத்திர வளைத் துகள்கள்//
//முகிழ் வெட்கம் மூடிய நிலாப்பெண்,
சின்ன சின்ன சிமிலி விளக்கு பிடிக்கும்
நட்சத்திர கூட்டம்//
superb comparison,very nice
life oda rendu aspectum
alazha solirkeenga .,
வித்தியாசமான மனத்தைக் கவர்ந்த கவிதை ..
பாராட்டுக்கள் ..
நல்ல கவிதை.
வித்தியாசமானதும் கூட.
ரோகிணிசிவா said...
//superb comparison,very nice
life oda rendu aspectum
alazha solirkeenga .,//
Thanks doctor....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்
கே.ஆர்.பி.செந்தில் said...
//வித்தியாசமான மனத்தைக் கவர்ந்த கவிதை ..
பாராட்டுக்கள் .. //
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி செந்தில் பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்துவாங்க ...
காமராஜ் said...
//நல்ல கவிதை.
வித்தியாசமானதும் கூட. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...
அட !!!
ஒவ்வொரு வரியிலும் வித்தியாசமான, மாறுபட்ட கற்பனைகள்.
தலைப்பு அருமை..
வித்தியாசமான சிந்தனையோட எழுதி இருக்கிங்க.
வர்ணித்துள்ளீர்கள்
அழகாக,
இயற்கையை!
இயற்கையில் ஒரு திருமண வைப்போகம்... ரொம்ப நல்லா இருக்கு கனி!
அழகான கற்பனை, வாழ்த்துக்கள்!
நேசமித்ரன் said...
/அட !!! //
ஐ...வாங்க மித்திரன் சார் உங்கள் வருகையும் முத்தான கருத்தும் எனக்கு ரெம்ப உற்சாகம் தருது...என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு எழுத தெரியாது...நானும் அடிக்கடி உங்க பதிவுகளை படிப்பதுண்டு இனி தொடர்ந்து இணைந்திருப்போம்...
தமிழ் உதயம் said...
//ஒவ்வொரு வரியிலும் வித்தியாசமான, மாறுபட்ட கற்பனைகள்.//
எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான் ரமேஷ் ஜி...நன்றி
சுசி said...
//தலைப்பு அருமை..
வித்தியாசமான சிந்தனையோட எழுதி இருக்கிங்க.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிகா...
NIZAMUDEEN said...
//வர்ணித்துள்ளீர்கள்
அழகாக,
இயற்கையை!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஜாம் அண்ணே...
Priya said...
//இயற்கையில் ஒரு திருமண வைப்போகம்... ரொம்ப நல்லா இருக்கு கனி!
அழகான கற்பனை, வாழ்த்துக்கள்!//
உங்கள் ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா ...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு!
கிறிச்சான் said...
//கவிதை ரொம்ப நல்லா இருக்கு!//
நன்றி நண்பா உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி...பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க....
நிலா =விதவை
நட்சத்திரம் =வளைத்துகள்கள்
கண்ணீர்= மழை
கருப்புக்கொடி=கார்மேகம்
அலை =ஒப்பாரி
அடடா நன்றாக யோசிக்கறீங்க சீமான்கனி.
ஸாதிகா said...
//நிலா =விதவை
நட்சத்திரம் =வளைத்துகள்கள்
கண்ணீர்= மழை
கருப்புக்கொடி=கார்மேகம்
அலை =ஒப்பாரி
அடடா நன்றாக யோசிக்கறீங்க சீமான்கனி.//
ஆனா ரூம் போட்டுலாம் யோசிக்கலகா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா..
Post a Comment